இன்று (01.11.2026) நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கழகப் பொருளாளர் அண்ணன் @Srinivasanoffl அவர்களுடன், கழக மூத்தோர்களுடன் கலந்துக் கொண்ட போது ...
#AIADMK
நேற்று (31.10.2026) வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் கழகம் சார்பில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - பள்ளி சாலை, காந்தி சிலை அருகில் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாம் ஏற்படுத்தி கொடுத்து - மக்கள் மறந்த நல திட்டங்களை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டி, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதற்கு எடப்பாடியாரே சான்று என்பதை அவர் ஏற்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு,
நம் எதிர்கால தலைமுறை ஓர் ஆரோக்கியமான, சுகாதாரமான தலைமுறையாக உருவாக வேண்டுமானால் - போதை பொருட்கள் இல்லாத தமிழகமாக, பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாக, கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ காரணமான அண்ணா திமுக விற்கு தான் வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் செய்த திட்டங்கள் மூலம் எடுத்துரைத்து உரையாற்றினேன்.
திரு விஜய் என்ற முன்னாள் நடிகர் தலைமையிலான பொய்க்கால் குதிரை அரசு, மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசுவதை விட, மக்களுக்கு திட்டங்கள் வழங்குவதை உறுதிபடுத்தாமல், குறிப்பட்ட கட்சியை திட்டுவது தான் அரசியல், குறிப்பிட்ட கட்சி யை எதிர்த்தால் மக்கள் வாக்களிப்பர் என்று நினைத்து அரசியல் செய்கின்றனர்.
மேலும், பெண்கள் மத்தியில் தாய் மாமன், அண்ணன் என போலி வேடமிடும் திரு விஜய் அவர்கள், அவரது ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் சிறு குழந்தைகளை மீட்பதிலும், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும், கொலை - கொள்ளை - பாலியில் வன் கொடுமைகளை தடுக்கவும், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவதில் கவனம் கெள்ளவும், தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல்,
ஜோசியர் கூறுகிறார் ஆதலால் பத்தாவது மாடியில் இருந்து கடலை பார்க்க தனது அறையை மாற்றுவது, பட்டினம்பாக்க மக்களை விரட்டியடித்துவிட்டு புதிய தலைமை செயலகத்தை உருவாக்க நினைப்பது, எதாவது ஆட்சி மீது குறை பெரிதானால் ரோடு ஷோ நடத்தி மக்களை திசை திருப்ப தனது சினிமா கவர்ச்சியை பயன்படுத்திக்கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த அறிவுள்ள தமிழ் சமூகம் திரு விஜய் என்பவர் போலி தலைவன், நடத்தியது ரீல்ஸ் ஆட்சி என்று உணரும் போது " It's too late " என்று எண்ணும் நிலைக்கு தமிழகம் தள்ளப்படாமல் இருக்க @AIADMKOfficial மட்டுமே மாற்று என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
#AIADMK
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என ஏற்று வாழ்ந்த தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குரு பூஜை திருநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
#thevarjayanthi
Dr VPB Paramasivam retweeted
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?
வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.
நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!
“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ?
மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இன்றைய இளம் தலைமுறையினர் அன்றாட நிகழ்வுகளில் இயல்பாக பங்கேற்கும் போது கூட Heart Attack போன்ற இருதய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை எளிதாக கடந்து போக கூடாது.
எப்படி சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறதோ, அதே போல முன்னோர்கள் எவராது இருதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், வழி வழியாக அதும் தொடர்கிறது.
இருதயம் சார்ந்த நோய்கள் குணபடுத்தக்கூடியவை தான். ஆதலால், நான் காணொளியில் கூறிய மருத்துவம் சார்ந்த Test க்களை மேற்கொண்டு, நம் வாழ்வியலை நோயில்லா வாழ்வாக மாற்ற முயலுங்கள்.
நம் அடுத்த தலைமுறைக்கு பொன் பொருள் சொத்து போன்றவற்றை சேர்த்து கொடுப்பதை விட நோயில்லா தலைமுறையை உருவாக்க முயலுங்கள்.
#heartattack #doctor #cardiology #cardiologist
Dr VPB Paramasivam retweeted
TVK is nothing but fancy and unrealistic commitments giving party.
Nothing more nothing less.
