PT IT Wing (@PTITWing) header
PT IT Wing (@PTITWing) profile picture

Official Twitter Page of Puthiya Tamilagam Party IT Wing புதிய தமிழகம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்

Tamil Nadu - India
Joined August 2020
Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)Photo by PT IT Wing (@PTITWing)
மூன்று சதவீத பிராமணர்களை எதிர்க்க இடைநிலை சாதிக்கு பெரியார் தேவை! கடைநிலை சாதியும் துணைக்கு உடன் வரவேண்டும் இல்லையேல் அவன் பார்ப்பன கைக்கூலி! அதுவே கடைநிலை சாதி இடைநிலை சாதியை எதிர்கிறான் என்றால் பெரியாரை கையில் எடுக்கும் சாதிக்காரன் தாழ்த்தப்பட்டவன் ஒடுக்கப்பட்டவனாகிவிடுவான்!
13
118
1
279
கனிமவளக் கொள்ளை மூன்று மாத தடை உத்தரவு நீக்கம்! தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! வாகன விதிகளின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்காமல், கனிமவளங்களை வெட்டி எடுப்பது, ஏலம் விடுவது போன்ற அடிப்படை அம்சங்களை மையமாகக் கொண்டு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்! ................................................ தமிழ்நாட்டில் பல வருடங்களாக அளவு கடந்து கனிமவளக் கொள்ளைகள் நடைபெற்றதுடன், அண்டை மாநிலங்களான கேரளாவிற்கும், கர்நாடகத்திற்கும் மற்றும் துறைமுகங்கள் வழியாக மாலத்தீவு உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் கடத்தப்பட்டன. இந்தக் கனிமவளக் கொள்ளையால் தமிழ்நாட்டினுடைய கனிமவளங்கள் சூறையாடப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் கற்கள் ஏற்றிச் சென்றதாலும், அந்த வாகனங்கள் கிராமக் குறுகிய பாதைகளில் சென்றதாலும் அடிக்கடி விபத்துகளும், அதேபோலச் சாலைப் பழுதுகளும் ஆகி, சாதாரண மக்களுடைய போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, கனிமவளக் கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இன்றைய ஆட்சியாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளம் ஏற்றிச் செல்வதற்குத் தடை விதித்து ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நேற்றைய முன்தினம் சில சட்ட முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. கேரளாவில் பல ஆறுகள் இருக்கின்றன; பாரதப்புழா ஆறு மிகப்பெரிய ஆறு. ஆனால், அந்த ஆற்றிலிருந்து ஒரு பிடி மணல்கூட எடுக்க முடியாத அளவிற்கு அந்த மாநிலத்தின் கனிமவளச் சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. எனவே, தமிழ்நாடு அரசினுடைய உத்தரவை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, வாகன விதிகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயற்சிக்காமல், கனிம வளங்களை வெட்டி எடுக்க அனுமதி அளிப்பது, ஏலம் விடுவது போன்ற தமிழ்நாடு அரசினுடைய பிற அதிகாரங்களைப் பயன்படுத்தி நிரந்தரமாகத் தடை விதிப்பதுதான் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்கு உண்டான நிரந்தர தீர்வாக இருக்க முடியும். எனவே, இப்பொழுது கொடுத்திருக்கக்கூடிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடவும், வாகன விதிகளின்படி மட்டுமே கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல், கனிமவளங்களை வெட்டி எடுப்பது, ஏலம் விடுவது போன்ற அடிப்படை அம்சங்களை மையமாகக் கொண்ட புதிய சட்டத்தின் மூலமாக நிரந்தரத் தடை விதிக்கவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி, 19.11.2026
1
18
38
949
’கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள்! இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் அவருக்கு நிகர் அவரே! இன்றைய Gen Z தலைமுறையினர், தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கும் சந்தோஷங்களுக்கும் மூலக் காரணங்களாகவும், உரங்களாகவும், உணர்ச்சிகளாகவும் இருந்து மறைந்த அவரின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு, போற்ற வேண்டும்! .............................................. வணிகர்களாக உள்ளே நுழைந்து, பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, சற்று ஏறக்குறைய 250 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்களையும், இந்தியாவின் வளங்களையும் சுரண்டிக் கொள்ளையடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, எங்களாலும் கப்பல் இயக்க முடியும் என்று மார்தட்டிச் சுதேசிக் கப்பலை இயக்கிய பெருந்தகை வ.உ.சிதம்பரனார் அவர்கள். நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, கல்லுடைக்கவும் செக்கிழுக்கவும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவர் வ.உ.சி. அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில், அவருக்கு நிகர் அவரே என்று சொன்னால் மிகையாகாது. அவர் மறைந்த இத்தினத்தில் அவரின் தியாகங்களைப் போற்றுவோம். இன்றைய Gen Z தலைமுறையினர், தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கும் சந்தோஷங்களுக்கும் மூலக் காரணங்களாகவும், உரங்களாகவும், உணர்ச்சிகளாகவும் இருந்து மறைந்த அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதையும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதையும் ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாகக் கருத வேண்டும். இதுவே அவருடைய தியாகத்திற்கு நாம் செலுத்தக்கூடிய நன்றிக்கடனாகும். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி, 18.11.2026
