Kathir RS retweeted
WE ARE NOT ALLOWING...WE WILL FACE THE CONSQUENCES என்று சொல்ல துணிவில்லாத ஒரு முதலமைச்சரை வைத்துக் கொண்டிருந்தால்
இப்படித்தான் சங்கிகள் தமிழ்நாட்டை நாசம் செய்வார்கள்!
#ShameOnYouTVK
Kathir RS retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Kathir RS retweeted
ஏன் DMKவை ஆதரிக்கிறோம் என்பதை இதை வாசிக்கும்போது உணரலாம்
மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்:
தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள்.
கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர்.
அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
Kathir RS retweeted
Plea In Madras High Court Seeks Official Information Regarding Health Condition of Kolathur MLA VS Babu
livelaw.in/high-court/madras…
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
Kathir RS retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம்
Kathir RS retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Kathir RS retweeted
செருப்பால சானியமுக்கி அடிச்சிட்டான் விஜய 😭😭😭
உனக்கும் சினிமாவுக்கும் ஆகவே ஆகாது போலயே @actorvijay 🤡
Kathir RS retweeted
#TamilNadu’s bloodiest #Deepavali ever ? 🩸
Over 15 murders reportedly across the State, including a fatal shooting near Vellore as of now !
A police Sub-Inspector beaten to death for objecting to firecrackers being burst!
And #tvk says “This is nothing new!”
NOTHING NEW ?!
When murder becomes routine and Ministers become casual about it, the crisis isn’t just on our streets. It’s in the corridors of power!
CM SIR ! @CMOTamilnadu,
governance is NOT a movie.
Murders are NOT box-office statistics.
Real human lives are NOT REEL expendable extras!
Stop normalising murders.
Start enforcing the law!
Tamil Nadu deserves law and order.
Not lights, cameras and excuses!
#TVKFails #TNLawAndOrder
Kathir RS retweeted
இன்று பெரியார் திடலில், we dravidians சார்பில் நடைபெற்ற மின் நூல் வெளியீடு மற்றும் கருத்தியலரங்கத்தில்.
#திராவிடம்
#பெரியார்
#திராவிட_மாடல்
Kathir RS retweeted
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது.
முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.
அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார்.
அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான்.
இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார்.
ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
Kathir RS retweeted
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition #தமிழ்_வாழ்க
Kathir RS retweeted
முந்தைய பதிவின் தொடர்ச்சி:
(Link in quotes)
சமூகத்தில் திமுகவுக்கு எதிரான நஞ்சை விகடன் முதலான பத்திரிகைகள் மட்டும் பரப்பவில்லை.
விகடனில் பணிபுரிந்த சில மேதாவிகள் தொடர்ந்து அதை பாட்டாகவே படித்தனர்.அவர்கள் தற்போது அணிமாறியிருந்தாலும் செய்த துரோகங்களை மறக்க முடியாது.
தங்களது பணி உயர்வுக்காக முதலாளிகளை காக்கா பிடித்து திமுகவை தாக்கி தொடர்கள் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்கள் தங்கள் தவறை உணரும் முன்னே பணியிலிருந்து வெளியேற்றப்பட்டு இப்போது திமுகவிடமே தஞ்சமடைந்திருப்பது காலத்தின் கோலம்.
ஆனால் அந்த கட்டுரைகள் மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை தமிழ்நாடு இன்று அனுபவிக்கிறது.
சங்கர் மணிரத்னம் பாக்யராஜ் சேரன் மணிவண்ணன் பாரதிராஜா போன்ற இயக்குனர்களும் வாழைப்பழத்தில் மெல்ல ஊசியேற்றியவர்களில் முக்கியமானவர்கள்.
காலம் அவர்களின் துரோகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது.
இன்று சீமான் திருமுருகன் போன்ற முழுநேர ***"#₹ களை வளர்த்தெடுத்த பெருமை இவர்களையேசாரும்.
விகடனுக்கு உள்ள பெருமையெல்லாம் அது திமுகவிற்கு எதிரான கருத்தாக்கத்தை மட்டும் உருவாக்கவில்லை.
பசுமை விகடன் என்ற பெயரில் கன்டென்ட் வறட்சியால் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டிய நிலையில் பல போலிகளை வளர்த்தெடுத்தது.
