Loganathan jayaraman retweeted
எத்தகைய நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல், நடுநிலையுடனும் நேர்மையுடனும் உண்மையை வெளிக்கொண்டு வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையும், உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. சமூகத்தின் குரலாகவும், மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வலிமையான கருவியாகவும் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.
Loganathan jayaraman retweeted
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண பெண்கள் குழந்தைகளுக்கு தவெக அரசு எப்படி பாதுகாப்பு வழங்கும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பேசவேண்டும் - தலைவர் @annamalai_k கேள்வி.
Loganathan jayaraman retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களின் கவனத்திற்கு,
காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்!
உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.
@CMOTamilnadu
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔
அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளும், இனிய மாற்றங்களும் மலரட்டும்.
அனைவரும் குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
1
51
Loganathan jayaraman retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
திருவள்ளூர் சட்டமன்ற கடம்பத்தூர் ஒன்றியம் முதுகூர் கிராமத்தில் WTL சேவகர் திரு சுகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பெண்கள் நலன் சிறப்பு மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது
1
60
Loganathan jayaraman retweeted
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
Loganathan jayaraman retweeted
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
Loganathan jayaraman retweeted
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.
அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.
Loganathan jayaraman retweeted
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி அன்னையைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் தொடங்கும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றியடையட்டும். இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், அனைவரின் வாழ்வில் வளமும், வெற்றியும் நிறைந்திடட்டும்.
நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளை அடைய இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.
திருத்தணி சட்ட மன்றம் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தன்னார்வலர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சகோதரர் சந்திரசேகர் மற்றும் பாஸ்கர் குழுவிற்கு வாழ்த்துக்கள்
3
153
Loganathan jayaraman retweeted
நமது @WTLFoundation அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு, அனைவரும் சமம் என்பதைக் கடந்து, அனைவரும் தலைவர்கள் என்பதே.
இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரின் உறுதுணையும், அர்ப்பணிப்பும் மிக அவசியம். புதிய தன்னார்வலர்களைத் தொடர்ந்து இணைத்து, எதிர்பார்ப்பில்லாத சமூகப் பணிகளின் மகத்துவத்தை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, சமூக மாற்றத்திற்கான இந்த மக்கள் இயக்கத்தை இன்னும் வலிமையாக்குவோம்.
Loganathan jayaraman retweeted
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
Loganathan jayaraman retweeted
பெருமதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது கனவுகளையும் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.
இந்த மாபெரும் நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போர்ப்படையான INA வின் மூத்த வீரர் ஐயா உயர்திரு.மாதவன் பிள்ளை அவர்கள், ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. K. ராமசாமி அவர்கள், கலாம் ஐயாவின் குடும்ப உறுப்பினர்கள் திரு. APJ ஜெய்னுலாபிதீன் மரைக்காயர் அவர்கள் மற்றும் APJMJ ஷேக் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான பாதையல்ல அறநெறி, நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துவதே இந்த மையத்தின் நோக்கம்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, அறிவும் அறமும் பொதுவாழ்வில் இணைந்து பயணிக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் தொடங்கப்படும் இந்த முயற்சி, நேர்மையான அரசியலையும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தையும் உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். (1/5)
Loganathan jayaraman retweeted
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
Loganathan jayaraman retweeted
நமது @WTLFoundation சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.
Loganathan jayaraman retweeted
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
ஆவடி சட்டமன்றம் திருவேற்காடு பகுதியில் WTL தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை கரையோரம் நடும் நிகழ்ச்சி மிக சிறப்பாக ஏற்பாடு செய்த சகோதரர் கணேசன் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏿
@annamalai_k
1
84
































