Logan X retweeted
😱 உலகத்திலேயே மிகவும் பயங்கரமான TOP 5 HORROR திரைப்படங்கள்! 👻🔥
ஹாரர் திரைப்படங்கள் பார்ப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இந்தப் பட்டியலில் இருக்கும் படங்களைத் தனியாகக் கவனியுங்கள்! சாதாரணமான பேய் கதைகளைத் தாண்டி, மனதைப் பதற வைக்கும் காட்சிகள், திகிலூட்டும் பின்னணி இசை, எதிர்பாராத திருப்பங்கள், நீண்ட நேரம் மனதில் நிற்கும் பயங்கரமான அனுபவங்கள் என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டக்கூடியவை.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசைப்படி உலகின் 10 பயங்கரமான ஹாரர் திரைப்படங்கள் இதோ! 🔥
1. Sinister (2012) 🎥
ஒரு கொலை வழக்கை ஆராயும் எழுத்தாளர், தனது புதிய வீட்டில் கிடைக்கும் மர்மமான வீடியோ பதிவுகளைப் பார்க்கத் தொடங்குகிறார். ஒவ்வொரு வீடியோவிலும் மறைந்திருக்கும் பயங்கரமான உண்மைகள் அவரையும் குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளுகின்றன. இருண்ட சூழல், திகிலூட்டும் பின்னணி இசை மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளால் மிகவும் பயங்கரமான ஹாரர் அனுபவத்தைக் கொடுக்கும் திரைப்படம்.
2. Host (2020) 💻
Zoom வீடியோ கால் மூலம் ஆன்லைனில் ஆவி தொடர்பான நிகழ்வை நடத்தும் நண்பர்கள், எதிர்பாராத விதமாக ஒரு தீய சக்தியிடம் சிக்கிக்கொள்கிறார்கள். முழுப் படமும் வீடியோ கால் வடிவில் நகர்வதால், பார்ப்பவர்களுக்கும் அந்த ஆபத்து அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
3. Skinamarink (2022) 🌑
வழக்கமான ஹாரர் திரைப்படங்களைப் போல இல்லாமல், இருண்ட அறைகள், மர்மமான சத்தங்கள் மற்றும் தெளிவில்லாத காட்சிகள் மூலம் பயத்தை உருவாக்கும் வித்தியாசமான திரைப்படம். மெதுவான திரைக்கதை மற்றும் விசித்திரமான சூழல் சிலருக்கு மிகுந்த மனப் பதற்றத்தை ஏற்படுத்தும்.
4. Insidious (2010) 🕯️
ஒரு சிறுவன் மர்மமான முறையில் கோமா நிலைக்குச் சென்ற பிறகு, அவனுடைய குடும்பத்தைச் சுற்றி விசித்திரமான அமானுஷ்ய சம்பவங்கள் தொடங்குகின்றன. அந்தச் சிறுவனின் நிலைக்குப் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடும்போது, பயங்கரமான இன்னொரு உலகம் வெளிப்படுகிறது. திடுக்கிட வைக்கும் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமான படம்.
5. The Conjuring (2013) 👻
ஒரு வீட்டில் குடியேறும் குடும்பத்தினருக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை விசாரிக்க வரும் எட் மற்றும் லோரெய்ன் வாரன் சந்திக்கும் பயங்கரமான அனுபவங்கள்தான் கதை. உண்மையான சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தப் படம், பேய் பட ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவம்.
🔥 ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு சவால்!
இந்த 5 திரைப்படங்களில் எத்தனை படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? இதில் உங்களை அதிகமாகப் பயமுறுத்திய திரைப்படம் எது?
உண்மையிலேயே பயமுறுத்தும் ஹாரர் படங்களைத் தேடுபவர்கள் இந்தப் பட்டியலை உங்கள் Watchlist-ல் சேர்த்துக்கொள்ளுங்கள்! 🍿
#HorrorMovies #ScariestMovies #Sinister #TheConjuring #Insidious #HorrorMovieLovers #MovieRecommendations
Logan X retweeted
#NoCountryForOldMen — சில தீமைகள் நம்மைத் துரத்துவதில்லை, நாம் வாழும் உலகத்தையே ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
ஒரு பணத்தொகை, அதைத் தேடி அலையும் மனிதர்கள், அவர்களை எதிர்கொள்ளும் Anton Chigurh. ஆனால் இது வெறும் பணத்திற்கான வேட்டை அல்ல. மனிதர்களின் பேராசை, விதி, வன்முறை, காலம் என பல விஷயங்களை அமைதியாகப் பேசும் படம்.
Javier Bardem-ன் Anton Chigurh கதாபாத்திரம் தனி உலகம். அவனுடைய அமைதியும், எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாத முகமும், அவன் எப்போது என்ன செய்வான் என்று கணிக்க முடியாத தன்மையும் ஒரு விதமான பயத்தை உருவாக்குகிறது. குறிப்பாக coin toss காட்சிகள்.
Tommy Lee Jones-ன் Sheriff Bell கதாபாத்திரம் வழியாக, தான் வாழ்ந்த உலகம் மாறிக்கொண்டிருப்பதையும், அந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு மனிதனின் மனநிலையையும் படம் காட்டுகிறது.
எல்லா குற்றங்களுக்கும் ஒரு காரணம், எல்லா செயல்களுக்கும் ஒரு விளக்கம் கிடைக்கும் என்று நம்பும் உலகத்தில், சில விஷயங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் நடக்கின்றன. அதை எதிர்கொள்ள முடியாமல் மனிதர்கள் தவிப்பதுதான் இந்தப் படத்தின் ஆழம்.