ஆன்மீகம் தியானம் என்ற பெயரில் போலி சாமியார்களை வளர்த்தெடுத்தது.
இந்த போட்டியில் குமுதமும் வந்து குதித்தது.
இன்றைக்கு பெரும் பூதங்களாக வளர்ந்து நிற்கும் போலிசாமியார்கள்
தடுப்பூசி போடுவது தவறு..முன்னோர்கள் முட்டாள்களல்ல..நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..(ஏ)மாற்று மருத்துவ மகிமை.. என இன்று கிளம்பியிருக்கும் அத்தனை நச்சுச் செடிகளையும் வளர்த்தெடுத்த பெருமை இந்த தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பத்திரிகைகளான இவர்களையே சேரும்.
ஒரு வேளை 1996-2001 ஆட்சியை பத்திரிகைகள் சினிமா துறையினர் வெளிப்படையாக பாராட்டியிருந்தால் ஒரு 2% சதவீத வாக்குகள் திமுக அதிகம் பெற்று வென்றிருக்கும்.
ஜெ செய்த தவறுகளுக்கான சரியான தண்டனையாக அது இருந்திருக்கும்.
நல்ல உடல் நலத்துடன் இருந்த கலைஞர் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்திருப்பார்.
அதை கூட விடுங்கள்..இன்றைக்கு கலைஞர் சாதனைகளை பட்டியல் போடும் இந்த ஊடகங்கள் 2016 தேர்தலின் போது கலைஞரின் கடைசித்தேர்தல் என்பதை கருதி தாக்குதலை தவிர்த்திருந்தால் கூட திமுக வென்றிருக்கும்.
தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும்.
கலைஞர் ஜெ இருவரையுமே நாம் இழந்திருக்க மாட்டோம்.
அனிதா மறைந்திருக்கமாட்டார்.தூத்துக்குடியில் மக்கள் சுடப்பட்டு இறந்திருக்க மாட்டார்கள்.இன்னும் எத்தனையோ..
முக்கியமாக
தமிழகம் தனது தன்மானத்தையும் இழந்திருக்காது.
Kathir RS
30/8/18
ஸ்டாலின் மேயராக இருந்தபோது ஆனந்தவிகடனில் சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது.(1999-2000)
அந்த கட்டுரையில் கிட்டத்தட்ட கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
// பாலங்களுக்காக சென்னை ஐஐடியைச் சேர்ந்த பொறியாளர்கள் சிலரிடம் பெற்ற ஆலோசனைகளில் ஒன்றைக்கூட செயல் படுத்தாமல் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல பாதுகாப்பு அம்சங்கள் அலச்சியப்படுத்தப்பட்டுள்ளன.மணல் சோதனை செய்யப்படாமல் போட்ட பில்லர்கள் உள்வாங்கி கட்டி முடிக்கப்படாமல் நிற்கிறது பெரம்பூர் பாலம்.இப்படி அவசர கதியில் செயல்படுத்தப்பட்டு கட்டப்பட்ட இந்த பாலங்களின் உறுதித்தன்மை குறித்த சந்தேகமும் நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.//
ஒரிரு சொற்கள் வேறுபடலாம்..ஆனால் கட்டுரையின் தொனி இப்படித்தான் இருந்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடிவிட்டன.
பாலத்தின் உறுதித்தன்மை பாதுகாப்பு அம்சங்கள் இவற்றால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றனவா?
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையை எங்கே பாராட்டி எழுதினால் திமுகவிற்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்ற ஒரே காரணத்துக்காக எதிர்மறையாக எழுதி வெகுஜன மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை தொடர்ந்து செய்துவந்த பத்திரிகை விகடன்.
இப்போது அந்த பட்டியலில் காட்சி ஊடகங்கள் உட்பட பலரும் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் திமுக என்றால் ஏதாவது எதிர்மறையாக எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு திமுவினர் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் பரப்பப்பட்ட எதிர்மறை செய்திகள் அதற்குள் மக்கள் மனதில் பதிந்து விடுகின்றன.
இப்படியாகவே திமுகவுக்கு எதிரான சதி வலை தொடர்ந்து பின்னப்படுவது அதை திமுக அறுத்தெறிவதுமாக காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஊடகங்கள் திமுக பற்றிய உண்மையை மட்டும் எழுதியிருந்தால் 1996 க்கு
பிறகு அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.
கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற திமுக கொடுக்கும் விலைதான் ஊடகங்களின் இத்தகைய அருவருக்கத்தக்க அணுகுமுறை!
Kathir RS
28/8/18
9pm
#DMKThalaivarStalin
Kathir RS retweeted
When our publication and author Kathir RS proposed @mkstalin as Prime Minister of India, many laughed at us.
The book has been translated into five languages. The sixth and seventh translations are underway.(Kannada & Telugu)
The main book in English was written even before he became Chief Minister. Its content is far more a biography than the title suggests. The title itself appears only in the last chapter — and that too as a brief proposal of a few paragraphs, or a single page. Yet the title became more famous than the content.
Some lowlifes, even from Tamil Nadu, who know the history of this state, still troll the book solely for its title.
But they cheered and welcomed the idea of Vijay becoming Chief Minister.
How? Any logic?
MK Stalin has been in active politics for 60 years. He has a clear record of achievement from his days as elected Mayor of Chennai.
They still refuse to treat the proposal in the book as relevant.
The same people now celebrate the idea of Vijay as Prime Minister.
Vijay’s politics is not even two years old and is already packed with lies and fraud. His film career was never clean either. He built success through a perverted approach, using women’s bodies to pull crowds, and he did not stop even in his recent films. Through his movies he taught drugs, violence, arrogance, abuse of women, and communal hatred to the youth.
Accidentally, he became Chief Minister of Tamil Nadu. So-called honest politicians, journalists and intellectuals now praise him. So-called ideological parties prop him up and keep his government going. They even support promoting him as Prime Minister.
On what basis?
Oh, yes.
We too are convinced on one point:
“If Modi can, why not Vijay?”
Yes. That logic makes sense to them, I guess.
We should actually worry if this country ever chooses a capable leader like Stalin as Prime Minister — because he is the one who could drive the nation toward real excellence. But not for these people. They are the morons of a country that is already backward.
Eighty years have passed since Independence. Why not another 20 or 50?
Let the people suffer and feel the pain if they do not deserve a good leader.
Isn’t it?
By the way, we welcome any Prime Minister from the South.
Meanwhile…
Do you know we sent copies of our book to leaders across the INDIA bloc three years ago? We also sent the book to national media houses, including India Today, Times Now and others. We handed a few copies to Rajdeep Sardesai when he visited Chennai.
Don’t you think the book is the reason the North Brahmin lobbyists kept MK Stalin out of the Prime Minister race — and then showed the nation that he was not even in the picture?
Just asking.
- Admin
Kathir RS retweeted
ஸ்டாலின் மேயராக இருந்தபோது ஆனந்தவிகடனில் சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது.(1999-2000)
அந்த கட்டுரையில் கிட்டத்தட்ட கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
// பாலங்களுக்காக சென்னை ஐஐடியைச் சேர்ந்த பொறியாளர்கள் சிலரிடம் பெற்ற ஆலோசனைகளில் ஒன்றைக்கூட செயல் படுத்தாமல் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல பாதுகாப்பு அம்சங்கள் அலச்சியப்படுத்தப்பட்டுள்ளன.மணல் சோதனை செய்யப்படாமல் போட்ட பில்லர்கள் உள்வாங்கி கட்டி முடிக்கப்படாமல் நிற்கிறது பெரம்பூர் பாலம்.இப்படி அவசர கதியில் செயல்படுத்தப்பட்டு கட்டப்பட்ட இந்த பாலங்களின் உறுதித்தன்மை குறித்த சந்தேகமும் நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.//
ஒரிரு சொற்கள் வேறுபடலாம்..ஆனால் கட்டுரையின் தொனி இப்படித்தான் இருந்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடிவிட்டன.
பாலத்தின் உறுதித்தன்மை பாதுகாப்பு அம்சங்கள் இவற்றால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றனவா?
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையை எங்கே பாராட்டி எழுதினால் திமுகவிற்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்ற ஒரே காரணத்துக்காக எதிர்மறையாக எழுதி வெகுஜன மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை தொடர்ந்து செய்துவந்த பத்திரிகை விகடன்.
இப்போது அந்த பட்டியலில் காட்சி ஊடகங்கள் உட்பட பலரும் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் திமுக என்றால் ஏதாவது எதிர்மறையாக எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு திமுவினர் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் பரப்பப்பட்ட எதிர்மறை செய்திகள் அதற்குள் மக்கள் மனதில் பதிந்து விடுகின்றன.
