Jose Charles Martin (@sscharles) header
Jose Charles Martin (@sscharles) profile picture

MLA-Kamaraj Nagar,Puducherry President-Latchiya Jananayaka Katchi @ljk_puducherry|@ljktamilnadu_ Let’s build a glorious TN & Puducherry!

Chennai
Joined July 2009
Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)
தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஒரு தமிழனாக ஏற்கமுடியாது. தமிழகத்தில் இயங்கும் அனைத்து அஞ்சலகங்களிலும் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தருவதைப் பொறுப்பிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்! #jcm #ljk #tamilidentity #tamillanguage #cmotamilnadu
1
8
280
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாசத்திற்குரிய அண்ணனுமான திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #jcm #ljk #puducherry #seeman #birthdaywishes
9
179
5
824
3,993
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த தீபாவளித் திருநாளை அனைவரும் பாதுகாப்புடன் கொண்டாடி மகிழ்வோம். இந்த இனிய நன்னாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், நலமும் பெருகட்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #jcm #ljk #puducherry #diwaliwishes #safecelebrations
6
7
85
911
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும் நலமும் பெருகட்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து, குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும் இனிதே தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழுங்கள். #jcm #ljk #puducherry #diwalicelebration #diwaliwishes
5
5
39
607
தஞ்சையின் பெருமையையும், 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசின் வரலாற்றையும், தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளையும் நவீன Video Game மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் ‘Son of Thanjai’ முயற்சியை முன்னெடுக்கும் Ayelet Studio நிறுவனத்தின் நிறுவனர் திரு. ஆபிரகாம் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் வரலாறும் பெருமை, உலகெங்கும் அடுத்த தலைமுறையினரைச் சென்றடையட்டும்! #jcm #ljk #puducherry #sonofthanjai #tamilheritage
2
15
343
லட்சிய ஜனநாயக கட்சியின் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முக்கிய நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும், எனது பாசத்திற்குரிய புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட, மத்தாப்பூக்கள் பூத்திட, நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! #ljk #jcm #HappyDiwali #diwaliwishes #Puducherry
5
2
19
504
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான 'உலகநாயகன்' திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் ஆற்றலாலும் இந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் அவர். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து வாழ்வில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். #jcm #ljk #puducherry #kamalhaasan #birthdaywishes
1
8
302
நீரின்றி அமையாது உலகு, அதுபோல் என் வாழ்வின் வெற்றிக்குப் பின்னால் என் தாயின் அன்பும் ஆசீர்வாதமும் இன்றியமையாதவை. என் வாழ்வின் வழிகாட்டியாகவும், ஒவ்வொரு தருணத்திலும் எனக்குத் துணை நிற்கும் பலமாகவும் இருக்கும் எனது அன்புத் தாயார் திருமதி. லீமா ரோஸ் மார்டின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் எனக்குத் துணையாக இருக்கட்டும். என் வாழ்வின் எல்லா நாட்களிலும் உங்கள் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா...,! #jcm #puducherry #motherslove #birthdaywishes #HappyBirthdayAmma
6
5
53
1,025
கோவை - பெரியார் அறிவுலகத்தில், நூல்களை வழங்குவதற்காகவே போலியாக பதிப்பகங்கள் தொடங்கப்பட்டு, இல்லாத எழுத்தாளர்களின் பெயரில் ரூ.300 மதிப்புள்ள புத்தகங்கள் ரூ.1500 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதுவும் இலக்கியத் தரமின்றி, முழுக்க முழுக்கப் பிழைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல்செய்தவர் யார்? இப்புத்தகங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! #jcm #ljk #puducherry #anticorruption #cmotamilnadu
4
19
567
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக அரசு மானிய நிதி வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து, எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் தங்களது ஊதியத்திற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஆசிரியர்களும் ஊழியர்களும் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அரசு எவ்விதத் தாமதமுமின்றி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுகோள் விடுக்கிறேன். #ljk #jcm #Puducherry #TeachersProtest #salaryrelease
3
266
Jose Charles Martin retweeted
