Pinned Tweet
தேசியம் என்பது ஒரு கனவு அல்ல; அது எமது இருப்புக்கான இறுதிப் போராட்டம். நாம் தேசியத்தைக் கைவிடுவது என்பது, எமது முன்னோர்களின் தியாகத்தை மறந்து, எமது குழந்தைகளின் எதிர்காலத்தை அடகு வைப்பதற்குச் சமம்.
#தமிழ்தேசியம்
எல்லாளன் retweeted
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் உணர்வுபூர்வமாக இன்று ஆரம்பமானது.
#Eelam #EelamTamils #Kilinochchi #LKA #WorldwideTamils
எல்லாளன் retweeted
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் மாத நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
#Eelam #EelamTamils #Batticaloa #LKA #WorldwideTamils
எல்லாளன் retweeted
காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்து 33 ஆவது ஆண்டு நினைவு விழா
காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்து 33 ஆவது ஆண்டு நினைவு விழா (01.11.1993-01.11.2026)
காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட
போது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .
எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில்
எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும்.
இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம்.
ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.
குறிப்பு:-
பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவைக் தழுவிக்கொண்டார்.
இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து
ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாகாக வாழுமம் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்த ரூபன் அறிவுச்சோலை எனப்பெயரிடப்பட்டது.
எல்லாளன் retweeted
தாயகத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஈந்திட்ட தூயவர்கள் தியாகம் என்றும் நிலைத்திருக்கும்!
#NewProfilePic #முகப்புப்படம் #மாவீரர்நாள் #மாவீரர்நாள்2026
எல்லாளன் retweeted
கல்லறை மேனியர் கண் திறக்கும் கார்த்திகை மாதமிது!
#மாவீரர்_நாள்!
கார்த்திகை 27 🙏
#TamilNadu #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
எல்லாளன் retweeted
29.10.1995 அன்று அளவெட்டி மண்ணில் அற்புதத்தை நிகழ்த்திய கரும்புலித் தாக்குதல் - காணொளி
சூரியகதிர் இராணுவ நடவடிக்கை
எதிரியின் இராணுவ நடவடிக்கையைத் திசைதிருப்ப வேண்டும். திருப்புமுனையொன்றை சண்டைக்களத்தினில் ஏற்படுத்தும் திட்டம் ஒன்று தலைமைப்பீடத்தினால் வகுக்கப்படுகிறது.
எதிரியின் முன்னேற்ற நகர்வை தாமதபடுத்துவதற்க்காக, ஓர் அணியை உள்நூழைத்து ஒரு தாக்குதாலை செய்யவேண்டி இருந்தது. எதிரியின் முன்னரங்க நிலைகளுக்கு வலுச்சேர்க்கக் கூடிய ஆட்லறி சூட்டாதரவை வழங்கக்கூடிய ஆட்லறிநிலைகள், எதிரியின் அணிகளின் நகர்வுக்கு ஆதரவாக செயற்படக்கூடிய (விநியோகங்கள்) பின்தள கட்டளைப் மையத்தை தாக்கி அழிப்பதன் மூலம் எங்களுக்கு ஓர் அதாவது கால இடைவெளியை ஏற்படுத்துவதுதான் திட்டமாக இருந்தது.

சூரியகதிர் இராணுவ நடவடிக்கை வெற்றிக்கு உறுதுணையகாக கரும்புலி கப்டன் சிறைவாசன், கரும்புலி கப்டன் அகத்தி, கரும்புலி கப்டன் ஈழவன், கரும்புலி கப்டன் தினகரன், கரும்புலி லெப். வேணுதாஸ், கரும்புலி லெப். நளினன், கரும்புலி லெப். கலைச்செல்வன், கரும்புலி லெப். தொண்டன், கரும்புலி லெப். தங்கத்துரை, கரும்புலி லெப். சசிக்குமாரன், கரும்புலி 2ம் லெப். இசைச்செல்வன் ஆகிய தேசத்தின் புயல்கள் புயலாய் வீசி தமிழீழ காற்றில் கலந்தனர்.
எல்லாளன் retweeted
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரான்சு
பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 மணிக்கு, 50 Avenue Gabriel Péri, 93120 La Courneuve என்ற முகவரியில், லாகூர்னேவ் மாநகரசபைக்கு அருகில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
எல்லாளன் retweeted
துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
"துன்கிந்த” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.
30.10.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “துன்கிந்த” எரிபொருள் வழங்கல் கப்பல் வழிமறிக்கப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கடலரசன் / சமுத்திரன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர் / கேசவி, கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
எல்லாளன் retweeted
1) எங்களுடைய தலைவரைப்போல ஒரு கடுமையான வீரனும் இல்லை, செம்மையான கடி நகைச்சுவையாளனும் இல்லை. அவருடைய நகைச்சுவைகளைத் தொகுக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வாசிக்கிறவன் சிரிச்சே மாரடைப்பு வந்து மண்டயப்போட்டிருவான்.
பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தொடர்பான நகைச்சுவை இது.
எல்லாளன் retweeted
On this day 31 years ago, over half a million Tamil men, women and children fled their homes in Jaffna as the Sri Lankan military launched a military offensive to capture the peninsula, under the leadership of then Sri Lankan president Chandrika Kumaratunga.
Read more on our website, tamilguardian.com instagr.am/p/DfH2pPpjWfK/
எல்லாளன் retweeted
Zero sympathy for Sangakkara who continues to use his "gentleman" profile to try to salvage genocide-accused Sri Lanka's (and its military's) image. island.lk/experience-based-l…
Replying to @IrelandMeda @Ryanair
When told people like you with your kind of passports should expect this treatment and that if we argued against that obviously disgusting comment we would be considered a threat to other passengers and not boarded is not treating everyone exactly the same but it is racist
Respect and dignity must first be extended to Tamils in Tamil Eelam before expecting the same from the international community. Years of genocide against Tamils and severe economic mismanagement have triggered a mass exodus, directly eroding the global standing of the Passport.
Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
எல்லாளன் retweeted
கனடா சென்ற ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற்று தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்கள்.
ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே இருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி நேற்றைய தினம் ஒருவர் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டு சிங்கள அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எல்லாளன் retweeted
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களும் , புலித்தளபதிகள் போராளிகள் கைகளில் தவழ்ந்த நிலையில் இன்று ஏஞ்சியிருக்கும் அரிய சில பொக்கிசங்களும் காட்சிப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தும் ஓர் சிறப்பான கண்காட்சி.
எல்லாளன் retweeted
ஈழத் தமிழரை பலவந்தமாக திருப்பி அனுப்பக்கூடாது என டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில்(1992) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்திய அரசு பலவந்தமாக திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
வன்மையான கண்டனங்கள்.




