4
20
2
69
1,309
மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்கள்! தவெக சாதித்துவிடவும் இல்லை; திமுக, அதிமுக சாய்ந்து போய்விடவும் இல்லை! ...................................... தமிழ்நாட்டிற்கான சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்தால் ஆதாயமான பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில், இதுவரை ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவி உள்ளனர். இது அப்பட்டமான ’குதிரை பேரம்’ என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. சட்டரீதியாக இத்தேர்தலை நடத்த வழியில்லாத காரணத்தினாலே, தாராபுரம் மற்றும் மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு மாத ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சாதனைகள் எதையும் ஆளும்கட்சி செய்யாத நிலையில், நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதற்கு ஏற்ப, அணி மாறிய இரண்டு வேட்பாளர்களும் தொகுதிக்குள் சென்ற இடமெல்லாம் பொதுமக்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தனர். கள நிலவரங்கள் நாளுக்கு நாள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றுகொண்டிருந்ததை அறிந்துகொண்ட விஜய், மதுராந்தகத்தில் 39 இடங்களில் பேரணி நடத்தினார். தாராபுரத்தில் மிக குறைவாக வாக்குகள் பெறக்கூடும் என்ற மூலனூர் ஒன்றியத்தில் மாட்டு வண்டியை ஓட்டினார்; முருங்கைக்காய் பறித்தார். அங்கிருக்கக்கூடிய பெரும்பான்மை சமுதாயத்தின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிட்டார். பொதுவாக இடைத்தேர்தல்களுக்கு முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் இப்படியெல்லாம் மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்த வரலாறு இதுவரை இல்லை. ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டார்கள். எனினும், தாராபுரத்தில் ஆறு சுற்றுகளில் அதிமுகவே முன்னிலை வகித்தது. அதிமுக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இரண்டாவது இடத்திற்கு வந்த திமுகவிற்கும், வெற்றி பெற்ற தவெகவிற்கும் இடையே வாக்கு வித்தியாசம் வெறும் 9,471 மட்டுமே. அதேபோல மதுராந்தகத்திலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே கடந்த கால வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வி மனப்பான்மையிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராதது; காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கள அளவில் ஒன்றுபடாமல் இருந்தது; உண்மையான நேச சக்திகளை இணைத்துக்கொண்டு செயல்படாதது ஆகியவை ஆளுங்கட்சிக்கு நூலிழையில் சாதகமாக அமைந்துவிட்டது. எனவே, தவெக இடைத்தேர்தலில் சாதித்துவிட்டது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. கடந்த இரண்டு தேர்தல்களில் வாய்ச்சவடாலுடன் மாயாஜாலம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் ’பச்சோந்திகளாக’ மாறி எதிர்த்தரப்பிற்குச் சென்ற பின்னரும் தனது வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டது திமுக சாய்ந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. இதன்மூலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலேயே திட்டமிட்டு மடைமாற்றப்பட்டு விட்டன என்பது உறுதியாகி உள்ளது; யார் யாரால் பலன்பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. அதிமுகவைப் பொறுத்தமட்டிலும், பொதுத் தேர்தலில் முதலிடத்திலிருந்த அதிமுக இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்குப் பின்பு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட பிளவுகள், பலர் அணி மாறியது, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தையில் கூடுவதுபோல பனையூரில் முன் கேட் வழியாகவும் பின் கேட் வழியாகவும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டது, மேல்மட்டத்தில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள், கள அளவில் பணியாற்ற போதிய தொண்டர்கள் இல்லாதது ஆகியவை அதனுடைய வாக்கு வங்கியைக் குறைத்ததோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணியில் அல்வாவை போல ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும், 17 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்ற அன்புமணி வஞ்சகத்தோடு நடுநிலைமை வகித்தது அதிமுகவிற்குப் பெரிய பலம் இழப்பாகும். இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டிலும் தமிழக அரசியல் களத்தில் பச்சோந்திகளையும், சந்தர்ப்பவாதிகளையும் பொதுவெளியில் நன்கே அடையாளம் காட்டியிருக்கிறது. விஜயின் பலவீனத்தை வெளிப்படுத்தி, தமிழகத்தில் உள்ள எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதற்குண்டான எச்சரிக்கையையும், எதிர்காலத்திற்கான சரியான அரசியல் களத்தையும் அமைத்து கொடுத்துள்ளது.
