
#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ https://www.instagram
perambalur
Joined May 2018
- Tweets64.2K
- Following7.9K
- Followers8.9K
- Likes158K
Pinned Tweet
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
ச்சை..!! அடிச்சு கொட்டுன மழைக்கு, என்னா குளுரு குளுருதுடா சாமி...!! எந்திரிப்போமா வேண்டாமா.?! 😏
#பெரம்பலூர்_மழை 🌧 🌦 🌂
திடீர் அஜித் ரசிகர்கள் அரசியல் கட்சிகள்.
தனுஷ் அரசியல் பிரவேசம்.
த்ரிஷா ரோடு ஷோ....!!! இன்னும்...
வேற...வேற...?!
💙முகவரி🎙முத்து💙 retweeted
“புன்னகைக்கு நேரம் ஒதுக்கு”
தன்னுடைய பாடக அனுபவத்தில் மிகக் கஷ்டமான பாட்டாக சரண் குறிப்பிட்டது இந்தப் பாடலைத் தான்.
இந்தப் பாடலுக்கு சரணைத் தேர்ந்தெடுக்க ஏதும் ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா?
என்ற கேள்வியை “தேனிசைத் தென்றல்” தேவா கடந்த ஆண்டு சிட்னியில் நிகழ்த்திய இசை நிகழ்வுக்கு முன்னதான ஊடகர் சந்திப்பில் கேட்டேன்.
அப்போது அருகே இருந்த சரண் என் கூற்றை ஆமோதித்து,
“இந்த மாதிரிப் பாடல்களை எனக்குக் கொடுத்து, என் மேல் நம்பிக்கை வச்ச தேவா சாருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கிறேன்”
என்று தேவாவை நன்றி பாராட்டினார்.
“காதல் சடுகுடு” (அலைபாயுதே) பாடலை ரஹ்மான் சார் இசையில் பாடிவிட்டேன், இனி வாய்ப்புகள் குவியப் போகுது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நேரத்தில் இந்த “புன்னகைக்கு நேரம் ஒதுக்கு” பாடல் வந்தது என்று ஒரு பேட்டியில் எஸ்.பி.சரண் சொல்லி இருப்பார்.
மிகுந்த இசை ரசனையுள்ள இயக்குநர் வஸந்த் முன்பே கவிதாலயாவுக்காக “நீ பாதி நான் பாதி” படத்தை இயக்கியவர் பல்லாண்டுகள் கழித்து “அப்பு” படத்தோடு இணைந்தார்.
ஆசை, நேருக்கு நேர் படங்கள் தேவா - வஸந்த் வெற்றிக் கூட்டணியைப் பறை சாற்றும். அண்ணாமலை பாடல் பதிவு இயக்குநர் வஸந்த் உடன் தான் செய்தது என்று தேவா பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ரெக்கை கட்டி பாடல் தன்னுடன் என்றார் சுரேஷ் கிருஷ்ணா.
“புன்னகைக்கு நேரம் ஒதுக்கு”
youtu.be/HbaP-6PHgpg?si=hZyd…
சரண் உடன் சுக்விந்தர் சிங், அனுபமா இணைந்து பாடிய அட்டகாஷ் பாட்டு.
இன்னொரு பக்கம் சங்கர் மகாதேவனும், உன்னி கிருஷ்ணனும் ஜோடி போட்டு
“வாடா வா”
youtu.be/zQFfRLpRKyQ?si=QrzO…
என்று ரகளையான இன்னொன்று.
இதெல்லாம் வானொலியில் CD தேயத் தேய ஒலிபரப்பியது.
உன்னிகிருஷ்ணன், ஷாலினி ஜோடி குரல்கள் “இடம் தருவாயா”
youtu.be/FIp3Wc7_TIA?si=gU25…
ஹரிணி, ஹரிஹரன் கூட்டணியில்
“நினைத்தால் நெஞ்சுக்குழி”
youtu.be/5rNoPjcwTpI?si=blIu…
ஹரிஹரன் & அனுராதா ஶ்ரீராம் தந்த
“கொய்லா”
youtu.be/6j3KaNbjM1o?si=IfuF…
என்று இந்த தேவா , வைரமுத்து, வஸந்த் வெற்றிக் கூட்டணியை மீண்டும் நிரூபித்தது.
