@ தமிழ் ராஜா @ (@arasenthran) header
@ தமிழ் ராஜா @ (@arasenthran) profile picture

இருப்பாய்.. தமிழா..! நெருப்பாய்..!! @ தமிழ்தேசியம் @ தமிழன்..! தமிழ்நாடு

தமிழ்நாடு..கோவை
Joined June 2020
Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)Photo by @ தமிழ் ராஜா @ (@arasenthran)
@ தமிழ் ராஜா @ retweeted
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நவம்பர் 08 #மாற்றத்தின்_பேருருவம் #Change_Personified #HBDSeemanAnna
7
175
1
382
4,637
@ தமிழ் ராஜா @ retweeted
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே? @CMOTamilnadu @TVKVijayHQ புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது. திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா? தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்? அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்? மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
312
621
100
1,119
209,648
@ தமிழ் ராஜா @ retweeted
சீமானின் உண்மை முகம் 😲😲😲 திரள்நிதி சீமான் 😲😲😲 கட்டாயம் பாருங்க...... பகிருங்க 🙏🙏🙏 #சீமான் #திரள்நிதி
9
262
17
532
24,372
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @AadhavArjuna
நாளைக்கு சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது சந்திரபாபுன்னு மட்டும் பதிவில் போடுவீங்களா? முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரை சொல்லும் போது இனி முத்துலட்சுமி என்று மட்டும் சொல்வீர்களா? திராவிடர்கள் சாதி என்றால் இனிக்கும்.. தமிழர்கள் என்றால் கசக்கும்? இதுவும் ஒருவகை சாதிபாசம் தானே
10
136
6,587
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @PttvNewsX
நடிகராக இருக்கும் போது ஐயா.முத்துராமலிங்க தேவருக்கு ஏதாவது புகழ் வணக்கம் செலுத்தினாரா? தளபதி @TVKVijayHQ
1
1
12
1,778
தற்போது நாம் தமிழர் சொந்தங்கள் இசைமதிவாணன், கார்த்திகா மற்றும் உறவுகளின் கைதை கண்டித்து சிவகாசியில் நடந்து வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சகோதரி சிவகாசி டயானா கண்டனஉரை ....
14
318
2
737
6,178
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @Madeshjournali1
😂😂 வெற்றி பெற்ற பிற கட்சி எம்எல்ஏக்களை திருடுகிற ஒரு கூட்டத்தின் தலைவர் மீது இம்புட்டு அன்பு இருக்குண்ணா.. அவன் எவ்வளவு பெரிய பைத்தியகாரனா இருப்பான்..🤣
1
1
15
505
@ தமிழ் ராஜா @ retweeted
48
272
10
919
26,197
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @NewsTamilTV24x7
முதல்வர் ஜோசப் விஜய் : நாங்கதான் பாலம் கட்டுனோம் என்று சொன்னீங்களே அது உங்க வீட்டு காசுல கட்டுனீங்களா..!? தமிழர்கள் : தாய்மாமன் மோதிரம் போடுறேன்னு சொல்றீங்களே அது உங்க வீட்டு காசுல போடுறீங்களா? இதுக்காக எத்தனை குடும்பம் சாராயம் குடிச்சு நாசமா போகுது 😦😡
4
14
276
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @Karthickrames1
மக்களுக்காக அரசியல் செய்பவன் மக்களிடத்தில் திரள்நிதி கேட்கிறான் ! கார்பரேட் முதலாளிகளுக்காக. அரசியல் செய்பவன் முதலாளிகளிடம் திரள்நிதி கோடிகளில் கேட்கிறான்..😔 மக்களிடம் திரள்நிதி வாங்கி அரசியல் செய்பவன் இல்லை என்றால் பல நச்சு திட்டங்கள் இங்கே அரங்கேறி இருக்கும்..
