Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள்.
இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது #DravidianModel அரசு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்!
#ImmanuelSekaran
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
பூந்தமல்லி - போரூர் – வடபழனி மெட்ரோ வழித்தடம் தொடக்கம் சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!
- கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை
திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி - போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதுகுறித்த சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இதற்காக, அப்போது நான் ஜப்பான் சென்று JICA-வின் நிதியைப் பெற்று வந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டோம். இதனையடுத்து சென்னை மெட்ரோ இரயிலின் முதற்கட்டப் பணிகள் நிறைவுபெற்றபோது, விமான நிலையம் – சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் – கோயம்பேடு புறநகர்ப் பேருந்து முனையம் எனச் சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்கள் இணைக்கப்பட்டு, சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மாமருந்தாகவும், மாநகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மிகப் பெரும் மைல்கல்லாகவும் இது அமைந்தது. தற்போது இத்தடத்தில் விம்கோ நகர் வரை இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, “சென்னைக்கு மெட்ரோ இரயில் தேவையில்லை, மோனோ இரயில் போதும்” என அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு இதனைத் தடை செய்ய நினைத்து, அது முடியாமல் போன நிலையில், பின்னர் அவர்களே முடிவுற்ற பணிகளைத் தொடங்கியும் வைத்தனர். அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தின்போது சாலைகள் மூழ்கித் துண்டிக்கப்பட்ட நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மெட்ரோ மூலமாகப் பயணித்தபோது சென்னைக்கு மெட்ரோ இரயிலின் தேவை அனைவராலும் உணரப்பட்டது.
இதனையடுத்து, சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் கண்டிருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் அதனை விரைவுபடுத்தினோம். இதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையிலும், பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டோம்.
2021-ஆம் ஆண்டு தொடங்கி, பிரதமர் அவர்களை நான் நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுகுறித்த கோரிக்கை மனுவினை அளித்து, ஒன்றிய அரசின் பங்கினைக் காலதாமதம் செய்யாமல் விடுவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், 2024 செப்டம்பர் நிலவரப்படி, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து 11,762 கோடி ரூபாயும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடனுதவி மூலம் 6,802 கோடி என மொத்தம் 18,564 கோடி ரூபாயைச் செலவிட்டு நமது அரசில் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்தோம்.
குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதுகுறித்த விளக்கமான கடிதம் ஒன்றை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு அனுப்பி, தொடக்கத்தில் வாக்களித்தபடி 50:50 பங்கு மூலதன அடிப்படையிலேயே சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுக்க மாநில அரசின் நிதியில் மேற்கொள்வதால் மாநில அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்படுவதோடு, பணிகளும் தாமதமாவதை எடுத்துக் கூறினேன்.
இதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிரதமரை நேரில் சந்தித்தபோதும் இதுகுறித்துப் பேசினேன். இதற்குப் பின்னர்தான், அக்டோபர் மாதம் நமது கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டர் அவர்களையும் சென்னை மெட்ரோ இரயில் தலைமையகத்தில் சந்தித்து, இதற்காக நன்றி தெரிவித்து மெட்ரோ விரிவாக்கத்தை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் பேசினேன்.
பல்வேறு தருணங்களில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை 13-10-2022 அன்று தொடங்கி வைத்தேன்.
2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்குக் கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தைக் கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணியை மேற்கொண்டு வருவோரை ஊக்கப்படுத்தினேன். 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் மேல், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத்தில் கட்டுமானப் பொறியியலின் அதிசயமாக உருவாகி வரும் 108 அடி உயர மெட்ரோ பாலத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் என இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளோடு, விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மூன்றாம் கட்ட மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்காகவும் கனவு கண்டு உழைத்தோம்.
இவற்றுக்கிடையே, MRTS சேவையையும் சென்னை மெட்ரோ நிர்வாகமே எடுத்துச் செயல்படுத்திடுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். அதற்கும் தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சென்னை போலவே கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ அமைக்க ஒப்புதல் வேண்டியும் ஒன்றிய அரசுடன் போராடினோம். CUMTA அமைப்புக்குப் புத்துயிரூட்டி, சென்னையின் போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் இணைத்து, Chennai One என்ற ஒரே செயலியில் அனைத்துப் பயணச்சீட்டுகளையும் டிஜிட்டல் முறையில் பெறும் முறையை அறிமுகப்படுத்தினோம்.
வரும் 11-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட இருக்கும் பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடத்தை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளேயே திறந்திட அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசில் செய்தோம். இருப்பினும், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை இரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அது இயலாமல் போனது. அச்சூழலில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, திட்டமிட்டபடி நமது ஆட்சிக்காலத்தில் இதனைத் திறந்து வைக்க முடியவில்லை.
எனினும், ஒருவழியாகச் சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வர இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன். ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ இரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்.
இவ்வேளையில் வள்ளுவர் கோட்டம் குறித்த ஒரு வரலாற்று நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தை 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்க அன்றைய கழக அரசு நாள் குறித்திருந்த நிலையில், நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக ஜனவரி மாத இறுதியிலேயே கழக அரசு கலைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டிய செய்தி இடம்பெற்றிருந்த கல்வெட்டைக் கூட அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு அந்த விழா நடைபெற்றது.
அப்போது முரசொலியில், ‘கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்ற தலைப்பில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், “ஆசைக்கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியை நான் பெறுகிறேன் இன்று! என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப்பள்ளு பாடுகிறேன்” என்று நெகிழ்ச்சியோடு எழுதினார். நெடுநாள் ஆசை நிறைவேற்றம், நெஞ்சில் இன்பக் கொடியேற்றம் என மகிழ்ந்தார்.
அக்கடிதத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு வாசகம் இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறது. ”சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அதே நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன்” என்பதுதான் அது! சென்னை மெட்ரோ இரயில் நிறைவேற்றத்திலும் கழக அரசின் இடம் சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாத இடமாக நிலைபெற்றிருக்கும்.
சென்னை மெட்ரோ இரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க அரசின் பெயர்தான் இருக்கும். கழக ஆட்சிக்காலங்களில்தான் நவீன தமிழ்நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும்!
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?
போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு;
தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி;
ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!
முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?
#NursesProtest #MedicalWorkersProtest
சென்னை : காலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை இரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்
#chennai #arrestnews #Liveupdates #Puthiyathalaimuraitv
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
My hearty congratulations to Velavan, Abhay Singh, Joshna Chinappa and Shameena Riyaz on winning bronze medals for India in the Men’s and Women’s Squash Team events respectively at the 20th Asian Games in Aichi-Nagoya, Japan.
Their achievement is a proud moment for Tamil Nadu. Wishing them continued success and many more medals in the days ahead!
#Squash #AsianGames
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
Circus ஆட்சியாளர்களின் அதிகார வெறியால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக, கடலென திரண்டிருந்த மதுராந்தகம் - மின்னல் சித்தாமூர் பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உரையாற்றினோம்.
@evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk @Prabhugajendran
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
'செயற்கரிய செய்த பெரியார்' எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்!
பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர். இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்; பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சட்டப்பேரவைத் தலைவர்; முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சர் எனத் தடம் பதித்தவர்.
தமிழ் மொழிக்கும் தமிழ் இதழியலுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஐயா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு #PowerCut
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் retweeted
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.