நாம் வாழும் உலகம் நம்முடைய புரிதலுக்கு அப்பால் மாறிக்கொண்டிருக்கும்போது, அதை எதிர்கொள்ளும் துணிச்சலை விட, அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் சில நேரங்களில் அதிகம் தேவைப்படுகிறது. ❤️
Logan X retweeted
The Blue Road (2026) season 1 - Netflix
Dark crime thriller with brutal murders, intense police investigations & gritty action. Korean-Japanese detective duo, disturbing crime scenes, unexpected twists nu engaging ah pogum. Crime/action lovers kandippa try pannalam🔥
மக்களே சமீபத்தில் இந்த படத்தை பற்றி ஆஹா ஓஹோ என எங்கு பார்த்தாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் மட்டும்தான் வருவதை பார்க்க முடிகிறது
அதற்கேற்ற வகையில் IMDB இல் 9.0/10 மற்றும் Letterboxd இல் 4.6/5 என இரண்டிலுமே ரேடிங்கில் உச்சத்தில் இருக்கு! 🤯
படம் பார்த்தவர்கள் படத்தில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்கு?
நான் Trailer or Plot போன்ற எதையும் பார்க்கவில்லை எனவே பெரிதும் Spoil பண்ணாமல் கூறவும்
HD இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் 🤔
#YouCanSeeEverything
Logan X retweeted
#Drones | Colorism
கொஞ்சம் வித்தியாசமான Fantasy கான்செப்ட் படமிது.
மிஸ்டீரியஸ் மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட், சூனியக்காரி, ஏஞ்சல் என சில வித்தியாசமான கதாபாத்திரங்களை வெச்சு ஒரு Fantasy horror-comedy எடுத்துருக்காரு ராகவ் மிர்தத்..
டைட்டில் கார்டுக்கு முன்னாடியே வரும் disclaimer 👂 குடுத்து கேட்கவும்..
ஃபர்ஸ்ட் ஹாஃப்ல சில காமெடி சீன்ஸ் கலகல.
செகண்ட் ஹாஃப்ல கதையின் போக்கு மாறுது, சில டிவிஸ்ட்ஸ் நல்லா இருக்கு.
ரெண்டரை மணி நேர ரன்டைம் கொஞ்சம் வெட்டிருக்கலாம்..
குறிப்பாக நிறப் பாகுபாடு பற்றிய கருத்தைச் சொல்லியிருக்கும் விதம் சூப்பர் 👌🏻
அஞ்சலி நாயர், RJ தீபக், சதீஷ் ப்ரோ, டிராவிட், சசி நல்லா நடிச்சுருக்காங்க..
தேவதர்ஷினிக்கும், சித்தி இட்னானிக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு, Fun Max 🫠
ஆனா நல்ல கான்செப்ட் இருந்தும் இன்னும் கொஞ்சம் டைட்டான ஸ்க்ரீன்ப்ளே இருந்திருந்தா படம் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..
புதுமையான முயற்சிக்கும் , சில சுவாரஸ்யமான மொமன்ட்ஸ்க்கும் வீட்ல குட்டீஸ் கூட சேர்ந்து படம் பாருங்க.. என்ஜாய் பண்ணுவாங்க!!
Logan X retweeted
🎬 #Haiku (2026)
@Cineeloop – Below Average 🙃
Aegan (Mano) College-ல ஜாலியா இருந்துட்டு இருக்கும்போது ஒரு நாள் Girls Toilet-க்குள்ள போய் பார்த்ததுக்காக College-ல இருந்து Dismiss பண்ணிடுறாங்க. அதுக்கப்புறம் வேற College-க்கு போறாரு. அது Women’s College-ல இருந்து Co-ed College-ஆ மாறின College.
சரி, அங்க போய் பல கிண்டல்களுக்குப் பிறகு Sridevi Apalla (Kodi / Pavazhakodi) பார்த்து Friendship ஆகி Love-ல விழுறாரு. அந்தப் பொண்ணை விட நிறைய பேர் அழகா, சூப்பரா இருக்காங்க. எனக்குப் பிடிச்சதும் அவங்கதான். ஆனா ஹீரோவுக்கு முதல் ஹீரோயின் மேலதான் லவ்.
ஆனா அந்தப் பொண்ணோட அப்பா Casteism பார்க்குற ஆளு. அதுகூட பிரச்சனை இல்லைன்னு வச்சுக்கோங்க. ஹீரோவோட Jealousy, Possessiveness, Unemployment எல்லாம் சேர்ந்து Relationship-ல பிரச்சனை வருது. கடைசியில Breakup ஆகிடுது.
அப்புறம் என்ன, கொஞ்ச வருஷம் கழிச்சு Chennai-ல ஒரு Office-ல வேலை பார்க்குறாரு. அங்கதான் Second Heroine Femina George (Nivedha) Entry.
அப்பாவியா நடிச்ச அந்தப் பொண்ணோட Acting தான் படத்துல எனக்குப் பிடிச்சதே!
நம்ம ஹீரோ நல்லஆளுதா 😂 அந்தப் பொண்ணு Love பண்ற பையனும் இவரைப் போலவே Possessive-ஆ, Toxic-ஆ இருக்கான். Nivedha கிட்ட போய் Advice பண்ணி அவனை கழட்டிவிட வச்சிட்டு நம்ம ஹீரோ கரெக்ட் பண்ணிடுறாரு.
