குடிமக்களின் யோசனைகள் மற்றும் புத்தாக்க கருத்துகள் மூலம் நல்லாட்சியை கட்டமைப்பதற்கான இந்திய அரசின் குடிமக்கள் பங்களிப்பு தளம்.

New Delhi
Joined May 2023
வாரணாசியிலிருந்து உலகெங்கும் ஆடை அணிவகுப்பில் இந்தியாவின் தடம்! வாரணாசியில் புதிய ஆடை உற்பத்தி ஆலையைப் பிரதமர் @narendramodi திறந்து வைத்தார். இந்த முயற்சி நவீன ஆடை உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தவும், வாரணாசியில் தயாரிக்கப்படும் ஆடைகள் சர்வதேச சந்தைகளைச் சென்றடையவும் வழிவகுக்கிறது. #PMModiInVaranasi
5
178
కాశీ ఆకాశంలో అద్భుత వైమానిక విన్యాసాలు! Mi-17 V5, చేతక్, సుఖోయ్, రుద్ర, అపాచీ హెలికాప్టర్లతో పాటు DO-228 విమానాలతో త్రిదేవ్, అలకనంద, భైరవ్ విన్యాసాలు కనువిందు చేశాయి. కాశీ ఆకాశంలో వైమానిక శక్తి అద్భుతంగా ఆవిష్కృతమైంది. #PMModiInVaranasi #WingsOverGanges
58
தொழில்நுட்பத்தின் உதவியால் தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்கிறது! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 139வது பகுதியில், e-Sanjeevani சேவையின் வெற்றியைப் பிரதமர் @narendramodi பகிர்ந்துகொண்டார். இந்தச் சேவையின் மூலம் இதுவரை சுமார் 50 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, லடாக் மற்றும் நாகாலாந்து போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடிகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 1.90 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களுடன் இணைந்து, கிராமப்புற மக்களுக்கும் மருத்துவச் சேவைகள் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் எளிதாகக் கிடைப்பதில் e-Sanjeevani முக்கியப் பங்காற்றி வருகிறது. #MannKiBaat #eSanjeevani
4
1
2
163
சிறுதானிய சாகுபடியால் பாரம்பரியத்திற்குப் புத்துயிர்! வருமானத்தை உயர்த்தவும் புதிய வாய்ப்புகள்! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 139வது பகுதியில், மேகாலயா மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த ஊக்கமளிக்கும் உதாரணங்களைப் பிரதமர் @narendramodi பகிர்ந்துகொண்டார். அங்கு இளைஞர்கள் பாரம்பரிய சிறுதானிய சாகுபடிக்கு மீண்டும் புத்துயிர் அளித்து வருகின்றனர். மேகாலயாவின் கந்துலி கிராமத்தில் இரண்டு தோழிகள், சிறுதானியங்களைக் கொண்டு குக்கீஸ், கேக், மஃபின்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினர். இதனால் சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்ததுடன், விவசாயிகளும் மீண்டும் அவற்றைப் பயிரிடத் தொடங்கினர். அதேபோல், மேகாலயாவின் சடோல்பாரா கிராமத்தைச் சேர்ந்த செக்ஜிங் சங்மா, நவீன வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுதானியங்களைப் பயிரிட்டு தனது வருமானத்தை உயர்த்தியுள்ளார். நாகாலாந்தின் கெஜோமா கிராமத்திலும் 2024ஆம் ஆண்டு சிறுதானிய சாகுபடி மீண்டும் தொடங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு அங்கு முதலாவது சிறுதானியத் திருவிழாவும் நடைபெற்றது. பாரம்பரியப் பயிர் சாகுபடியைப் புதிய வாய்ப்புகளுடன் இணைப்பதன் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பையும் வளத்தையும் பெருக்க முடியும் என்பதை இந்த முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. #MannKiBaat #Millets #ShreeAnna
8
6
205
உரையாடல் நாளையும் தொடர்கிறது! #MannKiBaat நிகழ்ச்சியின் 139வது பகுதியைத் தவறவிடாதீர்கள்! உத்வேகம் அளிக்கும் மனிதர்கள், புதுமையான சிந்தனைகள் மற்றும் அனுபவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த உரையாடலில் நீங்களும் இணையுங்கள். நேரலையில் காண: youtube.com/live/3hRshoXeE2o…
1
68
வரலாறு படைத்த ஈட்டி எறிதல்! ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026இல் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் புதிய உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார் ஹேனி! #AsianParaGames2026
