RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ஆர்எஸ்எஸ் கும்பலுடன் கூட்டணி வைத்த நம்ம தோழர்கள் என்றுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள். ஏன்னா They are more privileged even to criticize anyone's political stand.
1967: பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் CPI, ஜனசங்கத்துடன் இணைந்த காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணி அரசுகளில் பங்கேற்பு.
1977: CPI(M), ஜனசங்கம் இணைந்த ஜனதா கட்சியுடன் தேர்தல் தொகுதி உடன்பாடு.
1989: வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுக்கு பாஜகவும் இடதுசாரிகளும் வெளியிலிருந்து ஆதரவு.
இதையெல்லாம் இவங்க அம்பேத்கரிய இயக்கங்களுக்கு முன்னாடியே பண்ணிட்டு உடுவாங்க பாருங்க ஒரு பேய்க்கதை...இந்தியாவிலே ஏன் இந்த உலகத்திலே சங்பரிவார கும்பலுடன் கூட்டணி வைக்காத ஒரே கட்சினு 😂😂..
ஜோக்ஸ் அப்பார்ட் அம்பேத்கரிய இயக்கங்கள் எப்பொழுதும் இன்குலுசிவ் பாலிடிக்ஸை பேசுகின்றன. ஆனால் சாதிய சமூகத்தில் இருந்து வந்த கம்யூனிச மார்க்சிய பண்ணையார்கள் இன்றும் அதே பண்ணையார் தனத்தோடுதான் அம்பேத்கரிய இயக்கங்களை அணுகுகின்றன.
இவர்களின் அரசியல் தலித்துகளுக்கும் தான்தான் அத்தாரிட்டி என்பதுதான்... உடனே வராதிங்க பெ.சண்முகம் மு. வீரபாண்டியன் லாம் யாருனு...
அங்க உள்ள என்ன புகைஞ்சுட்டு இருக்குனு தெரியாமலாம் இல்லை.
எல்லோருக்குமான அரசியல் தீர்வு அம்பேத்கரியமே.
ஜெய் பீம் !
அல்லாஹு அக்பர்!!
இன்குலாப் ஜிந்தாபாத்!!!
விசிகவின் வளர்ச்சியை பார்த்து சூத்துல வெடிவச்ச பன்னி மாதிரி கதறிக்கிட்டு கிடக்கானுக திமுக கொத்தடிமைகள்
இதெல்லாம் பாத்தா என்ன ஆவானுங்களோ அட பாவத்த
திமுக கொத்தடிமைகல கதற விடுவதே வேலையா போச்சு இந்த விசிகவுக்கு
இந்திய அரசியலின் ஆணிவேர் திருமா 🔥💙♥️
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
கம்யூனிஸ்ட்களின் பிரச்சினையே இது தான் தாங்கள் எங்கே செயல்பட தவறினோம் என்பதை விட்டுட்டு
அம்பேத்கர் அம்பத்கிரிஸ்ட்களை அம்பேத்கரிய இயக்கங்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் கியூபா வியட்நாம் வெனிசுலா என்று வியாக்யானம் பேசிட்டு கலைந்து விட வேண்டியது தான்
வர்க்க ஒற்றுமை பேசும் கம்யூனிஸ்டுகள்; சாதி ஒழிப்பில் நூற்றாண்டு காலத் தோல்விக்கு யார் பொறுப்பு?
நேஹா போரா விவகாரத்தில் வட இந்தியாவில் அவரை விமர்சிக்கும் சில தலித் குரல்களை முன்வைத்து, தமிழ்நாட்டில் சில கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரையும் அம்பேத்கரிய இயக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்துகின்றனர்.
ஒருவரை விமர்சிப்பதற்காக ஒட்டுமொத்த அம்பேத்கரிய அரசியலையும் எதிரியாக நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் யாருக்கு என்ன அரசியல் லாபம்?
இந்தியாவில் சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை. ஒரே தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும் தீண்டாமையும் தொடர்கின்றன. பொருளாதாரச் சுரண்டல் பொதுவானதாக இருந்தாலும் சமூக ஒடுக்குமுறையின் அனுபவம் ஒன்றல்ல.
சாதியால் பிளவுபட்டிருக்கும் உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கு, முதலில் அந்தப் பிளவுக்கான அடிப்படையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டாமா?
1925 முதல் நூற்றாண்டுக்கும் மேலாக வர்க்க ஒற்றுமையைப் பேசி வரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களால், சாதியைக் கடந்து உழைக்கும் மக்களை ஏன் முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை?
