Senthamizh Arasu retweeted
முத்துராமலிங்கத் தேவர் பின்பற்றிய பாதை இளைய சமுதாயத்தினருக்குத் தெரிய வேண்டும்.
– மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. @RajeshKumarSMLA
#TNCongress
#தேவர்ஜெயந்தி
#pasumpon_muthuramalinga_thevar
Senthamizh Arasu retweeted
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள வீரத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் இன்று புகழஞ்சலி செலுத்தி வணங்கினேன். தேசப்பணியிலும் ஆன்மீகப் பாதையிலும் அவரது தியாகமும் வழிகாட்டலும் என்றும் நினைவுகூரத்தக்கது!
#ThevarJayanthi #Pasumpon #வீரவணக்கம் #முத்துராமலிங்கத்தேவர்
Senthamizh Arasu retweeted
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் இன்று 29.10.2026 சென்னை சத்தியமூர்த்தி பவனின் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
#TNCongress
Senthamizh Arasu retweeted
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற 'Meet Your Minister' குறைதீர்க்கும் நிகழ்வில், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டேன்.
#MeetYourMinister #RajeshKumar #TNCC #SathyamurthyBhavan #PublicGrievance #TamilnaduNews
Senthamizh Arasu retweeted
“உப்புத் தின்றவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்!” - வசூல் ராஜா உதயநிதி
திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் லெட்டருக்கே உதயநிதி நண்பர் மகேஷ் ஆட்சியில் கிடையாதாம் ‘மதிப்பு’! ஆனால் ஆசிரியர் பணி மாறுதலுக்கு மட்டும் கரெக்டா ₹7.70 லட்சம் சுருட்டணுமாம் லஞ்சம்!
களத்தில் உள்ள திமுகவின் உண்மையான அடிமட்டத் தொண்டர்களே இந்தக் கைதை வரவேற்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, பெருந்தலைகள் மட்டும் வேறு வழியின்றி கட்டாயப் பாசத்தில் முட்டுக் கொடுப்பது ஏன்?
Senthamizh Arasu retweeted
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து பிலிகுண்டுலுவில் கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்; தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்!
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடியைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான இக்காலகட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பிறப்பித்துள்ள உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரிய தண்ணீரைத் தடையின்றித் திறக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை கர்நாடக அரசுக்கு உண்டு.
காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாள்தோறும் 3,000 கனஅடி வீதம் நவம்பர் 6-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தும், பிலிகுண்டுலுவில் தொடக்க நாட்களில் ஏற்பட்ட 3,851 கனஅடி பற்றாக்குறை டெல்டா விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஜூலை மத்தியில் தொடங்க வேண்டிய நீண்டகால சம்பா சாகுபடி, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் செப்டம்பர் முதல் வாரத்தில் தான் தாமதமாகத் தொடங்கப்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், பயிர்களைக் காப்பாற்றி மகசூலை ஈட்ட காவிரி நீர் தொடர்ந்து தேவைப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், சட்டப்பூர்வ அமைப்பான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் அனைத்துத் தரப்பினரும் முழுமையாக மதித்துச் செயல்பட வேண்டும். பற்றாக்குறை நிலவும் காலங்களிலும் சரிவிகித அடிப்படையில் உரிய பங்கீட்டை உறுதி செய்ய வேண்டியது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நெறியாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் நியாயத்தை உணர்ந்து, ஆணையத்தின் உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் நிலுவையில் உள்ள பற்றாக்குறை நீரை ஈடுசெய்து, தினசரி 3,000 கனஅடி நீரை முழுமையாகத் திறந்துவிட கர்நாடக அரசு உடனடியாக முன்வர வேண்டும். தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வுரிமையையும் வேளாண்மையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
#TNCongress #Cauverywater
Senthamizh Arasu retweeted
வருகின்ற 30.10.2026 அன்று டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லவிருப்பதால், அதற்கு முன்னதாகவே தொடங்கியுள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் திரு. இராஜராம்பாண்டியன், சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. சஞ்சய்காந்தி, மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. உலகநாதன், விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் திரு. மணிகண்டன், தேனி மாவட்டத் தலைவர் திரு. கோபிநாத், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. ராமலெட்சுமி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு. ஜெய்ஹிந்த்புரம் முருகன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திரு. வேல்சாமி, திரு. தெய்வவேந்திரன், திரு. செல்லத்துரை ஆகியோருடன் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்
#Manickamtagore #TNCongress
Senthamizh Arasu retweeted
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வாழப்பாடி கே. இராமமூர்த்தி அவர்களின் 24 - ம் ஆண்டு நினைவு நாள் இன்று. சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தேசிய மாணவர் அமைப்பில் மாணவர்களை திரட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரன்பை பெற்றவர். ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை தொழிலாளர் நலத்துறை, மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவிகளை வகித்தவர். தொழிற்சங்க தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ்காந்தி அவர்களின் அன்பையும் நம்பிகையையும் பெற்றவர். அவர் தம் நினைவை போற்றுவோம்.
