
Environmentalist, works @PasumaiEarth #PasumaiThaayagam Movement #Chennai, India #COP31 #ClimateAction #Biodiversity #SavePallikaranaiWetland
Chennai, India
Joined November 2009
- Tweets12.6K
- Following914
- Followers23.7K
- Likes6.2K
ARUL Rathinam retweeted
சன் குழுமத்தின் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி தம்பதியரின் மகள் காவியா கலாநிதி மாறன் மற்றும் இரவிச்சந்தர் - லட்சுமி தம்பதியரின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அனிருத் இரவிச்சந்தர் இணையரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது.!
ARUL Rathinam retweeted
சன் குழுமத்தின் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி தம்பதியரின் மகள் காவியா கலாநிதி மாறன் மற்றும் இரவிச்சந்தர் - லட்சுமி தம்பதியரின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அனிருத் இரவிச்சந்தர் இணையரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது
“பள்ளிக்கரணை தீர்ப்பு: உயர்நீதிமன்றத்தின் மீது கட்டுமான மாஃபியாக்கள் பழிபோடுவது நியாயமா?”
-----------
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றுவதற்கான ஒரு IMP திட்டத்தை அறிவித்தாலே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு தடையை எளிதாக விலக்கி விடலாம். ஆனால், தேவையில்லாமல் இதனை உயர்நீதிமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இழத்தடிக்கும் சதியை கட்டுமான மாஃபியாக்கள் செய்கின்றனர். தமிழ்நாடு அரசின் ‘உச்ச’ அதிகாரியும் இந்த சதிக்கு உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது!
-----------
‘பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் தற்காலிக கட்டுமான தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தற்கு எதிராக கட்டுமான மாஃபியாக்கள் கொந்தளித்துள்ளனர்.
‘உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கில் அதற்கு கீழுள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை கட்டுமான நிறுவனங்கள் விமர்சனம் செய்துள்ளன. ‘உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை விசாரிப்பது, ஒன்பது மாதங்களுக்கு முன்பு 2026 பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்த போதே, உயர்நீதிமன்றத்துக்கு தெரிந்தது தானே? அப்போதே உச்சநீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லாதது ஏன்?’ என்று கட்டுமான நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தை நோக்கி, தி இந்து நாளிதழ் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனாலும், இந்த விவகாரத்தின் பின்னணி அறிந்தவர்கள், இதற்கு பின்னால் மாபெரும் சதிவலை பின்னப்பட்டதையும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அந்த சதியை அம்பலமாக்கியதால், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
தமிழக அரசை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், கட்டுமான நிறுவனங்களும், தமிழ்நாடு அரசும் ஒரே வாதத்தை முன்வைத்தன. அதாவது, வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பும், அதே வழக்கை எதிர்கொண்ட அரசு தரப்பும் ‘பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை தளர்த்தலாம்’ என கருத்தில் வாதிட்ட விநோதம் இந்த வழக்கில் நடந்தது!
ஒரு உச்ச அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு, கட்டுமான நிறுவனங்கள் வாங்கி வைத்துள்ள அனைத்து இடங்களையும் சதுப்புநில தாக்கப்பகுதியில் இடம்பெறாதவாறு வரைபடத்தை தயாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தார் என தகவலறிந்தவர்கள் கூறினர். தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் அளித்த 240-க்கும் மேற்பட்ட உத்தேச வரைபடங்களை அந்த அதிகாரி நிராகரித்தார் என்று கூறப்படுகிறது.
கடைசியில், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிக்குள் தனியார் கட்டுமான நிறுவனங்களின் ஒரு சதுர அடி இடம் கூட வராத வகையில் உருவாக்கப்பட்ட ‘செட்அப்’ வரைபடத்தை தான், அந்த ‘உச்ச’ அதிகாரி ஏற்றுள்ளார். இந்த அநீதியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அம்பலமாக்கிய பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
-----------
“குறுக்கு வழியில் செல்லும் தமிழ்நாடு அரசு + கட்டுமான மாஃபியா!”