தொழிற்சங்கங்கள், விவசாயிகள் இயக்கங்கள், நில உரிமைப் போராட்டங்கள் எனப் பங்களிப்புகள் இருந்தாலும் சாதிய வன்முறையும் தீண்டாமையும் தொடர்கின்றன. தங்களது அமைப்புகளுக்குள் இருக்கும் சாதிய அதிகார உறவுகள், தலைமைத்துவம், பிரதிநிதித்துவக் குறைபாடுகள் குறித்து எவ்வளவு சுயவிமர்சனம் செய்திருக்கிறார்கள்?
1979 மரிச்ஜாப்பியில் ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசால் நாமசூத்திர தலித் அகதிகள் வெளியேற்றப்பட்ட வரலாற்றையும் கேள்வி கேட்க வேண்டாமா?
ஒரு இயக்கத்தின் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வது அதன் தவறுகளை மறைப்பதற்கான உரிமையை வழங்காது.
சாதி என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல; அது சமூக அதிகாரம், பண்பாட்டு ஆதிக்கம், அரசியல் பிரதிநிதித்துவம், மனித மாண்பு ஆகியவற்றோடு தொடர்புடையது.
எனவே சாதி ஒழிப்பைத் தனது அரசியலின் மையத்தில் வைக்காத வர்க்க ஒற்றுமை முழுமையான விடுதலை அரசியலாக இருக்க முடியாது.
கம்யூனிஸ்டுகளின் அரசியல் தோல்விகளைக் கேள்வி கேட்பது மார்க்சியத்திற்கு எதிரானது அல்ல. அம்பேத்கரியர்களின் தனித்துவமான அரசியல் உரிமைகளை வலியுறுத்துவது வர்க்க ஒற்றுமைக்கு எதிரானதும் அல்ல.
நூற்றாண்டு காலத் தோல்விகளைச் சுயவிமர்சனம் செய்யாமல் அம்பேத்கரியர்களை எதிரிகளாக நிறுத்துவதால் யாருடைய விடுதலை சாத்தியமாகப் போகிறது?
- தேசாந்திரி
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
சமூக நீதியின் முகவரி!
எளியோரின் குரல்!
வீறுநடை போடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!
காலத்தின் தேவையாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் பிறந்த புரட்சிகர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக),
இன்று அனைத்துத் தளங்களிலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கு உரிமைக்குப் போராட்டம் என்றாலும், அங்கே முதன்மைக் குரலாக ஒலிப்பது விடுதலை சிறுத்தைகளின் குரல் தான்!
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து போராடி வருகிறது விசிக.
எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சமத்துவ உரிமை மற்றும் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் எப்போதும் முதன்மையாக நின்று களமாடுகிறது.
இன்று விசிக என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; அது ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதை மற்றும் எழுட்சியின் குறியீடு.
"எளியோரின் உரிமைகளுக்காகவும், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் விசிக தொடர்ந்து வீறுநடை போடும்!"
நீங்கள் வைக்கும் அளவு கோலில் நாங்கள் இல்லை எங்கள் பாதை நீண்ட நெடிய தூரம் 💯💙
என்றும் மகாமுனி புத்தர், பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டை மலை சீனிவாசன், புரட்சியாளர் அம்பேத்கர், அறிவர் ஆசான் தந்தை @thirumaofficial அவர்களில் வழியில் 💙💙💙
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
#VCK #TholThirumavalavan #SocialJustice #விடுதலைசிறுத்தைகள்
#சமூகநீதி
@VanniTamizhVCK
@VckBalaji
@burnitwithblue
@Danieljoshua_15
@Rajstee3
@Elansezhian3
@mohan_selvaraj
@Nakkeeranj93771
@Sivaa_Comrade
@iamKalaivanii
@AthiOfficial
@Lenin9444295316
@Stalin78723
@Arunj_Athiest
@shanmugeshvck
@bhimarao_offi
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
வர்க்க ஒற்றுமை பேசும் கம்யூனிஸ்டுகள்; சாதி ஒழிப்பில் நூற்றாண்டு காலத் தோல்விக்கு யார் பொறுப்பு?
நேஹா போரா விவகாரத்தில் வட இந்தியாவில் அவரை விமர்சிக்கும் சில தலித் குரல்களை முன்வைத்து, தமிழ்நாட்டில் சில கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரையும் அம்பேத்கரிய இயக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்துகின்றனர்.