4
1
110
பூஜ்ய குருதேவர் சுவாமி சின்மயானந்தரை நினைவுகூர்ந்த பிரதமர் @narendramodi, 1993ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவரைச் சந்தித்த தருணங்களைப் பகிர்ந்துகொண்டார். உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 1993 ஆகஸ்ட் 3ஆம் தேதி சான் டியாகோவில் குருதேவர் காலமானார். சிகாகோவில் நடைபெறவிருந்த நூற்றாண்டு விழாவுக்குச் சில வாரங்களே இருந்த நிலையில் அவர் மறைந்தார். வலிமையான, திறன்மிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்களை வலுப்படுத்துவது குறித்து குருதேவருடன் நடைபெற்ற இறுதி உரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அவரது தொலைநோக்குப் பார்வை தனது மக்கள் சேவைப் பயணத்திற்கு இன்றும் உத்வேகம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். #ChinmayaAmritMahotsav
2
2
87
உங்கள் படைப்பாற்றலால் தவறான நம்பிக்கைகளை உடைத்து, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியுமா? தத்தெடுப்பைச் சுற்றியுள்ள பொதுவான தவறான நம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்தவும், இந்தியாவில் சட்டப்படி தத்தெடுக்கும் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்ஃபோகிராபிக்ஸின் சக்தியைப் பயன்படுத்துங்கள். No Shortcuts to Parenthood: Myth vs Reality Infographic Contest போட்டியில் பங்கேற்று, தத்தெடுப்பு தொடர்பான தகவல்களை மேலும் தெளிவாகவும் எளிதாகவும் மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள். சிறந்த 10 பேருக்கு தலா ₹2,000 வழங்கப்படும்! 🔗 mygov.in/task/no-shortcuts-p… #LegalAdoption #NoShortcutsToParenthood #EveryChildDeservesAFamily @MinistryWCD @CARAWCD
1
57
உங்கள் படைப்பாற்றலால் தனி முத்திரை பதியுங்கள்! கால்நடைகளின் ஆரோக்கியம், மலிவு விலையில் கால்நடை மருந்துகள் கிடைப்பது மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் ‘பசு ஔஷதி’ திட்டத்திற்கு ஒரு அழகான இலச்சினையை வடிவமைத்திடுங்கள்! பசு ஔஷதி இலச்சினை வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்று ₹50,000 பரிசு வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்! உங்கள் படைப்பை இன்றே சமர்ப்பியுங்கள்! 🔗 mygov.in/task/logo-design-co… #PashuAushadhi #LogoDesignContest @Min_FAHD @Dept_of_AHD
70
படைப்பாற்றல்மிக்க காணொளிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்! #MyGov தளத்தில் நடைபெறும் MedLEaPR மூலம் புலன்விசாரணையை விரைவுபடுத்துவது குறித்த காணொளிப் போட்டியில் பங்கேற்குங்கள்! MedLEaPR எவ்வாறு புலன்விசாரணையை விரைவுபடுத்த உதவுகிறது என்பதையும், புதிய குற்றவியல் சட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளிகளை உருவாக்கி உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். 🔗 mygov.in/task/video-contest-… #NewIndia #NewCriminalLaws
1
1
3
128
ரீல்ஸ் உருவாக்கி இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புங்கள்! #MyGov இன் Cyber Safe Yuva Reel Contest 2026 போட்டியில் பங்கேற்று, சைபர் குற்றங்கள், புதிய ஆன்லைன் மோசடிகள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுவாரஸ்யமான ரீல்ஸ் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். 🔗 mygov.in/task/cyber-safe-yuv… #NewIndia #CyberAwareness
1
2
76
మీ ఆలోచన దేశ స్వరంగా మారవచ్చు! దేశంలో సానుకూల మార్పు తీసుకొస్తున్న స్ఫూర్తిదాయక కార్యక్రమం లేదా అసాధారణ ప్రయత్నం గురించి #MannKiBaat కోసం పంచుకోండి. మీ సూచన లక్షలాది మందికి స్ఫూర్తినివ్వవచ్చు. mygov.in/group-issue/invitin… #NewIndia
97