26 வருடங்களுக்கு முன் மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு இடம் மாறும் சூழல் நேர்ந்த போது பிரிய மனமில்லாமல் விடைபெற்ற காலத்தில், Carnegie என்ற இடத்தில் புது இந்திய மளிகைக் கடையில் இந்த இசைப் பேழையை வாங்கினேன்.
26 வருடங்களாக என் பொக்கிஷங்களில் ஒன்றாக.
கானா பிரபா
24.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
அவர் ஒரு அறிமுக இயக்குநர்
இவர் ஒரு அறிமுகப் பாடகர்
இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது.
அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர்.
இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த, “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற
“உன்ன நான் தொட்டதுக்கு”
youtu.be/vz3I-8kMk10?si=YQzr…
பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது.
இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது
youtu.be/eap91tjwFQI?si=Vl7e…
பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது.
பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும் புகழ், இருவருக்கும் மறுவாழ்வு அளித்தது வரலாறு.
வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர்.
உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார்.
அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார்.
தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம். அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார்.
அது சரி
யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி?
அதுவும் இவர் தான்.
“ வா அருகில் வா” திரைப்படத்தில்
சாணக்யா இசையில்
இதயக் கோயிலில்
youtu.be/-7_6Wk28kAs?si=Jk03…
பொன்னுமணி பூச்சரமே
youtu.be/-VchU84LUqw?si=qP0g…
ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார்.
தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே,
அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன்
youtu.be/1Mm7T6_lus8?si=6Ozy…
மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்
youtu.be/NHuh1EoSrAE?si=M6hA…
வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல்,
அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே)
youtu.be/I59WC79Cfrs?si=XsH0…
மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில்
ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை.
“அறிமுகம் கிருஷ்ணராஜ்”
என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது.
தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது.
பிறகென்ன ஏறுமுகம் தான்.
ராஜன் சக்ரவர்த்தி என்று
ரஜினி புகழ் பாடல்கள்
youtu.be/bRed4MvIV2E?si=3nm2…
என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா?
“நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே.
கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து
தேவா இசையில்
“உன்னருகே நான் இருந்தால்”
youtu.be/xranbNagWoU?si=m4FA…
இதயம் இதயம் இணைகிறதே
youtu.be/SVT_HaaVyA4?si=JBtf…
“ஜனவரி நிலவே நலம் தானா”
youtu.be/8snzPlRDKjc?si=_6rI…
யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”
youtu.be/nXIU8aiB-NM?si=_tPD…
“ஐயய்யோ”
youtu.be/uS8Z4nLJ53I?si=O06j…
இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம் “நீ பார்த்துட்டுப் போனாலும்”
youtu.be/DsWdEBZf4Fk?si=PJYU…
பாடல் தான் மனசுக்குள் ஓடியது.
கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார்.
தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது.
சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.
எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.
கானா பிரபா
23.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
பாடகர் கிருஷ்ணராஜ் ஐ சில மாதங்களுக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேசியிருந்தேன்.
ஈழத்தமிழர் என்று அறிந்ததும்
“அட எங்க ஆள்” என்று அவர் தனக்கு நெருக்கமாக என்னை வைத்துக் கொண்டதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன்.
இசையமைப்பாளர் ராமானுஜம் அவர்களிடம் கிருஷ்ணராஜ் உதவி இசையமைப்பாளராக இருந்த அனுபவத்தை அப்போது கேட்டேன்.
உங்களிடம் ஒரு விரிவான வானொலிப் பேட்டி செய்ய வேண்டும் என்றதும்,
“கண்டிப்பாக, மிக்க மகிழ்ச்சி” என்று விடை கொடுத்தார்.
நமக்கு நெருக்கமான நல்ல மனிதர்கள் ஏன் என்று இப்படித் திடீரென்று மறைகிறார்கள் என்று இன்றும் என்னுள் கேட்டேன்.
