VTL Team (@VTLTeam) profile picture

Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://teapaw.org/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu

Joined June 2011
Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)
13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy @actorvijay ! The journey thus far has been a memorable one ♥️♥️ @RamVJ2412
446
15
1,256
479,582
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ட்ரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு..!
70
307
6,623
கோயம்பேட்டில் ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர்
64
250
4,055
அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.. பேருந்துல தாராளமா இடம் இருக்கு.. தற்காலிக பேருந்து நிலையங்களை அதிகரிச்சதால நல்லா இருக்கு.. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் பேருந்து வசதி குறித்து கருத்து..
79
1
230
3,053
கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?. இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான் எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா? ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. ஸ்டாலின் படிக்கச் சொன்னார். விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?. யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?. ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?. அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது.
69
1,030
20
2,582
50,549
#Breaking TN Govt appoints 3 special public prosecutors for Gem Granites Veeramani POCSO case.
11
417
2
1,937
33,433
VTL Team retweeted
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
134
629
102
1,213
154,975
VTL Team retweeted
புதிய நூலகங்களுக்கான நூல் / மின்நூல் தேர்வுக் குழு (Selection Committee) - 2025 நூலகத்தில் இடம்பெறக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மற்றும் மின்நூல்களை ஐந்து வகை பிரிவுகளில் தேர்ந்தெடுப்பதற்கு மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட நூல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. 1. முனைவர், ஜெ. ஜெயரஞ்சன், பேராசிரியர் (பொருளாதாரம்) - மாநில திட்டக்குழு துணைத் தலைவர் 2. முனைவர். சுல்தான் அஹமத் இஸ்மாயில் - மாநில திட்டக்குழு உறுப்பினர் 3. முனைவர். கு. அரசேந்திரன் - முதன்மை ஆசிரியர் 4. முனைவர் ராமு மணிவண்ணன் - பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் 5. முனைவர். கே. ராஜன் - கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர் 6. முனைவர். E. முருகன் FRSC, FASCh, - ஆராய்ச்சித் துறை முதல்வர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் 7. முனைவர். B. சந்திர மோகன் - பேராசிரியர் 8. திரு. S.பாலபாரதி - எழுத்தாளர் & பாலபுரஸ்கார் விருதாளர் 9. முனைவர். விஜய பாஸ்கர் 10. தலைவர்/இயக்குநர்/பேராசிரியர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 11. முனைவர். A.R. வெங்கடாசலபதி, பேராசிரியர்| 12. திரு. R சுதன், IAS (Retd), உறுப்பினர் செயலாளர், மாதிரி பள்ளிகள், கல்வித் துறை. 13. திரு. M.P.விஜயகுமார், தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்.
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். 09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
10
192
3
310
9,039
VTL Team retweeted
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். 09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
25
315
23
533
43,184
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக! பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ! புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்! அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால், "இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன." என்று இருக்கிறது. அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி? பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது! அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா? பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser? #420Model
64
967
27
2,075
44,598
“அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
80
154
3,339
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக - முதலமைச்சர் விஜய்
76
155
2,372
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக - முதலமைச்சர் விஜய்
1
58
132
1,552
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக. திமுக ஒரு ஊழல் கூட்டம் என்பதற்கு உதாரணம் பெரியார் அறிவுலகம். ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான். திமுக இனி தலைகுனிந்து நிற்கப்போவது உறுதி - முதலமைச்சர் விஜய்
2
102
240
3,162
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சந்தித்துப் பேசினார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Narayanan, Secretary, Department of Space, Chairman, Space Commission, and Chairman, ISRO, at the Secretariat today (06.11.2026). #CMJosephVijay
27
704
5
3,318
52,237
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் சந்தித்துப் பேசினார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026). #CMJosephVijay
18
470
2
2,093
43,630
VTL Team retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
602
5,646
304
13,981
860,366
கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் திமுக ஆட்சியில் ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்
31
58
1,229
வெற்றி வீடு திட்டம் ரூ.3,521 கோடியில் 70,000 வீடுகள்.
52
118
1,766
த.வெ.க எம்.எல்.ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் - அ.தி.மு.க பிரமுகர் மன்னன் கைது
124
2
313
3,691
கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
1
53
175
3,883