ஒருவரை விமர்சிப்பதற்காக ஒட்டுமொத்த அம்பேத்கரிய அரசியலையும் எதிரியாக நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் யாருக்கு என்ன அரசியல் லாபம்?
இந்தியாவில் சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை. ஒரே தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும் தீண்டாமையும் தொடர்கின்றன. பொருளாதாரச் சுரண்டல் பொதுவானதாக இருந்தாலும் சமூக ஒடுக்குமுறையின் அனுபவம் ஒன்றல்ல.
சாதியால் பிளவுபட்டிருக்கும் உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கு, முதலில் அந்தப் பிளவுக்கான அடிப்படையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டாமா?
1925 முதல் நூற்றாண்டுக்கும் மேலாக வர்க்க ஒற்றுமையைப் பேசி வரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களால், சாதியைக் கடந்து உழைக்கும் மக்களை ஏன் முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை?
தொழிற்சங்கங்கள், விவசாயிகள் இயக்கங்கள், நில உரிமைப் போராட்டங்கள் எனப் பங்களிப்புகள் இருந்தாலும் சாதிய வன்முறையும் தீண்டாமையும் தொடர்கின்றன. தங்களது அமைப்புகளுக்குள் இருக்கும் சாதிய அதிகார உறவுகள், தலைமைத்துவம், பிரதிநிதித்துவக் குறைபாடுகள் குறித்து எவ்வளவு சுயவிமர்சனம் செய்திருக்கிறார்கள்?
1979 மரிச்ஜாப்பியில் ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசால் நாமசூத்திர தலித் அகதிகள் வெளியேற்றப்பட்ட வரலாற்றையும் கேள்வி கேட்க வேண்டாமா?
ஒரு இயக்கத்தின் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வது அதன் தவறுகளை மறைப்பதற்கான உரிமையை வழங்காது.
சாதி என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல; அது சமூக அதிகாரம், பண்பாட்டு ஆதிக்கம், அரசியல் பிரதிநிதித்துவம், மனித மாண்பு ஆகியவற்றோடு தொடர்புடையது.
எனவே சாதி ஒழிப்பைத் தனது அரசியலின் மையத்தில் வைக்காத வர்க்க ஒற்றுமை முழுமையான விடுதலை அரசியலாக இருக்க முடியாது.
கம்யூனிஸ்டுகளின் அரசியல் தோல்விகளைக் கேள்வி கேட்பது மார்க்சியத்திற்கு எதிரானது அல்ல. அம்பேத்கரியர்களின் தனித்துவமான அரசியல் உரிமைகளை வலியுறுத்துவது வர்க்க ஒற்றுமைக்கு எதிரானதும் அல்ல.
நூற்றாண்டு காலத் தோல்விகளைச் சுயவிமர்சனம் செய்யாமல் அம்பேத்கரியர்களை எதிரிகளாக நிறுத்துவதால் யாருடைய விடுதலை சாத்தியமாகப் போகிறது?
- தேசாந்திரி
தலித்துக்கள் பொது சமூகத்தின் அரசியல் ஆளுமைகளாக உருவாகுவதை ஒருபோதும் பார்ப்பனியம் விரும்புவதில்லை
அரசியல், சமூக போராட்டங்களில் தலித்கள் தலைவர்களாக இருப்பதை RSSஒருபோதும் விரும்பாது
அதற்கு மாற்றாக ஒரு நபரை உருவாக்கும்
அப்படி உருவாக்கப்பட்டவர் தான் பிராமணரான
நேகா போரா
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
75 ஆண்டுகாலப் பெருமிதம் பேசும் திமுகவின் பெண்கள் பாதுகாப்பு வரலாறு என்ன?
“நாங்கள் 75 ஆண்டுகாலக் கட்சி! எங்கள் வரலாறு தெரியுமா? தாத்தா காலத்து திமுக தெரியுமா?” என எதிர்க்கட்சியினரையும் பொதுமக்களையும் இப்படியாக மிரட்டுவது திமுக உடன்பிறப்புகளின் வழக்கம்.
ஆனால், உண்மையில் திமுக யார் என்பதை அதன் ஆட்சிக்கால பதிவுகள் வழி பார்க்கலாம்.
NCRB தரவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
2021 – 8,501 | 2022 – 9,207 | 2023 – 8,943 | 2024 – 11,363.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:
2021 – 6,064 | 2022 – 6,580 | 2023 – 6,968 | 2024 – 10,046.
