Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Tamilnadu
Joined March 2014
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்! #CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
6
15
34
18,912
வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக நாடு தழுவிய வலுவான போராட்டம் அவசியம். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ‘வெளிநாட்டினர்’ எனப் பெயரிட்டு ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர், தலித், பழங்குடி மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை ரத்து செய்யவும், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யவும் கோரி கேரள சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, இதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் உடனடியாகச் சிறப்புக் கூட்டம் கூட்டி, ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யவும் எஸ்.ஐ.ஆரை ரத்து செய்யவும் வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் நிறைவேற்ற வேண்டும். - தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், #CPIM #India #SIR #gyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar
354
பொதுப் பிரச்சினைகள் குறித்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதங்களுக்குப் பதிலளிக்கத் தவறுவது அரசு குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை விதிமீறலாகும் (Violation of Protocol Norms). எனது கடிதங்களுக்குப் பதிலளிக்காமல் அலட்சியம் காட்டிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் மீது தகுந்த உரிமை மீறல் (Breach of Privilege) நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை அவைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளேன். - தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #SouthernRailway #BreachOfPrivilege #IndianRailways
68
"ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்; அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்!" #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #eb #privatisation #tngovt #modigovt #gyaneshKumar #electioncommission #Indiandemocracy #riceprice #delhiprotest #studentprotest #SFI #Indiapolitics More: youtu.be/C8pNiKnWDuM
4
6
476
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி!
371
லூலாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! பிரேசில் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி பெற்ற லூலாவுக்கும், பிரேசில் மக்களுக்கும் வாழ்த்துகள்! டிரம்ப்பின் ஆதரவைப் பெற்ற ஃபிளாவியோ போல்சோனாரோவின் தீவிர வலதுசாரி பிளவுபடுத்தும் அரசியலைத் தோற்கடித்து, லூலா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நான்காவது முறையாக பெற்றுள்ளார். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! தீவிர வலதுசாரிகள், வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு சான்று! - சிபிஐ(எம்) மத்தியக்குழு #Lula #Brasil
1
5
30
751
CPIM Tamilnadu retweeted
CPI(M) Polit Bureau Says No to Privatisation of Banks.
9
45
5
150
4,314
சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்; இரண்டாவது நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் More: shorturl.at/063jr
1
6
474
வழிபாட்டுரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், புத்தகரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கு தேர் தடையின்றிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நீண்டகாலமாக நடைபெற்ற போராட்டத்தின் வெற்றியாகத் தேர் அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குள் வந்தடைந்தது. சாதியத் தடைகளைத் தகர்த்து, சமத்துவ வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய இந்த வெற்றியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் சட்டப் போராட்டங்களும், களத் தலையீடுகளும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்நிகழ்வில் DSMM அகில இந்தியத் துணைச் செயலாளர் கா.சுவாமிநாதன், ததீஒமு மாநிலப் பொதுச்செயலாளர் பா.சுகந்தி, துணைப் பொதுச்செயலாளர் இ.மோகனன், #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் கே.நேரு, ததீஒமு மாவட்டத் தலைவர்கள் இ.சங்கர், எஸ்.திருஞானம் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
9
22
675
முதலாளித்துவம் வீழும்! பாட்டாளி வர்க்கம் வெல்லும்! Episode – 7 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism #Revolution #Cuba - #MarxistEducation Full Video Link: youtu.be/B2G2Mu3771U
6
25
889
தாகமெடுத்த மனிதன் நீரூற்றைத் தேடிப் போவதுபோல நான் கம்யூனிஸ்டு கட்சியை நாடிப் போகிறேன் - தோழர் பாப்லோ பிக்காசோ, வரலாற்றின் மிகச் சிறந்த ஓவியர், பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் #PabloPicasso #Communist #Socialism #SocialismIsFuture
3
11
43
895
சீனாவை அமெரிக்காவால் தடுக்க முடியாதது ஏன்? | Episode – 7 -தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #MarxistEducation #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism #ClimateCrisis #SaveEarth #CorporateGreed #Revolution #Cuba Full Video Link: youtu.be/B2G2Mu3771U
5
17
729
பூமி வெப்பமயமாதல் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி வரை | புரட்சியை யாராலும் தடுக்க முடியாது! | Episode – 7 #MarxistEducation #Marxism # Socialism #ClassStruggle #AntiImperialism #ClimateCrisis #SaveEarth #CorporateGreed #Revolution #Cuba - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #MarxistEducation Full Video Link: youtu.be/B2G2Mu3771U
6