செ. ராஜேஷ்குமார்.
சுற்றுலாத்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
Senthamizh Arasu retweeted
காந்தப்பாடி புதூர் பவானி தெற்கு வட்டாரத் தலைவர் திரு. M. நாகராசன் அவர்கள் இல்லத்தில் அவரது தாயார் திருமதி. M. கருப்பாயம்மாள் அவர்கள் மறைவையடுத்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்
பி உதயகுமரன் அம்மாபேட்டை வட்டாரத் தலைவர் திரு. P.விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு கே ஆர் பூபதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Senthamizh Arasu retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மறுசீரமைப்புத் திட்டமான SSA-2 மாவட்டப் பார்வையாளர்களுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சி அமைப்பை அடிமட்டம் முதல் முழுமையாக மறுசீரமைக்கும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளைச் செம்மையாகச் செயல்படுத்தும் நோக்கில், வெளி மாவட்டங்களில் இருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முன்னாள் மாவட்டத் தலைவர்கள் மாவட்டப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டங்களுக்குக் குறைந்தது 5 முறையாவது நேரடியாகச் சென்று, முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, 10 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஒரு ‘மண்டல்’ என உருவாக்கி, அதற்கு 55 வயதுக்குட்பட்ட சிறந்த செயல்வீரர்களைத் தேர்வு செய்ய ஜனநாயகப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, நானும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அண்ணன் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் விவாதித்து முழுமையான நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர், மாவட்டப் பார்வையாளர் மற்றும் பிசிசி உறுப்பினர்கள் இணைந்து ஒருசேர எடுத்த முடிவின் அடிப்படையில், முழுமையான ஜனநாயகப் பண்போடு இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; அதனால் சில வருத்தங்கள் கூட எழலாம். காங்கிரஸ் பேரியக்கத்தின் உயரிய கொள்கைகளுக்காகக் களத்தில் நின்று போராடும் ஒவ்வொரு தொண்டனுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும், விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியான செயல்வீரர்களைக் கொண்ட ஒரு பெரும் படைவீரர்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மாவட்டப் பார்வையாளர்களுக்கும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பணிகளின் முதற்கட்டமாக திருப்பூர் மாநகர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களுக்கான மறுசீரமைப்புப் பட்டியல்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ள "வாக்குக் காப்போம்! நாட்டைக் காப்போம்!" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் தெருமுனைப் பிரச்சாரங்களாக களத்தில் இறங்கி மக்கள் பணியாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு உள்ளது.
