
Fan page of @actorvijay | #ThalapathyVijay | #TVKVijay | #தமிழகவெற்றிக்கழகம் | @tvkvijayhq | @cmotamilnadu
Chennai, India
Joined April 2010
- Tweets50.6K
- Following9
- Followers1.1M
- Likes4.9K
Actor Vijay Fans retweeted
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Actor Vijay Fans retweeted
ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல மூளையற்ற திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது.
ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு புத்தகக் கொள்முதல் ஆணையை தீயசக்தி திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 13/02/2026
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Actor Vijay Fans retweeted
நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்!
அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், 'பெரியார் அறிவுலகம்' என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு! யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார்.
ஆனால், அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்? இதோ, நம் கொங்கு மண்ணின் மைந்தரும், திருச்செங்கோட்டின் பெருமைமிகு எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களின் கூர்மையான பேனா முனை, அந்த மாயத்திரையைக் கிழித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!
அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத... முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம். கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்? முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் Party Fund ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
ஒருபுறம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பசப்பு வார்த்தைகளால் போலி முழக்கமிட்டுவிட்டு, மறுபுறம் தந்தை பெரியாரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில் போலி எழுத்தாளர்கள், போலிப் பதிப்பகங்கள் வழியே கொள்ளையடித்த திமுகவின் வஞ்சக முகம் இன்று நாறிப்போய்க் கிடக்கிறது. அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது. தந்தை பெரியார் பெயரில் புரட்டு வியாபாரம் நடத்திய அத்தனை சூத்திரதாரிகளையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Actor Vijay Fans retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!
அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Actor Vijay Fans retweeted
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார்.
அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம்.
இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலிக்கும் செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.
அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13.
அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று.
இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம்.
இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன.
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர்.
மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Actor Vijay Fans retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
Actor Vijay Fans retweeted
புதிய நூலகங்களுக்கான நூல் / மின்நூல் தேர்வுக் குழு (Selection Committee) - 2025
நூலகத்தில் இடம்பெறக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மற்றும் மின்நூல்களை ஐந்து வகை
பிரிவுகளில் தேர்ந்தெடுப்பதற்கு மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட நூல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.
1. முனைவர், ஜெ. ஜெயரஞ்சன், பேராசிரியர் (பொருளாதாரம்) - மாநில திட்டக்குழு துணைத் தலைவர்
2. முனைவர். சுல்தான் அஹமத் இஸ்மாயில் - மாநில திட்டக்குழு உறுப்பினர்
3. முனைவர். கு. அரசேந்திரன் - முதன்மை ஆசிரியர்
4. முனைவர் ராமு மணிவண்ணன் - பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
5. முனைவர். கே. ராஜன் - கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்
6. முனைவர். E. முருகன் FRSC, FASCh, - ஆராய்ச்சித் துறை முதல்வர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
7. முனைவர். B. சந்திர மோகன் - பேராசிரியர்
8. திரு. S.பாலபாரதி - எழுத்தாளர் & பாலபுரஸ்கார் விருதாளர்
9. முனைவர். விஜய பாஸ்கர்
10. தலைவர்/இயக்குநர்/பேராசிரியர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி
11. முனைவர். A.R. வெங்கடாசலபதி, பேராசிரியர்|
12. திரு. R சுதன், IAS (Retd), உறுப்பினர் செயலாளர், மாதிரி பள்ளிகள், கல்வித் துறை.
13. திரு. M.P.விஜயகுமார், தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்.
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
Actor Vijay Fans retweeted
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
Actor Vijay Fans retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model
Actor Vijay Fans retweeted
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக... திமுக ஒரு ஊழல் கூட்டம் என்பதற்கு உதாரணம் பெரியார் அறிவுலகம்... ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான்... திமுக இனி தலைகுனிந்து நிற்கப்போவது உறுதி - முதலமைச்சர் விஜய்
#CMVijay | #TVK | #DMK | #PeriyarWorldofKnowledge | #PolimerNews
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Narayanan, Secretary, Department of Space, Chairman, Space Commission, and Chairman, ISRO, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
Actor Vijay Fans retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
"கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் தி.மு.க ஆட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளது.. தி.மு.க ஆட்சியில் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லாத பெயரில் புத்தகம் வாங்கியுள்ளார்கள்''



























