Sri retweeted
அடிப்படை உட்கட்டமைப்பு கூட இல்லாத வேலூர் மாநகர சாலைகள்
===========================
வேலூர் மாநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றான ஆரணி சாலையின் தற்போதைய நிலையைப் பாருங்கள்!
ஏற்கனவே குறுகலாகவும், போதிய சாலை விரிவாக்கம் இன்றியும் இருக்கும் இந்தச் சாலையில், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம்கூட இல்லை. மின்சாரக் கம்பங்களில் பெயரளவிற்கு விளக்குகளைப் பொருத்தியுள்ளனர். அவையும் பெரும்பாலும் முறையாக வெளிச்சம் தருவதில்லை.
தென் மாவட்டங்களையும் மத்திய மாவட்டங்களையும் வேலூர் வழியாக இணைக்கும் முக்கியப் போக்குவரத்துச் சாலையான ஆரணி சாலையில், தரமான நவீன தெருவிளக்குகள் அமைக்க வேண்டாமா? அதற்கெனத் தனியாக அழகிய மின்விளக்குக் கம்பங்களை நிறுவி, போதிய வெளிச்சம் தரக்கூடிய LED விளக்குகளைப் பொருத்த வேண்டாமா?
ஆனால், இன்றைய நிலையைப் பார்த்தால் சுத்தமாக வெளிச்சமே இல்லாத, ஏதோ கிராமப்புறச் சாலையில் பயணிப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.
ஒருபுறம் சாலை விரிவாக்கமும் இல்லை; மறுபுறம் தரமான நவீன தெருவிளக்குக் கம்பங்களை அமைத்து, முறையான மின்விளக்குகளையும் பொருத்துவதில்லை.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை இத்தனை அலட்சியமாகப் பராமரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இந்த சாலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையை கடக்கிறார்கள், கால்நடைகள் கடக்கின்றன, வேலூர் போன்ற அதிகம் பனிமூட்டம் படர்ந்து காணும் மாநகரத்திற்கு மிகவும் தரம் வாய்ந்த மின்விளக்குகள் தேவை..
இந்தச் சாலையில் பயணிக்கும்போது, வேலூர் மாநகராட்சிக்குள் இருப்பதைவிட ஏதோ இரண்டாம் நிலை நகராட்சியில் பயணிப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது.
மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணத்தில், குறைந்தபட்சம் மாநகரின் முக்கியச் சாலைகளிலாவது அழகிய நவீன தெருவிளக்குக் கம்பங்களை நிறுவி, தரமான LED மின்விளக்குகளைப் பொருத்தி, பாதுகாப்பான மற்றும் வெளிச்சமான சாலைகளை உருவாக்க முடியாதா?
ஆரணி சாலை மட்டுமல்ல, ஊரிசு பள்ளி முதல் தொரப்பாடி இதே நிலைதான், ஆற்காடு மற்றும் பெங்களூரு சாலையிலும் இதே நிலைதான்.
உண்மையிலேயே நாம் மாநகராட்சியில் தான் இருக்கிறோமோ என்ற கேள்வி தினம் தினம் எழுகிறது.
@vinoth_tvkvlr @Balajierodetvk @CMOTamilnadu @Vellore_Corpn @VIT_univ @OffCMCVellore @VelloreCityInfo @UpdatesChennai @TamilNaduInfra
#Vellore #UrbanInfra
⚠️ வேலூர் மாநகராட்சி கவனத்திற்கு!
தெற்கு காவல் நிலையம் அருகில், வேலூர் MLA அலுவலகம் எதிரே Filterbed Rd தொடக்கத்தில் தோண்டப்பட்ட சாலை முறையாகச் சீரமைக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழையில் தண்ணீர் தேங்கினால் ஆபத்து சாலையை சீரமைக்கவும்
@Vellore_Corpn @vinoth_tvkvlr
@Vellore_Corpn are you really working to listen our problems? 2 weeks gone
3
Sri retweeted
வேலூரில் ஒரு சாலைகூட முறையாகப் பராமரிக்கப்படவில்லை. குறிப்பாக, வேலூரின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான கோட்டை சுற்றுச்சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலையே தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது. சாலையில் உள்ள பள்ளங்கள் தண்ணீருக்குள் மறைந்ததால், அவை கண்ணுக்குத் தெரியாமல் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் உடைந்து, ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்களும் மேடுகளுமாகக் காட்சியளிக்கின்றன.
தரமான தார்ச்சாலை அமைத்து, சாலையின் இருபுறங்களிலும் அழகிய அலங்கார மின்விளக்குகளைப் பொருத்தி, முறையான மழைநீர் வடிகால் வசதியுடன் மேம்படுத்தினால், கோட்டை சுற்றுச்சாலை வேலூரின் அழகையும் நகரின் மதிப்பையும் உயர்த்தும் வகையில் அமையும்.
மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேலூர் சாலைகளில், சிறிய மழை பெய்தால்கூட வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வேலூருக்குத் தேவை வெறும் சாலைச் சீரமைப்பு மட்டுமல்ல; தரமான சாலைகள், முறையான வடிகால் வசதி, அழகிய தெருவிளக்குகள் எனத் திட்டமிட்ட நகர்ப்புறக் கட்டமைப்பு!
@CMOTamilnadu @MawsTamilNadu @vinoth_tvkvlr @Vellore_Corpn @UpdatesChennai @VelloreCityInfo @vellore_smart @Velloretimes @Balajierodetvk #Vellore
@Vellore_Corpn Hear our voice
4
@Vellore_Corpn are you really taking X grievances raised by people. It crossed 24 hours.. look how madurai corporation responds
@Updates_Vellore @vinoth_tvkvlr @Velloretimes @MayorSujatha
1
10
@polimernews @NewsTamilTV24x7 @ThanthiTV @puthiya097 @sunnewstamil @NewsJTamil @Kalaignarnews @TamilJanamNews @jayapluschannel
Requesting to bring this issue in television media for more attention
11
அந்தச் சாலையை முன்பு இருந்ததுபோல் கற்கள் பதித்து முறையாகச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுப்போம்! பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
#Vellore #VelloreCorporation #RoadSafety #வேலூர்
15
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் திரும்பும்போது மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
13