31
68
3
288
7,058
மாணவர்களுக்கு மாட்டுக்கறி அமைச்சர் வன்னியரசு பேச்சு - மாட்டுக்கறி தமிழர்களின் உணவு கிடையாது டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பேச்சு;
40
376
8
1,403
49,306
வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம் - தொழில்கள், சேவைகள் முடங்கும் அபாயம் - மத்திய அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது! வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரடியாக தலையிட வேண்டும்! ........................................ தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே செப்டம்பர் 11 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்திருந்தனர். மீண்டும் செப்டம்பர் 28 முதல் 30 வரை தங்களின் மூன்று நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். வங்கி சேவை என்பது இன்றைய காலகட்டங்களில் தினசரி தொழிலாளர்களாக இருக்கக்கூடியவர்கள் முதல் பெருந்தொழில் நிறுவனங்கள் வரையிலும் மிக மிக இன்றியமையாததாகிவிட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணமாகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற விதி அமலில் உள்ள சூழலில், 99.9 சதவீதப் பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாகவே நடைபெற்றாக வேண்டும். எனவே, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தங்களால், வங்கிகள் அடிக்கடி செயல்படாமல் போவதால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் சிரமங்களுக்கும், தொழில் மற்றும் சேவை வளர்ச்சிகள் முடங்கும் அபாயமும் உருவாகி வருகிறது. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நோக்கத்திற்காக தனியார் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்கள் முறையாக நிறைவேறவில்லை. மெல்ல மெல்ல தனியார் வங்கிகள் பெருக ஆரம்பித்துவிட்டன. பல நேரங்களில் அரசு வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகளின் சேவை சிறப்புற இருக்கிறது என்ற நிலைகூட உருவாகிவிட்டது. எனவே, அரசு வங்கிகளின் சேவையை மேம்படுத்தி, அவை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அரசின் எல்லா நிறுவனங்களையும் அந்நிய நாட்டு முதலீட்டுக்கு திறந்துவிட முடியாது; கூடாது. அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய ஆபத்தாகவும் போய்விடும். எல்லாவிதமான தரவுகளும் வங்கிகள் மூலமாக அந்நியச் சக்திகள் கபளீகரம் செய்யக்கூடிய மிகப்பெரிய ஆபத்தும் உண்டு. வங்கி ஊழியர்களின் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய சில குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, அதைக் காரணம் காட்டி யார் யாருக்கோ இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்ட வாய்ப்பளித்துவிடக் கூடாது. அரசு வங்கி ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்புடையவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ள முடியாது. குறிப்பாக, பெரும்பாலான தினசரி பணிகளையே Outsourcing என்ற பெயரில் தாரைவார்ப்பது ஏற்புடையதல்ல. வங்கி ஊழியர்கள் பற்றாக்குறை என்பது மிக மிக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம். எனவே, இதுபோன்ற நியாயமான கோரிக்கைகளை அரசு தீர்த்து வைப்பதற்கு கனிவுடன் அணுக வேண்டும். பிற அரசு அலுவலகங்களை போல வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பது ஏற்புடைய கோரிக்கையாகத் தோன்றவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்களை ஐந்து நாள் வேலை அறிவித்ததன் விளைவாக, பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை முறையாக பெற முடியாத மோசமான நிலை இந்தியா முழுமைக்கும் உருவாகியுள்ளது. எனவே, வங்கிகள் சனிக்கிழமை இயங்க வேண்டியது கண்டிப்பாக அவசியம். இந்த ஒரு கோரிக்கையை விட்டுவிட்டு, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வங்கிப் பணிகளை Outsourcing முறைக்குத் தாரைவார்ப்பதைத் தடுப்பது, வங்கிகளில் 20 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டை கைவிடுவது போன்ற முக்கியமான கோரிக்கைகளைப் பரிசீலித்து அதற்குத் தீர்வு காண வேண்டியது மிக மிக அவசியம். வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம் மற்றும் முடக்கத்தால், வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வேகம் குறைந்துபோக அல்லது பின்னோக்கிப் போவதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. எனவே, மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரடியாக தலையிட்டு, உடனடியாக அனைத்து வங்கி ஊழியர் சம்மேளனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி 26.09.2026 @nsitharamanoffc @PMOIndia
3
17
36
674
சமூக நீதி விடுதிகளில் மாட்டுக்கறி! வன்னியரசை கண்டித்து செப்டம்பர் 30 - புதிய தமிழகம் கட்சி போராட்டம்.! பத்திரிக்கை செய்திகள்!
