Subathra Devi (@SubathraDevi_) header
Subathra Devi (@SubathraDevi_) profile picture

National Office Bearer, Shakthi Movement, Indian National Congress

Joined May 2021
Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)
ஓட்டு திருட்டு, நம் நல்வாழ்வின் திருட்டு! நம் எதிர்காலத்தின் திருட்டு!! ஓட்டு திருட்டுக்கு எதிரான மாநில மாநாட்டுக்கு அனைவரும் வருக! #VoteChori #ஓட்டுதிருடாபதவிவிலகு #மாநிலமாநாடு
71
234
19
590
225,346
கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் சில 'குற்றங்கள்' சுட்டி காட்ட படுகின்றன. ஒரு பக்கம் திமுக செய்த தவறுகள் இன்னொரு பக்கம் தவெக செய்த தவறு என்று திமுக அதிமுக ஐடி விங் சொல்வது. திமுக தவறுகள்: 400 கோடி அளவில் கல்வி துறையில் ஊழல் மற்றும் அன்பில் மகேஷ் ரெய்டு+கைது, ஆயிரக்கணக்கான கோடி ஊழலில் K N நேரு இடங்களில் ரெய்டு. தவெக தவறுகள்: தவெக பெண் MLA தனது குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்வது, முதல்வர் மாலை 5 மணிக்கு பிறகு வீட்டிற்கு சென்று கதவை சாற்றி கொள்வது (எடப்பாடி கூறி இருக்கிறார், எவ்வளவு பெரிய குற்றம்? ) ஆக திமுக செய்த குற்றத்தின் மாபெரும் வீரியத்தை ஒரு பெண் மீது திருப்பி தப்பிக்க பார்க்கிறது திமுக. உடந்தையான பாஜக ஆதரவு தினமலரில் இதுதான் உலக மகா குற்றம் போல செய்தி போட்டு கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசியல் கூட்டத்திற்கு தாய்மார்கள் குழந்தையை தூக்கி கொண்டு வருவது பிரச்சினை இல்லை. குழந்தைகளை கையில் தூக்கி கொண்டு வீட்டில் நேரங்காலம் இல்லாமல் வேலை செய்வது பிரச்சினை இல்லை. கைக்குழந்தையுடன் அடுத்து கர்ப்பம் தரிப்பது பிரச்சினை இல்லை. அந்த குழந்தையுடன் MLA சீட்டில் ஒரு பெண் வந்து அமர்ந்து விட்டால் மட்டும் பிரச்சினை. அரசியலில் இருந்து குழந்தைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் அவர்கள் அப்புறப்படுத்த நினைப்பது பெண்களை. மாத சுழற்சி என்பார்கள், தீட்டு அல்லது ஓய்வு என்பார்கள், குழந்தை பாவம் என்பார்கள், புகழாசை என்பார்கள், எதாவது ஒரு காரணம் கண்டு பிடித்து வீட்டில் பெண் அமர வேண்டும், அல்லது அவள் ஒரு ஆண் போல நடந்து கொள்ள வேண்டும். அவள் பெண் போல குழந்தையுடன் இயல்பாக நடந்து கொள்வதை பார்க்க இவர்களுக்கு அவ்வளவு எரிச்சல். பெண் ஆண் அல்ல. அவள் மனிதி. ஆண் மட்டும் மனிதன் அல்ல. பெண்ணும் சரி நிகரான மனிதியே தான். மனிதியை அரசியலில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தால் பழகி கொள்ளுங்கள். உங்களால் முடியும். ராக்கெட் விட முடிந்த உங்களால் இது நிச்சயம் முடியும். கீழே உள்ள பெண் 3 வருடமாக தனது குழந்தையை அரசியல் தளத்திற்கு தொடர்ந்து அழைத்து வந்திருந்தார். உலகம் இரண்டாக பிளக்காமல், அதே போல சுற்றி கொண்டு தான் இருக்கிறது. அமைதியாக போய் தண்ணீர் குடியுங்கள். காங்கிரஸ் சக்தி இயக்கத்தின் பெண்களுக்கான அரசியல் பயிற்சியில், மகிழ்ச்சியாக குழந்தையுடன் வந்து அரசியல் செய்ய பல பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அடுத்து சில பல வருடங்களில், உங்கள் மனம் பல பல்லவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். புலம்புவதை நிறுத்தவும். முக்கியமாக, குழந்தை வெறும் தாயின் பொறுப்பு மட்டுமல்ல, அது சமூகத்தின் பொறுப்பும் கூட‌. ஒரு பெண், குழந்தையுடன் இருந்தால் அந்த அறையில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு பொறுப்பு தான். #ஆணாதிக்கம் #பெண்கள் #சக்திஇயக்கம் #ShaktiAbhiyan #Congress
2
1
8
1,141
Subathra Devi retweeted
📍 इंदिरा भवन, नई दिल्ली इस रविवार रामलीला मैदान में होने वाली महारैली की तैयारियों को लेकर IYC प्रभारी @ManishSharmaIYC जी और सभी राष्ट्रीय पदाधिकारियों (NOBs) के साथ आयोजन समिति की महत्वपूर्ण बैठक हुई। तैयारियां जोरों पर हैं, साथियों में जोश है और संकल्प मजबूत है✊ इस रविवार, सबका रास्ता रामलीला मैदान की ओर🔥
32
101
1,070
Subathra Devi retweeted
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ஏன் பதவிநீக்கம் செய்யக் கோருகிறோம்? நமது வாக்காளர் பட்டியலில் என்ன பிரச்சனை உள்ளது? இதன் பின்னணியில் உள்ள முழு கதை என்ன? விடைகளுக்கு இதைப் பாருங்கள்
