MJK PARTY (@MjkParty) header
MJK PARTY (@MjkParty) profile picture

மனிதநேய ஜனநாயக கட்சி

Chennai, India
Joined April 2016
#சிதம்பரம் ரயில் நிலையம் முற்றுகை! திரளான மஜகவினர் பங்கேற்பு! தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது! அக்டோபர்.30., சிதம்பரம் பகுதி மக்களின் நெடுநாளைய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து இன்று சிதம்பரம் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். முற்றுகை அணிவகுப்பு சிதம்பரம் ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நடைபெற்ற இந்த முற்றுகைக்கு பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
12
62
1,703
நிதி தாரீர்! மஜக நன்கொடை சேகரிப்பு திட்டம்!! திருச்சியில் தொடக்க நிகழ்ச்சி!! #மனிதநேய_ஜனநாயக_கட்சி -யின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடனும், தற்போதுள்ள கடன் சுமையை குறைக்கும் திட்டத்துடனும் 'நன்கொடை சேகரிப்பு திட்டம்' என்ற செயல் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழ்நாடு எங்கும் சுற்று பயணம் செய்து வணிகர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கட்சிக்கு நன்கொடை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொருளாளர் கேப்டன் சையது முகமது ஃபாருக் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், பொதுச் செயலாளர் M.முகமது நாசர் அவர்களும், துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்களும், இணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை அகமது கபீர் அவர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் இப்பயணத்தில் ஆங்காங்கே இதர தலைமை நிர்வாகிகளும் இதில் இணைந்து பணியாற்றுவார்கள். இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி திருச்சியில் இன்று மாலை 4.00 மணி அளவில் எளிமையாக நடைபெற உள்ளது. இதில் ஒருங்கிணைந்த செயல் திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து நிர்வாகிகளும் வருகை தர உள்ளனர். முதலில் தலைவர் அவர்கள் முதல் மாநில பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தங்களின் நன்கொடைகளை ஒன்றில் செலுத்த உள்ளனர். இந்த நிதிசேகரிப்பின் போது ஏழைகளிடமும், தொழிலாளர்களிடமும் நிதி வசூலிக்கக் கூடாது என்ற ஒரு கொள்கையை முடிவு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வெளியீடு; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம். 01.10.2026. facebook.com/share/p/1C6LtgZ… facebook.com/share/p/1CcZ2TG…
1
6
37
637
#நூல்_வெளியீட்டு_நிகழ்ச்சி; #பழ_நெடுமாறன்_ஐயாவுக்கு_தகைசால்_தமிழர்_விருது_வழங்க_வேண்டும்! #மஜக_தலைவர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_வேண்டுகோள்! செப்டம்பர் 27 “தமிழர் தலைவர் பழ. நெடுமாறன்” என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. இந்நூலை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., வெளியிட, முன்னாள் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரங்கசாமி அவர்களும் மற்ற பல முன்னணி விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு... சிறப்புக்குரிய ஒரு தலைவர் குறித்த ஒரு நூலை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தோழர்கள் சங்கரய்யா மற்றும் நல்ல கண்ணு ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மதிக்கத்தக்க தலைவர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள். மற்றொருவர் நம்முடைய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள். இவர்கள் இருவரையும் நான் மிகவும் மதிப்பவன். இந்த வயதிலும் இவர்கள் தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் 93 வயதில் அறுபது ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 60 ஆண்டுகளில் 60 முறை அவர் சிறை சென்று இருக்கிறார். தடா சட்டத்திலும், பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் சிறைவாசத்திற்கு பின்னாலும் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு ஆளான ஆறு தமிழர்களில் அவரும் ஒருவர். உலகத் தமிழர் பேரமைப்பை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் அவர், 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய பல நூல்களை நான் படித்திருக்கிறேன். அவர் கடலூர் சிறையில் இருக்கும் போது 'உருவாகாத இந்திய தேசியமும்; உருவான இந்து பாசிசமும்' என்ற நூலை எழுதினார். அந்த நூல் குறித்து என்னிடம் தொடர்பு கொண்ட போது, 100 நூல்களை வாங்கி பலருக்கும் நான் அதை அனுப்பி வைத்தேன். கடந்த 25 ஆண்டு காலத்துக்கு மேலாக அவரோடு பல மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறேன். எங்களை இணைப்பது தமிழ் உணர்வும், தமிழும் தான். 'பழந்தமிழர் பரவிய நாடுகள்' என்ற அவருடைய நூலையும் நான் படித்திருக்கிறேன். இலங்கைக்கு அவர் சென்று ஈழத்தமிழர்களை சந்தித்து இருக்கிறார். ஈழப் போராட்ட குழுவினருக்கு எல்லா உதவிகளையும் செய்து இருக்கிறார். அதுவெல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அவர்கள் திலீபன் யார் என்று கேட்பார்கள். கிட்டு யார் என்று கேட்பார்கள். அவர்கள் ரீல்சை நம்பும் தலைமுறையினர். ரியலை மறந்து விடுகிறார்கள். முன்பு சந்தனக் காட்டில் வீரப்பன் அவர்கள், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்ற போது; அன்றைய முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று; அவரை மீட்க பயணித்த துருக்குழுவிற்கு அவர்தான் தலைமை தாங்கினார். ஆபத்தான அந்த பயணத்தில் ஏற்ற இறக்கம் மிக்க மலைத்தொடர்களில் அவர் பயணித்தார். கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் தான் அந்த சவாலான பணிகளை செய்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எதிர்ப்பு இருந்தபோது, அங்கு மாணவராக இருந்த இவர்தான் அண்ணாவை அங்கு அழைத்துச் சென்று உரையாற்ற செய்தார். இந்திரா காந்தி அம்மையார், காமராஜர், பெரியார், அண்ணா, MGR, கலைஞர் என அவர் பழகிய தலைவர் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு தலைவரை நாம் இப்போது கொண்டாடுகிறோம். மேலும் கொண்டாட வேண்டும். அவருக்கு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் என்ற விருதை வழங்க வேண்டும். அதற்காக நாம் குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். ஐயா திரு. பழ. நெடுமாறன் அவர்கள் உடல் நலம் குன்றிய காரணத்தினால் இன்றைய இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை அகமது கபீர், தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை மன்சூர் மற்றும் தஞ்சை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். செய்தி வெளியீடு: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWing #தஞ்சை_மத்திய_மாவட்டம் 28.09.26