2
3
43
16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
42
383
7
695
31,003
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @_ITWingNTK
பதவிக்காக.. கண்ணாடிய பாத்து பேசிட்டு இருக்கிற சோபாவளவர் கோஷ்டிகள் தினமும் ஒரு நாடகத்தை நடத்துவார்கள்.. காரணம் அரசியல் என்பது அவர்களுக்கு சமூகசேவை அல்ல தனிப்பட்ட தேவை..😔
3
6
57
உலகின் மூத்தக்குடியான தமிழினம், இயற்கையை இறையாகப் போற்றி, மண்ணையும் மரபையும் உயிரெனக் காத்து, தனக்கே உரித்தான பண்பாட்டு வாழ்வியலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவரும் பெருமைக்குரிய தேசிய இனமாகும். மனித வாழ்வின் ஒவ்வொரு தொடக்கமும் நல்வழியில் அமைய வேண்டும்; இடையூறுகள் அகல வேண்டும்; எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையோடு முழுமுதற் கடவுளாக பிள்ளையார் எனும் விநாயகப் பெருமானை வணங்கும் வழக்கம் நமது மக்களின் வாழ்வியலோடு நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்திருக்கிறது. இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை மற்றவர் மதிப்பதும், அவரவர் வழிபாட்டு உரிமையை ஏற்றுக்கொள்வதும், வேறுபட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதுமே உயர்ந்த அறமாகும். தமிழர் மண்ணில் பிறந்து வளர்ந்த பல்வேறு வழிபாட்டு மரபுகளும், விழாக்களும், சடங்குகளும் நமது மக்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒரு பகுதியாகவே தலைமுறைகளைக் கடந்து தொடர்கின்றன. அவற்றை மதவெறிக்கும், மனிதர்களைப் பிரிக்கும் அரசியலுக்கும் கருவியாக மாற்றாமல், மக்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்வுகளாகப் பேண வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று உலகிற்கே மானுடநேயத்தைப் போதித்த தமிழினம், சாதி, மதம் என எந்தப் பெயராலும் பிளவுபடாது, அன்பாலும் அறத்தாலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது. பிள்ளையார் பெருமாளைக் கொண்டாடும் இந்நன்னாளில், தமிழர் வாழ்வில் நிலவும் வறுமை, துயரம், அடிமைத்தனம், அநீதி உள்ளிட்ட அனைத்து இடர்களும் அகலட்டும்! உழைக்கும் மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்! நல்லோர் எண்ணங்கள் வெற்றி பெறட்டும்! நமது தாய்மொழியாம் தமிழ் செழிக்கட்டும்! தமிழர் நிலம் வளம் பெறட்டும்! தமிழ்த்தேசிய இனம் உலகின் தலைசிறந்த இனமாக உயர்ந்து நிற்கட்டும்! மண்ணையும், மக்களையும், மொழியையும் நேசித்து வாழும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நன்மையும் நலமும் நிறைந்திட வேண்டுமென இந்நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன். பிள்ளையார் பெருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் என் உயிர்க்கினிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்! “பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்; கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே! நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!!” – அறிவுப் பெரும்பாட்டி ஒளவையார்
25
305
9
934
18,712
RT @Seeman4TN: சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெற…
நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு? @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா? ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா? தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது? சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு? அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
402
902
81
2,069
162,339
@ தமிழ் ராஜா @ retweeted
கோவிந்தா.. கோவிந்தா..! #VishwanathAndSons | #Surya | #venkyAtluri | #Thirupathi | #News7Tamil
55
131
68
1,244
114,691
@ தமிழ் ராஜா @ retweeted
சீமான் னா யாரு ணா ? 🔥🫣
45
983
19
2,249
39,277
@ தமிழ் ராஜா @ retweeted
Replying to @Keerthana4VNR
வெள்ளைக்காரன் மொழியில் கேள்வி கேட்பதை பெருயாக எண்ணும் மந்திரிகளை உருவாக்கியது சாபக்கேடு.. தனியார் பள்ளியில் எங்கள் தமிழில் கேள்வி கேளுங்கள் அந்த மாணவர்கள் எத்தனை முட்டாள உள்ளார்கள் என்பது புரியும்..! ஆங்கிலத்தில் மட்டுமல்ல.. தெலுங்கு கன்னட மொழியில் கேட்டால் கூட அந்த பிள்ளைக்கு தெரியுமா !? தாய்மொழியில் கல்வி கொடுத்து கேள்வி கேட்க தெரியாத எந்த தேசமும் உருப்படாது.. #TVKVijay‌Fails
4
16
559
@ தமிழ் ராஜா @ retweeted
Classical குத்து 😂😷
19
1,028
21
1,987
37,638
@ தமிழ் ராஜா @ retweeted
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்!
3
512
3
1,033
13,531