அகத்திலும் புறத்திலும் ஞான ஒளி ஏற்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள்! நல்வாழ்த்துக்கள் ~ ஜி.கே.மணி
திருக்கார்த்திகை தீபத் திருநாளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், ஆன்மீக அன்பர்களும் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் இந்த நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டதும், ஒவ்வொரு இல்லத்திலும் மண் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றப்பட்டு வீடுகள் ஒளிவெள்ளத்தில் நிலைவாசல், முற்றம், பூஜை அறை என எங்கும் நிறைந்திருக்கும் தீபங்களின் ஒளி, இல்லங்களில் மங்கலத்தையும், அமைதியையும், செல்வச் செழிப்பையும் கொண்டு வரும் என்பார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், இன்று தங்கள் இல்லங்களில் அகல் விளக்கேற்றி நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றி வருகின்றனர்.
இந்தத் திருக்கார்த்திகை நன்னாளில், நம் இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்களைப் போலவே, அனைவரது உள்ளத்திலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு எனும் ஒளி என்றும் பிரகாசிக்கட்டும்!
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
#திருக்கார்த்திகை #திருக்கார்த்திகைதீபம் #திருவண்ணாமலை #மகாதீபம் #அண்ணாமலையானுக்குஅரோகரா #தமிழர்பண்பாடு #KarthigaiDeepam #Thiruvannamalai #MahaDeepam
164
கார்த்திகை மாதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நன்னாளான பரணி தீபத் திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி எனும் ஒளி பிரகாசிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! ~ ஜி.கே.மணி
நம் அகத்திலும் புறத்திலும் சூழ்ந்திருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் பேரொளியை ஏற்றி வைக்கும் இந்த கார்த்திகை பரணி தீபத் திருநாள்.
சிறிய அகல் விளக்கில் ஏற்றப்படும் ஒரு சிறு சுடர், எவ்வளவு பெரிய இருளையும் விரட்டியடிக்கும் வல்லமை கொண்டது. அதுபோலவே, நம் மனதில் எழும் சிறு நம்பிக்கையும் வாழ்வின் எத்தகைய கடினமான சூழலையும் கடந்து செல்லும் ஆற்றலைத் தரும்.
இன்று நம் இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்கள், நம் குடும்பத்தில் ஒற்றுமையையும், உறவுகளிடையே அன்பையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெருக்கட்டும்.
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும், எல்லா வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்! இனிய கார்த்திகை பரணி தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...
2
243
முந்தைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திரா) 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் அவதரித்து, 23.11.2026 இனறு நூறாண்டு கடந்து, செயற்கரிய சேவைகளை நிறைவேற்றி சாதனை படைத்த, சென்னை மாநகரின் குடிநீருக்கு ரூபாய் 276 கோடி நிதி உதவி செய்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாடு எல்லை ஊத்துக்கோட்டை வரை 154 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் கரைகள் பலப்படுத்தி,காங்கிரீட் தளம் அமைத்து நிறைவேற்றிய ஆன்மீக குரு புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்த நாள்.
"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்" எவருக்கும் தீங்கிழைக்காதே என்ற உன்னத மந்திரத்தை உலகிற்கு வழங்கிய ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரைப் போற்றி வணங்குகிறேன்-ஜி.கே.மணி
பகவான் சாய்பாபா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, புட்டபர்த்திக்கும், பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்கும் பலமுறை நேரில் சென்று அவரைச் சந்தித்து உரையாடி, அவரது நல்லாசியைப் பெற்றது என் வாழ்வின் மறக்க முடியாத பாக்கியமாகும். அவரது மறைவிற்குப் பிறகும் கூட, அவரது சேவைகளையும் நினைவுகளையும் போற்றும் வகையில் பலமுறை புட்டபர்த்திக்குச் சென்று தரிசித்து வந்துள்ளேன்.
ஆண்டுக்கு சராசரியாக 1200க்கு மேற்பட்ட இலவச இருதய அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ சேவைகளும்,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணம் இல்லாமல் கல்வி கற்கும் கல்வி சேவையும், வறண்ட கிராம பகுதிகளுக்கும், சென்னை மாநகரக்கும் குடிநீர் திட்டம் என எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற தொண்டுகள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அவரது செயற்கரிய சேவைகள் மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் அமையும்.
மனிதராக அவதரித்து,அரிய சேவைகளை ஆற்றிய பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்தநாள் இன்று அவரைப் போற்றுவோம்...வணங்குவோம்...மரியாதை செய்வோம்...
