District Collector Perambalur (@Collector_Pblr) profile picture

This is the Official Twitter account of District Collector Perambalur. (Govt of Tamilnadu)

Joined July 2024
Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)Photo by District Collector Perambalur (@Collector_Pblr)
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.11.2026) கள ஆய்வு மேற்கொண்டார்.
1
63
பசுமையான சுற்றுச்சூழலையும், மாசில்லா கொண்டாட்டத்தையும் முன்னிறுத்தி, இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்! பசுமையான தீபாவளி – நம் மகிழ்ச்சியும், இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றாகட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
79
பெரம்பலூர் மாவட்ட மருத்துவ அலுவலர் திருமதி. பிருந்தா அவர்கள், HPV தடுப்பூசியின் அவசியம், அதன் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் ஏன் HPV தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்குகிறார். பெண்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் விழிப்புணர்வுச் செய்தி!
79
கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதில் HPV தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான விழிப்புணர்வும், உரிய நேரத்தில் தடுப்பூசியும் பெற்று, நம் மகள்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பாதுகாப்போம்! தடுப்பூசி செலுத்துவோம்… கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்போம்!
77
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுநடுவலூர் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பனை விதை நடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (02.11.2026) தொடங்கி வைத்தார்கள்.அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன் அவர்கள் உள்ளார்.
2
105
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. A.M. ஷாஜஹான் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினர். தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
1
75
சமூக நலத்திட்டங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று, தன்னம்பிக்கையுடன் முன்னேறி வரும் திருநங்கை மணிஷா அவர்களின் வெற்றிப் பயணம், பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்!
70
உங்களுக்குப் பிடிச்ச படிப்பைப் படிக்கப் பணம் தடையா இருக்கா? அதற்கான கல்விக் கடன் வாய்ப்புகளைத் தெரிஞ்சுக்கோங்க! உங்கள் உயர்கல்விப் பயணத்தைத் தொடர உதவும் வாய்ப்பாக, பெரம்பலூர் மாவட்ட நிருவாகம் நடத்தும் மாபெரும் கல்விக் கடன் முகாம் 2026-ல் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்! பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் இம்முகாமில் கல்விக் கடன் வாய்ப்புகளை அறிந்துகொள்ளுங்கள்! நாள்: 28.10.2026 | புதன்கிழமை நேரம்: காலை 10.00 மணி – மாலை 5.00 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர்
1
76
பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 557 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
58
சிகப்பு எச்சரிக்கை – பெரம்பலூர் மாவட்டம்! மிக கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, நீர்நிலைகளின் அருகில் செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1
83
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சியை இன்று (23.10.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்கள்.
1
71
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (23.10.2026) மாவட்ட ஆட்சியர் திரு. ப. அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி மற்றும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1
69
பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகளித்து, கல்வி முதல் பாதுகாப்பு வரை அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
64
பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடனுதவி மற்றும் பயிற்சி பெற்று, சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் திருமதி கலைவாணி அவர்கள், தனது தொழில் அனுபவங்களையும் வெற்றிப் பயணத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.
83
பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சிலம்பம் பயிலும் மாணவி, தனது சிலம்பப் பயணம், பயிற்சி அனுபவங்கள் மற்றும் சாதனைகள் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.
1
3
92
பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசுப் பள்ளி, நியாய விலைக் கடை ஆகியவற்றின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1
3
92
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில், பொதுமக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
70
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.10.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன், ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.வத்சலா, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.விஜயன் மற்றும் பலர் உள்ளனர்.
1
70
திருநங்கைகளின் நலன் காக்கும் சமூகப் பாதுகாப்பு முயற்சியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 52 திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை மற்றும் 50 திருநங்கைகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வட்டைகள் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதில் பெற்று பயன்பெறலாம்.
1
3
118
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நடைபெற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நிகழ்வுகளின் தொகுப்பு.
1
80