2024-ல் மட்டும் 6,969 POCSO வழக்குகள்! குழந்தைகளுக்கு எதிரான பதிவான குற்றங்கள் 2021-ஐ ஒப்பிடும்போது 65.7% அதிகரிப்பு.
இவை வெறும் எண்கள் அல்ல; சிதைக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையும் குழந்தைகளின் எதிர்காலமும்!
இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக என்ன செய்தீர்கள்? சமூகக் கல்வி, பாலியல் கல்வி, பாலின சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் உங்கள் அரசின் சாதனை என்ன?
அன்பில் மகேஷ் மீதான பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு, கே.என். நேரு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.634 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரம் என உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்படும் நேரத்தில் அத்தை கனிமொழி பெண்கள் பாதுகாப்பு குறித்துப் போராட்டம் நடத்துகிறார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலாக இந்தப் போராட்டம் பார்க்கப்படுவதில் வியப்பில்லை.
உங்கள் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் சாதியப் பதற்றத்தைத் தூண்டும் பேச்சைக் கண்டிக்கத் தயக்கம்; ஆனால் பெண்கள் பாதுகாப்பில் மட்டும் திடீர் அக்கறை!
சமூகநீதியைப் பேசிய நீங்கள் இன்று சாதிய அமைப்புகளை அணிதிரட்டும் அரசியலையும் முன்னெடுக்கிறீர்கள்.
வட இந்தியாவில் எதிர்க்கட்சிகள் SIR விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன. இங்கே நீங்கள் உங்கள் கட்சியின் அரசியல் நெருக்கடிகளை மறைக்கப் பெண்கள் பாதுகாப்பை அரசியல் மேடையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
கனிமொழி அவர்களே, பெண்கள் பாதுகாப்பு என்பது இன்று ஆட்சியில் இருப்பவர்களிடம் மட்டுமல்ல; இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த உங்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்!
75 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதற்கு முன், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் வழங்கிய பாதுகாப்பின் கணக்கைச் சொல்லுங்கள்!
-தேசாந்திரி
@KanimozhiDMK @mkstalin @arivalayam
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பெரியார் - திராவிடம் - சமூகநீதி என்றெல்லாம் பேசிய வாய்கள்
இன்று "OBC அரசியல்" என்று பேசி தங்களது உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது.
பெரியார் - திராவிடம் - சமூகநீதி என்கிற பசப்பு சொற்களால்
சூத்திர அரசியலை தான் இதுவரை DMK செய்திருக்கு!
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ?!
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
சமூகநீதிப் போர்வையில் சாதிய அரசியல் நடத்தும் திமுக!
சிறு சிறு ஜாதிக் கட்சிகளான பாமக முதல் தென்தமிழ்நாட்டில் பரவிக்கிடக்கும் சிறு குறு ஜாதிய இயக்கங்கள் வரை ஒண்றினைக்கும் திமுக !
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், 2012-ல் பாமக கட்டமைக்க முயன்றதைப் போல, தலித்துகள் இல்லாத ஓர் அரசியல் அணியை OBC சமூகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கி, தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக தயாராகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.
முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் இந்தப் பதிவு, அந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இன்று நடைபெறும் குருபூஜையை மையப்படுத்தி, OBC Vs தலித் என்ற முரண்பாட்டை அரசியல் ரீதியாகக் கூர்மைப்படுத்துவது எத்தகைய ஆபத்தான அரசியல்?
ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதிய அடையாளங்களை மீண்டும் மோதலுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுவதன் மூலம் திமுக சாதிக்க நினைப்பது என்ன?
பெரியாரின் கொள்கை வாரிசுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் திமுகவினர், இத்தனை ஆண்டுகால ஆட்சியிலும் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கைகளை OBC சமூகங்களிடம் ஆழமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
பெரியாரைப் பேசுவதும், அண்ணாவைப் போற்றுவதும் அரசியல் மேடைகளுக்கான அடையாளங்களாக மட்டுமே சுருங்கிவிட்டனவா?
உண்மையில், திமுகவின் சமூகநீதி பிம்பத்தைத் தொடர்ந்து பாதுகாத்ததில் விசிகவின் பங்கு மிக முக்கியமானது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் எங்காவது சாதிய ஆதிக்கமும், சாதியத் திமிரும் தலைதூக்கும்போது, ஆட்சியாளர்களின் மண்டையில் குட்டி, அவர்களின் சமூகநீதிப் பொறுப்பை நினைவூட்டியது விசிகதான்.
