Packiarajan Se (@PackiaSe) header
Packiarajan Se (@PackiaSe) profile picture

செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி

Thamizhar Naadu
Joined June 2023
Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)Photo by Packiarajan Se (@PackiaSe)
சீமான் அண்ணன் போடியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளில் ஊரில் பள்ளிகள் ஆயிரம் இருக்க அம்பை பள்ளியில் முதல்வர் குழந்தைகள் நாள் கொண்டாட போகிறாராம்.. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகபோகிறது திடிரென மாஞ்சோலை மக்களை அமைச்சர்கள் படையோடு முதல்வர் சந்திக்க போகிறாராம்.. அங்கே போய் சர்ப்பரைசாக அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கயிருக்கிறாராம்.. கடந்த தேர்தலிலும் மதுரை வந்து இறங்கியவர் அங்கே பிரச்சாரம் செய்யாமல் காரைக்குடி வந்து பிரச்சாரம் செய்தார்.. சட்டசபைக்குள் சீமான் அண்ணன் இருக்கக்கூடாது எவ்வளவு மெனக்கெடுகிறார் விஜய்.. இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு!!!
89
428
12
1,099
25,795
தென்மாவட்டத்தில் இருக்கும் ஏறக்குறைய 39 தொகுதிகள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பின்பற்றும் மக்கள் அதிகம் வாழும் தொகுதிகள் அதில் அதிகமான தொகுதிகள் தவெக வென்றிருக்கிறது.. அந்த மக்களுக்கு தவெக தரும் மரியாதை என்னவென்றால் முதல்வரோ அவருக்கு அடுத்தப்படியாக இருப்பவர்களோ பசும்பொன் வராமல் புறக்கணித்ததோடு ஐயா தேவரின் முழு பெயரைக்கூட குறுப்பிடாமல் நினைவு கூறுவது தான்… தேவை தான் மக்களே உங்களுக்கு!!!
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர். மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
51
192
14
475
23,251
Packiarajan Se retweeted
தவெக அரசு அமைந்த ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்.. @tnpoliceoffl ன் செயல்பாடு மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌 பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் புகார் கொடுத்தது யார் ? தெரியாது Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ? தெரியாது முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ? தெரியாது வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ? தெரியாது பம்மல் காவல்துறை- சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ? தெரியாது Instagram கமெண்ட் தொடர்பான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது யார் JC யா ? DC யா, AC யா ? தெரியாது சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ? தெரியாது புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR பதியப்பட்டதா ? தெரியாது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன் Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ? தெரியாது கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ? தெரியாது மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ? தெரியாது கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ? தெரியாது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பம்மல் காவல்நிலையம் சார்பில் முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ? தெரியாது Night Duty- போலீஸார் வாடகைக்காரை எடுத்துச்சென்று, கலையரசனை கடத்தி வர சென்றது T-4 Shankar Nagar, Pammal SHO-விற்கு தெரியுமா ? தெரியாது முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ? தெரியாது கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார் யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ? தெரியாது சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ? தெரியாது இப்படி இந்த சம்பவத்தில் நடந்த எதுவுமே யாருக்கும் தெரியாது.. எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயல் 👏👏 வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
53
1,035
37
1,923
62,968
தமிழ்நாட்டுக் கொடியை உலகெங்கும் கொண்டு செல்வோம்…
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! ( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 ) உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இந்திய ஒன்றிய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை. தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் பெற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது. ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்! அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம். தமிழ்நாடு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். புரட்சி வாழ்த்துகளுடன், - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
10
304
1
780
4,959
ஏ! முதல்வர் விஜய் cuteல..!!!
🤖 Made with AI
31
355
7
805
24,141
தம்பி கலையை இறுதி ஈழப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலிருந்து அறிவேன். டெல்லி பல்கலைகழக மாணவராய் இருந்து தமிழர்களின் அணைத்து பிரச்சனைக்கும் தலைநகரிலிருந்து போராடி தன்னாலான எல்லா முயற்சியும் செய்தவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன்க்கு பிறகு தமிழ் அறிவுத்தளத்தில் குறுப்பிட வேண்டிய ஒருவர். சித்தாந்த முரண்களை கடந்து அரசியலில் இயங்கும் எல்லா கட்சிக்கும் அதன் தலைமைக்கும் அறிந்தவர். அவரை தவெக அரசின் காவல்துறைக்கு யார் என்று தெரியவில்லை. எந்த பின்புலத்தையும் விசாரிக்காமல் போலி இன்ஸ்டா முகப்பு படத்தை வைத்து கைது செய்யும் அளவிற்கு உளவுத்துறையின் லட்சணம் இருக்கிறது. கோமாளிகளின் ஆட்சியில் அறிவர்களுக்கு இது தான் நிலை.