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் ஒரு லட்சம் பட்டா உரிமையாளர்களுக்கு கட்டுமானத் தடை விதித்துள்ளதாக தொடர்ந்து கட்டுமான மாஃபியா கும்பல் வதந்தி பரப்புகிறது. இந்த விவகாரத்தில் உண்மையை சொல்லாமல் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கிறது!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (Integrated Management Plan - IMP) எனும் சட்டப்படியான ஒரே ஒரு ஆவணத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கும் வரை தான், கட்டுமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது (‘Until the preparation of the IMP is completed, the authorities shall not grant any approvals, sanctions, or permissions that may alter the character of the marshland’). நிரந்தர தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 2025 செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் 2025 அக்டோபர் மாதமே IMP ஆவணத்தை வெளியிட்டு தடையை நீக்கியிருக்க முடியும். இத்தனைக்கும் அந்த ஆவணம் ஏற்கெனவே தயாரிப்பில் இருப்பதாகவும், இறுதிக்கட்டத்தில் பணிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
எனவே, தமிழ்நாடு அரசு உண்மையாகவே நினைத்தால், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட்டு உடனடியாக கட்டுமானத் தடையை நீக்க முடியும்.
இப்படி ஒரு எளிய வழி இருக்கும் போது – இந்த உண்மையை மூடி மறைத்து, கட்டுமான நிறுனங்களும், தமிழ்நாடு அரசும் நாடகம் ஆடுகின்றனர். இப்போதும் கூட உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று சொல்கிறார்களே தவிர, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை அறிவித்து தடையை விலக்கும் நடவடிக்கைகளை இவர்கள் கோரவில்லை!
-----------
குறிப்பு: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுதான் கட்டுமான தடையை நீக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறவில்லை. மாறாக, அதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்கும் வரை, சதுப்புநிலத்தை பாதிக்கும் வாய்ப்புள்ள கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை, இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை விளக்கும் வகையிலான ஒரு IMP செயல்திட்டத்தை வெறும் காகிதத்தில் ஒரு அறிக்கையாக அளித்தாலே போதுமானது.
#SavePallikaranaiWetland #Pallikaranai #MadrasHighCourt
'A person close to the Turkish COP presidency said that Saudi Arabia, Russia and India were “putting spanners in the wheel of consensus” by objecting to any decisive statements on phasing out fossil fuels' #COP31 ft.com/content/fb459525-6978…
ARUL Rathinam retweeted
Having spent the last torturous 14 days here I can safely say this is one of the best overviews of what has and hasn’t happened. #cop31. COP Still Held Hostage By Petroleum Mafia | Newsletter drilled.media/newsletter/cop…
ARUL Rathinam retweeted
Carbon capture is an oil industry scam.
It's a false solution that will never be enough to avert the #climatecrisis.
We have to end the oil industry.
#COP31
ARUL Rathinam retweeted
Genel kurulda protesto oldu. Herkes şokta. Bir protestocu, Murat Kurum konuşurken boynunda bir urganla, "Beni öldürüyorsun, geleceği öldürüyorsun" diye bağırdı. Güvenlik görevlileri Genel Kurul'dan çıkardılar eylemciyi. #COP31
ARUL Rathinam retweeted
“YOU ARE KILLING THE FUTURE”: Amalen, from Artivist Network, protests during COP31 in Antalya, demanding an end to fossil fuels and urgent climate action
“The Global South can’t wait. Save the planet or kill me now.”
#youarekillingourfuture #cop31
Photo: Oliver Kornblihtt
ARUL Rathinam retweeted
Will tomorrow’s outcome at COP31 reveal yet another case of Stockholm syndrome?
Stockholm syndrome describes a psychological response in which people held captive develop emotional attachments to those holding them hostage.
At COP31, we risk witnessing a political version of this tragedy: certain governments becoming so attached to the fossil fuel industry that has hijacked climate negotiations that they seem more concerned with protecting its profits than protecting life itself.
The tragedy is that those entrusted with safeguarding humanity’s future appear to have fallen in love with the very forces destroying it. They are not simply gambling with our children's future. They are knowingly putting their very survival at risk, condemning generations yet unborn to inherit a planet increasingly hostile to human life. A world where deadly heat makes entire regions uninhabitable, where food and water become scarce, where millions are forced to flee their homes, and where children born tomorrow will pay with their lives for the political cowardice and greed of today.
Tomorrow, we will see whether governments have the courage to break free from their captors, or whether they will once again sacrifice the survival, dignity and very possibility of a liveable future for generations yet unborn on the altar of fossil fuel profits.
@afp @Greenpeace International @Amnesty International @ActionAid @apnews @reuters @nytimes @financialtimes@guardian@washingtonpost @theeconomist @bloombergbusiness @bbcnews @cnn @aljazeeraenglish @politico @lemondefr @france24 @rfi @el_pais @derspiegel @euronews @carbonbrief @climatehomenews @insideclimatenews @mongabay @fossilfueltreatyinitiative @global artivism @350.org
ARUL Rathinam retweeted
I’m struggling to find the words for the sadness, heartbreak and disbelief I feel watching what is unfolding at #COP31.