50
170
10
597
9,802
அமைச்சர்கள் ’கறி’ அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதில் கவனம் செலுத்துவார்களா? ............................................ திருவள்ளூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்ததாகவும், அந்த உணவைச் சாப்பிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தூய்மையற்றதாகவும், பாதுகாப்பற்றவையாகவும் இருப்பதும், பணியாளர்களின் கவனக் குறைவுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணியாகும். பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத சூழல் இங்கு நிலவி வருகிறது. ஆனால், கள எதார்த்தம் இவ்வாறு இருக்கையில், விடுதிகளில் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி தருவோம் என்றெல்லாம் அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வெற்று வார்த்தை அரசியல் செய்து வருகிறார்கள். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி, விடுதிகள், சமையற்கூடங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் அமைச்சர்கள் முழுக்கவனம் செலுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நிகழ்வை போன்று இனி எந்தவொரு சம்பவமும் நடக்காத வண்ணம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பாக, அங்குள்ள ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள் அந்த உணவைச் சுவைத்துப் பார்த்து, சோதனை செய்யப்பட்ட பிறகே மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் கண்காணிக்க பள்ளி, கல்லூரி துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி 24.09.2026
7
68
2
162
1,620
சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா? வன்னியரசே, விபரீத முடிவு எடுக்க வேண்டாம்! ....................................... தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நாம் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, மாதாந்திரக் கட்டணம் வெறும் 150 ரூபாயாக இருந்ததை 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது. இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசித் தேவைகளின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது. பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் தின அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர். மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம். ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போல ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம். அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது. மாணவர் விடுதிகளில் ’மாட்டிறைச்சி’ பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த மாட்டிறைச்சி குறித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, வன்னியரசின் மாட்டுக்கறி மாமிசக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 22.07.2026
59
268
28
755
39,365
மதுரை கூடல் நகர் மாணவன் தமிழ்ச்செல்வன் சந்தேக மரணம்! மரணத்திற்கான உண்மை காரணம் வெளிக்கொணரப்பட வேண்டும்! .................................... மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயின்று வரும் ஊராளிக் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவன், கடந்த 6 ஆம் தேதி காலையில் விளையாடச் சென்று, இரவு வரை வீடு வந்து சேரவில்லை. அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் தேடியதில், அங்குள்ள நீர்நிலையில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மாணவனுக்கும் வேறொரு சமுதாய மாணவிக்குமிடையே காதல் இருந்ததாகவும், மாணவியின் பெற்றோர் அம்மாணவனை பலமுறை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அன்றைய தினம் மாணவன் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. இந்த மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. மாணவனின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை வெளிக்கொண்டுவரவும், அது கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். - டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, - நிறுவனர் & தலைவர், - புதிய தமிழகம் கட்சி, - 09.09.2026
23
32
901
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.! ..................................................... பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 வருடங்கள் கழித்து, வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இச்சிறப்பு நிகழ்ச்சியில் மேல்மாடத்திற்குச் சென்று பங்கேற்க பலரும் ஆர்வம் செலுத்துவர். இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய 9,000 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டும் ஆளுங்கட்சி அரசியல் தலையீடு காரணமாக வழங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பொதுவாக மீனாட்சி அம்மன் கோவிலின் உபயதாரர்கள், சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள் - பிரமுகர்கள் என பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவது உண்டு. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகள் இன்னும் வழங்கப்படாதது ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. எனவே, எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் இடமின்றி, அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகளும் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது குழுவிடம் சிக்கிவிடாத வண்ணம், இந்து சமுதாய அனைத்து முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கக்கூடிய வகையில், இந்து அறநிலையத் துறை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அழைப்புகளை விநியோகம் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சியில் எந்தவிதமான குறை குற்றங்களுக்கும் இடமில்லாத வகையில், அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இதை ஒரு ஆன்மீக நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமே தவிர, இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் ஒதுக்கி வைக்கவோ, புறந்தள்ளவோக் கூடாது. பாரபட்சமற்ற வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பு அழைப்புக்கான அழைப்புகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன். - டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, - நிறுவனர் & தலைவர், - புதிய தமிழகம் கட்சி, - 09.09.2026