பேராசிரியர் தம்பி கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்துவதா? காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான அன்புத்தம்பி கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாநிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன். மேலும் புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தம்பி கலையரசன் எழுதியுள்ள கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன? பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் தம்பி கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது. அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் நாம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனமாகும். இதையேதான் இந்திய ஒன்றிய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்த ஓர் இன்ஸ்டாகிராம் பதிவுக்காக அதிகாலையிலேயே இவ்வளவு வேகமாகச் செயல்படும் காவல்துறை, என் மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் அவதூறுகளில் இதே வேகத்தைக் காட்டாதது ஏன்? என் மீதான அவதூறுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டதே ஏன்? அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது? தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? காவல்துறை வெளிப்படையாக விளக்குமா? எங்களையும் எங்கள் கட்சியினரையும் தவெகவினர் மிகக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை எல்லாம் எதில் சேர்ப்பது? அவற்றின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆளுங்கட்சியினரைப் பற்றிய பதிவென்றால் உடனடி நடவடிக்கை; ஆளுங்கட்சியினர் பிறரை இழிவுபடுத்தினால் அமைதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இருக்கிறதா? அவதூறையும் ஆபாசத்தையும் யார் பரப்பினாலும் அதனை ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் விமர்சனத்தையும் மாற்றுக்கருத்தையும் குற்றமாகக் கருதி, ஒரு குற்ற வழக்கை உருவாக்க, போலி கணக்கு மூலம் ஒருவரை அதிகாலை அழைத்துச் சென்று மிரட்ட முற்படுவது, சனநாயகதிற்கு விடுக்கப்படும் சவாலாகும். ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவது காவல்துறையின் கடமையல்ல; சட்டப்படி மக்களின் உரிமைகளைக் காப்பதே அதன் கடமை! ஒன்றிய பாஜக அரசுபோல் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்துவதுதான் தவெகவின் நல்லாட்சியா? தம்பி ஜோசப் விஜயின் தூய ஆட்சியா? இவ்விவகாரத்தில் முந்தைய அரசுகள் குப்பை என்றால், இந்த அரசு அழுகிய குப்பையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ஒன்றிய பாசக அரசைபோல் அடக்குமுறையை ஏவிவிட்டு, ஜனநாயக விரோதப்போக்கை கையிலெடுப்பது வெட்ககேடானது! தம்பி கலையரசன் அளித்துள்ள புகார் மீது நடுநிலைமையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்கை இயக்கியவர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்ற நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையும் விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறிவுத்தளத்தில் இயங்குவோரையும் பொதுவெளியில் கருத்துரைப்போரையும் அச்சுறுத்தும் இத்தகைய அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். புகார் அளிப்பவரின் கட்சியைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மக்களாட்சி விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
4
187
1
456
4,570
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை! ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா? தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா? ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு? சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்! தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்! ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது! இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்! @CMOTamilnadu @TVKVijayHQ
114
809
22
1,689
62,135
ஜூனியர் விகடன் பேட்டியில் நாம் தமிழர் கார்த்திகா: வன்னி அரசு குற்றச்சாட்டை புறந்தள்ளுகிறோம் - ஜூ.வி பேட்டியில் கார்த்திகா, நாம் தமிழர் கட்சி 👉 vikatan.com/government-and-p… #JuniorVikatan #Magazine
5
112
1
384
5,004
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை! 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும். தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும். இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே? இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை! ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
24
453
6
809
21,441
அதிமுக அமைச்சர்கள் விட மோசமாக இருக்கிறார்கள்… தற்குறிகள் for a reason!!
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
10
220
5
592
5,944
Packiarajan Se retweeted
திருவாடானை பகுதியில் உள்ள மணிமுத்தாறு முறையாகப் பராமரிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சுத்தப்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த சீமான், நேரடியாக ஆற்றில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். #Seeman | #NTK | #Puthiyathalaimuraitv
34
615
16
1,576
43,015
Packiarajan Se retweeted
VIDEO | Sivaganga, Tamil Nadu: "Welfare schemes can also amount to bribery," says NTK chief Seeman targetting TVK government on law and order issues. (Full video available on PTI Videos - ptivideos.com) #TamilNaduNews #Sivaganga
1
58
1
140
9,678
இராமநாதபுரம் மாவட்டம் (தொண்டி) மணிமுத்தாறு தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்தார் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். #NTK_Restoring Rivers
1
172
1
483
2,919
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்திய நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு.