6
291
முசிறி அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நண்பர் வீட்டுக் குழந்தைகளின் காதணி விழாவிற்கு வாழ்த்துச் சொல்லச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களான மாணிக்கம், சங்கிலி, வேல்முருகன், ராஜேஷ், சக்திவேல், பாவாடை, சீதாராமன் மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து மீளாத் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு உரிய நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ~ ஜி.கே. மணி
715
உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. இளைஞர்களுக்கு தரமான கல்வி, உரிய வேலை வாய்ப்பு, சுகாதாரம், சமமான வளர்ச்சி வாய்ப்பு என இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொண்டால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
~ ஜி.கே.மணி
இந்தியா உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் தற்போது 147 கோடியே 66 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 30% இளைஞர்கள். இளைஞர்கள் தான் வீட்டிற்கும் நாட்டிற்கும் அளவிடற்கரிய சொத்து ஆகும். இளைஞர்களுக்கு தரமான கல்வி, உரிய வேலை வாய்ப்பு, உற்பத்தியில் பங்களிப்பு, தரமான மருத்துவ வசதி, சமமான வசதியில் பங்களிப்பு என இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பு இல்லாமல், கைப்பேசியிலும் கணினியிலும் தேவையற்ற நிகழ்வுகளை பார்த்தும், மது மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளும் நிலை மிகுந்த கவலை அளிக்கிறது.
மனித வளம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். அதிலும் இளைஞர் சக்தி அபரிவிதமான வாய்ப்பு. இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் புதிய திட்டங்கள், தொழில் வளர்ச்சி, பொருளாதார உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற எல்லா துறைகளிலும் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
313
தேசிய மாணவர் படை (NCC) தின வாழ்த்துகள்! - ஜி.கே.மணி
இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் தேசபக்தி, ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் தன்னலமற்ற சமூக சேவை மனப்பான்மையை விதைப்பதில் தேசிய மாணவர் படையின் (NCC) பங்களிப்பு மகத்தானது.
"ஒற்றுமையும் ஒழுக்கமும்" என்ற தாரக மந்திரத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கும், பேரிடர் காலங்களில் மக்களின் நலனுக்கும் துணை நிற்கும் அனைத்து NCC மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த தேசிய மாணவர் படை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
3
318
கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனர் அமரர் சண்முகநாதன் அவர்களின் மனைவியும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவரும் மற்றும் கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு சேர்மேன் மருத்துவ நிபுணர் இராஜசபாபதி, மருத்துவமனையின் எலும்பு முறிவு பிரிவு சேர்மன் மருத்துவ நிபுணர் இராஜசேகர் ஆகியோரின் தாயாருமான திருமதி கனகவள்ளி அம்மையார் இறப்புச் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கங்கா மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நீண்ட காலமாக அரும்பாடுபட்டு வந்த திருமதி கனகவள்ளி அம்மையார்
மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரைப் பிரிந்து மீளாத் துயரில் வாடும் அவரது மகன்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் இராஜசபாபதி, எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் மருத்துவர் இராஜசேகர், பேரன்கள் மருத்துவர் இராஜா சண்முக கிருஷ்ணன், மருத்துவர் இராஜா கனகேஸ்வர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், திருமதி கனகவள்ளிஅம்மையார் வாழ்த்துகளோடு கங்கா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறை மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ~ஜி.கே.மணி
531
பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க ராஜா தந்தையார் கொளஞ்சிநாதன் படையாட்சி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரை இழந்து துயரில் வாடும் அவரது மகன் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
~ ஜி.கே.மணி
திருவாரூர் மாவட்ட பா.ம.க செயலாளர் எஸ்.வேணுகோபால் 22.11.2026 இன்று இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஆரம்ப காலம் முதல் இயக்கத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு உழைத்து வந்தவர்; எல்லோரிடத்திலும் அன்பாகப் பேசி பழகும் இயல்புடையவர். எஸ்.வேணுகோபால் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ~ ஜி.கே.மணி
2
5
2,506
தமிழர்களின் தொன்மையான தற்காப்புக் கலையும், வீரத்தின் அடையாளமுமான சிலம்பாட்டத்தை போற்றும் வகையில் நவம்பர் -22 கடைப்பிடிக்கப்படும் ‘உலக சிலம்பம் தினத்தில்’, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கும், சிலம்பக் கலைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ~ ஜி.கே.மணி
சங்க காலம் தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு உன்னதக் கலை சிலம்பம். வெறும் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், உடல் வலிமையையும், மன ஒருமைப்பாட்டையும், சுய ஒழுக்கத்தையும் வளர்த்தெடுக்கும் அற்புதமான உடற்பயிற்சிக் கலையாகவும் சிலம்பம் திகழ்கிறது. பண்டையத் தமிழ் மன்னர்களின் படைகளில் முதன்மைப் போர்க்கலையாக விளங்கிய சிலம்பம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டபோதும், நமது முன்னோர்களின் விடாமுயற்சியால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு இன்று உலக அரங்கில் கம்பீரமாக வலம் வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில், இளைய தலைமுறையினர் கைபேசி மற்றும் கணினித் திரைகளில் மூழ்கியிருக்கும் சூழலில், அவர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாக்க சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். சிலம்பக் கலையைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைக்கவும், சிலம்பப் பயிற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நமது மண்ணின் பெருமைமிகு அடையாளமான சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசான்களுக்கும், அமைப்புகளுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
227
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மதகு சாலை பாட்டாளி மக்கள் கட்சி முன்னோடி வி.பாஸ்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ~ஜி.கே.மணி
1
582
அறிவியல் உலகின் விளக்குகளில் ஒருவரான சர்.சி.வி.இராமன் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம் ~ ஜி.கே.மணி
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் பிறந்து, எளிய சூழலில் வளர்ந்து, தனது அயராத உழைப்பாலும், கூர்மையான அறிவாற்றலாலும் உலகையே வியக்க வைத்தவர். கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்ற சாதாரண கேள்விக்கு விடை தேடி அவர் நிகழ்த்திய ஆய்வுதான், பின்னாளில் உலகப் புகழ்பெற்ற "ராமன் விளைவு" (Raman Effect) கண்டுபிடிப்புக்கு வித்திட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று, பாரதத்திற்குப் பெருமை சேர்த்தார்.