4
14
32
1,225
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக். ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு... என்ன நடந்துச்சுன்னா : தினக்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூவீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு. ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ். அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுறாரு. கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு. இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு. அடுத்த என்ன பண்ணாங்க தெரியுமா? அப்படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்! சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க. ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்! போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க. சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்படிக் பாராட்டுறதுன்னே தெரியல! கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️ #keralapolice #police #Congress
94
574
22
3,225
91,235
தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்கு காவல்துறை என்ற ஒரே துறை போதும். காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறையை தவிர வேறு எது செய்தாலும் அந்த காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேரா.கலையரசன் விஷயத்தில் மட்டும் எத்தனை இடங்களில் காவல்துறை முறை தவறி இருக்கிறது பாருங்கள்! பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் புகார் கொடுத்தது யார் ? தெரியாது Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ? தெரியாது முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ? தெரியாது வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ? தெரியாது பம்மல் காவல்துறை- சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ? தெரியாது Instagram கமெண்ட் தொடர்பான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது யார் JC யா ? DC யா, AC யா ? தெரியாது சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ? தெரியாது புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR பதியப்பட்டதா ? தெரியாது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன் Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ? தெரியாது கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ? தெரியாது மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ? தெரியாது கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ? தெரியாது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பல்லாவரம் காவல்நிலையம் சார்பில் முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ? தெரியாது Night Duty- போலீஸார் வாடகைக்காரை எடுத்துச்சென்று, கலையரசனை கடத்தி வர சென்றது T-4 Shankar Nagar, Pammal SHO-விற்கு தெரியுமா ? தெரியாது முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ? தெரியாது கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார் யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ? தெரியாது சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ? தெரியாது இப்படிப்பட்ட காவல்துறை எப்படி க*ஞ்சா புழக்கத்தை தடுக்கும்? சாதி வன்கொடுமைகளை தடுக்கும்? எப்படி ரவுடித்தனத்தை தடுக்கும்? எப்படி குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்? மேற்சொன்னவை நடக்காமல் மக்களுக்கு அரசு மீது மிகுந்த மன வருத்தம் வரும்தானே? காவல்துறை சீர்திருத்தம் பற்றி ஹென்றி திபேன் போன்ற எவிடன்ஸ் கதிர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட நேர்மையான PUCL போன்ற அமைப்புகளை சமூக ஆர்வலர்களை வைத்து ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் ஆலோசனையின் பேரில் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு எதாவது செய்ய முடியும். காவல்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் @CMOTamilnadu வெறும் IPS IAS அதிகாரிகள் ஆலோசனையில் செயல்பட்டால் எந்த நல்லதும் நடக்காது.