16
695
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியா?! அரசாங்கமே உடனே மேல்முறையீடு செய். | போலீஸ் அடக்குமுறையை மீறி பீனிக்ஸ் பறவைகளாக களத்தில் நிற்கும் மாணவர்கள்! ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்! தோழர் வி.மாரியப்பன், மாநிலச் செயலாளர் #AIAWU #gyaneshKumar #ResignGyaneshKumar #tamilnadu #RSS #POLICE #Rally #Government More : youtu.be/8nOyrxnpolY
4
14
1
49
1,085
மோடி அரசுக்கு ஆப்பு வைத்த Meta Algorithm? | இளைஞர்களின் எழுச்சியை முடக்க Social Media-வை வளைக்கிறதா பாஜக? தோழர் தெள.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளார் #SFI #MetaAlgorithm #ModiGovt #BJP #SocialMediaCensorship #SocialMediaPolitics #DigitalRights #GenZProtest More : youtu.be/n3EEDwSPDKs
2
18
40
1,072
தனியார் பேருந்து ‘மொத்த விலை ஒப்பந்தத்தை’ ரத்து செய்க; அரசே மின்சாரப் பேருந்துகளை இயக்குக! சிஐடியு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அரசுக்குக் கோரிக்கை மொத்த விலை ஒப்பந்தம் (GCC) என்ற பெயரில் தனியார் பேருந்துகளை இயக்கத் திமுக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, அரசே மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோரியுள்ளது. #Citu #TamilNadu #Privatebus #Transportworker #TnGovt
2
13
38
873
பின்வரும் கேள்விகளுக்கு நான் விளக்கம் பெற விரும்புகிறேன்: இந்தப் பதிவுகள் டார்க் வெப்பில் கிடைக்குமாறு எவ்வாறு கசிந்தது? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? பாரத ஸ்டேட் வங்கியின் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் (Security Firewalls) ஊடுருவித் தாக்கப்பட்டனவா? அல்லது வங்கியின் உள்நபர்கள் யாரேனும் வேண்டுமென்றே தரவுகளைக் கசியவிட்டார்களா? ஊடகச் செய்தியின்படி, இந்தத் தரவுக் கசிவை வங்கியே தானாகக் கண்டறியத் தவறியது ஏன்? இந்தத் தரவுக் கசிவு சுமார் 3,75,000 பதிவுகளுடன் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதைவிட அதிகமான பதிவுகள் கசிந்துள்ளனவா? தரவுகள் கசிந்த வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக என்ன நடவடிக்கைகளை எடுத்தது? மேலும் தரவுகள் கசிவதைத் தடுப்பதற்காக SBI அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? பாரத ஸ்டேட் வங்கியின் பல முக்கியப் பணிகள் வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் YONO செயலியின் பராமரிப்பு, KYC ஆவணங்களைச் சேகரித்தல் மற்றும் சரிபார்த்தல், கடன் வாடிக்கையாளர்களைக் கண்டறிதல், கடன் வசூல், தள ஒருங்கிணைப்புப் பணிகள் (Floor Coordination), அழைப்பு மையங்கள் (Call Centres), உதவி மையங்கள் (Help Desks), தரவுப் பதிவேற்றம், அட்டைப் பராமரிப்பு, காசோலைப் புத்தகங்களை அச்சிடுதல், ஆவணங்களைச் சேமித்தல் மற்றும் நிர்வகித்தல், பத்திரங்கள் தொடர்பான உதவிப் பணிகள், பண மேலாண்மை போன்றவை அடங்கும். இந்தப் பணிகளை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைத்ததே தரவுத் திருட்டுக்குக் காரணமா? இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அவர்கள் மீது என்ன பொறுப்பு கூறல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது? எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகளை முழுமையாகப் பாதுகாப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத ஸ்டேட் வங்கி மீது இழந்துள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக வங்கி என்ன நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது? தங்களது உண்மையான வங்கிச் சேவைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாகப் பொதுத்துறை வங்கிகளையே சார்ந்திருக்கும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி விரைந்து செயல்படுவதற்குத் தாங்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களிடமிருந்து உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன். - தோழர் @SuVe4Madurai ., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SBIDataLeak #CyberSecurity #SBI #DataPrivacy #PeopleFirst
2
6
28
844
மனிதாபிமான உதவிகள் பணயமாக்கப்படக் கூடாது இந்தியாவிலிருந்து அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டு செல்ல ஈரான் ஏர் விமான நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மையாக இருந்தால், அது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள்கூட வெளிப்புற அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டுமா? உயிர்காக்கும் மருந்துகளைக் கொண்டு செல்வதற்கே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமானால், இந்தியாவின் 'மூலோபாயத் தன்னாட்சி' என்பதற்கு எஞ்சியிருப்பது என்ன?. மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் வெளிப்புறத் தலையீடுகளுக்கும் தேவையற்ற உத்தரவுகளுக்கும் பணயமாக்கப்படக் கூடாது - தோழர் ஜான் பிரிட்டாஸ். எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #JohnBrittasMP #India #Iran #Humanatarian #Medicine
3
10
502
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் அக்.23-24 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார். #CPIM அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
4
1
15
644
கேப்டன் லட்சுமி ஷேகால் நெஞ்சுரம் மிக்க ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1943ம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவுக்கு தலைமை பொறுப்பை வகித்தவர். அர்ப்பணிப்பு உணர்வு மிக்க மருத்துவர். #CPIM இல் உறுப்பினராக இருந்தவர். பெண் உரிமைகளுக்கான மாபெரும் போராளி. அவரது வாழ்வும், பணிகளும் இனி வரும் பல தலைமுறைகளின் இளைஞர்களை ஈர்க்கக் கூடியது. இன்று அவரது பிறந்த தினம்! #CaptainLakshmiSahgal #FreedomFighter #Communist
1
10
45
847