Pinned Tweet
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
நாமே ஆட்சி செய்து, அதை நாமே நல்ல தொடக்கம் என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
Loose Mohan strikes again.
இதுவரை நடந்த ஆட்சிகளில் தீபாவளிக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று பார்த்திருக்கிறோம்.
முதன்முறையாக உங்கள் மானங்கெட்ட மாற்றத்தின் ஆட்சியில் ஒரே நாளில் 11 கொலைகள்.
கோவை 'தந்தை பெரியார் அறிவுலகம்' நூலகத்தில், 'அகல்விளக்கு பதிப்பகம்' என்ற பெயரில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து மெகா ஊழல் செய்துள்ளது தவெக அரசு!
ஊழல் அம்பலமானதும், "இது கடந்த திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்கள்" என முதலமைச்சரும், அமைச்சரும் அப்பட்டமான பொய்யைச் சொன்னார்கள்.
ஆனால், புத்தகத்தில் உள்ள நூலக முத்திரையோ "22 JUN 2026" என தெளிவாகக் காட்டிக்கொடுத்துவிட்டது. மே மாதமே ஆட்சிக்கு வந்துவிட்டு, ஜூன் மாதம் உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு திமுக மீது பழிபோட வெட்கமாக இல்லையா?
போதக்குறைக்கு, இந்த போலிப் புத்தகங்களின் ஆசிரியர்கள் பெயரான 'திரிஷா விஜய்', 'விஜய் பாலு', 'விஜய ஆதித்தன்', 'சுமேகா விஜய்' என்பவற்றைப் பார்த்தாலே இந்தக் கொள்ளைக்குப் பின்னால் இருப்பது யார் என்பது ஊருக்கே தெரியும்.
ஆளத்தெரியாத ஆட்சியில் நடக்கும் ஊழல்களுக்கெல்லாம் திமுக மீது பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கும் Dummy முதலமைச்சர் விஜய், இந்த மெகா ஊழல் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும்.
DMK NRI Wing retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?
அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
Fun, enjoyment ஆகியவற்றுக்காக போதைப்பொருட்களை அவ்வப்போது பயன்படுத்துங்கள் என்று மாணவர்களை ஊக்குவிக்கும் விஜய்.
மனுஷனா இந்த ஆளு?
தவெகவினர் பரப்புரை என்கிற பெயரில் ரோட்டில் நாகரிகம் இல்லாமல் பொறுக்குவதற்காக, மக்களின் பாதுகாப்பு குறித்து கவலையில்லாமல் திமுக அரசு கொண்டுவந்த SOP-ஐ எதிர்த்தனர்.
பிறகு வழக்கம்போல் நீதிமன்றத்தில் செருப்படி வாங்கினர். வெட்கமாகவே இருக்காதா ப்ரோ?
அசாம் மாநிலம் to தமிழ்நாடு: 5 யானைகள் பரிமாற்றத்தில் வெறும் 8 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்த தவெக அரசு!
பாஜகவுக்கு நெருக்கமானவர் கொண்டுவருவதால் இந்த மின்னல் வேக ஒப்புதலா? வெளியே காங்கிரஸ் கூட்டணி, உள்ளே பாஜகவுக்கு ஸ்பீடு சர்வீஸா?
பாஜகவுக்கு சேவகம் செய்வதற்கு தான் ஆட்சியில் வந்து அமர்ந்திருக்கிறீர்களா?
பதில் சொல்லுங்க CM சார்.