3
5
1
25
2,610
தங்கமகள் கார்த்திகா மீது பொறாமையில். வெந்து கொதிக்கிறார் இந்தியப் பெண்கள் அணிப்பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்.. அவருக்குப்பின்னால் தினமலர் தொடங்கி தேசிய அளவில் பெரும்கூட்டமிருக்கிறது மன உளைச்சலுக்குள்ளாக்கி கார்த்திகாவை இந்திய அணியைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி நடக்கிறது.. எந்த ஆதரவுமில்லாமல் தன் திறமையை மட்டுமே நம்பிக்களமிறங்கும் கார்த்திகாவைக் காப்பாற்றி களத்தில் நீடிக்கவிடுவது நம் கடமை.. முடிந்தவரைக்கும் கீழே உள்ள படத்தைப் பரப்புங்கள்.. பகிருங்கள் Via விஜயகுமார் #WeSupportKarthiga #KannagiNagar
6
146
3
301
5,271
ஆர்எஸ்எஸ் பாஜக மோடி தேர்ந்தெடுத்த ஒரு ஊழல் பெருச்சாளி SIR ஓட்டு திருடன் இந்த தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ₹2 கோடி லஞ்சப் புகார் - கேரளா அரசு மறுவிசாரணைக்கு உத்தரவு! இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையராக (CEC) இருக்கும் ஞானேஷ் குமாருக்கு எதிராக, அவர் கடந்த காலங்களில் கேரளா மாநில பொதுப்பணித்துறை (PWD) செயலாளராக இருந்தபோது ₹2 கோடி லஞ்சம் கோரியதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி விபரம்: 📍 கடந்த 2004-2006 காலகட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் கேரளாவில் 'கேரளா மாநில போக்குவரத்து திட்டம்' (KSTP) செயல்படுத்தப்பட்டது. 📍 அப்போது PWD செயலாளராக இருந்த ஞானேஷ் குமார், சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் பில்களை அனுமதிப்பதற்காக ₹2 கோடி லஞ்சம் கேட்டதாக காங்கிரஸ் தலைவர் மலையின்கீழு வேணுகோபால் மற்றும் ஒப்பந்ததாரர் சாஜன் பி.ஓ. ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். 📍 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பில்கள் வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த நிறுவனத்தின் மலேசிய நாட்டு திட்ட மேலாளர் லீ சீ பென் தற்கொலை செய்துகொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: ஏற்கனவே 2006-ல் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு மூடப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மீண்டும் விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (VACB) கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான இந்த பழைய ஊழல் புகார் மறுவிசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BreakingNews #GyaneshKumar #KeralaNews #ElectionCommission #VigilanceInvestigation #VigilanceProbe #CurrentAffairs #KeralaPolitics
5
10
440
ஹலோ எடப்பாடி சார், உங்க புரட்சி தலைவி அம்மா, வாரம் ஒரு நாள், ஒரு மணி நேரம் தான் தலைமை செயலகத்துக்கே வருவாங்க.. நீங்கல்லாம் பேசலாமா? 13 பேரை உங்க அரசு சுட்டதையே நீங்க டிவில பார்த்து தான் தெரிஞ்சிகிட்டீங்க.. சுடப்பட்டவங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் கூட அனுப்பாம காலியா ஆம்புலன்ஸ நிறுத்தி வச்சிருந்தீங்க.. நீங்கல்லாம் ஆட்சியை பற்றி பேசலாமா? முதல்வர், இன்னும் நீங்க ஆசை படுற மாதிரி ராவெல்லாம் உட்கார்ந்து வேலை பார்த்தா, வேகமா ஃபைல் பார்த்து, உங்க ஊழல் வழக்கெல்லாம், சீக்கிரமே வெளியே வந்துடும் பரவாயில்லையா? உங்க ஆட்சியில 25 கோடிக்கு ஒரு தடுப்பணை கட்டினீங்க. அது ஒரே மழையில பிஸ்கட் கணக்கா உடைஞ்சு ஆத்தோட போயிடிச்சி.. நீங்க அணைய கட்டினதே ஆட்டைய போடத்தானே? அப்படி ஒரு ஆட்சி லட்சணம் உங்களோடது. ஜெயிலுக்கு போறதுக்கு ஆசைய பாரு 😂
3
28
2
92
6,100
Subathra Devi retweeted
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஊருக்குள்ள ஜோக்கியன் வேடம் போட்டு சுத்துர ஒருத்தனை சம்மன் குடுத்து அழைத்து விசாரித்தது போலீஸ்.. விசாரித்தவர்கள் போலீஸ் அதிகாரி தேன் மொழி மேடம் உட்பட ஜெம்வீரமணி போக்சோ வழக்கு SIT Team.. போனவன் வெளீல அரசியல் கட்சிதலைவன் வேசம்.. ஊருக்குள்ள கட்டப்பஞ்சாயத்து தலைவன்... வணக்கத்துக்கு,போற்றுதலுக்கு,மரியாதைக்குரிய சாந்தி மேடம் வரச்சொன்னதும் சொம்பத்தூக்கிட்டு பஞ்சாயத்து செய்ய ஓட்டலுக்கு போனவன்… ஜெம் வீரமணி சில்லறையை பொறுக்கினவங்க பலர்.. அதில் இவனும் ஒரு சில்லறை.. பேரு ஜான்பாண்டியன் @JohnPandianTMMK.. இவனால் சேறு சமூகத்துக்கு.. பெரிய மயிர் நீத்தா உயிர் வாழா கவரிமான்.. இவரு விசாரணைக்கு போனதை மூடி மறைக்கிறார்களாம் ஊடகங்கள்..
