தஞ்சை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில், த.வெ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது.
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் கலந்து கொண்டோம்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், தஞ்சை பொறுப்பு மேயர், மாநகர - ஒன்றிய - பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று (29-10-2026) என்னுடைய ஏற்பாட்டில் ZOHO நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (CSR fund)
ரூ.8365000/- (ரூபாய் என்பத்து மூன்று லட்சத்து அறுபத்தையாயிரம்) மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் ZOHO நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் சிவாஜி நகர் மற்றும் ஆபிரகாம் பண்டிதர் நகர் ரயில்வே சுரங்கப்பாதைகளை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டோம்.
மாண்புமிகு கழகத் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராஜா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🖤❤️💐
@dmk_raja
தஞ்சாவூர் அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மன்றம் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டோம்.
Murasoli Thanjai retweeted
கழக மறுசீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்.
கழகத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையிலான கழக மறுசீரமைப்புக் குழுவுடன் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. குழுவின் சார்பில் திரு. சக்கரபாணி எம்.எல்.ஏ., திருமதி. தமிழரசி ரவிக்குமார்,திரு. முரசொலி எம்.பி., திரு. எஸ்.கே.பி. கருணா, திரு. இ. பரந்தாமன் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களைக் கேட்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் PPT வாயிலாக அணியின் செயல்பாடுகள், நிர்வாகச் சிக்கல்கள், சவால்கள், நெருக்கடிகள் குறித்து விளக்கினார்.
இக்கூட்டத்தில் அணியின் மாநிலச் செயலாளர், இணை செயலாளர், ஆலோசகர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!
#RajaRajaChola #Cholas
சுயமரியாதை சுடர், தஞ்சை பெரியார், முன்னாள் அமைச்சர் ஐயா மன்னை அவர்களின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.எஸ்.விஜயன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.தலையாமங்கலம் பாலு, மாவட்ட அவைத் தலைவர் திரு.தன்ராஜ், நகர செயலாளர் திரு.வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் திரு.மன்னை சோழராஜன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மு.காந்தி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ராமச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - சோனா பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதலில் (Triple jump) வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
இன்று அவரை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கவியரசு, திரு.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
09.10.2026
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்,
மேலவெளி ஊராட்சி - ஜெபமாலைபுரம்
தூய ஜெபமாலை ஆலயம் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட போது.
Murasoli Thanjai retweeted
த.வெ.க. அரசு வாய் மூடி கைகட்டி இருப்பதால் இந்தி திணிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையைச் சொல்லக் கூட பயப்படும் இந்த டம்மி சிஎம் அவர்களுக்குப் பதவியோடு கேடா?
#TVKFailsTN
தஞ்சாவூர் ரயில் நிலைய நுழைவு வாயிலில், பெரிய கோயில் கோபுரத்திற்கு முன்பாக இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
உடனடியாக இந்தியில் வைக்கப்பட்ட பெயர் பலகையை ரயில்வே துறை அதிகாரிகள் அகற்றினர்.
இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.து.செல்வம், திரு.டி.கே.ஜி.நீலமேகம் Ex.MLA, திரு.கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA, மாநகரச் செயலாளர் திரு.சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் -2026 கலந்து கொண்டோம்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தளவாய்பட்டனம் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பு குறித்து தஞ்சை மத்திய மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி தளவாய்பட்டனம் ஊராட்சியில் இன்று கழக நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்.





























