மன்னிப்பவன் தான் மனிதன்
மன்னித்து
மறப்பவன் மனித தெய்வம் ❤️
youtu.be/EX5ZS132Z4k?si=DzBk…
ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தப் பாட்டு. பாடகர் கிருஷ்ணராஜ் தன் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் நிகழ்வைக் கூறிப் பாடுவதை இங்கு பகிரும் காணொளியில் கேட்கலாம்.
தனிப்பட்ட ரீதியில் என்னுடைய சுபாவம் என்னவெனில் ஒருவர் ஏற்படுத்திய மனக்காயத்தைப் பொறுத்தே மன்னிப்பைக் கொடுப்பேன். ஒருவர் விளைவிக்கும் கஷ்டத்தால் வீணான மன உளைச்சல் வரும் போது அதனால் தேவையற்ற விளக்க நியாயங்களைப் பேசுவதும், விதண்டாவாதம் புரிவதிலும் எங்கள் பெறுமதியான நேரத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறோம். அப்படியானவருக்கு என் அகராதியில் மன்னிப்பே இல்லை. குறித்த நபரைப் புறக்கணிப்பது தான் அவருக்குக் கொடுக்கும் ஆகச் சிறந்த தண்டனை.
எங்கள் இனத்துக்குத் துரோகம் செய்தவர்களை எப்படி மன்னிக்க?
அதே சமயம் பிரச்சனை இரண்டு பக்கமும் இருக்கிறது அல்லது தவறான புரிதல் ஏற்பட்டதென்றால் நானே முன் சென்று அவர் வயதில் மூத்தவரோ அல்லது இளையவரோ மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் காலை வேளை இந்தப் பாடலை முதன் முறையாகக் கேட்ட போது நெக்குருகினேன். அரை மணி நேரம் வேறெந்தப் பாட்டையும் கேட்டுவிடாதபடி செய்து விட்டது. உள் மன விசாரணையும் செய்து பார்த்தது.
குறித்த மதத்துக்கான பாடலன்றிப் பொதுவில் ஏற்க வேண்டியது இப்பாட்டு.
சகோதரர் கிருஷ்ணராஜ் ஆன்மா சாந்தியடையட்டும்.
கானா பிரபா
22.10.2026
இசையை, இசை நுணுக்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு, (நான் குறிப்பிடுவது கர்நாடக சங்கீத இசையை பற்றி அல்ல.) இசையின் வேறுபாடுகள் புரியும். அது தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கும் தெரியும். இது தேவாவை புகழும் பதிவல்ல. இப்படி பேசி ராஜாவை அவமதிப்பது என்று பாமரனுக்கும் புரியும். So..🤫
இளையராஜா பற்றி கேட்டு கேட்டு புளித்துப் போன பல கதைகள் உண்டு.. கொஞ்சமும் அலுக்காமல் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க பலர் உண்டு.. அது எப்படி ஏன் நடக்கிறது..அதை நடத்துபவர்கள் யார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
அரை மணி நேரத்தில் 5 பாட்டு
ஒரே நாள்ல 5 -6 படம்..
ஒரே தீபாவளிக்கு 7 - 8 படம் அவர் இசைல ரிலீஸ் ..
இப்படி பல கதைகள் அவரைப் பற்றிச் சொல்வார்கள் அந்த கதைகளெல்லாம் உண்மைதான் என்றாலும் அவருக்கு நிகராகவே அதைவிட குறுகிய காலத்தில் பல சாதனைகளை செய்த தேவாவை பற்றி யாரும் கடந்த 25 ஆண்டுகளாக மருந்துக்கும் எவரும் பேசவில்லை.
ஒரே நாளில் ஏழு எட்டு படங்களுக்கு தேவாவும் இசையமைத்திருக்கிறார் அரை மணி நேரத்தில் ஐந்தாறு படங்களை தேவாவும் கம்போஸ் செய்திருக்கிறார் ஒரே தீபாவளிக்கு ஏழெட்டு படங்கள் தேவாவிற்கும் ரிலீஸ் ஆகி இருக்கின்றன..