செங்குன்றம் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் எஸ்.ஐ. மீது கத்தியால் தாக்க முயன்ற இளைஞர். காவல் நிலையத்தின் வாசலிலேயே, சீருடையில் இருக்கும் ஒரு அதிகாரி மீதே தாக்குதல் நடத்தும் அளவிற்கு போதை ஆசாமிகளுக்கு துணிச்சல் வருகிறது என்றால் சட்டம்-ஒழுங்கு இந்த ஆட்சியில் எந்த லட்சணத்தில் இருக்கிறது? ​காவல்துறைக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானியனுக்கு யார் பாதுகாப்பு? சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வேளையிலும், மௌனம் காக்கும் ரீல் முதல்வர் @actorVijay நல்லா இருக்கு சார் மாற்றம்🤦 #பொய்க்கால்_குதிரை_அரசு
50
273
12
489
13,036
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன். #ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
10
94
4
697
16,266
புதுச்சேரியில் ஏழ்மை நிலையிலுள்ள முதியோர்களின் நலன் காப்பதில், மருத்துவ உதவிகளை வீடு தேடிக்கொண்டு சேர்ப்பதில், எங்களது மார்டின் அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். முதியோர் நலன் காப்போம்; காமராஜ் நகரை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவோம்! #LJK #jcm #Puducherry #elderlycare #martinfoundation
1
2
11
436
சென்னை கொரட்டூர் ஏரிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள நம் அழகிய பூநாரைகளின் வருகை பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும், தொழிற்சாலை எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரி நீர் மாசடைந்து வருவது கவலை அளிக்கிறது. பூநாரைகள் உள்ளிட்ட வலசைப் பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், கொரட்டூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை மாசுபாட்டிலிருந்து காக்கவும் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். #jcm #ljk #puducherry #wetlandconservation #birdprotection
1
4
204
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட ஆறு மாதக் குழந்தையின் உயிரைக் காக்க, சவாலான மருத்துவச் சிகிச்சையை அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொண்டு, அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். #jcm #ljk #puducherry #jipmer #medicalexcellence
2
11
344
தேடப்பட்டு வரும் செஞ்சி சிறுமி குறித்து துப்புக்கொடுத்த நாமக்கல் சத்துணவுக்கூட அமைப்பாளர் பவானி அவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கடுமையாக நடந்துகொண்ட சிபிசிஐடி காவலர் முத்துக்குமாரின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்புக்கொடுத்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டால், உண்மை தெரிந்த யாராவது இனி தகவலை சொல்ல முன்வருவார்களோ? இவர்களைப் போன்ற சிலரால் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் அவப்பெயர்.. காவல் துறையினர் எதேச்சதிகாரத்துடன் நடந்துகொள்ளும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்! #jcm #ljk #cmotamilnadu #WitnessProtection #CBCID
2
10
22
1,824
Wishing the undisputed King of Cricket, Virat Kohli, a very Happy Birthday. May you be blessed with a long life, good health, and continued success. My heartfelt wishes for many more remarkable achievements, historic milestones, and victories in the years ahead #viratkohli #HappyBirthdayViratKohli #KingKohli #CricketLegend #birthdaywishes
11
73
765
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, கோடிக்கணக்கான ரூபாயைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களின் ஊதியத்திற்காக வைக்கப்பட்டிருந்த இந்தப் பணம் பறிபோனதால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் உடனடியாகக் கண்டறிந்து, பணத்தை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன். #jcm #ljk #puducherry #cybercrime #financialsecurity
1
3
216
2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை மூலம் உலகிற்கே அணைகட்டுவதைக் கற்றுக்கொடுத்தவர்கள், தமிழர்கள். மொழி,நாகரிகம், வானியல் அறிவியல் எல்லாவற்றிலும் ஒரு காலத்தில் முன்னோடியாக இருந்த நாம் அப்பெருமைகளை இழந்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் தமிழர்களுடைய மாண்பை மீட்டெடுக்கணும் என லட்சிய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினேன். #jcm #ljk #tamilnadu #tamilheritage #TamilCivilization
1
3
14
313
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்திய ரிசர்வ் காவல் படை வரலாற்றில்,தொடர்ந்து 12 மாதங்கள் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாமல் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இத்தகைய பெருமையைச் சாத்தியப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைக்கும்; மத்திய ரிசர்வ் காவல் படைக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்! #jcm #ljk #puducherry #crpfachievement #nationalsecurity
1
6
258