அவரது அறிவியல் தேடலும், நாட்டுப்பற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கும், மாணவர்களுக்கும் என்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். நமது மாணவச் செல்வங்கள் சர் சி.வி.இராமன் அவர்களின் வாழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என இந்நாளில் உறுதியேற்போம்.
1970 நவம்பர் 21 அன்று தனது 82-வது வயதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காலமானார். இறுதிச் சடங்கு அவரது விருப்பப்படியே, பெங்களூருவில் உள்ள இராமன் ஆய்வுக் கழக (Raman Research Institute - RRI) முதன்மைக் கட்டிடத்தின் முன்பாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் அந்த வளாகத்திலேயே தூவப்பட்டது. அவரது நினைவாக அவ்விடத்தில் ஒரு மரம் நடப்பட்டுள்ளது.
சர்.சி.வி.இராமன் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்... வணங்குவோம்...
#SirCVRaman #CVRaman #RamanEffect #GKMani #Science #TamilNadu
1
254
நவம்பர் - 21 இன்று உலக மீனவர் தினம் - மீனவப் பெருமக்கள் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் -ஜி.கே.மணி
எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், அனைவருக்கும் வழங்குபவர்கள் மீனவப் பெருமக்கள்.
தண்ணீரில் மிதந்து கண்ணீரும் கம்பலையுமாக வாழ்ந்து வருபவர்கள் மீனவப் பெருமக்கள். தினந்தோறும் புயலோடு போட்டியிட்டு, அயல்நாட்டு அந்நியரிடம் அடிபட்டு, வயிற்றுக்காக வாழ்க்கையையே அடகு வைத்து, இன்று வீடு திரும்புவோமா?' என உறுதி இல்லாமல், உப்புக் காற்றில் தவித்தும், நம்பிக்கையுடன் வாழும் மீனவ மக்களின் வாழ்வு இனிதே சிறக்க, வளமும் நலமும் பெற்று குடும்ப நலமுடன் நீடூழி வாழ வளர, உலக மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
226
நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள் - ஜி.கே.மணி
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற தொலைக்காட்சி யுகம். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் கண் முன்னாலே நிறுத்தக் கூடிய அதிநவீன தொழில்நுட்பமிக்க, ஈர்ப்பு சக்திகொண்ட ஊடகம். மனித குலத்தை பண்படுத்தக்கூடிய, மனித வளத்தை மேம்படுத்தும் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது அற்புத திறன்.
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
டிவி எனும் தொலைக்காட்சி. அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. உலகின் மூலை முடுக்கெல்லாம் நடக்கும் சம்பவங்களை, ஒரு குடையின் கீழ், நேரடியாகவும், உடனடியாகவும் நம் கண் முன்னே கொண்டுவரும் அற்புத தொழில்நுட்ப சாதனம். 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என அதிசயித்த உலகம், அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு, உருவங்களையும் பார்க்க முடியும் என்பதனை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது.
1926 ஆம் ஆண்டு "ஜான் லோகி பெயர்டு" என்பவர் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது.
அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவாக இருந்த இது, பின்னர் பிரிக்கப்பட்டு 'தூர்தர்ஷன்' என்ற தனி அமைப்பாக உதயமானது. தனியார் தயாரிப்பு நிறுவனங்களின் வருகை தொலைக்காட்சியை பிரபலப்படுத்தின. ஊருக்கு ஒரு தொலைக்காட்சி , பஞ்சாயத்துக்கு ஒன்று என இருந்த காலம் மாறி, வீட்டிற்கு ஒன்று என்ற கணக்கையும் தாண்டி, அறைக்கு ஒரு தொலைக்காட்சி என்றாகி விட்டது இப்போது.
உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும். உலகம் முழுவதும் இருந்து இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு சேனல்களை காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.
5
211




