இதுக்கு ஏன்டா இந்தப் பொழப்பு 😂😂
அதுக்கப்புறம் Second Heroine-க்கு Love வருது. அங்கயும் வேற பிரச்சனை. Past Heartbreak, Second Chance, Self-respect-னு கதை போகுது.
மொத்தத்துல ஒரு Acting-less Movie தான் இந்த Haikoo. கதையில சில விஷயங்கள் இருந்தாலும் அதை சுவாரஸ்யமா சொல்லத் தவறிட்டாங்க. ஒரு சில இடங்களைத் தவிர பெருசா ஈர்க்கல.
Available: Netflix (Tamil)
Logan X retweeted
The Lord of the Rings: The Rings of Power – Season 3 (Episodes 5 & 6) Review
முதல் நான்கு எபிசோடுகளைப் பார்த்து முடித்த பிறகு, அடுத்த இரண்டு எபிசோடுகளுக்காகக் காத்திருந்தேன். இப்போது Episode 5 மற்றும் Episode 6 இரண்டையும் பார்த்து முடித்துவிட்டேன்.
ஆனால் இந்த இரண்டு எபிசோடுகளும் எனக்கு எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. குறிப்பாக திரைக்கதையின் வேகம் ரொம்பவே குறைவாக இருக்கிறது.
Episode 5 & 6 – Review
இந்த இரண்டு எபிசோடுகளிலும் பல கதாபாத்திரங்களின் கதைகள் தனித்தனியாக நகர்கின்றன.
Galadriel மற்றும் Celeborn இடையிலான சந்திப்பு, Sauron-ன் அடுத்தகட்ட திட்டங்கள், Gandalf மற்றும் Dark Wizard இடையிலான மோதல் என சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.
அதேபோல் Númenor-ல் நடக்கும் அரசியல் பிரச்சினைகள், Elrond மற்றும் Gil-galad எடுக்கும் முடிவுகள், Durin மற்றும் Disa கதைக்களம் என பல விஷயங்கள் திரையில் வருகின்றன.
Episode 5-ல் சில முக்கியமான கதாபாத்திரங்களின் சந்திப்புகள் நன்றாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒரு Connecting Episode போலவே உணர முடிகிறது.
Episode 6-ல் Sauron மற்றும் Celeborn இடையிலான காட்சிகள், Theo-வின் கதையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக Sauron-ன் அடுத்தகட்ட திட்டம் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
Plus Points
- Sauron கதாபாத்திரத்தின் திரை இருப்பு.
- Galadriel மற்றும் Celeborn இடையிலான காட்சிகள்.
- Gandalf தொடர்பான கதைக்களம்.
- Visuals மற்றும் Background Music.
- சில முக்கியமான கதாபாத்திரங்களின் சந்திப்புகள்.
Minus Points
- மிகவும் Slow Narration.
- தேவைக்கு அதிகமான நீளமான காட்சிகள்.
- பல கதைக்களங்கள் இருந்தாலும் விறுவிறுப்பு குறைவு.
- எதிர்பார்த்த அளவுக்கு பெரிய திருப்பங்கள் இல்லை.
- சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது.
Final Verdict
மொத்தத்தில் Episodes 5 & 6 எனக்கு சுமாரான அனுபவத்தையே கொடுத்திருக்கின்றன.
Stranger Things, Game of Thrones போன்ற சீரிஸ்களை விரும்பும் எனக்கு The Rings of Power மீது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் இதுவரை பார்த்த ஆறு எபிசோடுகளிலும் கதையின் வேகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பிரம்மாண்டமான Fantasy World, Visuals, Music என ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு தேவைப்படுகிறது.
அடுத்த இரண்டு எபிசோடுகளிலாவது கதை வேகமெடுத்து, Sauron-ன் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் பெரிய அளவிலான போர்களைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
My Verdict: Visually Grand, But Narratively Slow!
Rating: 3/5
The Lord of the Rings: The Rings of Power – Season 3 (First 4 Episodes) Review
இந்த 4 எபிசோடுகளையும் பார்த்து முடிக்க எனக்கு 5 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு வழியாக இப்போதுதான் பார்த்து முடித்துவிட்டேன்! 😅
Stranger Things, Game of Thrones இந்த இரண்டு சீரிஸ்களுக்கும் அடுத்ததாக எனக்குப் பிடித்த ஒரு Fantasy Series என்றால் அது The Lord of the Rings: The Rings of Power.
அந்த அளவுக்கு இந்த சீரிஸின் Fantasy World, கதாபாத்திரங்கள், பிரம்மாண்டமான காட்சிகள் என அனைத்தும் என்னை ஈர்த்திருக்கின்றன. இப்போது Season 3-ன் முதல் நான்கு எபிசோடுகளையும் பார்த்த அனுபவத்தைப் பார்க்கலாம்.
Series: The Lord of the Rings: The Rings of Power
Season: 3
Episodes: 1–4
Platform: Amazon Prime Video
Genre: Fantasy / Adventure / Drama
Episode-wise Review
Episode 1 – Marnûkh
Elves மற்றும் Sauron இடையிலான மோதல் மேலும் தீவிரமடைகிறது. Galadriel தனது கடந்தகால நினைவுகளுடன் போராடுகிறார். Durin-ன் வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான அடித்தளமாக இந்த எபிசோட் அமைகிறது.