Not a single commitment has been fulfilled in the last 5 months. And nothing will be fulfilled in the balance time also. Well said @DrVpb brother
Feeling Happy ...Amazon has listed our new book" The Dravidian phoenix" launched on behalf aiadmk youth men n women brigade as best seller .
I wish lot of youngsters read this wonderful book on tamilnadu s longest ruling party AIADMK @AIADMKITWINGOFL @AIADMKOfficial @polimernews
செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணுவோருக்கும், கல்வி ஒன்றே தனக்கான ஆயுதமாக எண்ணுவோருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் வாழ்த்துக்கள்.
#ayudhapooja
வெற்றி மெத் விநியோகத் திட்டத்துக்காக வச்சிருப்பார் பாவம் ... கடந்து போக வேண்டியது தான் தமிழ்நாட்டின் தற்போதைய தலையெழுத்து
நீங்க நடிங்க cm sir
கழகம் தொடங்கப்பட்ட இந்த இனிய நாளில், கழகத்திற்கு புதிய அத்யாயத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, Gen Z, Gen Alpha தலைமுறையினருக்கு நமது கழகத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக, தமிழ்நாட்டை ஏன் அஇஅதிமுக அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது, ஏன் மீண்டும் ஆள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளும் விதமாக, 19 வயது இளைஞர் தம்பி திரு சஞ்சய் செந்தில்நாதன் அவர்கள் எழுதிய "The Dravidian Phoenix" என்ற தலைப்பை கொண்ட ஆங்கில புத்தகத்தை கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தனது பொற்கரங்களால் வெளியிட்டார்.
இப்புத்தகம் Amazon இணையதள வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
#AIADMK @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Dr VPB Paramasivam retweeted
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
Dr VPB Paramasivam retweeted
கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட இயக்கம்...
அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமாக இல்லாமல்
இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்!
காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்!
எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாத,
எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாத வீரியமிக்க தொண்டர்களை கொண்ட இயக்கம்!
எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட மாபெரும் பேரியக்கமாம் @AIADMKOfficial- ன் 55 ஆம் ஆண்டு தொடக்கவிழா!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
அவரவர் வீட்டு இளம்வாக்காளர்களிடம் அண்ணன் சொன்ன கருத்தைக் கேளுங்கள் சகோ ...திரைக்கவர்ச்சியில் இருந்து தமிழகம் மீழட்டும்
@AIADMKITWINGOFL instagram.com/reel/DeexL_kht…
இன்றைய மக்கள் மனநிலையை மிக அழகாக விளக்கியுள்ளார்
பொறுத்திரு புரட்சித்தமிழர் படையே நம் மக்கள் பணிக்காக மீண்டும் தாய்தமிழ்நாடு நம்மைத் தேடும்@AIADMKITWINGOFL @EPSTamilNadu @polimernews @ThanthiTV
மக்களின் கவனம் விஜய் அவர்களை நோக்கி திரும்ப காரணம் என்ன?
#ThalapathyVijay #CMJosephVijay #KaruPalaniappan #TamilCinema #TouringTalkies
Dr VPB Paramasivam retweeted
When you vote based on stardom and small
Children’s advice what else you will expect.
But this is really heart breaking to see m this. There were so many promises given before he election, why fulfil this first?
At least now realise the blunder what you guys have done…
இப்பொழுது வடமாநிலத்தில் தொடங்கும் இத்திட்டத்தை பத்து வருடத்துக்கு முன்பே பெண்கள் சமூக பொருளாதார வளர்ச்சியடைய எடப்பாடியார் தந்தார்.ஆனால் தமிழ்நாட்டின் இளம்தலைமுறை இன்று மக்களுக்காக தன் நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவிடாத நடிகனிடம் அதிகாரதரத்தை தந்துவிட்டு அவன் நடத்தும் நாடக ஆட்சிக்கு விசிலடிக்கும் கூட்டமாக மாறியிருக்கிறது@AIADMKOfficial @PttvNewsX @IndiaToday
Dr VPB Paramasivam retweeted
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
This is happening all over India ! #ECI pls have a back bone to write a law to stop this. Democracy is becoming a laughing stock due to such actions. people of Mathuranthakam and Dharapuram pls teach them a lesson.TN has been a trend setter in creating history, pls do the same here , by their defeat uphold the standards of democracy! 🙏🏼
#TVKFails #AIADMK






