ஆனால் இன்று?
திமுகவை கொள்கை ரீதியாக வழிநடத்தவும், அதன் அரசியல் தடம் மாறும்போது தட்டிக்கேட்கவும் விசிகவை போன்ற வலுவான குரல்கள் இல்லாத சூழலில், முனைமழுங்கிக் கிடக்கும் சாதிய முரண்பாடுகளுக்குக் கூர்தீட்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா திமுக?
சமூகநீதி என்பது பெரும்பான்மைச் சமூகங்களைத் திரட்டிக்கொண்டு சிறுபான்மையாக ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதல்ல. சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதுதான்.
திமுகவின் இன்றைய அரசியல் நகர்வுகள் இந்த அடிப்படைக்கே முரணாக இருக்கின்றன.
பெரியாராவது, அண்ணாவாவது! எங்களுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்; அதற்காக எந்த அரசியல் எல்லையையும் கடக்கத் தயார்! என்ற மனநிலையைத்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பதிவு பொதுவெளியில் வெளிப்படுத்துகிறது.
இது வெறும் தனிநபரின் கருத்து என்று கடந்து செல்ல முடியாது. திமுகவின் இன்றைய அரசியல் திசை குறித்துப் பேச வேண்டிய பதிவு இது.
-தேசாந்திரி
@arivalayam @mkstalin @Udhaystalin @DrSenthil_MDRD What Bro❓❓❓
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ராக்கெட் என்ற போலி பெயரில் சுற்றும் இவன் மேலூரை சேர்ந்த இஸ்லாமியர் என்று சொல்லப்படுகிறது தொடரந்து சாதிவெறியுடன் X தளத்தில் எழுதி வருகிறான். இவன் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். @tnpoliceoffl @DMKITwing @Tndalitpanthers @ambedkariteIND @NCSC_GoI @thirumaofficial
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
Credits-@Rajstee3
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் பட்டியலின மக்களுககு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது.
இந்தச் சட்டத காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர்.
இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
விசிகவினரின் தொடர் போராட்டங்களை அடுத்து முத்துகாளிப்பட்டியில் தீண்டாமை சுவரை அகற்றிய அதிகாரிகள்! #vck #velichamtv
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றோம்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து முன்வைக்க கெனாட் பிளேஸ் எனுமிடத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்றோம்.
ஆங்காங்கே காவல்துறையின் கடுமையான நெருக்கடிகளையும் தடைகளையும் மீறி உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்று மனு அளித்தோம்.
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
தலைவர் @thirumaofficial அவர்களுக்கு.
வருங்காலங்களில் தோல்வி அடைந்த ஸ்டாலின் MLA வாக ஆவதற்கும் கூட்டணி கட்சிகளின் உழைப்பால் நோவாமல் முதல்வர் ஆவதற்க்கும் உங்களிடம் ஸ்டாலினோ வேறு எந்த கொத்தடிமைகளோ இல்லை தெரு நாயோ ஆதரவு தேடி வந்தால் கேட் ஓட அடித்து விரட்டி விடுங்கள்.
@E_quality_5ter_ @Rajstee3 @Danieljoshua_15 @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Lenin9444295316 @Desanthrii @shanmugeshvck @Nakkeeranj93771
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
என்ன பாட்டுக்கு @E_quality_5ter_ @shanmugeshvck @Lenin9444295316 @Elansezhian3 @mohan_selvaraj @Rajstee3 @Danieljoshua_15
கலைஞர் இல்லை திமுக முடிஞ்சதுடா
@mkstalin தலைவர் ருத்ர தாண்டவம் ஆடுனாரு
இப்போ அவருக்கு இனையா
@Udhaystalin இளைஞர்களின் படையோட
இடைதேர்தல்ல தரமான வேலைபாடு பண்ணி இருக்காரு 🔥🔥🔥
We Will Bounce Back 🖤❤
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம்...
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், எஸ் ஐ ஆர் நடைமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக இந்தியா கூட்டணியின் சார்பில் புது தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னெடுத்து வரும் இந்த போராட்டங்களில் 250க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
இன்று மூன்றாவது நாள் போராட்டமாக புதுதில்லி கினாட் ப்ளேஸ் என்கிற இடத்திலிருந்து காந்தியடிகளின் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது!

