இந்திய தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவு அளியுங்கள்! #MyGov-இல் நடைபெறும் 50 நாள் ‘Vocal for Local Challenge’ உறுதிமொழி இயக்கத்தில் பங்கேற்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தவும், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், உள்நாட்டு வணிகங்களுக்கு ஆதரவு அளிக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுங்கள். இங்கே பங்கேற்கவும்: pledge.mygov.in/vocalforloca… #NewIndia #Vocal4Local
2
3
136
ஒவ்வொரு பண்பாட்டுக்கும் தனித்துவமான ஒரு கதை உண்டு! #MyGov-இல் நடைபெறும் ‘என் பண்பாடு, என் கதை’ (My Culture My Story) போட்டியில் பங்கேற்று, உங்கள் பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துங்கள். உள்ளூர் திருவிழாக்கள், பாரம்பரிய கலை வடிவங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மொழிகள், பாரம்பரியத் தளங்கள் அல்லது அதிகம் அறியப்படாத மரபுகள் பற்றிய சுவாரஸ்யமான கதைகளைப் பகிருங்கள். அவை நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவை. இங்கே பங்கேற்கவும்: mygov.in/task/my-culture-my-… #NewIndia #MyCultureMyStory
3
3
114
கடந்த 12 ஆண்டுகளில் 650க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகள் இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா தனது கலாச்சார மையங்களுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிரி எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும், நாம் உண்மையின் பக்கமும் மனிதநேயத்தின் பக்கமும் நிற்கும்போது, இறுதியில் வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற துணிச்சலை இந்தப் பண்டிகை நமக்கு அளிக்கிறது. விஜயதசமியின் இந்த உணர்வே காலங்காலமாக பாரதத்தின் சிந்தனையாக இருந்து வருகிறது. — பிரதமர் @narendramodi #Vijayadashami2026 #Dussehra
3
8
156
விஜயதசமி எனும் இந்தப் புனிதமான திருநாளில், பகவான் ஸ்ரீராமர், அன்னை ஜானகி மற்றும் பஜ்ரங்பலி ஆகியோரின் திருவடிகளை வணங்குகிறேன். இந்தப் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பாரதத்தின் ஒவ்வொரு பகுதியும் ராமமயமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் ராமலீலை நிகழ்ச்சிகள், பகவான் ஸ்ரீராமரின் இலட்சியங்களை உயிர்ப்புடன் நிலைநிறுத்தும் பாரம்பரியம், அநீதிக்கும் பயங்கரவாதத்திற்கும் முடிவு கட்டும் முழக்கம், அசத்தியத்தின் மீது சத்தியமும் சனாதன தர்மமும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை எங்கும் காணப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை, இது வெறும் பண்டிகை மட்டுமல்ல, பாரதத்தின் உயிர்சக்தியாகும். — பிரதமர் @narendramodi #Vijayadashami2026 #Dussehra
82
பாதுகாப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்துங்கள்! #MyGov-இல் ‘NSG வினாடி வினா: சர்வத்ர சர்வோத்தம சுரக்ஷா’வில் பங்கேற்று, NSG வீரர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை திறன் குறித்த உங்கள் அறிவைச் சோதியுங்கள். quiz.mygov.in/quiz/nsg-quiz-… #NewIndia #NSG
4
191
இந்திய பழங்குடியின மரபை அறியுங்கள்! #MyGov-இல் ‘ஜன்ஜாதிய கௌரவ் திவஸ் 2026 வினாடி வினா’வில் பங்கேற்று, பழங்குடியின மரபுகள், பாரம்பரிய அறிவு, கலைகள், விடுதலை வீரர்களின் பங்களிப்பை அறியுங்கள். quiz.mygov.in/quiz/quiz-on-j… #JanjatiyaGauravDivas
1
6
186
பிரதமர் மோடியின் சேவைப் பயணம் குறித்து இளம் இந்தியாவுடன் ஒரு நிமிடம்! பிரதமர் @narendramodi தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், அவரது சேவைப் பயணம், தேசத்தின் மீதான அர்ப்பணிப்பு, தலைமைத்துவப் பாணி மற்றும் புதிய இந்தியாவை உருவாக்கும் மாற்றங்கள் குறித்து இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேளுங்கள். #FridaysAtMyGov நிகழ்ச்சியின் சமீபத்திய அத்தியாயத்தை இப்போதே பாருங்கள்: youtube.com/watch?v=gIhhlj32… #25YearsOfSeva
3
1
5
164