2
14
27
807
காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் நாளை பதிலளிக்க வேண்டிய தருணத்தில், சென்னை அடையாறு தவெக உறுப்பினர் படுகொலை - நல்ல அறிகுறி அல்ல.! நாளை பதிலுரையில் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவாரா அல்லது எதிர்க்கட்சிகளைக் கிண்டலடிப்பதற்கும், கேலி செய்வதற்கும், ரீல்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்துவாரா? ................................................................ விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள 4 மாதத்தில், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், ஏடிஎம்களையும் உடைத்துக் கொள்ளையடிக்கப்படும் சூழல், தமிழ்நாடு எங்கும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தேறிய கொலைகள் என ஒட்டுமொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்றத்தில் காவல்துறை மானியத்தின் மீது நாளை பதிலுரை கொடுக்க வேண்டிய இந்த தருணத்தில், இன்று சென்னையில் அடையாற்றில் அவரின் தவெக கட்சியைச் சார்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது, சட்டம் - ஒழுங்கு குறித்து அனைத்துத் தரப்பினராலும் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கக் கூடியதாக இருக்கிறது. பேசாமல் இருப்பது அவருடைய சுபாவமா அல்லது அரசியல் உக்தியா என்று தெரியாது. அது அவருடைய கடந்த கால சினிமா வாழ்க்கைக்கும் தனி வாழ்க்கைக்கும் பொருத்தமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இந்தியாவிலேயே வலிமை வாய்ந்த தமிழக காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காப்பதும், அரசு நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இல்லாததும், வெறும் அரசியல் வியூகவாதிகளை மட்டும் வைத்து ஆட்சி செய்ய நினைப்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கே குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. பிற துறைகளில் ஏதாவது சுணக்கம் ஏற்பட்டால்கூட அதனால் மக்களுக்கு உடனடியாக எந்தப் பாதிப்பும் வந்துவிடாது; வரக்கூடிய சூழல் வந்தால்கூட தடுத்து நிறுத்த முடியும். ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது வெறும் வார்த்தையல்ல. தமிழ்நாட்டில் வாழ்கின்ற எட்டுக்கோடி மக்களுடைய வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம். காவல்துறையை தனது கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர், 24 மணி நேரமும் அதன் மீது தனது முழுப் பார்வையும் செலுத்தினால்தான், அத்துறை செம்மையாகச் செயல்பட முடியும். கடந்த காலங்களைக் காட்டிலும் அண்மைக்காலமாக நகர்ப்புறங்களிலேயே எந்தவிதமான அச்சமும் இன்றி வன்முறைச் சம்பவங்களும் கொலை, கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருவது ஏதோ ஒரு மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறியாகத் தோன்றுகிறது. எனவே, விஜய் அவர்கள் தனக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்தப் பொறுப்பை உணர்ந்து, செம்மையாகச் செயலாற்றுவாரா? நாளை காவல்துறை மானியத்திலும் எதிர்கட்சிகளை கிண்டலடிப்பதற்கும், கேலி செய்வதற்கும், ரீல்க்காக ’பஞ்ச்’ டயலாக்கிற்கும் மட்டும் பயன்படுத்துவாரா அல்லது சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பரா என பொறுத்திருந்து பார்ப்போம்! - டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி, 06.09.2026
4
21
40
1,081
விஜய் அரசே, டாஸ்மாக்கை விட்டொழியுங்கள்! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை வேண்டாம்! ............................... "ஆட்சிக்கு வந்தவுடன் விஜய் அண்ணா எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடுவார்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அதற்கு நேர்மாறாக மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர். ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் சிலவற்றை இழந்தாகத்தான் வேண்டும். அரசுக்கு வரும் ரூபாய் 55,000 கோடி வருமானத்தை இழக்க மனமும் இல்லாமல், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடத் துணிவும் இல்லாமல் திண்டாடுகிறார்கள். டாஸ்மாக் உற்பத்தி முதல் காலி பாட்டில் விற்பனை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல்! ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினாலும் கடை வாடகை, மின்கட்டணம், துப்புரவுப் பணி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் சில்லறை பிரச்சினைகளுக்காக ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது தீர்வாகாது. டாஸ்மாக் உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. விஜய் அவர்களே, டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வாகும். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசை கொள்ளாதீர்கள்! - டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி, 05.09.2026
5
25
52
1,299
அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீட்டில் திருமாவளவனின் நிலைப்பாடு என்ன? வெளிப்படையாக பதில் சொல்ல தெம்பிருக்கா?