6
290
8
607
11,739
I totally agree with the voice of karnataka CM. In Karnataka, Kannadigas rights, respect, and opportunities in private companies (including IT) cannot be deliberately ignored. “Son of the soil” claims deserve serious attention when injustice happens to localities. Naam Tamilar Katchi has consistently proposed Priority in employment for Tamils in both government and private sectors in Tamil Nadu. தேசிய கட்சியிலிருந்து வந்தாலும் அந்த முதலமைச்சர் மண்ணின் மைந்தர்களுக்காக பேசுகிறார்.. நம்ம ஊருலயும் தான் இருக்கானுங்கலே…
ಬೆಂಗಳೂರಿನ ಐಟಿ ಕಂಪನಿಗಳಲ್ಲಿ ಕನ್ನಡಿಗರಿಗೆ ಉದ್ಯೋಗಾವಕಾಶಗಳಲ್ಲಿ ಅನ್ಯಾಯವಾಗುತ್ತಿದೆ ಎಂಬ ದೂರುಗಳು ಕೇಳಿಬರುತ್ತಿರುವುದು ವಿಷಾದನೀಯ. ಕನ್ನಡ ಮಾತೃಭಾಷೆ ಇರುವವರನ್ನು ಕಡೆಗಣಿಸಲಾಗುತ್ತಿದೆ ಎಂಬ ವಿಷಯವನ್ನು ಸರ್ಕಾರ ಗಂಭೀರವಾಗಿ ಪರಿಗಣಿಸಿದೆ. ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಕನ್ನಡಿಗನೇ ಸಾರ್ವಭೌಮ. ಕನ್ನಡಿಗರ ಹಕ್ಕು, ಗೌರವ ಮತ್ತು ಅವಕಾಶಗಳನ್ನು ಯಾವುದೇ ಕಾರಣಕ್ಕೂ ಕಡೆಗಣಿಸಲು ಸರ್ಕಾರ ಅವಕಾಶ ನೀಡುವುದಿಲ್ಲ. ಜಗತ್ತು ಬೆಂಗಳೂರನ್ನು ಭಾರತದ ತಂತ್ರಜ್ಞಾನ ರಾಜಧಾನಿಯಾಗಿ ನೋಡುತ್ತಿದ್ದು, ನಮ್ಮ ಕನ್ನಡಿಗರ ಪ್ರತಿಭೆ, ಕೌಶಲ್ಯ ಮತ್ತು ಸಾಮರ್ಥ್ಯದ ಬಗ್ಗೆ ನಮಗೆ ಅಪಾರ ಹೆಮ್ಮೆಯಿದೆ. ಕನ್ನಡಿಗರನ್ನು ಯಾವುದೇ ಖಾಸಗಿ ಸಂಸ್ಥೆ ಉದ್ದೇಶಪೂರ್ವಕವಾಗಿ ಕಡೆಗಣಿಸಿರುವುದು ಕಂಡುಬಂದರೆ, ಸರ್ಕಾರ ಸೂಕ್ತ ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳಲಿದೆ. ಕನ್ನಡಿಗರ ಹಿತಾಸಕ್ತಿಗೆ ಧ್ವನಿಯಾಗಿ, ಅವರ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಸ್ಪಂದಿಸಲು ಸರ್ಕಾರ ಸದಾ ಬದ್ಧವಾಗಿದೆ. - ಸನ್ಮಾನ್ಯ ಶ್ರೀ @DKShivakumar ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳು, ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ
19
203
10
707
28,734
சனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும், காவல்துறையின் அத்துமீறல்களும்! நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா அவர்களின் நேர்காணல் 🔗 youtu.be/jlaw33Hq4dM #EngalDesam #Karthika #NTK #TVK #TamilNaduPolitics #Trending #TamilnaduPolice #Dharapuram #TVKVijay
2
59
95
874
தமிழக வெற்றி கார்ப்ரேட் கழகம்…
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா? அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
15
264
684
3,970
Packiarajan Se retweeted
இன்று 24-10-2026,ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இசை மதிவானன் மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட பொறுப்பாளர்களை கைது செய்த, ஆளும் தவெக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
14
110
2
271
4,818
Packiarajan Se retweeted
NTK functionaries stated that the party has opposed the SIR exercise from the very beginning.
DMK Parandhaman told reporters that he boycotted the meeting and staged a walkout, raising questions over when and how the irregularities in the SIR process would be rectified.
1
46
142
2,956
தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? @CMOTamilnadu @TVKVijayHQ காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது. கடந்த 29.09.2026 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன்? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா? தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையானத் துறையாகும். அத்துறையில்கூடத் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் விஜய் அடிபணிந்துள்ளது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தலைகுனிவும், அவமானமுமாகும். தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும். ஆகவே, இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
154
552
45
1,043
92,029