லக்னோவில் நடைபெற்ற தேசியத் திறன் பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஓராண்டுக்கு அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் என கடந்த மே மாதம் விடுத்த வேண்டுகோளை நினைவுகூர்ந்தார். தனது வேண்டுகோளை ஏற்று மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்ததால்தான் அதன் விலை சரிந்ததாகவும் கூறினார்.
#PMModi | #GoldRate
2
14
2,854
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா!
#AnbumaniRamadoss | #SoumyaAnbumani | #Anirudh | #KaviyaMaaran
Video Link - youtube.com/watch?v=VhfQDcZ0…
எதிர்காலம் கடந்த காலத்தை மாற்றுமா? 😱 The Quantum Time Mystery | The Logic Show
1
1,833
Video Link - youtube.com/watch?v=SXhMrE-b…
ஈரான் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப் - ஷி ஜின்பிங் - புதின் meeting! | R.Kannan Interview
2
2,221
Video Link - youtube.com/watch?v=JZRCJe5I…
தமிழ்நாட்டில் பெருகும் போதைப்பொருள்கள் - பாதிப்புகள் என்ன? | Junior Vikatan Cover Story
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா!
#Sangeetha | #Anirudh | #KaviyaMaaran | #KaviyaAnirudhReception
என்ன பேசியிருப்பாங்க? ஜாலியா கமெண்டில் சொல்லுங்க!
#Rajinikanth | #MKStalin | #EdappadiKPalaniswami | #KaviyaAnirudhReception | #ShareWithVikatan
சென்னையில் நடைபெற்ற அனிருத் ரவிச்சந்தர், காவியா கலாநிதி மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
#CMVijay | #Rajinikanth | #MKStalin | #KaviyaAnirudhReception
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!
vikatan.com/government-and-p…
சென்னையில் நடைபெறும் அனிருத் ரவிச்சந்தர், காவியா கலாநிதி மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
#Rajinikanth | #MKStalin | #EdappadiKPalaniswami | #KaviyaAnirudhReception
ஒயிலாட்டக் கலைஞர் 'சங்கமம்' கனகராஜ் மறைவு - ஒயிலாட்டம் ஆடியபடி வழியனுப்பிய நாட்டுப்புறக் கலைஞர்கள்!
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (56). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், வகுப்பறைப் பாடங்களோடு நின்றுவிடாமல், தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, அதன் மூலம் கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகக் கலைப் பயிற்சி அளித்து வந்தார்.
அழிந்து வரும் கிராமியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கில், இதுவரை 120-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்கேற்றங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கலைஞர்களாக வார்த்தெடுத்த பெருமை இவருக்கு உண்டு. இவரது கலைப் பயணம் கோவையோடு நின்றுவிடாமல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று நமது மண்ணின் மணத்தை உலகறியச் செய்தவர்.
இந்நிலையில், நேற்றிரவு பொள்ளாச்சியில் நடைபெறவிருந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தனது மாணவர்களுடன் கனகராஜ் சென்றிருந்தார். அங்கு மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி அறிந்த கருமத்தம்பட்டி சுற்றுவட்டார மக்களும் நாட்டுப்புறக் கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கனகராஜ் உடலுக்குப் பல்வேறு கலை அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, தங்களுக்குக் கலை கற்றுக்கொடுத்த ஆசானுக்குப் பிரியாவிடை கொடுக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களும், மாணவர்களும் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து, 'சங்கமம்' திரைப்படப் பாடல் இசைக்கப்பட, கண்ணீருடன் ஒயிலாட்டம் ஆடியபடியே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து, தங்களது அன்பிற்குரிய ஆசானுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். கலைக்காகவே வாழ்ந்து, இறுதி மூச்சு வரை கலைப் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கனகராஜின் மறைவு, நாட்டுப்புறக் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
#Coimbatore | #SangamamKanagaraj | #TNLocalNews
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக எம்.எல்.ஏ செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மக்களின் மனநிலையை அறிந்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
#SowmiyaAnbumani | #Thiruparankundram
16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்... கிறிஸ்தவர் - இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
vikatan.com/government-and-p…
கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? - 18
vikatan.com/government-and-p…