Episode 2 – The Gift of Men
Númenor அரசியல் குழப்பத்தில் சிக்குகிறது. Theo-வின் கதையில் புதிய திருப்பம் ஏற்படுகிறது. Dwarves தங்களுடைய அடுத்தகட்ட முடிவுகளைப் பற்றி ஆலோசிக்கிறார்கள். மறுபுறம் Sauron-ன் திட்டங்கள் Elves மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Episode 3 – The Secret Fire
Gandalf, Rhûn பகுதியை போரிலிருந்து விலக்க முயற்சி செய்கிறார். Elendil ஒரு உளவாளியைத் தேடுகிறார். Galadriel மற்றும் Arondir, Gundabad நோக்கிப் பயணிக்கின்றனர். Sauron தனது அடுத்தகட்ட திட்டங்களை முன்னெடுக்கிறார்.
Episode 4 – Gundabad
Gundabad பயணம் பல எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாக்குகிறது. Elrond, Gil-galad-க்கு முக்கியமான பணியைக் கொண்டு வருகிறார். Durin தனது அரியணையைக் காப்பாற்றப் போராடுகிறார். கதையில் அடுத்தகட்ட மோதல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
Overall Review
இந்த நான்கு எபிசோடுகளிலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இந்த சீரிஸின் Fantasy World மற்றும் அதன் பிரம்மாண்டமான உருவாக்கம்.
Middle-earth உலகத்தை திரையில் காட்டிய விதம், Background Music, Cinematography, Visual Effects என தொழில்நுட்ப ரீதியாக ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
Sauron கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதை மற்றும் One Ring உருவாக்கம் குறித்த எதிர்பார்ப்பு இந்த சீசனின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
Galadriel, Elrond, Gandalf, Durin என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான கதைக்களங்கள் இருப்பதால் கதைக்கு நல்ல விரிவான தன்மை கிடைக்கிறது.
ஆனால் பல கதாபாத்திரங்களின் கதைகளை ஒரே நேரத்தில் நகர்த்துவதால் சில இடங்களில் கதை வேகம் குறைவாக இருப்பது ஒரு சிறிய குறை. சில காட்சிகள் இன்னும் சுவாரஸ்யமாகவும் வேகமாகவும் நகர்ந்திருக்கலாம்.
Plus Points
- பிரம்மாண்டமான Fantasy World.
- Visual Effects மற்றும் Cinematography.
- Background Music.
- Sauron கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பு.
- Middle-earth உலகத்தின் கதாபாத்திரங்கள்.
Minus Points
- சில இடங்களில் Slow Narration.
- பல கதைக்களங்கள் ஒரே நேரத்தில் நகர்வதால் கவனம் சிதற வாய்ப்பு.
- இன்னும் விறுவிறுப்பான திரைக்கதை இருந்திருக்கலாம்.
Final Verdict
மொத்தத்தில் The Lord of the Rings: The Rings of Power Season 3-ன் முதல் நான்கு எபிசோடுகளும் எனக்கு ஒரு நல்ல Fantasy Series அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன.
Stranger Things, Game of Thrones போன்ற Fantasy மற்றும் Adventure உலகங்களை விரும்புபவர்களுக்கு இந்த சீரிஸும் நிச்சயமாகப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
அடுத்த எபிசோடுகளில் கதை இன்னும் வேகமெடுத்து பெரிய அளவிலான போர்களையும் திருப்பங்களையும் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்!
My Verdict: A Good Fantasy Experience! ❤️
Rating: 4/5
Logan X retweeted
#Mangolik - Below Average ⭐️ ⭐️ (2/5)
Hoichoi-ல் வெளியான பெங்காலி வெப் சீரிஸை தமிழில் டப் செய்து Netflix-ல் வெளியிட்டிருக்காங்க.
போஸ்டரே கொஞ்சம் வித்தியாசமாகவும், பார்க்கத் தூண்டும் விதமாகவும் இருந்தது.
அதுமட்டுமில்லாமல் நமக்குப் பிடித்தமான Crime/Thriller Genre வேற. சரி, அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க ஆரம்பிச்சாச்சு.
முதல் Episode Horror / Thriller Setup-ல் நல்லாவே போனது. ஆனால், அதற்குப் பிறகு என்னவோ Hindi Drama Serial பார்க்கிற மாதிரியான Feel தான் வந்தது.
நானெல்லாம் தமிழ் சீரியலே பார்க்க மாட்டேன். என்னைப் போய் ஒரு பெங்காலி சீரியல் பார்க்க வச்சிட்டானுங்க 😷
போஸ்டரைப் பார்த்து ஏமாந்து போயிடாதீங்க மக்கா!
நேர விரயம்!
Logan X retweeted
🔥 Netflix-ல் மிஸ் பண்ணவே கூடாத 05 தரமான த்ரில்லர் திரைப்படங்கள்! 🎬
சாதாரணமான கதைகளை விட, ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சஸ்பென்ஸ், மர்மம், கிரைம் மற்றும் சர்வைவல் த்ரில்லர் படங்களைப் பார்க்க விரும்புபவரா நீங்கள்? அப்படியானால் இந்த 5 திரைப்படங்களையும் உங்கள் Watchlist-ல் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்! 🍿
1. Rebel Ridge (2024) 🔥
ஒரு சிறிய நகரத்தில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக ஒரு முன்னாள் ராணுவ வீரர் நடத்தும் போராட்டம்தான் இந்தப் படம். விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் புத்திசாலித்தனமான திரைக்கதை இதன் பலம்.
