விஜய்யின் மாநாடு/பிரச்சாரங்களில் இறந்த ரசிகர்-நிர்வாகிகளுக்கு இரங்கல்/உதவி இல்லை. ஆனால் VS பாபு மரணத்தில் உடல் சுமந்து செல்வது வெறும் விளம்பரம்.
ஏன் இந்த பாகுபாடு? அரசியல் மைலேஜ் தானா?
2
134
வைகோ - You are DMK Agent
பத்திரிக்கையாளர் - கடந்த 50 வருசத்துல உங்களை போல திமுகவை புகழ் பாடுனவங்க தமிழ்நாட்டு அரசியல் கிடையாதுங்க 😅
செருப்பால சாணில முக்கி அப்பிட்டாப்ல 🤣🔥
எவ்ளோ settlement வாங்கிட்டு சுத்திட்டு இருக்கா? 🤔
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
2
4
311
Dr. தீபக் retweeted
அய்யோ VIJAYக்கு பதில் சீமான் இருந்திருந்தா 1 மணி நேர வீடியோ போட்ருக்கலாமே., ச்ச நீ ஏன்யா அங்க போன 😡 #singalaagent_parisaalan
Dr. தீபக் retweeted
வாயைத் திறங்கய்யா! @TVKHQITWingOffl
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
Dr. தீபக் retweeted
Virtual Warriors:
காலுல செருப்பு இல்லாம போயிருக்காரு. தளபதி எவ்வளவு நல்லவரு தெரியுமா?
Dr. தீபக் retweeted
மறைந்த வி.எஸ்.பாபுவை நினைவு கூறுவதும், அவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் தற்சமயம் பின்பற்ற வேண்டிய மாண்பு!
அதேசமயம், அவரது மறைவை வைத்து விஜய்க்கு Elevation கொடுப்பதெல்லாம் மிகவும் மலிவான அரசியல்!
கட்சித் தொண்டர்களை விஜய் என்னவாக நினைக்கிறார் என்பதைக் கரூரிலேயே பார்த்தாகிவிட்டது.
அதனால், வி.எஸ். பாபுவுக்கு இரங்கல் பதிவுகளைப் போடுங்க Warriors ! அதை வச்சு விஜய்க்கு Build Up கொடுக்கிற கேவலமான அரசியல் வேண்டாம்.
Dr. தீபக் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
அன்னை சோனியா காந்தி ஆசியுடன்
ராகுல் காந்தியின் வழிகாட்டுதலுடன்
தியாகத் தாய் திரிசாவின் ஆசியுடன்
நடிகர் விஜயின் அன்புடன்
நடைபெறும் இந்த நிகழ்வுக்கு தவெக தற்குறிகள் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்
- தவெக payroll விழாக்குழுவினர்
Dr. தீபக் retweeted
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
donate.naamtamilar.org/heroe…
Dr. தீபக் retweeted
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
Dr. தீபக் retweeted
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவதுதான் தவெக அரசின் கொள்கையா? - காவல்துறைக்குச் சுதந்திரம் அளித்துள்ளதாக முழங்கும் அமைச்சர்கள், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன்?
மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் புகாரைப் பெற காவல்துறையினர் மறுப்பதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்கு முன்பே புகாரைப் பெற மறுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய காவல்துறையே அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதும் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றைச் சீரமைத்து மேம்படுத்த வேண்டிய அமைச்சரோ, காவல் நிலையத்திற்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களை மிரட்டி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுவது; எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி அதிகாலை நேரத்தில் பொருளாதார வல்லுநர்களைக் கைது செய்யுமாறு காவலர்களை ஏவிவிடுவது; பாதிக்கப்பட்டவர்களின் புகாரைக்கூடப் பெறக்கூடாது எனக் காவல்துறையினரை மிரட்டுவது என அமைச்சர்களின் இத்தகைய அடாவடித்தனமான செயல்பாடுகளை பார்க்கும்போது, காவல்துறை உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுடன், இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படும் மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், குற்றங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களையே அமைச்சர்கள் தங்களது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தடுக்க முடியாத முதலமைச்சரின் நிர்வாகத் தோல்வியால், ஒட்டுமொத்தத் தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு அசாதாரணமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மேடைகளிலும் மைக் முன்னாலும் நீட்டி முழங்கும் தவெக அமைச்சர்கள், உண்மையில் காவல்துறையைத் தங்களது அரசியல் ஆதாயங்களுக்கான கைப்பாவையாக மாற்றி வைத்திருப்பதே அம்பலமாகியுள்ளதொடு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடாமல் காவல்துறையினருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்களின் இரட்டை வேடம், அவர்களின் போலி நேர்மையையும் பசப்பு வார்த்தைகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது!
எனவே, காவல்துறை என்பது அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இயங்கும் அரசியல் கருவி அல்ல; அது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய மிக முக்கியமான அரசியலமைப்பு அமைப்பு என்பதை உணர்ந்து காவல்துறையினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையில் முழுமையான சுதந்திரத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ


