வரவிருக்கும் இந்த இரண்டு மாதங்களும் நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான காலகட்டமாகும். மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் நலப் போராட்டக் களத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து வலுவான படைவீரர்களாக நாம் துணை நிற்க வேண்டும். தியாகமும் கடமையுணர்ச்சியும் கொண்ட நமது காங்கிரஸ் தொண்டர்களால் மட்டுமே இத்தகைய மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாத மக்கள் சக்தியாகவும், உரிய பலத்தோடும் மரியாதையோடும் திகழும் பேரியக்கமாகவும் உயர்த்தும் இந்தச் சீரிய முயற்சிக்கு, காங்கிரஸ் தோழர்களும் நிர்வாகிகளும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கி ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
#TNCongress #SSA2
Senthamizh Arasu retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மறுசீரமைப்புத் திட்டமான SSA-2 மாவட்டப் பார்வையாளர்களுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சி அமைப்பை அடிமட்டம் முதல் முழுமையாக மறுசீரமைக்கும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளைச் செம்மையாகச் செயல்படுத்தும் நோக்கில், வெளி மாவட்டங்களில் இருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முன்னாள் மாவட்டத் தலைவர்கள் மாவட்டப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டங்களுக்குக் குறைந்தது 5 முறையாவது நேரடியாகச் சென்று, முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, 10 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஒரு ‘மண்டல்’ என உருவாக்கி, அதற்கு 55 வயதுக்குட்பட்ட சிறந்த செயல்வீரர்களைத் தேர்வு செய்ய ஜனநாயகப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, நானும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அண்ணன் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் விவாதித்து முழுமையான நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர், மாவட்டப் பார்வையாளர் மற்றும் பிசிசி உறுப்பினர்கள் இணைந்து ஒருசேர எடுத்த முடிவின் அடிப்படையில், முழுமையான ஜனநாயகப் பண்போடு இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; அதனால் சில வருத்தங்கள் கூட எழலாம். காங்கிரஸ் பேரியக்கத்தின் உயரிய கொள்கைகளுக்காகக் களத்தில் நின்று போராடும் ஒவ்வொரு தொண்டனுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும், விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியான செயல்வீரர்களைக் கொண்ட ஒரு பெரும் படைவீரர்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மாவட்டப் பார்வையாளர்களுக்கும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நாமக்கல் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களுக்கான மறுசீரமைப்புப் பட்டியல்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ள "வாக்குக் காப்போம்! நாட்டைக் காப்போம்!" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் தெருமுனைப் பிரச்சாரங்களாக களத்தில் இறங்கி மக்கள் பணியாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு உள்ளது.
வரவிருக்கும் இந்த இரண்டு மாதங்களும் நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான காலகட்டமாகும். மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் நலப் போராட்டக் களத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து வலுவான படைவீரர்களாக நாம் துணை நிற்க வேண்டும். தியாகமும் கடமையுணர்ச்சியும் கொண்ட நமது காங்கிரஸ் தொண்டர்களால் மட்டுமே இத்தகைய மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாத மக்கள் சக்தியாகவும், உரிய பலத்தோடும் மரியாதையோடும் திகழும் பேரியக்கமாகவும் உயர்த்தும் இந்தச் சீரிய முயற்சிக்கு, காங்கிரஸ் தோழர்களும் நிர்வாகிகளும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கி ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
#TNCongress #SSA2
Senthamizh Arasu retweeted
பிறந்த நாள் வாழ்த்து செய்தி
24-10-2026 - இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. H. முஹமது ஆரிப் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை மீது அளவற்ற பற்று கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்காகவும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அயராது உழைத்து வரும் தங்களது பொதுப்பணிப் பயணம் மேலும் பல உயரங்களை அடையவும், தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் மக்கள் ஆற்றவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தாங்கள் இந்த நன்னாளில் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செ. ராஜேஷ் குமார்
சுற்றுலாத்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு.
Senthamizh Arasu retweeted
வடகிழக்கு பருவமழை வெள்ள நிவாரணப் பணிகளை அரசுடன் இணைந்து செயல்படுத்தும் காங்கிரஸ் பேரியக்கம்.
#TNCongress #RahulGandhi #TNCCFloodRelief #உதவும்கை
Senthamizh Arasu retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாநகர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுடனான மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.எம். பழனிசாமி மற்றும் கனெக்ட் சென்டர் இணைத் தலைவர் திரு. எஸ். பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பது மற்றும் மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
#TNCongress
Senthamizh Arasu retweeted
புதிய அத்தியாயம், கதைகளைப் பகிரும் புதிய வழி.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திருமதி சோனியா காந்தி அவர்கள் இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்து, Belonging: A Journey of Love படைப்பின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.
அன்பு, கடமை, இழப்பு, தனக்கென ஒரு இல்லத்தைத் தேடும் பயணம் ஆகியவற்றை இது பேசுகிறது. மனதில் நீங்காமல் நிற்கும் ஒரு நெகிழ்ச்சியான பயணம்.
அன்னை சோனியா காந்தி அவர்களை இன்ஸ்டாகிராமில் அன்புடன் வரவேற்கிறோம். முதல் பார்வையைப் பாருங்கள்.
A new chapter, a new way of sharing stories. ❤️
CPP Chairperson Smt. Sonia Gandhi ji makes her Instagram debut with the first look of Belonging: A Journey of Love, a story that explores love, duty, loss and the search for a place to call home.