7
12
17
392
தேவேந்திர குல வேளாளர்களின் உயிர் மூச்சான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை மழுங்கடிக்கத் துடிக்கும் விசிக கும்பலை, பட்டியல் வெளியேற்றக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
2
14
17
414
எதைப் பேசினோம்? எதற்காகப் பேசினோம் என்று படித்துக்கூடப் பார்க்கத்தெரியாத நுனிப்புல் மேயும் விசிக கூட்டமே, நீ என்றுதான் மக்களிடம் உண்மையைப் பேசப்போகிறாய்? வெளியில் மீசையை முறுக்கிக்கொண்டு உள்ளுக்குள் குனிந்து கும்பிடுபோடும் வழக்கம் எம் இனத்திற்கே இருந்தது இல்லை.
2
11
11
271
PT IT Wing retweeted
ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என பேசியவர்களோடு சேர்ந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது - கிருஷ்ணசாமி விவரம்: tinyurl.com/3rz8stea #cmvijay | #krishnasamy | #latestnews | #puthiyathamizagam | #tnnews | #TVk
3
5
6
3,334
பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி வேகமெடுக்கும் பரப்புரைகள்.! பாகிஸ்தானின் தளமானது எப்படி? சமூக வலைதளங்கள் இந்தியாவிற்கு எதிரான ’நவீன ஏவுகணைகளா’? உஷார் ஆகுமா இந்திய உளவுத்துறை?? ....................................... எந்தவொரு கட்சிக் கட்டமைப்புகளுமின்றி, சமூக வலைதளப் பிரச்சாரத்தின் வாயிலாக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்த சக்திகள், தற்போது விஜய் அவர்களை இந்தியப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தித் தீவிரப் பிரச்சாரம் செய்துவருவது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கும் தவெக, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சாதித்து விட்டதைப் போல, இந்தியா முழுவதும் பல கோடிகளைச் செலவழித்துப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அடுத்த பிரதமர் வேட்பாளர்களாக மோடி மற்றும் ராகுல் ஆகியோருடன் விஜய் அவர்களையும் முன்னிறுத்தி, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் எண்ணற்ற சமூக வலைதளப் பக்கங்கள் கடந்த சில நாட்களாகச் செயல்பட்டு வருகின்றன. மதம், அரசியல், மொழி சார்ந்து சுயமாகச் செயல்பட்டு வந்த முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளக் பக்கங்கள் சில நாட்களில் எவ்வாறு விஜய் ’புகழ் பாடிகளாக’ மாறின? அந்தச் சமூக வலைதளப் பக்கங்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? மேலும், விஜய் புகழ் பாடும் சமூக வலைதளக் கணக்குகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணை மட்டுமே மூலமாகக் கொண்டு செயல்படுவது எப்படி? பாகிஸ்தானிலிலிருந்து இயங்கும் சமூக வலைதள கணக்குகளுக்கு விஜய் மீது இவ்வளவு அக்கறை ஏன்? சட்டமன்றத் தேர்தலில் விஜய்யை முன்னிறுத்திய ரூட் மாஃபியா மற்றும் லாட்டரி குடும்பத்திற்கும், தற்போது நடைபெறும் பரப்புரைகளுக்கும் என்னென்ன தொடர்பு? இதுவரை இந்தியாவை ஆயுதங்களால் வெல்ல முடியாது என்று எண்ணிய அந்நிய நாட்டு மதவாத சக்திகள், இந்தியாவை கைப்பற்ற மேற்கொள்ளும் முயற்சியா இது? இவ்வளவு விஷயங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலிலும், இந்தியாவின் IB, RAW உள்ளிட்ட உளவுத்துறை அமைப்புகள் அமைதி காப்பது ஏன்? சமூக வலைதளங்கள் இந்தியாவிற்கு எதிரான நவீன ஏவுகணைகளாகின்றனவா? இந்திய அரசு உடனடியாக விழித்துக் கொள்ளுமா? டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி, 31.08.2026
26
60
1,198
விஜய் RSS பெற்றெடுத்தப் பிள்ளை என்று தேர்தலுக்கு முன்புவரை விமர்சனம் செய்துவிட்டு பதவி கிடைக்கிறது என்றவுடன் கூடுவிட்டு கூடுபாயும் வித்தைக்காரன் போன்று கூட்டணியை மாற்றிய நீங்கள் கொள்கையைப் பற்றி பேசுவதுதான் வியப்பாக உள்ளது. சனாதனமும் பேசுவது,சரனாகதியும் அடைவதுதான் கொள்கையா?