2. The Killer (2023) 🎯
தான் செய்த ஒரு தவறால் எதிர்பாராத பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் ஒரு தொழில்முறை கொலையாளியின் கதை. அமைதியான அணுகுமுறை, திட்டமிடல் மற்றும் பழிவாங்கும் பயணம் என வித்தியாசமான கிரைம் த்ரில்லர்.
3. The Platform (2019) 😨
பல அடுக்குகளைக் கொண்ட ஒரு விசித்திரமான சிறைச்சாலை. மேலிருந்து கீழே வரும் உணவுக்காக மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள் என்பதையும், மனிதர்களின் சுயநலத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் காட்டும் திரைப்படம்.
4. Nowhere (2023) 🌊
கடலின் நடுவே ஒரு சரக்கு கண்டெய்னருக்குள் தனியாக மாட்டிக்கொள்ளும் கர்ப்பிணிப் பெண், உயிர் பிழைப்பதற்காகப் போராடும் கதை. ஒவ்வொரு நொடியும் பதற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த சர்வைவல் த்ரில்லர்.
5. The Guilty (2021) 📞
அவசர உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிக்கு வரும் ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பு, அவரை எதிர்பாராத விசாரணைக்குள் இழுத்துச் செல்கிறது. பெரும்பாலான கதை ஒரே இடத்தில் நடந்தாலும், திரைக்கதை முழுவதும் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும்.
🎬 இந்த 05 படங்களிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக மர்மம், சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் மற்றும் சர்வைவல் கதைகளை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத திரைப்படங்கள்!
💬 இதில் நீங்கள் ஏற்கெனவே பார்த்த படம் எது? உங்களுக்குப் பிடித்த சிறந்த த்ரில்லர் திரைப்படம் எது?
#Netflix #NetflixMovies #ThrillerMovies #SuspenseThriller #CrimeThriller #MovieRecommendations #MustWatchMovies
Logan X retweeted
#418TheMovie - (2026)
@Cineeloop - WORST !!
ஒரு மொக்க படத்தை CENSOR-லேயே பார்த்து பயந்தாங்கன்னு சொல்லி ஓட வச்சிருக்கலாம் பாத்திருப்பீங்க போல…
நம்ம ஊருக்கு MURMUR எப்படி… அவங்க ஊருக்கு இந்த 418 🤦🏻♂️
418-னா என்ன?
வேற ஒண்ணும் இல்ல.
Medical College Boys Hostel-ஓட Room Number.
அந்த room-க்குள்ள பேய் இருக்குதாம். Ladies பார்த்தா வெளிய வந்துரும்னு… அந்த side-ல girls கூட வராது, birds கூட வராது.🫂
இப்படிப்பட்ட Girls Hostel-க்கு நம்ம main characters ஒரு பொண்ணை bet பண்ணி உள்ள கூட்டிட்டு வராங்களே… அவங்களுக்கு காட்டுறாங்க.
அப்புறம் என்ன?
அந்த பொண்ணும் உள்ள வர…
வந்தவ room-க்குள்ள போனா?
உயிரோட வந்தாளா?
அதுதான் படம்.
First half முதல் 45 mins horror concept-ஆ நல்லா thrilling போகும்.
ஆனா அப்படியே ஒரு story வச்சிட்டாங்க…
LEO-ல பண்ண அதே தப்பு… நரபலிக்கு மாதிரி 😂🤢
தாயாக முடியாத பொண்ணு…
“குழந்தை வேணும், வேணும்”னு சொல்லி சொல்லி பைத்தியம் ஆகி…
ஒரு மந்திரவாதி பேச்சைக் கேட்டு வீட்டுல உள்ளவங்களை பலி கொடுக்கணும்னு போற story.
அப்புறம் அவர் சொன்ன 7 girls-ஐ கொல்லணும்…
அதுவரை அந்த room-க்குள்ளேயே wait பண்ணிட்டு இருக்கு…👏🌚
ஒரு மொக்க movie.
பேய் படம் கூடலாம் சேர்க்க வேண்டாம்.
First 45 mins பாருங்க…
அப்புறம் off பண்ணிடுங்க.
“Movie நல்லா இருக்கு”னு fool ஆகிக்காதீங்க.
Available in Netflix (Tamil )
Logan X retweeted
#OM | அண்ணாமலையாருக்கு அரோகரா
பீமா விக்ரமும் + போக்கிரி விஜயும் சேர்ந்த ஒரு கதாபாத்திரம் தான் நம்ம தனுஷுக்கு..
முதல் பாதி வரைக்குமே அண்டர்கவர் ஆபரேஷன் , கேரக்டர் எஸ்டாபிளிஷ்மென்ட், பாரஸ்ட் சீக்வென்ஸ் என ரொம்ப என்கேஜிங்கா தான் போச்சு.
படத்துல ஒரே ஒரு நடிப்பு அரக்கன்னா அது இந்திரன் கேரக்டர் தான். கொஞ்ச நேரம் வந்தாலும் அந்த கேரக்டருடன் ஒரு கனெக்ட் இருக்கு..
மீதி எல்லாமே ஒவ்வாமை தான்..
யாரு சாமி நீயி, நீங்க நல்லவரா கெட்டவரா? ஒரே குழப்பம் தான் வருது மம்மூட்டி ரோல் மேல.. எல்லா கேள்விகளுக்கு வசனம் மூலம் பதில் சொல்றாங்க ஆனா நாம பார்க்காத ஒரு வெகுளி கேங்ஸ்டர் கேரக்டர் சியா 🔥
அவரோட ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ஒரு கட்டத்துல பேரன்பு அமுதன் ரேஞ்சுக்கு போயிருச்சு..