How is this possible?
Only recently, in Santa Marta, Colombia, governments, social movements, scientists, Indigenous peoples and frontline communities came together to confront the main driver of the climate emergency and ask how we move beyond fossil fuels. For a moment, it felt as though the political courage might finally match the urgency of the science.
And now, here we are.
Panama is right to draw a line. If the final text contains no commitment to phase out fossil fuel production, no meaningful climate finance and no guarantee that electrification will be powered by renewables, Panama should formally object. I stand with Panama in taking that position, and I urge other governments to stand with them. Nepal is being pushed to the point of walking out as powerful countries ignore the devastation its people have recently experienced.
Fossil fuels have disappeared from the latest draft. Imagine Alcoholics Anonymous spending 30 years negotiating and producing a statement that never mentions alcohol. Now imagine the alcohol industry turning up as the largest delegation and helping shape the outcome.
Every year we delay phasing out coal, oil and gas locks in more harm for people already living through this crisis and leaves future generations with a more dangerous world. We are on course to exceed 1.5°C of long-term warming. Every fraction of a degree matters. How can governments claim to defend that goal while refusing to confront the continued production of the fuels pushing us beyond it?
The proposed commitment on adaptation finance has also disappeared. And we are still expected to call this progress.
What are we to call a system in which those who have contributed least to the crisis suffer its worst consequences, while those with the greatest responsibility protect fossil fuel profits? Is this climate apartheid?
What breaks my heart is that we know what is at stake. People are losing their homes, their livelihoods and their lives. Communities are struggling to hold on to places that have sustained their cultures for generations. Entire countries are fighting for their survival. And after Santa Marta, we are still negotiating away the very words we need to name the problem.
What does electrification achieve if we leave open the question of how it will be powered? How are countries supposed to deliver on their climate commitments without the finance to do so? How can we call it a just transition if we refuse to confront the continued production of the fuels driving the injustice?
History will judge these talks by whose lives were protected, whose interests were defended and whose future was sacrificed.
We still have time to change the outcome. I’m asking the governments that came to Santa Marta, and every government that has promised to stand with frontline communities, to speak up now and insist that the COP31 outcome commits to a fast, fair and funded phase-out of fossil fuels. And to our allies here at COP31, come in early, raise your voices and stand with the countries holding the line.
We owe this fight to the people already living through the crisis, to the young people whose futures are being decided in these rooms, and to those who will inherit the consequences of what we do here.
There is still time to choose courage. Let’s use every hour we have.
@AFP @Reuters @AP @nytimes @FinancialTimes @guardian @washingtonpost @TheEconomist @Bloomberg @BBCWorld @CNN @AJEnglish @politico @lemondefr @FRANCE24 @radiofrance_XIX @el_pais @POLITICOEurope @derspiegel @euronews @CarbonBrief @ClimateHome @insideclimate
ARUL Rathinam retweeted
Uluslararası İklim Eylem Ağı (CAN International) basın toplantısı düzenliyor. Utanç yazılı dövizlerle şu ana kadar çıkan sonuçları kabul edilemez bulduklarını söylüyorlar. #cop31'i en kötü COP ilan ettiler.
ARUL Rathinam retweeted
The bathtub is overflowing.
Governments have decided turning off the tap is too controversial.
They’ve announced an ambitious investment in towels.
#COP31 - fossil fuels have disappeared from the text but carbon capture and storage is in.
You really couldn’t make this stuff up.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்... அவர் தலையிடாமல் இருந்திருந்தால் சதுப்புநிலத்தை அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் அழித்திருப்பார்கள்...
#SavePallikaranaiWetland #pallikaranai #AnbumaniRamadoss
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை 2017 இந்திய அரசின் சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என 24.09.2025இல் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதுவரை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், சதுப்புநில அறிவிக்கை பணிகளை விரைந்து முடிக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளது (18.11.2026)
நீதிமன்ற உத்தரவுகளை முன்பு திமுக அரசு மதிக்கவில்லை. இப்போது தவெக அரசாவது மதிக்குமா? பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்படுமா?