எப்படி அவர் இசை அமைத்த 10-15 ஆண்டுகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார் தேவா.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் இசை உலகத்திற்கோ பத்திரிகைகளுக்கோ இசை விமர்சர்களுக்கோ எதுவுமே தெரியாது.
அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இளையராஜா மட்டுமே..
அவரை விட்டால் நேரடியாக ஏ ஆர் ரகுமானுக்கு ஜம்ப் ஆவார்கள்.
இடையில் சாதித்து காட்டிய தேவாவை கண்டு கொள்ளவே மாட்டார்கள் அல்லது திட்டமிட்டே புறக்கணிப்பார்கள்...
இந்த புறக்கணிப்பு பற்றி முன்பே நான் எழுதி இருக்கிறேன்..
தேவா பாடல்களை பாடுவதே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவமானம் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது.
ராஜ் டிவியில்மட்டும்தான் தேவாவை..
அதுவும் ஒரு கானா பாடல் நிகழ்ச்சியில் நடுவராக அழைத்தார்கள்.
அதற்குப் பிறகு சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தேவாவை எந்த டிவி சேனலும் மதித்ததே இல்லை
சமூக வலைத்தளம் குறிப்பாக முகநூல் பிரபலமான பிறகு அதில் சிவசங்கரன் சரவணன் போன்ற தேவாவின் ரசிகர்கள் எழுதிக் குவித்த பல கட்டுரைகளும் தேவாவை உண்மையிலேயே உள்வாங்கிய பல உண்மையான இசை ரசிகர்களும் அவரை பேச பேசத்தான் டிவி சேனல்களுக்கு புத்தியில் உரைத்து அவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் அவரது பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடவும் அனுமதித்தார்கள்.
இது நடக்க கிட்டத்தட்ட 20 - 25 ஆண்டுகள் ஆகியிருந்தன.
ஆம் நான் சப்த ஸ்வரங்கள் காலத்திலிருந்து சொல்கிறேன்.
ஒரு சிறுவன் "அண்ணா நகர் ஆண்டாளு" பாடலை ஆடிஷனில் பாடினான் என்பதற்காக அந்த சிறுவனை அழைத்து வந்த அவனது பாட்டியை தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளணர் ஏவி ரமணன் கடிந்து கொண்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட இசை தீண்டாமையில் இருந்து இப்போதாவது இசையுலகம் கொஞ்சம் விடுபட்டிருக்கிறது என்பது ஆறுதல் தான் என்றாலும்...
அது மீண்டும் மற்றுமொரு புதிய தீண்டாமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இப்போது பலருக்கு புரிந்திருக்கும்.
தேவாவை பொறுத்தவரை..இத்தனை ஆண்டு கால புறக்கணிப்பை இந்த மனிதர் எப்படி தாங்கினார் என்பதை நினைத்து பார்த்தால் மனம் உண்மையிலேயே வலிக்கிறது...
கதிர் ஆர் எஸ்
21/10/26
💙முகவரி🎙முத்து💙 retweeted
90 களில் ஒரு வித்தியாசமான கூட்டணி நிகழ்ந்தது. இயக்குநர் P.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார். கே.பாக்யராஜை தன்னுடைய நாயகனாக்கி இயக்குவார் P.வாசு.
இந்த இரண்டு வித்தியாசமான கூட்டணியிலும் பொதுவாக இருந்த இருவரில் ஒருவர் குஷ்பு, இன்னொருவர் தேவா.
செம்பட்டுப்பூவே
வெண்மொட்டுத்தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே..
பொன் மொட்டு மானே
பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே..
youtu.be/AScsdiUGgUY?si=ePW9…
இலங்கையின் பண்பலை வானொலிகளில் பொற்காலத்தில் அந்தந்த வானொலி நேயர்கள் மட்டுமல்ல, வானொலிப் படைப்பாளர்களாக இருந்தவர்களுக்கும் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உச்சி குளிர்ந்து விடும், கண்கள் பூத்து விடும்.
“புருஷ லட்சணம்” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் தேனிசைத் தென்றல் தேவா இசையில் SPB முழுமையாக ஆக்கிரமித்து, சின்னக் குயிலுக்கும் இடம் கொடுத்த அற்புதமான பாடல்.
