பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
மானை வேட்டையாடிய மலைப்பாம்பு மகாராஷ்டிராவின் பர்பனியில் உள்ள ஒரு வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் மலைப்பாம்பு ஒரு மானை வேட்டையாடியது. இந்த மலைப்பாம்பு 15 அடி நீளம் கொண்டதாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த மலைப்பாம்பை பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதூர பகுதியில் விடுமாறு வனத்துறையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Maharashtra #Python
1,342
புயல் காரணமாக மேல்நோக்கி பாய்ந்த நீர்வீழ்ச்சி ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள லேர்க் பகுதியில், புயல் காலநிலையில் நீர்வீழ்ச்சி ஒன்று மேல்நோக்கி பாய்வது போல் காணப்பட்டது. 'போலோ' புயலால் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்; இந்தப் புயல் பிரிட்டன் முழுவதும் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. #Waterfall
5
1,704
"ஆட்சி மாறுது.. ஆனால் ஆட்சி முறை மாறல" - சீமான் சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதை குறிப்பிட்டு தவெக அரசை விமர்சித்துப் பேசினார். #TVK #Seeman
1
5
2,469
'அர்னாப்' புயலின் கணிக்கப்பட்ட பாதை வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேச கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherUpdate #ArnabCyclone
1,509
பதுங்கி இருந்த கைதிகள் ட்ரோன் மூலம் சிக்கிய தருணம் தேனி சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடினர். இதில் இன்று பிற்பகல் வரை 5 பேர் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேர் டிரோன் உதவியுடன் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பான காணொளியை தமிழ்நாடு தென்மண்டல காவல்துறை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரை பிடிப்பதற்கான தேடுதல் பணிகள் நடந்துவருதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Theni #Prison
1
9
1,861
தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? | Explained தேனி மாவட்டத்தில் 17 விசாரணை கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துள்ளனர். வலிப்பு வந்தது போல் நாடகமாடி காவலர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் தப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் பிடிபட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். #Theni #Prison
2
1,581
கண் இமைக்கும் நேரத்தில் தாக்குதல்.. குட்டி சுறா எப்படி தப்பிக்கும்? கடலுக்கு அடியில் உள்ள கெல்ப் காடுகளில் வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. மணலில் மறைந்திருக்கும் ஏஞ்சல் சுறா கண் இமைக்கும் நேரத்தில் தாக்கக்கூடும். ஆனால், சிறிய ஹார்ன் சுறாவுக்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு தனித்துவமான வழி இருக்கிறது. இந்தியாவில் SONY BBC Earth-இல் ‘Planet Earth III’ மற்றும் இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் காணுங்கள்.
1
1
1,854
ஆந்திரா, ஒடிசாவில் 'அர்னாப்' புயலின் தாக்கம் எப்படி உள்ளது? வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherUpdate #ArnabCyclone
1
11
2,757
தேனி சிறையில் இரவோடு இரவாக தப்பிய கைதிகள்; ஆட்டோவில் சென்ற ஐந்தாவது கைதியை போலீஸ் பிடித்தது எப்படி? தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து சிறைக்காவலர்களை தாக்கி விட்டு ஒரே அறையில் இருந்த 17 விசாரணை கைதிகள் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேனி சிறையில் ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, வலிப்பு வந்தது போல் நடித்து கைதிகள் தப்பி இருப்பதாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். #Theni #Prison
2
1,749
'கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள்' – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமத்தின் நிலை bbc.com/tamil/articles/crje5…
1
2
1,438
விசாகப்பட்டினத்தில் 'அர்னாப்' புயலின் தாக்கம் எப்படி உள்ளது? வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherUpdate #ArnabCyclone
5
1
15
4,002
காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர் பாபு திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அக்டோபர் 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஆணையரகத்துக்கு முன்பு சேகர் பாபு மற்றும் திமுகவினர் தங்களை உள்ளே அனுமதிக்க கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். #AnbilMahesh #SekarBabu
1
11
2,349
சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை? bbc.com/tamil/articles/cq0ld…
8
2,402