NTK 2.0 (@TTNews26) header
NTK 2.0 (@TTNews26) profile picture

நாம் தமிழராய் இணைவோம்❤💛 Belongs To Tamilian Stock 🔥

Joined June 2018
Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)
அதிமுகவின் சிறப்பான சம்பவம்🔥👌 கள்ளக்குறிச்சி தவெக mla மீது இவ்வளவு நாள் வழக்கு பதியாமல் காப்பாற்றியது யார்? குற்றமே நடைபெறவில்லைனு கூறி காப்பாற்ற முயன்ற அமைச்சர்களும், இதுகுறித்து வாய் திறக்காத முதலமைச்சர்தான் இந்த அவலத்திற்குப் பொறுப்பு - அதிமுக வழக்கறிஞர் திரு. @IInbadurai
17
35
478
இதெல்லாம் கட்சியாடா😡 கொம்பன் சாட்டையின் ருத்ர தாண்டவம் ஆடி வச்சிருக்கான்🔥💪
1
73
1
205
1,537
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
212
955
33
2,334
56,563
Seeman Famous Dialogue Perfectly Matching Now👌 படிக்காத தற்குறி பயலுகளா.. ஒரே காரி துப்புவது 🤦🤦
3
202
852
11,338
அடேங்கப்பா எப்படி பட்ட MLA 👌👌 ஒரு மாசமா ஒண்ணுமே நடக்கலன்னு பதவிகாக பொய் சொல்லி முட்டு கொடுத்துட்டு இருந்தாங்க🤷🤦 அதுமட்டுமா ஐயா விஜய் தீபாவளிக்கு ட்ரெஸ் எல்லாம் கொடுத்து வாழ்த்து வேற சொன்னாரே👌 #ArrestArulVignesh
1
52
1
84
768
சோலி முடிஞ்சு🔥 IAS Officerக்கே நடிகர் விஜய் அரசின் MLAக்கள் இப்படி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினா.. மக்களுக்கு நிலைமை😱 உத்தம வேஷம் போட்டு கள்ளக்குறிச்சி mlaக்கு முட்டு கொடுத்த தவெக தற்குறிகளுக்கு post வந்துருக்கு🤦 இன்னைக்கு புகாரே கொடுத்துட்டாங்க😡 கைது பண்ண தைரியம் இருக்கா?
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளகுறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.யிடம் புகார் எனத் தகவல் #SunNews | #Kallakurichi | #ArulVignesh
14
25
349
இதெல்லாம் இந்த தற்குறி மக்களுக்கு புரியாது தேவையுமில்ல அண்ணா🤷🤦 பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த #சீமான்🥺🥺
3
220
427
3,224
🤣🤣 தலையில் பேணும்.. காங்கிரசும்😅
13
34
520
மாவீரர்நாளுக்கான திரள்நிதி❤️ @NaamTamilarOrg
82
149
13
735
25,072
இவங்களதான் 0 கட்சினு எளனம் பண்ணிட்டு இருக்கு இந்த சமூகம்👌
7
458
1
1,023
6,606
ஜாலியா இருக்கு 😁😂🤣🤣 தற்குறிகள் கிட்ட கோவாலு சிக்குலடா😁 கோவாலு கிட்ட தான்டா தற்குறிகள் சிக்கி இருக்காங்கடா😅😂
41
1
99
1,240
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்! தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்! தமிழர் இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்! உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்! நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்! நாம் தமிழர்!
177
383
33
774
52,179
தமிழ் மண்ணை சுத்தம் செய்யும் நாம் தமிழர் புலிகள் 👌💥♥️💛 வாழ்த்துக்கள் உறவுகளே 👌😎
37
103
707
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
186
726
35
1,812
83,890
என்ன பெரிய கீழ்பாக்கம்....🤣🤣 தற்குறி பாக்கம் கேள்வி பட்டிருக்கீயா😂🙄 30secடே கேட்க முடியலையே, எப்படி இது🤦🤦
55
632
12
2,414
88,297
தலைமுறைகள் நூறு கடந்தாலும்.. தந்த வீரங்கள் மறக்குமா 💛♥️ #Nov27 #மாவீர்நாள்
82
2
269
2,583
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா? கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும். தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு? ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா? இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா? மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
298
823
43
1,808
68,279
விளங்கிடும் தமிழ்நாடு🤷🤦🤦 இப்படி ஒவ்வொரு தற்குறிக்கும் ரெண்டு நிமிஷம் விளக்கம் சொல்லி அவுங்க மனசுக்குள்ள பூந்து இது மாற்றம் இல்ல ஏமாற்றம்னு புரிய வெச்சி முடிக்கிறதுக்குள்ள.... 2031 election முடிஞ்சிடும்...🤷😭😭
36
80
739
நம்ம வரலாறு தெரிஞ்சாதனே..🐅🐅 நாம யாருனு தெரியும்..🐅 அப்பதான நாம தலை நிமிர்ந்து நடக்க முடியும்👑🐅
2
167
3
434
3,754
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா? @CMOTamilnadu @TVKVijayHQ மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்? தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா? கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்? எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
205
507
16
1,077
31,165