புருஷ லட்சணம் படம் பி.வாசு கதையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஜெயராம் & குஷ்பு அந்தக் காலத்தில் ஜோடி போட்டு நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று.
“ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்”
youtu.be/-P9xW2c0owc?si=RdPO…
பாடலில் அம்மன் பெயர்களை நிரலிட்டு எழுதிய
கவிஞர் காளிதாசனை மறக்காமல் இன்னும் வைத்திருக்கிறது.
இப்படிப் பக்தி மயமான சித்ராவுக்கு இன்னொரு ரகளையான பாட்டாக
“அண்ணாசாலை”
ஈழத்தில் இருந்து இந்தப் பாடலைக் கேட்ட போது சென்னையில் ஃபேமசான றோட்டாம் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். 😁
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா”
youtu.be/9Sd3l945lBE?si=WHRs…
எஸ்பிபி & சித்ரா கூட்டணியில் அற்புதங்களில் ஒன்று. இந்தப் படம் தெலுங்குக்குப் போன போது இந்த மெட்டையும் தேவா பயன்படுத்திக் கொண்டார், ஆனால் “செம்பட்டுப் பூவே” பாடலுக்குப் பதில் வேறொன்று. ஆகவே செம்பட்டு நமக்கு மட்டுமேயானது என்று பெருமையடித்துக் கொள்ளலாம் 😊
ஜெயராம், குஷ்பு பற்றிச் சொல்லும் போது அவர்கள் ஜோடி கட்டிய இன்னொரு படமான “மனசு ரெண்டும் புதுசு” படம் கூட மலையாள இயக்குநர் லோகிததாஸின் மூலகதையை எடுத்து அமிர்தம் இயக்கியது.
இதில் “சோளிக்கே பீச்சே”
youtu.be/K0Ei4lHF6aM?si=Ehi6…
பாடலைத் தமிழுக்குத் தருவித்திருப்பார் தேவா.
“சொர்க்கத்தில் அம்மா”
இந்தப் பெயரில் தான் முதலில் உருவானது பி.வாசு கதை, திரைக்கதை, வசனம் எழுத, திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடித்த “அம்மா வந்தாச்சு”
“நந்தினி நந்தினி ஓ நந்தினி”
youtu.be/wZ_XzaEw0LI?si=EA8p…
மனோகரமான பாட்டு ❤️
“உனக்கொரு தாயிருக்கா”
youtu.be/6poxe3BY-Ak?si=ZgYc…
சோக ராகம் பாடும்.
“தினத்தந்தி பேப்பரில”
youtu.be/M6_y3gxZLTY?si=gxqA…
அந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஒன்று.
“இது உனக்காகப் பாடும் ராகம்”
youtu.be/2UUBcfsalsE?si=60S5…
SPB, சுசீலாம்மா, சித்ரா இணைந்த வித்தியாசமான பாட்டு.
“அம்மா வந்தாச்சு” படத்தை கே.பாக்யராஜின் பூர்ணிமா தயாரிப்பில், பாக்யராஜ், குஷ்பு, ஶ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார்கள்.
பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுத, தேனிசைத் தென்றல் தேவா இன்னிசை வழங்கினார்.
இந்த மாதிரி வித்தியாசமான இயக்குநர் கூட்டணி என்று சொல்லும் போது, இயக்குநர் அகத்தியன் கதையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “பொண்டாட்டி ராஜ்யம்” குறிப்பிட வேண்டிய ஒன்று.
“அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே”
youtu.be/D_vXZ2SHmUU?si=SGt_…
என்னவொரு தேனிசைத் தென்றல்
“பொண்டாட்டி ராஜ்ஜியம் தான் நடக்குது”
youtu.be/HTNnr_Cg7nQ?si=iD2D…
SPB மிரட்டுவார் இப்படி “தண்டால் எடுங்கடா”
youtu.be/IKwZju7NqAA?si=DU9r…
முன்பே “அதிகாலை சுபவேளை” படத்துக்குக் கொடுத்து அங்கே பயன்படாமல், அதாவது அந்தப் படமே வராமல் இடம் மாறிய
“ராகம் ஒன்று சுகமானது”
youtu.be/0QaJCsolfFg?si=QQ0G…
கேட்டால் சொர்க்க லோகமானது ❤️
சரவணனைக் கச்சிதமான குடும்பத் தலைவராகக் காட்டி ஜனரஞ்சக அந்தஸ்துக் கொடுத்தது “பொண்டாட்டி ராஜ்ஜியம்”
பின்னாளில் சரவணன் இயக்குநர் அகத்தியனிடம் வேண்டி வாங்கிக் கொண்ட கதை “சந்தோஷம்” ஆனது.
அட இங்கேயும் தேனிசைத் தென்றல் தேவா தான்.
இந்தப் படத்தில்
“சாமியே ஐயப்பா”
youtu.be/gaKvxng8JXg?si=g8fa…
தேவா குழுவினர் பாடும் பாடலும்,
சேதுமாதவா உன்னைச் சேர்த்து அணைக்கவா
youtu.be/E8pQMjo31sA?si=3b_3…
உன்னிகிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம் குரல்களிலும் இனிக்கும்.
கானா பிரபா
22.10.2026
VJB:
அடேய்..தம்பி. நான் தான்டா கடந்த 5 வருஷமா இந்த தொகுதிக்கு MLA. அப்புறம் எப்படிடா தம்பி இருண்டு போயி இருந்திருக்கும்.!?
ரசிக mla:
ஆட்சி...DMK தானே.?! அவங்களை வச்சு சொன்னேன்ணே.!!
Vjb: 🙄🙄🙄🙃🙃🙃
Watch | ”விராலிமலை தொகுதி கடந்த 5 ஆண்டுகளாக இருண்டு கிடந்தது..”
2011 முதல் 16 ஆண்டுகள் அங்கு எம்.எல்.ஏ. ஆக இருந்த விஜய பாஸ்கர் முன்னிலையில் அமைச்சர் பர்வேஸ் பேச்சு
#SunNews | #TVK | #ADMK | #Viralimalai
தியேட்டர் தெறிக்காதுடா...மாங்கா மண்டையா.! நாங்க தெறிச்சு ஓடிடுவோம்.
ஜெயிலர்-3-ல் என்னை நடிக்க வைத்தால் தியேட்டர் தெறிக்கும்.. மூர்த்திக்கு டஃப் கொடுத்து வசூலை அள்ளும்.. நடித்துக் காட்டி பேட்டி கொடுத்த வாட்டர்மெலன் ஸ்டார் எனக் கூறப்படும் திவாகர்..!
Jailer 2 | Watermelon Star | Nelson
#Newstamil24x7 #Madurai #DrDiwakar
💙முகவரி🎙முத்து💙 retweeted
சத்ய சாய் ஆயுத பூஜை விஜயதசமி ஆஃபர் Sisko Brand Jazz model Bluetooth Speaker 20w
Good sound and good bass
normal price 900rs but now just 550rs delivery all over Tamil Nadu available.
For this delivery charges 50rs.
For more details
#SathyaSaiCommunication
இப்போ delete பண்ணி என்ன பண்றது...? உலகம் பூராம் download பண்ணிட்டானுங்களே அண்ணா...!!😪😪😪
This quoted post is unavailable.
அவரு இறந்து போனத வச்சு, இவரு தான் இந்த பாட்டை போட்டாருன்னு உங்கள்ல எத்தனை பேருக்குத் தெரியும்னு posting போட்டுக்கிட்டே இருக்கானுங்கப்பா.! படுவா..அவரு இருக்கும் போது, சொல்லி இருந்தா கூட, இன்னும் அதிகமா சொல்லி, சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு..மனுஷன்.!
2022-ல் ஆயுத பூஜைக்கு பாடியது. 🙂
தேவா அவர்களுடைய இந்த பாடல் இல்லாமல் ஆயுத பூஜை நிறைவடையாது. Miss you #Deva Sir.💔🙏🙏🙏
#MuthuSinger🎙
#தேனிசை_தென்றல் 💔





