இப்படியாகவே திமுகவுக்கு எதிரான சதி வலை தொடர்ந்து பின்னப்படுவது அதை திமுக அறுத்தெறிவதுமாக காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஊடகங்கள் திமுக பற்றிய உண்மையை மட்டும் எழுதியிருந்தால் 1996 க்கு
பிறகு அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.
கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற திமுக கொடுக்கும் விலைதான் ஊடகங்களின் இத்தகைய அருவருக்கத்தக்க அணுகுமுறை!
Kathir RS
28/8/18
9pm
#DMKThalaivarStalin
Kathir RS retweeted
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters.
Many have asked why we have not responded in kind.
The answer is simple.
Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar.
The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this.
We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents.
We will fight back.
But we will fight back with our principles, our ideology and with dignity.
Not by becoming what we oppose🙏🏾
Kathir RS retweeted
தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு:
* Hi.. மாண்புமிகு மரியான். 'இப்படி பேசுறது என்னோட ஸ்டைல். என்ன...கேலி பண்றீங்களா?' என நேற்று கொந்தளித்தீர்கள்
* வேறு மேடை, ப்ரெஸ்மீட் அல்லது பேட்டிகளில் இப்படி தவறாக தமிழ் பேசினால் அது கேள்வி அல்லது கேலிக்கு உள்ளாகாது.
* ஆனால் பட்ஜெட் தாக்கல் எனும் அதிகாரப்பூர்வ நிகழ்வில்..அதுவும் சட்டப்பேரவையில் சொற்பிழை மற்றும் பொருட்பிழையோடு பேசினால்.. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல..
... ஓரளவு தமிழ்ப்பற்று கொண்ட சாமான்யர் கூட இதை சகித்துக்கொள்ள மாட்டார்.
* இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த PTR பழனிவேல் ராஜன் தமிழில் ஒழுங்காக பேசினாரா என தவெக அமைச்சர் ஒருவர் கேட்கிறார். அவர் ஆறடி உயரம் இருந்தார். பெயர் ஆதவ் அர்ஜூனா என நினைவு.
* தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள்.
* தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை பற்றி PTR உடன் நேருக்கு நேர் வாதாடினால் யார் வெல்வார் என்பது மக்களுக்கு தெரியும்.
* தமிழில் சரியாக பேசாததால்தான் மதுரையில் PTR தோற்றாரா? அப்படியெனில் நீங்களும் தமிழை தவறாக பேசி தோற்பீர்களா?
* இன்னொரு அமைச்சர் எழுந்து 'உதயநிதி மட்டும் சங்கத்தமிழில் பேசுகிறாரா?' என கலாய்த்து விட்டாராம். அவரது பெயர் ராசுமோகன் என நினைவு.
* எந்த தமிழில் பேசினால் என்ன ப்ரோ? மக்களுக்கு புரிய வேண்டும். உதய் பேச்சுத்தமிழ் மூலம் பேசுவது தெளிவாகத்தானே உள்ளது.
* அது போக..வட்டார வழக்கு, கொட்டார வழக்கு என மரியானுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசினர்.
* இப்படி தவறாக இவர் பேசுவது முதல் முறையல்ல.
* ஆகவே... நல்ல மனிதருக்கு அழகு..இனியாவது தமிழை நல்லபடியாக கற்றுக்கொண்டு பிழையின்றி பேசுவது. குறிப்பாக சட்டசபை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்.
* அந்த முயற்சியை செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இது என் ஸ்டைல். இப்படித்தான் பேசுவேன் என்றால் மக்கள் கேள்வி கேட்கவும், மீம்ஸ் போடவும் செய்வார்கள்.
* அடுத்த வருடம் பட்ஜெட் உரையை பிழையின்றி வாசியுங்கள். முடிந்தால் ராசுமோகனிடம் தமிழ் கற்க.
* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிப்பது எவ்வளவு முக்கியமோ.. அதுபோல முதல் வரிசையில் அமர்ந்துள்ள நீங்கள் தவறில்லாமல் தமிழ் பேசுவதும் முக்கியம்.

































