பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
ஏதாவது பிரச்சனைனா கலெக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு, உடனே ஆக்ஷன் எடுப்பாங்க...!
பிரச்சனை நடந்ததே கலெக்டருக்கு தான்...!!
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
சிறைபிடிக்கப்பட்ட என் விழிகள் தேடுவதோ உன் முகம் தான்!!
அந்தக் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
ஆயிரமாயிரம் கவிதைகளும் உனக்கானதுதான்…!!
#Rooh_Hayati ♾️❤️🔥🌻
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
கணவன் மனைவி ஒற்றுமை என்பது விட்டுக்கொடுப்பதில் இருக்கிறது..! ❤️
கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி விருப்பங்களும், சுதந்திரங்களும் இருப்பது இயல்புதான். ஆனால், அந்தச் சுதந்திரம் துணையின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாக மாறிவிடக் கூடாது.
ஒருவருக்குப் பிடிக்காத விஷயத்தை மற்றவர் புரிந்துகொள்வதும், ஒருவர் தவறான புரிதலில் இருந்தால் மற்றவர் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதும் அவசியம்.
எல்லாவற்றிலும் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டியதில்லை; அதே நேரத்தில் எல்லாவற்றிலும் நான் நினைப்பதுதான் சரி என்றும் பிடிவாதம் பிடிக்க வேண்டியதில்லை.
உறவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல; இருவரின் மனமும் காயப்படாமல் உறவு வெற்றி பெறுவதுதான் முக்கியம்!
அன்பு என்பது உரிமை கொண்டாடுவது மட்டுமல்ல… ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதும்தான்..!
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
எழில் கொஞ்சும் #கடலூர் 😍😍
சிட்டி லைஃப் ஸ்டைல்ல வாழ்ந்தாலும் மனசுக்கு அமைதி தரது என்னவோ அது கிராமத்து மக்கள் வாழ்க்கை தான் 😍😍
#சிதம்பரம்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
போஸ்ட் நல்லா ரீச் ஆகி அதிகமா லைக் வாங்கனு மா அப்போ கமெண்ட் க்கு வாங்க 👇
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
தூக்கம் இல்லாதவனுக்கு
இரவு நீண்டதாக தோன்றும்
கலைத்துப் போனவனுக்கு
பயணம் நீண்டதாக தோன்றும்
அதுபோல வாழ்வின்
உண்மையான பாதையை அறியாதவனுக்கு
பிறவி சுழற்சியும் முடிவில்லாததாக நீண்டு கொண்டே இருக்கும்
#ஓம்_நமசிவாய நமஹ 🔥🙏🙏🙏
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
கையில் எதுவும் இல்லாமல் வந்து
கடைசியில் வெறும் நினைவுகளாய் மறையும் வாழ்க்கைக்குத் தான்
இத்தனைத் தேடல்களும்..
ஏமாற்றங்களும்..
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மாறன் சகோதரர்கள் சொத்துத் தகராறு பற்றி சற்று நீண்ட பதிவு பொறுமையுடன் படிக்கவும் ✅
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் என்ன?
கடுமையான நிதிமுறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் 2025ல் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார்
இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது சன் நெட்வொர்க் லிமிடெட். வழக்கமாக மற்ற பரபரப்புச் செய்திகளை வெளியிடும் அந்த நிறுவனத்தில் குற்றச்சாட்டு நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது மற்ற ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகி இருக்கிறது.
சன் நெட்வொர்க்கின் தலைவரான கலாநிதி மாறன், தனது மனைவி மற்றும் சிலருடன் சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக, கலாநிதி மாறனின் சகோதரரும், முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணி கண்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், மாறன் சகோதரர்களிடையே சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறன் சகோதரர்கள் இடையே என்ன பிரச்சனை?
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி மாறன். இவரது இரண்டு மகன்களில், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கருதப்படும் கலாநிதி மாறன் சன் நெட்வொர்க், சன் பிக்சர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி போன்றவற்றை நிர்வகிக்க, தயாநிதி மாறன்; தன் தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதன் தொடர்ச்சியாக, 2009 முதல் 2011 வரை ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் தயாநிதி மாறன்.
2ஜி வழக்கின் காரணமாக 2011ம் ஆண்டு தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது மத்திய சென்னை மக்களவை உறுப்பினராகவும், திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மீடியாக்களில் மாறன் சகோதரர்கள் எனக் குறிப்பிடப்படும் அளவிற்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர். இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்தபோதும், ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர்.
ஆனால், பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் பிரச்சினையும் சேர்ந்தே இருக்கும் என்பதை நிரூபிக்கும் வரையில், கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமாக இருந்து வந்த இந்த சகோதரர்களிடையே சமீபகாலமாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசல்புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இருதரப்பும் அதனை உறுதியும் செய்யவில்லை, மறுக்கவுமில்லை.
இந்நிலையில், சன்டிவி பங்குகளில் முறைகேடு செய்து விட்டதாக கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உட்பட சன் நெட்வொர்க்கைச் சேர்ந்த ஏழு பேர் மீது, தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணி கண்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் முழு விவரம்:-
தயாநிதி மாறன் அனுப்பிய அந்த நோட்டீஸ், ஜூன் 10, 2025 என தேதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக மணி கண்ட்ரோல் செய்தி தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு சட்டவழக்கு ஆதரவு நிறுவனம் மூலம் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட நோட்டீஸில்,
‘2003ம் ஆண்டு நிறுவப்பட்ட அசல் கட்டமைப்பிற்கு சன் நிறுவனத்தின் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளது. அதில்,
"நம்பர் 1 மற்றும் 2 (கலாநிதி மற்றும் காவேரி மாறன்) ஆகிய உங்கள் இருவரின் தனிப்பட்ட லாபத்திற்கு நிறுவனமும் அதன் சொத்துகளையும் முழுமையாக கைப்பற்றும் நோக்கில், கலாநிதி மாறன்; நம்பர் 2 முதல் 8 வரை உள்ள உங்கள் அனைவருடனும் சூழ்ச்சி புரிந்து, ஒரு மோசடியும் கபடமும் நிறைந்த திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். உங்கள் திட்டமிட்ட மோசடித் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு பகுதியாக, குடும்பத்தின் சூழ்நிலையை—குறிப்பாக என் வாடிக்கையாளர் தந்தையின் (முரசொலி மாறன்) உடல் நலன் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில்—தவறாகப் பயன்படுத்திய நிலையில், அவர் எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என்பதற்கான அச்சத்தால் முழு குடும்பமும் கவலையில் இருந்த நேரத்தில்,
நீங்கள் (நம்பர் 1 மற்றும் 2) உங்கள் முதல் சட்டவிரோத நடவடிக்கையை செப்டம்பர் 2003-ல் தொடங்கியுள்ளீர்கள்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக,
‘கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் இருவரும் தங்களது தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தின் சொத்துக்களையும் கையகப்படுத்த தந்திரமான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும்,
1 (2)
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
#OM கேரளாவிலும் பட்டையைக் கிளப்பும் புரமோஷன் 🔥
கிடைக்கிற கேப்ல எல்லாம் புரமோஷனை தட்டி தூக்குறாங்க 🔥
நவம்பர் 20 முதல் திரையில் 😎 – at Kadavur, India