A heartfelt journey that promises to stay with you.
instagram.com/reel/DeyJ8QEt3…
Senthamizh Arasu retweeted
My thoughts are with everyone affected by the heavy rains in Tamil Nadu.
I appeal to Congress leaders and workers to reach out to families in the affected areas and help with relief. Please work closely with the local authorities, and give special attention to the elderly and the most vulnerable.
To my sisters and brothers in Tamil Nadu: we stand with you. Please stay safe.
Senthamizh Arasu retweeted
இந்திய திருநாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்கள் என்ற மருது பாண்டியர்கள் (கி.பி.1780-1801) 1801 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற 24.10.2026 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, கிண்டியில் காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், ப. எம்.பி. அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
மேலும், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மாலையீட்டில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிட மண்டபத்தில் நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கீழ்கண்ட முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
திரு. மயூரா எஸ். ஜெயக்குமார், செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
திரு. ஏ.சி. சஞ்ஜய் காந்தி, தலைவர், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
திரு. எஸ். மாங்குடி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
திரு. கரு. மாணிக்கம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
திரு. பி. சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி திரு. எம். இராஜரத்தினம், முன்னாள் தலைவர், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி திரு. அருணகிரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
திரு உ. உலகநாதன், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
திரு ஜெய்ஹிந்த்புரம் எஸ்.வி. முருகன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
Senthamizh Arasu retweeted
கோவையில் மாணவன் அகிலனின் மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சாதியின் பெயரால் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நிகழ்வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சாதிய வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக புகார்மீது உரிய நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்களே சாதியப் பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் இடமளித்தால், நம் குழந்தைகளின் எதிர்காலம் எத்தகைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற கேள்வி எழுகிறது.
ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை கவனித்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், ஆறுதலையும் நேரத்தில் வழங்க வேண்டியது அவசியமாகும்.
அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இச்சம்பவம் குறித்து எவ்வித பாரபட்சமுமின்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Senthamizh Arasu retweeted
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் நமது தமிழகத்தின் தங்கம் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🇮🇳🥇
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் T44/T62/T64 பிரிவில் 7.15 மீட்டர் தூரம் தாண்டி, தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய ஆசிய சாதனையும் படைத்து ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எல்லைகளை உடைத்தெறிந்து புதிய சாதனை படைத்துள்ள அவரது அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு இளைஞருக்கும் சிறந்த உத்வேகம். மென்மேலும் பல உயரங்களை எட்டி நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்திட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
#TNCongress #AsianParaGames2026 #SolairajDharmaraj
Senthamizh Arasu retweeted
சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துணைநிற்க "உதவும் கை" என்ற மக்கள் நல முன்னெடுப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தலா 3 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களத்தில் நேரடியாக மக்கள் பணியாற்றுவர்.
நேற்றைய தினம் மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், "தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது ஆறுதல்கள். காங்கிரஸ் தலைவர்களும் தோழர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி முதியவர்கள், எளிய மக்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகச் சகோதர, சகோதரிகளே... நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம்" என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வழிகாட்டுதலின்படி, சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் "வெள்ள நிவாரண உதவி மையத்தை" இன்று (23.10.2026, வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் தொடங்கி வைக்கிறேன்.
மழை வெள்ள இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கான இப்பணியில் காங்கிரஸ் கைகோர்த்து களத்தில் நிற்கிறது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் சகோதரர் @RajeshKumarSMLA அவர்களின் தலைமையில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விரிவான களப்பணிக் குழு அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன .
உதவி தேவைப்படுவோர் மற்றும் நிவாரணப் பணிகளில் பங்களிக்க விரும்பும் தோழர்கள் / தன்னார்வலர்கள் தொடர்புகொள்ள:
📞 7871004668 | 8681004204
மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்களின் துயர் துடைக்க காங்கிரஸ் பேரியக்கம் என்றும் களத்தில் நிற்கும்! ✋
#TNCongress #RahulGandhi #TNCCFloodRelief #உதவும்கை
My thoughts are with everyone affected by the heavy rains in Tamil Nadu.
I appeal to Congress leaders and workers to reach out to families in the affected areas and help with relief. Please work closely with the local authorities, and give special attention to the elderly and the most vulnerable.
To my sisters and brothers in Tamil Nadu: we stand with you. Please stay safe.












































