𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team) header
𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team) profile picture

#TeamOTFC online Fanatic love ❤️💛 belonging to @Actorvijay & @TVKVijayHQ 🦁💥🇪🇸🇪🇸

Joined August 2020
Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)Photo by 𝙊𝙏𝙁𝘾 X™ (@OTFC_Team)
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஏப்ரல் 23. தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள். எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி, காலை 7மணியில் இருந்து 12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும். குறிப்பாக,முதியவர்களும், பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது. மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம். எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள். 100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம்.
650
6,992
156
21,780
432,182
Something new. Something powerful. April 22 marks the rise of the biggest organic political movement online ❤️🔥 #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
5
11
365
புதிய பாதை, புதிய வரலாறு. மக்கள் சக்தி… மாற்றத்தின் வெற்றி! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
3
4
209
பெண்கள் அச்சமின்றி வாழும் தமிழ்நாடு போதைப்பொருள் இல்லாமல் கனவுகளை அடையும் இளைஞர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்ப்பு நனவாக்க, தளபதி விஜய் தலைமையை தேர்வு செய்யுங்கள். உங்கள் வாக்கை விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் #VoteForTVK #VoteForWhistle
2
5
162
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
700
8,650
357
24,929
1,038,678
WHISTLE KOLAM at Trichy East Constituency! ❤️❤️ #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
4
8
229
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (19.04.2026, ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
149
2,578
69
6,827
200,329
பெரம்பூர் தொகுதி மக்களுடன்! ❤️‍🔥 #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
11
26
395
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.   பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.
1,575
8,713
585
21,540
1,067,518
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
2,357
11,777
1,039
28,594
2,688,573
Congress General Secretary D. Selvam Joined @TVKPartyHQ !!
5
32
460
𝙊𝙏𝙁𝘾 X™ retweeted
🤖 Made with AI
703
6,810
466
18,384
1,170,867
முதல்கட்ட TVK தேர்தல் வாக்குறுதி • ₹2500 per month • 6 cylinders per year • 8 grams of gold for marriage • Frees buses all over TN • Free Napkins • Separate Department • Gold ring for new born babies #TVKManifesto
9
14
442
சர்வதேச மகளிர் தின விழா ♥️ @TVKVijayHQ
9
22
643
Scheduling from Trichy Airport 🌞🛫🔥 to Thanjavur #TVK stage 🚕🚓 on car (60 kms) #TVKPolitical meet 🤍 - Thanjavur 🇪🇸🫶💥
4
11
323
Now it's Unstoppable on his decade 😅🔥 Virtual warriors dealing in beast mode 🛫💥 Electrical campaign in beast mode : 🇪🇸🔥 #TVKVijay‌ √ @TVKVijayHQ √ @actorvijay
3
24
282
Sun news 🌞🌄 Sunny news 😂💥
9
28
387