சாய் பல்லவி 🫠 சில இடங்கள்ல ரொம்ப அழகா நடிச்சுருக்காங்க ஆனா அந்த கேரக்டர் நித்யா ரெட்டியா கனெக்ஷன் கம்மி தான்..
காரணம் பெரும்பாலும் தெலுங்கு வசனம் பேசுனதா இல்ல அவங்க இன்வெஸ்டிகேஷன் ஸ்டைல்லான்னு தெரியல.. ஓம் சாந்தி
இந்த படத்துல தேவை இல்லாத ஆணி வேற யாரு ஸ்ரீலீலா தான், அந்த கேரக்டர் இல்லாம படத்தை கொண்டு போயிருந்தாலும் ரன் டைம் கம்மியாயிருக்கும் இன்னும் வலுவா இருந்துருக்கும்..
அந்த குட்டி பையன் நடிப்பு சூப்பர் 👌🏻
சாய் அபயங்கர் 🔥 அளாக்க லோவா அஸ்ஸி பாவா முதல் பாதிக்கு, வீழா வீரா வா வா வீரா இரண்டாம் பாதிக்கு
தியேட்டர் மொமன்ட்ஸ் ❣️
பிஜிஎம் தான் நெறைய இடங்கள்ல சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்துச்சி.
தனுஷ் செம பெர்பார்மன்ஸ், இன்ட்ரோ சீன்ல இருந்து கடைசி வரைக்கும் ஆக்சன் , பாடி லாங்குவேஜ் , எமோஷனல் சீன்ஸ் என ஒவ்வொரு இடத்திலும் ஸ்கோர் பன்றாரு..
ராஜ்குமார் பெரியசாமி - உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதை, இதுல குடும்பம், நம்பிக்கை, குற்றவுணர்வு, தியாகம் என எமோஷன் திகட்டும் அளவுக்கு இடம் இருந்தும் படத்தோட தாக்கம் கொஞ்சம் கூட வரல.. அது தான் இந்த படம் ஆவரேஜ்னு சொல்ல வைக்குது..
இவ்ளோ பாட்டு எதுக்கு? ஒரு முக்கியமான சீன்ல சொதப்பலானா பாட்டு வருது..
ஏன் நீங்க ஜிவி பிரகாஷ் கிட்ட போகல? இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை கூட பொருத்தமா இருந்துருக்கும்னு தோணுது..
எதிரியே இல்லாத மம்மூட்டிக்கு எதுக்கு மாஸ் எலிவேஷன் மியூசிக்..
லாஜிக் 😓 படத்தை எதிர்ப்பார்ப்பு இல்லாம நீங்க பார்க்கணும்னு தான் இவ்ளோ பெரிய போஸ்ட்.
நல்ல படம் தான், பேமிலியா போயிட்டு பாருங்க..
Logan X retweeted
418 - ரிவ்யூ
தமிழ் டப் ✅ , நெட்ப்ளிக்ஸ்
⭐⭐.5/5
ரொம்பவே சுமாரான படம்.. கொடுத்த பில்டப்க்கு வொர்த் இல்ல.. ஜவ்வா இழுத்து வைச்சு இருக்கானுக.. ஃப்ளாஷ்பேக் வர்ற வரைக்கும் ஓகே..
அதுக்கு அப்புறம் நம்மளே என்ன நடக்க போகுதுன்னு கண்டுபிடிச்சுடலாம்..
ஹாரர் படம் பிடிக்கும் என்றால் டிரை பண்ணி பாருங்க..
Logan X retweeted
🎬 ANBIL AVAN 🏠
@cineeloop : Below Average
ஒரு கணவன், மனைவி… ரெண்டு பேருக்கும் வேலை, Stress, டென்ஷன் இதுலேயே வாழ்க்கை ஓடுது. ஒருத்தர் ஒருத்தர் பேசிக்கக்கூட நேரமில்லாமல் இருக்காங்க. இப்படித்தான் ஹீரோ Ashok Selvan, ஹீரோயின் Priya-வோட கதை ஆரம்பிக்குது.
இரண்டு பேரும் ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறாங்க. அங்கே Senior-கிட்ட திட்டு வாங்குறது, வேலைப்பளு என ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையே வேண்டாம், நம்மளுக்குனு ஒரு Business ஆரம்பிக்கலாம்னு Home Stay தொடங்க முடிவு பண்றாங்க.
அதுக்காக வீடு தேடி அலையும்போது Revathi-யோட வீடு அவங்களுக்குப் பிடிச்சுப் போகுது. யாருக்குமே அந்த வீட்டைக் கொடுக்காத Revathi, இவங்க கேட்டதும் சம்மதிக்கிறாங்க.
ஆனால் Home Stay-க்கான Approval வாங்குவதில் தொடர்ந்து பிரச்சினை வருது. விசாரிச்சுப் பார்த்தா அந்த ஊர் MLA-வுக்கு அந்த வீட்டின் மேல ஒரு கண். அப்புறம் என்ன, வழக்கமான Action கதைக்குள் படம் போயிடுது.
Ashok Selvan நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு. அவரோட கோபத்தைக் கட்டுப்படுத்துற காட்சிகள், சில Emotional Moments எல்லாமே நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. Priya-வும் நல்லாவே நடிச்சிருக்காங்க.
ஆனா Dialogue-தான் பல இடங்களில் ரொம்ப Forced-ஆ இருக்கு. திரைக்கதையும் சீராகப் போகாமல் ஆங்காங்கே தடுமாறுது.
