Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.
Chennai, India
Joined February 2018
- Tweets17.3K
- Following136
- Followers197K
- Likes650
மக்கள் நீதி மய்யம் - நிர்வாகக் குழு & செயற்குழு கூட்டம்
ஊடகக் குறிப்பு (22-10-2026)
தலைவர் திரு.கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று 22.10.2026 காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமானது பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv, துணைத்தலைவர்கள் திரு.A.G.மெளரியா I.P.S(Rtd) @MouryaMNM, திரு.R.தங்கவேலு @Thangavelukovai ஆகியோர் முன்னிலையில் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவை:
1. உள்ளாட்சித் தேர்தல் :
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வார்டு வாரியாக மக்களைச் சந்தித்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான களப்பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2. ஏரியா சபைக் கூட்டங்கள்:
கிராமசபைகள் மேம்படவும் நகரங்களில் ஏரியாசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதற்கும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்திருக்கவேண்டிய ஏரியா சபைகள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. அடுத்து, டிசம்பர் 10 அன்று நடத்தப்பட வேண்டிய ஏரியாசபைக் கூட்டங்களை முறையான முன்னறிவிப்போடு நடத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 10 அன்று நடைபெறவுள்ள ஏரியா சபைக் கூட்டங்களில் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரவர் வார்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3. மழை நிவாரணப்பணிகள் :
கஜா புயல், சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டார். தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது நமது நிர்வாகிகள் உடனடியாக நிவாரணப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
4. தலைவர் திரு.கமல்ஹாசன் பிறந்தநாள்:
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர். திரு. கமல்ஹாசன் M. P.. அவர்கள் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று தமிழகமெங்கும் இரத்த தானம், உடல்தானம், மரம் நடுதல், கல்விசார் பணிகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் செய்து கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாகச் செயல்படுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
நன்றி,
ஊடகப் பிரிவு
#KamalHaasan
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்
கோவிலம்பாக்கத்தில், காஞ்சி மண்டல விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மூன்றாம் ஆண்டு கால்பந்தாட்டப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.
காஞ்சி மண்டல அமைப்பாளர் திரு.ரவி தேஜா அவர்கள் இத்தொடருக்கான ஏற்பாடுகளைச் செய்து நேர்த்தியாக ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் திரு. E.T. அரவிந்த்ராஜ் @ET_Aravindraj, சென்னை மண்டல அமைப்பாளர் திரு. R. அரவிந்தன் மற்றும் மதுரை மண்டல அமைப்பாளர் திரு. கார்த்தி கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றியதோடு, பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#SportsDevelopment
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை-பொதுக்குழுக் கூட்டம்
நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
உயிரே உறவே தமிழே!
வணக்கம்!
நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் இன்றைய நாளில் (24-10-2026) பேரவையை ஒருங்கிணைத்து வழிநடத்திடும் நிர்வாகிகள், இணைப்புத் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.
தொழில்கள் முன்னேற்றம் அடைந்திட; தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகள் காத்திட; மக்கள் நீதி மய்யமும், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையும் என்றென்றும் குரல்கொடுக்கும் - களத்தில் போராடுமென உறுதியேற்போம். மேலும் பல்வேறு தொழிற்பிரிவு சார்ந்த தொழிற்சங்கங்களை நம்மவர் பேரவையில் இணைத்துக்கொண்டு கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றுவோம்!
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!
தோழமையுடன்,
கமல் ஹாசன் @ikamalhaasan
தலைவர் - மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#NTSP
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,
மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் @ikamalhaasan மறைந்த இசையமைப்பாளர் தேவா வின் உடலுக்கு
நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#RIPDeva
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted

எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்கும் மாண்புமிகு திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ,
மாநிலங்களவை உறுப்பினரமான திரு.கமல்ஹாசன் எம்பி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
@ikamalhaasan @rajendraarlekar
@lokbhavan_tn
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்கும் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆளுநர் பதவி ஆழமான அரசியலமைப்புப் பொறுப்பைச் சுமக்கிறது. அரசியலமைப்பைக் காப்பது, மக்கள் தந்த தீர்ப்பை மதிப்பது, ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பாகத் திகழ்வது ஆகியவை ஆளுநரின் அடிப்படைக் கடமைகள்.
திரு. அர்லேகர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக விளங்குவார் என நம்புகிறேன். அந்தப் பாலத்தின் வழியே தமிழ்நாட்டின் குரல் ஒலிக்க வேண்டும்; தமிழ் மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் பதவிக்காலமாக இது அமைய வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்நோக்குகிறது.
‘வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்’ - என்கிறார் வள்ளுவர்.
வெற்றி தருவது அதிகாரம் அல்ல; நடுவுநிலைமை தவறாத நேர்மையே. அந்த நேர்மையோடு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன்.
புதிய அத்தியாயம் தொடங்கட்டும்.
@rajendraarlekar @lokbhavan_tn
இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்த இரண்டு சிறுத்தைகள்..
ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள்
வித்யா ராம்ராஜ் மற்றும் ராஜேஸ் ரமேஷ் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#Asiangames
#VithyaRamaraj
#RajeshRamesh
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்!

