தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012) header
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012) profile picture

தமிழக வெற்றிக் கழகம் செஞ்சி நகர கழகச் செயலாளர் 🌟🔥❤️ ​🔥

Gingee, India
Joined February 2013
Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)Photo by தளபதிநசுருதீன் த.வெ.க🌟 (@nasuru2012)
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (14.11.2026) சனிக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாட்டில் கலந்து கொண்டார்.! இம்மாநாட்டில் ஊராட்சி செயலாளர்களின் பணிச்சூழல், நலன் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர்களைத் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் (TAPS) திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தின் மூலம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்குத் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், உங்களது அனைத்து கோரிக்கைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் MP அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் A.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் V.வேல்முருகன் அவர்கள், AITUC தேசிய செயலாளர் வகிதா நிஜாம் அவர்கள், TNGEU மாநிலத் தலைவர் இரா. சத்தியமூர்த்தி அவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாநிலப் பொதுச்செயலாளர் த.லெனின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
3
39
1
182
2,272
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (12.11.2026) வியாழக்கிழமை, திருச்சியில் இன்று மற்றும் நாளை (12.11.2026 மற்றும் 13.11.2026) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.! இம்மாநாட்டில் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் பேசியபோது, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீரை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 1.25 கோடி ஊரக வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் நோக்கில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் 21,258 தனி கிராமக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 1.86 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டங்களுக்காக ரூ.18,123 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒன்றிய அரசின் பங்காக ரூ.9,025 கோடியும், தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.9,097 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1.25 கோடி ஊரக வீடுகளில் இதுவரை 1.15 கோடி வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 9,398 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊராட்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம், நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் குளோரின் கலந்த சுத்தமான குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மாதத்திற்கு இருமுறை சுத்தம் செய்யப்படுவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக குடிநீர் ஆதாரங்களின் தரமும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில், ‘ஊராட்சி மணி’ கட்டணமில்லா தொலைபேசி சேவை (155340), ‘புனல்’ இணையதளம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் விநியோகக் கண்காணிப்புச் செயலி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2028 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் 02.06.2026 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவில் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்" என்று மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.
4
32
1
150
2,298
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (11.11.2026) புதன்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் - ஐஷ்வர்யா அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.V.சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. K.தென்னரசு அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.J.முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமை கொறடா திரு.R.சபரிநாதன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
11
98
2
1,407
173,170
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25
359
14
1,900
36,148
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05.11.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand , MLA அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II-ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன்படி, * அல்லியந்தல் ஊராட்சி: 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. * நரியம்பாடி ஊராட்சி: 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விரு அங்கன்வாடி மையக் கட்டிடங்களும் மொத்தம் ரூ.33.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்புதிய அங்கன்வாடி மையங்கள் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான அடிப்படை வசதிகளுடன் கூடிய சேவைகள் கிடைப்பதுடன், அவர்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகாலக் கல்வி மேம்படுவதற்கான சிறந்த சூழல் உருவாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
26
119
2,517
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
#CMVijay | தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை; பிரதமர் மேடையில் முதல்வர் விஜய்யின் உரை இரு மாநில மெட்ரோ, தமிழ் வழக்காடு மொழி, நதிநீர் இணைப்பு, பள்ளிக்கல்விக்கு ₹5,000 கோடி உள்ளிட்ட கோரிகைகளை முன்வைத்த முதல்வர் விஜய். #Vijay | #TVKVijay
20
1
78
1,598
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 1.00 மணி அளவில் மாருதி நகரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது வாகனப் பிரசாரம் பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. 1.மாருதி நகர் 2.உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு 3.காவல்நிலையம் சந்திப்பு 4.ஐந்து சாலை சந்திப்பு 5.மீனாட்சிபுரம் 6.குளத்துப்பாளையம் 7.கரையூர் 8.மூலனூர் 9.வஞ்சியம்மன் கோயில், காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் தாராபுரம் தொகுதி வாகனப் பிரசாரத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இந்தப் பிரசாரத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாகனப் பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, பிரசாரம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
75
875
12
2,617
176,029
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் விரும்பும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலைவர் அவர்களுக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்! மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்! தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே! இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவர் அவர்களின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன். @TVKVijayHQ
77
1,018
14
3,682
47,179
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
286
2,265
45
7,351
519,924
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
1
1
65
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
33
221
3,972
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay @CMOTamilnadu @TVKVijayHQ
836
3,607
262
18,269
506,413
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் #திரு_என்_ஆனந்த் @BussyAnand ஊரகவளர்ச்சி & நீர்வளத்துறை அவர்களின் வழிகாட்டுதலிலும் பாசமிகு அண்ணன் #திரு_விஜய்_R_பரணிபாலாஜி_BA_LLLLB @baranibalaaji மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் அவர்களின் தலைமையில் 1/4
3
3
18
420
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?. அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?. Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். #ஆபாசநிதி
239
2,744
64
8,145
197,791
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி, இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை (1/3)
5
112
704
14,646
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம். நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
976
8,219
483
23,243
1,853,761
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.
321
3,093
217
9,185
647,421
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள். ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது. இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! #CMJosephVijay‌
58
757
4
2,791
68,902
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது. மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன். #CMJosephVijay‌ #NationalDoctorsDay
166
1,556
12
6,649
246,845
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (Pipelines) திரு. பிஜு கோபிநாத், Head (Retail) South, Chennai திரு. என்.எஸ். செலுகர் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay‌
22
605
1
2,554
53,046