ஒரு Simple Story-யை Action Tone-ல, ஒரு Series பார்க்கிற மாதிரி கொண்டு போக முயற்சி செய்திருக்காங்க. ஆனா என்னவோ தெரியல, எதுவுமே பெருசா ஒட்டல. பல இடங்களில் ரொம்பவே Boring-ஆ இருக்கு.
மொத்தத்தில், எதிர்பார்த்த அளவுக்கு எதுவுமே அமையாத ஒரு Below Average Movie தான் இந்த #AnbilAvan
Available: SonyLiv
Logan X retweeted
OM - Decent ✅
தியேட்டர் போகலாமா கேட்டா கண்டிப்பா போகலாம் 👍.
Spy கதை தான், பெருசா lag இல்ல, pre interval sequence சூப்பர் 👌.
2nd half போனதே தெரியல.
சாய் பல்லவிக்கு தனி பாராட்டு 👌
சாய் பாட்டு லா சூப்பர் 👌,
negative-Editor, Cinematographer😒.
Rain fight,கிளைமாக்ஸ் (1/3)
Logan X retweeted
#418Movie
ஒரு neat ஆன horror movieகு தேவையான நல்ல story
But too lengthy unwanted scenes
Lengthy flashback
நெறைய matter ah சுருக்கி சொல்லிருக்கலாம் ரொம்ப இழுத்துட்டாங்க
Horror லாம் ஒன்னும் இல்ல 🙄
well written charectors 👌
Climax ல few twist super
Above average 🎬
Logan X retweeted
ShivFlix - #OMReview
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடக்கும் செம்மரக் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, நல்ல research செய்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
✅ ராஜ்குமார் பெரியசாமியிடமிருந்து ஒரு detailed writing உடன் ஒரு நல்ல Spy Thriller. கதையை எடுத்துச் செல்லும் விதமும், அடுத்தடுத்து வரும் திருப்பங்களும் ஆரம்பம் முதலே ஓரளவுக்கு ஈர்க்கின்றன.
✅ தனுஷ் செம எனர்ஜியான நடிப்பு. ஆரம்பத்தில் இருக்கும் அந்தத் துறுதுறுப்பும், பின்னர் Serious mode-க்கு மாறி உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அருமை.
✅ சாய் பல்லவிக்கு நல்ல கதாபாத்திரம்.
✅ மம்மூட்டியின் Screen Presence ஒவ்வொரு காட்சியிலும் ஒரு தனி Weight.
✅ சாய் அப்யங்கரின் BGM படத்திற்குப் பெரிய பலம். பல காட்சிகளில் நல்ல Energy கொடுக்கிறது. Few places very flat.
✅ Single-shot sequence, Alakalova பாடல், Redwood smuggling காட்சிகள், Interval block, Veezha Veera portions என சில இடங்கள் நல்லா Work ஆகி இருந்தது.👏👏👏
✅ இந்திரன்ஸ் அவர்களுக்கு குறைவான திரை நேரமே வழங்கப்பட்டிருந்தாலும், அவருடைய காட்சிகள் கதையோடு மிக அழகாகப் பொருந்திப் போகின்றன.👍
✅ குறிப்பாக Interval block எதிர்பாராத திருப்பத்துடன் நல்ல Impact கொடுக்கிறது.
✅ செம்மரக் கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்களின் இருண்ட பக்கத்தை இரண்டாம் பாதி ஆழமாகப் பேசுவது. மனதைத் தொடும் அழுத்தமான எழுத்து ✍️.
❌:
படத்தின் Runtime அதிகம். சில காட்சிகளை Trim செய்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் ஆங்காங்கே தொய்வு இருக்கிறது. சில Emotional scenes இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்.
மொத்தத்தில்:
நல்ல Performances, சுவாரஸ்யமான கதைக்களம், சில சிறப்பான காட்சிகள் ஆங்காங்கே வரும் தொய்வுகளையும் நீளத்தையும் தாண்டி பெரும்பாலான இடங்களில் படத்துடன் நம்மை Connect செய்ய வைக்கிறார் இயக்குநர்.
முழுமையான படம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் நிச்சயம் பார்க்கக்கூடிய ஒரு நல்ல முயற்சி!
Without expectations A Neat Attempt 👍
Rating: 3.25/5 ⭐
#OM
Logan X retweeted
#SathiyavanSavithiri Review
An Engaging Courtroom Whodunit Crime Thriller With Some good emotional moments.
Expectations எதுவுமே இல்லாம போய் பாத்தேன்.
கணவனுக்காக சட்ட போராட்டம் செய்யும் வக்கீல் மனைவியின் கதை தான்.
ஆரம்பம் கொஞ்சம் அப்படி இப்படினு Template சினிமா போல ஆரம்பிச்சாலும், Once Keerthy Vs Mysskin னு கதை நகரும் போது நம்மளும் உள்ள போய்டுவோம்.
Pre Interval Court room scenes & Interval சிறப்பா செட் பண்ணி, 2nd Half ஆரம்பமும் லைட்டா Dull அடிக்க, அடுத்தடுத்து வர கூடிய சம்பவங்கள் நம்மள திரும்ப உள்ள இழுக்க, கடைசி 30 நிமிஷம் narration எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி வர Twist பயங்கரம் பாஸ்னு சொல்ல வெச்சிடும்.