5
7
323
மதுராந்தகத்தில்... #மஜகவினர்_தீவிர_பரப்புரை! செப் :27 மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் திரு.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடந்த ஒரு வார காலமாக தொடர் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். களப்பணிகள், உரையாடுதல், துண்டறிக்கைகள் வினியோகம் என அவர்களது பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய பரப்புரையில் மதுராந்தகம் தேர்தல் பணிக்குழுவுடன் , மஜக மாநிலச் செயலாளர் S.M.நாசர், MJTS மாநிலச் செயலாளர் நாகூரான், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் ராயபுரம் அஜ்மல், தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் காதர் மற்றும் மேற்கண்ட மாவட்டங்களில் நிர்வாகிகளும் பங்கேற்றனர். அடுத்த வாரம் இங்கே மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரைக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
1
8
28
432
முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான அண்ணன் மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு கொடுத்து வந்த உயர் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு @CMOTamilnadu குறைத்தது ஆச்சரியம் அளிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது காழ்ப்புணர்ச்சி அரசியலின் வெளிப்பாடாகவே கருதப்படும்.
2
417
32
1,752
42,809
– at Nagapattinam, India
2
2
70
#சிதம்பரம்_தொகுதி ; வேட்பு மனு தாக்கல் செய்தோம்! ............................. இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன். இந்த நிகழ்வில் தோழமை கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் ஒரு வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால், வர இயலாத மற்றவர்கள் மாற்று வேட்பாளருடன் வருகை தந்து பங்கேற்றனர். நிகழ்வு இடத்திற்கு சற்று தொலைவில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கனவுகளையும், உற்சாகத்தையும் நிறைவேற்ற நமது பணிகள் தொடரும். #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #MTA4CHIDAMBARAM #vote4உதயசூரியன்
22
66
931
தோழர் நல்லக்கண்ணு பெயரில் நுழைவாயில்!! 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தீர்மானம்!! உற்சாகமாக நடைபெற்ற மஜக செயற்குழு!! பிப் 27 மஜக 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்று தலைமை செயற்குழு கூட்டம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
2
7
85
வானவில் கலாச்சாரதத்தை பாதுகாப்போம்!! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து!! இந்திய தேசத்தின் ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் 77 வது குடியரசு தின விழாவை பெரும் எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். இந்தியா ஒரு நட்சத்திர தேசமாக திகழ்கிறது. அதற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு.
1
1
9
75
PEASE கண்காட்சி*!! அழைப்பு பணி என்பது பிரச்சாரமல்ல!! உள்ளங்களை வென்றெடுப்பதாகும்!! மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி பேச்சு!!
5
49
ஜனவரி-25 #மொழிப்போர்_தியாகிகள்_தினம் 1965-ல் இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தமிழின உணர்வாளர்களை நினைவில் கொள்வோம் ! அவர்கள் போராடியதற்கான காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன! ....................................... மு.தமிமுன் அன்சாரி தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி.
1
6
28
பெரம்பலூரில்.... மஜக வட மத்திய மண்டல... தேர்தல் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்!! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!! ஜனவரி.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட மத்திய மண்டல தேர்தல் பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது.
1
1
4
41
தாய் வீடு திரும்பல்!! கோவை லேனா.இஷாக் அவர்கள்.... மஜக தலைவர் முன்னிலையில் மீண்டும் கட்சிப் பணியில் இணைந்தார்!! அவருடன் கோவை சமூக செயல்பாட்டாளர் நாகூர் அனிபா அவர்களும், சமீபத்தில் மஜகவில் இணைந்த R.M. ரபிக் அவர்களின் மூலம் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ஆரிப் அவர்களும் இணைந்தனர
1
17
இளையான்குடியில்... மஜக பொதுச்செயலாளர் மெளலா.முஹம்மது நாசர் அவர்களுடன்.... பேரூராட்சி மன்ற தலைவர் சந்திப்பு!!
2
13
நல்லெண்ண வருகை!! திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு நூலாசிரியர் சூர்யா சேவியர் அவர்கள்... மஜக தலைமையகம் வருகை!! மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு!!
3
16
ஆம்பூரில்... உற்சாகம், எழுச்சி உரையாடல்... மஜக கூட்டத்தில் உணர்வலைகள்!! ஆம்பூரில் நடைபெற்ற மஜக-வின் வடமேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
1
3
18
ஆம்பூரில்... தாய்வீடு திரும்பிய சொந்தங்கள் ! மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் இணைந்தனர்!!
1
3
21
ஆம்பூரில்.... மஜக வடமேற்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் கூட்டம்!! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!! திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட உறுதியேற்று தீர்மானம்!!
1
5
31
#மஜக_தலைமையக_நியமனம்... மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநிலத் துணைச் செயலாளராக ஒத்தக்கடை உமர் பாரூக் அவர்கள், தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். இவண், எம்.முகமது நாசர் பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 04.01. 26
2
5
59