He made the baritone iconic, the pause dramatic, and the raised eyebrow a plot twist. Amit Ji can make even a simple “Deviyon aur Sajjano” sound like a blockbuster opening. The man has always been in a league of his own.
Happy Birthday, Angry Young Man! @SrBachchan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்!
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் நவிபிள்ளை @NaviPillay1 அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life.
From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law.
What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere.
சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!

திரு. மஸ்க் @elonmusk அவர்களே, ஆம், எந்த ஒரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி.
செயற்கைக்கோள் இணையச் சேவையில் போட்டியை இந்தியா வரவேற்க வேண்டும். இந்திய நிறுவனமோ வெளிநாட்டு நிறுவனமோ, தொலைதூரப் பகுதிகளில் வாழும் கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற, கட்டுப்படியான விலையில் சேவை தருபவர் யாரோ, அவர்களுக்கு இடம் இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் இணைய வசதியும் மலிவாகக் கிடைக்க வேண்டும். அதிகச் சந்தாக் கட்டணமும் கருவிகளின் விலையும், சாதாரணக் குடும்பங்களுக்கு இதை எட்டாக்கனியாக்கிவிடும் அபாயம் உண்டு. இண்டர்நெட் இணைப்பு டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வேண்டும். புதிய இடைவெளியை உருவாக்கக் கூடாது.
எங்கள் நெட்வொர்க்குகளும் அலைக்கற்றையும் (spectrum) வெறும் வணிகச் சொத்துகள் அல்ல. அவை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட உத்திசார் கட்டமைப்புகள் என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை.
ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலனை வைத்தே முடிவுகளை எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்புவாதத்தைக் கடைப்பிடித்துக்கொண்டு, மற்றவர்களுக்குத் தடையற்ற சந்தை பற்றிப் போதிக்க முடியாது. இந்தியா தன் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க நடவடிக்கை எடுப்பது போலவே, அமெரிக்காவும் தன் உள்நாட்டுத் தொழிலைக் காக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவே நிறுவனத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தனக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் மற்றவர்களிடம் சமவாய்ப்பைக் கோர முடியாது.
ஒரு ஜனநாயக நாடாக, எங்கள் பலங்களையும் குறைகளையும் இந்தியர்களாகிய நாங்களே எங்களுக்குள் விவாதிப்போம், கேள்வி கேட்போம், சரிசெய்வோம்.
கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுசேர்க்கும் இந்தியாவின் பாரத்நெட் (BharatNet) திட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சிஏஜி-யின் 2026 தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியபடி, இந்தத் திட்டம் தன் அசல் நோக்கங்களை அடைய ஏன் தடுமாறுகிறது என்று நாங்கள் கேள்வி கேட்போம். ₹39,888 கோடி செலவழித்த பிறகும், சேவைக்குத் தயாரான கிராமப் பஞ்சாயத்துகளில் 33.2% மட்டுமே ஏன் செயல்பட்டன? அதே நேரத்தில், இணையத் தரவை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக்கி, கோடிக்கணக்கானவர்களை இண்டர்நெட் சேவைக்குள் கொண்டுவந்த எங்கள் தொலைத்தொடர்புத் துறையையும் அதன் ஒழுங்குமுறைகளையும் பாராட்டவும் எங்களுக்குத் தெரியும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருடைய காலனியும் அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் எதிர்காலத்தை இந்திய மக்களாகிய நாங்களே தீர்மானிப்போம். மேற்கத்திய சுயநலச் சக்திகளோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ, எந்தக் கோடீஸ்வரருமோ அதைத் தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி.
@ikamalhaasan
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#elon_musk
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
முன்னாள் அட்டார்னி ஜெனரல் திரு.பராசரன் அவர்களின் 100 வது பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#Kamalhaasan_MP
#parasaran100
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல்.
எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.
மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன்.
100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள்.
அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள்.
உங்கள்
அன்பு
கமல்
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல்.
எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.
மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன்.
100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள்.
அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள்.
உங்கள்
அன்பு
கமல்
India's conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover.
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP @ikamalhaasan on @TheEconomist's patronising take on India's wildlife conservation.
#ProjectCheetah #IndiaConservation
The patronising tone of this article by @TheEconomist is striking, and its colonial lens is hard to ignore. It is deeply offensive that a British publication should lecture India on conservation when British colonial rule saw our lions and tigers hunted to the brink of extinction. Today, India is bringing them back.
Since ancient times Indians have understood that humans and animals can share a landscape. Tamil Nadu’s Jallikattu is one living expression of that ancient harmony. These achievements deserve to be celebrated and championed, not viewed through a patronising colonial lens.
India’s Project Cheetah has gone from an audacious idea to 60 cheetahs, 41 born in India. There were initial setbacks, including adult deaths and cub mortality, but the Indian Government persevered, learnt and adapted. It is an extraordinary moment of genuine national pride: India has achieved the world’s first intercontinental translocation of a large carnivore. India has also created the International Big Cat Alliance to take this conservation experience to the world.
Across India, tigers and Asiatic lions are recovering; the Great Indian Bustard in Rajasthan is being returned to the wild; snow leopards in Himachal Pradesh, Nilgiri Tahr and dugongs in Tamil Nadu, and rhinos and red pandas in the North east are being protected and their populations restored. India’s conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover that smacks of racism.