#SavePallikaranaiWetland #Pallikaranai #MadrasHighCourt
ARUL Rathinam retweeted
பாமகவுக்கு கிடைத்த வெற்றி
“சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ பரப்புக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் முடித்துவைப்பு
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலம் குறித்தும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
ஜனவரி மாதத்திற்குள் அறிக்கை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிக்கை
PMk | Pallikaranai | 18 November 2026
#பாமக | #PMK | #Pallikaranai | #MadrasHighCourt | #EnvironmentalNews | #NewsTamil24x7
ARUL Rathinam retweeted
பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வின் வெற்றி: சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்!
@CMOTamilnadu
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
"பள்ளிக்கரணை சதுப்புநிலம்: கிரெடாய் + தமிழ்நாடு அரசின் கூட்டு சதி முறியடிக்கப்பட்டது"
-----------
நேர்வழியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்கும் அறிவிக்கையை வெளியிட்டு, பசுமைத் தீர்ப்பாயத்தின் கட்டுமானத் தடையை விலக்குவதை விட்டுவிட்டு, குறுக்குவழியில் கூட்டுசதியில் இறங்கி உயர்நீதிமன்றத்தில் மூக்குடை பட்டுள்ளது தமிழ்நாடு அரசு!
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்யும் வரை, தற்காலிகமாக கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
இதன் மூலம் வழக்கு தொடர்ந்த கட்டுமான நிறுவனங்களும், எதிர் தரப்பான தமிழ்நாடு அரசும் ஒரே வாதத்தை உயர்நீதிமன்றத்தில் வைத்து செய்த சதியில் இருந்து - சென்னை உயர்நீதிமன்றம் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.
'இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சதுப்புநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான உறுதியான உத்தரவினை இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள நிலையில் - சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு மாறாக தீர்ப்பளிக்க முடியாது' என்கிற உண்மையை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்கள்.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்து, அதன் மூலம் நேர்வழியில் கட்டுமானத் தடையை பல மாதங்களுக்கு முன்பே அகற்றியிருக்க முடியும். அதை விட்டுவிட்டு குறுக்கு வழியில் கூட்டு சதி செய்த தமிழ்நாடு அரசும் கட்டுமான நிறுவங்களும் இப்போது மூக்குடைக்கப்பட்டுள்ளனர்.
-------------
“பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசுக்கு விருப்பம் இல்லை!”
பள்ளிக்கரணை சதுப்புநிலம் 08.04.2022-ஆம் நாள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டது (Wetlands of International Importance under the Ramsar Convention). இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 3 (a)இன் கீழ் ராம்சார் தளங்கள் தானாகவே வந்துவிடுகின்றன. எனவே, இதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிற்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்திருக்க வேண்டும். அதனை அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு செய்யவில்லை.
தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்வோம் என அறிவிக்கவில்லை.
“பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 90% பகுதியை ஏற்கெனவே அழித்துவிட்டோம். மீதம் 10% மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை 2017 விதிகளின் கீழ் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது. இதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தினை (Integrated Management Plan - IMP) அரசு தயாரித்து வருவதாக அரசு கூறுகிறது. எனவே, சட்டபூர்வமான இந்தப் பணிகள் முடியும் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் கட்டுமான அனுமதி வழங்கக் கூடாது” என 24.09.2025 அன்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை 6 முதல் 12 மாதங்களுக்குள் உருவாக்கிவிடலாம் என இந்திய அரசின் National Plan for Conservation of Aquatic Ecosystems (NPCA) guidelines தெளிவாக கூறியுள்ளது. (‘In most cases, a time frame of 6 months – 1 year is expected’, Page No. 26, NPCA guidelines 2024)
இதற்கு முன்பாக, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் 29.08.2025 அன்று சமர்ப்பித்த அறிக்கையில், இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழான National Centre for Sustainable Coastal Management (NCSCM) நிறுவனம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை 2022ஆம் ஆண்டிலிருந்தே உருவாக்கி வருவதாகவும், ஏற்கெனவே உள்ள IMP மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாளுக்கு முன்பே ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்குவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறிய தமிழ்நாடு அரசு, இன்னமும் கூட அதனை வெளியிடவில்லை.
இவ்வாறு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான ஒரு IMP திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டிருந்தால், பசுமைத் தீர்ப்பாயம் விதித்த கட்டுமானத் தடை தானாகவே இந்நேரம் விலக்கப்பட்டிருக்கும்.
விரிவாக 👇
facebook.com/share/19ptaveF4…
#SavePallikaranaiWetland #Pallikkaranai #MadrasHighCourt






