அப்படி ஒரு Twist வர போகுதுனு நம்மல யோசிக்க வைக்காது அளவுக்கு கதாபாத்திர வடிவமைப்பும், திரைக்கதையும் அமைச்சது இயக்குனரோட brilliance ah காட்டுது👏
ஒரு படத்தோட Climax முடியும்போது அட நல்லா இருக்கேனு தோணிடுச்சுன்னா, படத்துல இருக்குற குறைகள் மறஞ்சு போயிடும். அப்படி தான் இந்த படம் எனக்கு இருந்துச்சு.
@KeerthyOfficial அழகு😍, அதுகூடவே நல்லா நடிக்கிறதுக்கான Scope படத்துல இருந்ததால Super ah perform பண்ணியிருந்தாங்க.
Mysskin- மார்கண்டேயன் கேரக்டர்க்கான உடல்மொழி, ஒரு Style ஆன பேச்சுனு நச்சுனு பொருந்துயிருந்தார்.
@Bala_actor bro ஓட One liners எல்லாம் Super. இளையராஜா அய்யா காமெடி🤣
Charukesh Also good 👍 @ShilpaManjunat கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல Impactful acting.
@editor_prasanna Editing படத்தோட மிகப்பெரிய பலம்💪
Songs & BGM இன்னும் நல்லா இருந்திருக்கலாம். சில இடங்களில் கத்தரி கூட போட்டு இருக்கலாம்.
Overall சில குறைகள் தெரிந்தாலும் கடைசி 30 நிமிஷம் காப்பாத்தி விட்டுடுது.
Logan X retweeted
#AnbilAvan | வம்பில் சிக்கியவன்
ரன்டைம் : 2h 37m
காதல் டு அழகான Married Life, மனைவியோட கனவை நிறைவேற்றணும்னு ஒரு Homestay ஆரம்பிக்கிற ஹீரோ…
அங்கிருந்து பிரச்சினை சூடு பிடிக்கது..
படத்தோட முதல் பாதி கணவன் மனைவி இடையிலான காதல், புரிதல், சின்னச் சின்ன ஈகோ பிரச்சினைகள்னு அழகா நகருது.
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.
ஆனா ஒரு கட்டத்துக்கு மேல கதை வேற ரூட்டுக்கு போகும் போது அடுத்து என்ன நடக்கும்னு நமக்கு நல்லாவே தெரியும்..
ஒரு சாதாரண Homestay பிரச்சினையை எங்கயோ கொண்டு போய், பெரிய ஆக்ஷன் போர்க்களமா மாத்திடுறாங்க..
ஆனாலும் டிவிஸ்ட் எதுவுமில்லை, டெம்ப்ளேட் மூவி ஆயிடுது..
நீளமான திரைக்கதையில, லாஜிக் ஓட்டைகள் வேற இருக்கு..
சுமாரான வில்லன், கடைசி 40 நிமிட ஆக்ஷன் காட்சிகள் கொஞ்சம் bore..
ஒரு தடவை பார்க்கலாம். பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம்..
Logan X retweeted
#SathiyavanSavithiri - Good watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5)
Second Half writing Good Especially Climax Twist 👌🏻👌🏻👌🏻
கடைசி வரைக்கும் எங்கேயும் பெருசா போர் அடிக்காம கொண்டு போய்டாங்க..
Lite ah intimacy scenes மட்டும் இருக்கு…
#SathiyavanSavithiri | First Half | Not Bad 🤝
எதிர்பார்த்ததை விட முதல் பாதி நல்லாவே போகுது..
கீர்த்தி சுரேஷ், மிஸ்கின், பால சரவணன், சாருகேஷ் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்காங்க.
சில வசனங்கள் நல்லா வொர்க் ஆகுது.
குறிப்பாக பால சரவணனின் One-liners எல்லாம் Good.. 😁
Court Room Scenes செமையா இருக்கு 👌🏻👌🏻
பார்ப்போம், இரண்டாம் பாதி எப்படி இருக்குனு..
Logan X retweeted
#OM - watchable ⭐️ ⭐️ ⭐️ (3/5)
ஆந்திராவில் இருந்து சந்தன மரங்களை வெட்டி, வெளிமாநிலங்களுக்குக் கடத்தும் கும்பலைக் கண்டுபிடித்து ஒழிப்பதற்காக, அந்தக் கும்பலுக்குள் உளவாளியாக நுழைகிறார் நாயகன். அதன் பிறகு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் இந்த #OM.
வழக்கமான Spy Thriller கதைக்களத்தில் கொஞ்சம் எமோஷனையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
Dhanush Intro, Mamukka & Sai Pallavi-யின் நடிப்பு, Alaakaa Loova Dance Portion எனப் பல இடங்கள் ரசிக்க வைக்கின்றன. 👍
Indran கொஞ்ச நேரமே வந்தாலும், தனது நடிப்பால் எமோஷன்களை அழகாகக் கடத்திவிடுகிறார்.
Veezha Veera Theatre Blast அந்தக் காட்சி, குறிப்பாக இரண்டாம் பாதியில் நம்மை வெகுவாக ரசிக்க வைத்தது.
Sai-யின் இசை வழக்கம்போல மிரட்டல்! முதல் பாதியைவிட இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் அதன் நீளம். கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும் ரசிக்க வைக்கும் ஒரு Spy Thriller..
ரொம்ப எதிர் பார்க்க வேண்டாம் மக்கா!
#Om | First Half | 🆗
Interval Portions good 👍
Need Big second half 🤝



























