அம்பேத்கர் வழியில் கட்சி.! சங்கராச்சாரியார் வழியில் குரு பக்தியா.?? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சி தொடங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! "எனக்கு குரு சங்கராச்சாரியார் தான்" என சொல்லும் நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்... @DrKrishnasamy
3
7
9
278
மாஞ்சோலை, மேகமலை மக்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திட அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்;
6
12
717
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க சட்டத் திருத்தம் வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் பலனளிக்குமா? ................................................. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசும் கொண்டு வந்தது; உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நடைபெற்ற TET தேர்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் ’தமிழ்’ பாடத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. பிற பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுடைய ஒட்டுமொத்த சதவீதம் 95; அதாவது 5 சதவீதம் பேர் மட்டுமே TET (Paper 1 & Paper 2) தேர்வில் முழுமையாக வெற்றி பெற்றார்கள் என்றும், குறிப்பாக, 2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களால் இந்த TET தேர்வில் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அரசாங்கத்தினுடைய நேரடி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியர்களுடைய எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்து 28 ஆயிரம் ஆகும். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் மீண்டும் TET தேர்வு நடைபெற்றுள்ளது. ”2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தி—நேற்றைய தினம் (25.08.2026) சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் முன்மொழிந்துள்ளார். இதை எப்படி மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் அல்லது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியவில்லை. இதை ஆசிரியர்களை சமாதானப்படுத்துவதற்கான ராஜ்மோகனின் ஒரு முயற்சியாகத்தான் கருத வேண்டுமே தவிர, இத்தீர்மானத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.! விலக்கு கேட்டு மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையாவது ஆசிரியர்களுக்கு தீவிரப் பயிற்சியளித்து TET தேர்வில் வெற்றி பெற வைப்பதன் மூலம் ஆசிரியர்களின் தரமும் உயரும்; அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும். ஆசிரியர்களும் TET தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையோடும், யாருடைய கருணையை எதிர்பார்த்தும் பயணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. எனவே, ஆசிரியர்களை தகுதிமிக்கவர்களாக மாற்றுவதை விட்டுவிட்டு, இதுபோன்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக மட்டுமே பார்க்கப்படும். தமிழக அரசின் இந்த முயற்சி ”எலியைப் பிடிக்க மலையைக் குடைவதற்குச் சமமாகவே” கருதப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 150-க்கு 90 மதிப்பெண்கள் (60%) பெற வேண்டும் என்ற விதியை தளர்த்தியதற்கு எதிரான வழக்குகளை வாபாஸ் பெற வைத்து, பணிபுரியும் ஆசிரியர்களிடத்தில் ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டியது அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் தலையாய முயற்சியாக இருக்கட்டும்; இதுபோன்று கடந்த காலங்களில் பல தேர்வுகளுக்கு விலக்குக் கேட்டு நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானங்கள் பலனளிக்கவில்லை; இனியும் பலனளிக்குமா என்பதும் கேள்விக்குறியே! டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 27.08.2026
1
12
1
16
604