4
50
1
152
16,061
Subathra Devi retweeted
Who is R Premkumar? News Tamil 24×7 director arrested in alleged ₹5,000-crore fraud case Investigators are probing allegations that money collected from depositors was diverted to personal accounts and other business ventures, including alleged purchases of hotels, resorts and theatres. News Tamil 24×7 director R Premkumar has been arrested in connection with an alleged ₹5,000-crore financial fraud involving the Bharat Lajhna Multi-State Housing Cooperative Society, which he founded. @Subash_tweetz @Sree_soman #Keralam #TamilNaduGovt #BLM #TVK #TVKVijay‌ thesouthfirst.com/tamilnadu/…
11
206
11
350
20,993
பக்கா ஜாதிய திரைப்படமான எஜமான் திரைப்படத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை பற்றி ஒரு காட்சி வைத்திருப்பார்கள். அரசு சார்பாக நில உச்சவரம்பு சட்டத்தை சொல்லும் அதிகாரிகளை வில்லனாகவும் அரசு புடுங்கிட்டு போய்ரும் என்பதை தெரிந்து கொண்டு சூதானமாக அதை ஏழை பாழைகளுக்கு எழுதி வைத்து அந்த பத்திரங்களை தானே பத்திரமாக வைத்திருக்கும் கந்தவேல் வானவராயனை ஹீரோவாகவும் காட்டி எடுத்து இருப்பார்கள். இந்த காட்சி ஏதோ ஆர்.வி. உதயகுமாரின் கற்பனையில் தோன்றிய காட்சி அல்ல. அரசு நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்திய போது எல்லா பண்ணையார்களும் செய்த தில்லாலங்கடி வேலைதான் அது. பல பாமர மக்கள் தாங்கள் உழுது கொண்டிருக்கும் நிலம் தங்கள் பெயரில் இருப்பது கூட தெரியாது அடிமையாக உழைத்த ஆட்களும் உண்டு. எவனாவது ஒரு பண்ணையார் ஏழைகளுக்கு சொத்தை எழுதி வச்சேனு சொன்னா சத்தியமா அவன் அரசாங்கத்த ஏமாத்திருக்கானுதான் அர்த்தம். ஆக டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோய் ☺☺ - Che.Karthikeyan, Communist
11
75
3
380
33,856
இந்தச் செய்தி தவறாகப் புரிந்து பரப்பப்படுவதால், விளக்கமளிக்கிறேன். ஜெயலலிதாவுக்குப் பிறகு, 2016–17 ல் தமிழகத் தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் IAS, தனது மகனுடன் தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு சுமார் ₹520 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தப் பணியாளர் விநியோக ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒப்பந்த விதிகள் மாற்றப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அறப்போர் இயக்க புகார்கள் கூறின. அரசு ஒரு பணியாளருக்கு மாதம் சுமார் ₹18,000 வழங்கும் நிலையில், நிறுவனம் அவருக்கு வெறும் ₹6,000 மட்டுமே வழங்கி, மீதித் தொகையை வைத்துக்கொண்டது. தமிழக அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் பணியாளர்களைப் பெறும்போது, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் இடையிலான முறைகேடுகளுக்கு வாய்ப்பு ஏற்படலாம். தொழிலாளர்கள், பொதுமக்கள், அரசு என மூன்று தரப்பினரும் பாதிக்கப்படலாம். அரசு தொடர்பான பணிகளை நான்காகப் பிரிக்கலாம் 1. நிரந்தர அரசுப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) உள்ளிட்ட விதிகளின்படி, நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் தகுதியான வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையிலும் வேலை வழங்கப்படலாம். இவற்றை வழக்கமான அவுட்சோர்சிங் பணிகளுடன் குழப்பக் கூடாது. 2. தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் பணிகள் தூய்மைப் பணியாளர்கள், வாட்ச்மேன்கள், செக்யூரிட்டி பணியாளர்கள் உள்ளிட்டோர் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். 3. ஆலோசகர்கள் மற்றும் அறிவுசார் பணிகள் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தற்காலிகத் தேவைகளுக்காக ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர். உதாரணமாக, பத்திரப் பதிவுத்துறையில் புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட சில சேவைகள் டிசிஎஸ் (TCS) போன்ற நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. 4. பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு சிட்கோ (SITCO), டான்சி (TANSI) போன்ற நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு, அவற்றுக்குப் பொருந்தும் விதிமுறைகளின்படி நடைபெறும். டிஎன்பிஎஸ்சி மூலமான ஆட்சேர்ப்புகளில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும். இந்த நான்கு வகைகளில், குறிப்பிட்ட தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் பணிகளே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணிகளுக்கான ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், ஊழலுக்கு வாய்ப்பு ஏற்படலாம். OMCL என்றால் என்ன? ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (Overseas Manpower Corporation Limited — OMCL) வெளிநாட்டு நிறுவனம் அல்ல. இது 1978 முதல் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம். வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழர்களைப் பதிவு செய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவது இதன் முக்கியப் பணிகளில் ஒன்று. எலக்ட்ரீஷியன்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. போலி முகவர்கள் மூலம் மக்கள் பணத்தை இழப்பதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளைவிட கிழக்காசிய நாடுகள் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள நாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. தவெக அரசு கொண்டுவந்த மாற்றம் என்ன? அரசின் அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை வழங்குவதில் OMCL முக்கியப் பங்கு வகிக்கும். இதுவரை தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட செக்யூரிட்டி, தூய்மைப் பணி உள்ளிட்ட பணியாளர்களை இனி OMCL வழியாகப் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துவந்த அரசு நிறுவனம், உள்நாட்டில் அரசின் அவுட்சோர்சிங் பணியாளர் தேவைகளையும் கையாளும். தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அரசிடம் பெறும் தொகைக்கும், தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு குறையும். சம்பளத்தில் கமிஷன் அடிப்பது, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் வசூலிப்பது போன்ற முறைகேடு குறையும். OMCL வழியாக இந்தப் பணியாளர் விநியோகம் நடைபெறுவதால், ஒப்பந்தங்களைக் கண்காணிப்பதும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் சாத்தியமாகலாம். TNPSC வேலைவாய்ப்புகள் பறிபோகாது. இது தனியார் மயமும் அல்ல. இதை தவெக அரசின் ஒரு முக்கியமான நிர்வாக மாற்றமாகப் பார்க்கிறேன். சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம் (Shakti Abhiyan) காங்கிரஸ்
4
52
3
133
16,082
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் பொழுது போராட்டக்காரர்களை சுடுவதற்கு பதிலாக ராணுவமும் போராட்டத்தில் இணைந்து கொண்டது பிரான்சில்
1
3
1
3
426
இவங்க ஆஸ்திரேலியா இருக்கிற ஒரு செனட்டர். ஒரு பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டே தன்னோட குழந்தைக்கு பாலூட்டினாங்க. நல்லவேளை நம்ம உபிகள் கண்ணில் படல தப்பிச்சாங்க.
90
128
17
557
38,275
Subathra Devi retweeted
Somewhere near Chandni Chowk 🎬😂😭
4
87
1
268
2,748
Subathra Devi retweeted
Dear Epstein Janta Party, You give Hardeep Puri a Rajya Sabha seat and expect Youth Congress to look the other way? Not happening, bro. Rewarding someone with close ties to a convicted sex offender is a disgrace. And we’ll make sure the country doesn’t forget it 🫵
17
372
4
919
16,056
Subathra Devi retweeted
சென்னை மாவட்ட திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் திஷா (DISHA) குழுவின் முதல் கூட்டத்தில், மாண்புமிகு எம்பி திரு. தயாநிதி மாறன் @Dayanidhi_Maran அவர்கள் தலைமையில் கலந்துகொண்டேன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கான நிதிப் பயன்பாடு குறித்து சில குறிப்பிட்ட கேள்விகளை முன்வைத்தேன்
2
17
46
3,670
Subathra Devi retweeted
அர்னாப் (Cyclone Arnab) புயல் தமிழ்நாட்டை தாக்கி இருந்தால் காங்கிரஸ் பேரியக்கம் அமைத்து வைத்திருந்த அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி மக்களுக்கு உதவி இருப்பார்கள். 5 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்து மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது. இதை வானிலை ஆய்வு மையமே கணிக்க தவறியது. அன்பு தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பருவமழை தொடங்கியிருப்பதால் எப்பொழுதும் மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அறிவுறுத்தல். அதன் அடிப்படையில் தான் பருவ மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கட்டமைப்பை ஏற்படுத்தினோம். கனமழை பெய்யும் என்று எண்ணி முன்னேற்பாடாக மக்களுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து மீட்க மக்களுக்கு உதவுவதற்காக களப்பணியாளர்களையும் நிவாரண பொருட்களையும் தயார் செய்தது தவறு என்றால் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். @manickamtagore @iamvijayvasanth @AdvBruce @TharahaiC @arincindia @SenthamizhINC @INCTamilNadu
3
9
361