Mohamed Shibli (@ShibliOfficial) header
Mohamed Shibli (@ShibliOfficial) profile picture

Welcome to My Official Twitter Account... Whoever saves a life,it is as if he had saved mankind entirely (Quran 5:32)

Tamil Nadu
Joined February 2014
#Blood_needed_immediately Patient name : M. Kuthbudeen Open heart surgery Blood group : O positive 6 units Hospital name : Chettinad super speciality Hospital,kelambakkam chennai Attendar name : Haja shaik alaudeen : 99422 89416 Faris: 75488 25024 @BloodAid @BloodDonorsIn
39
8
310
6 மாத காலத்தை நிறைவு செய்த முதல்வர் விஜயின் தவெக அரசு. தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான ஆட்சியாகவே தொடர்கிறது. #mohamedshibli #indiathowheedjamaath #CMVijay @TVKVijayHQ @Kalaignarnews
1
1
4
89
பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் – தவெக எம்எல்ஏ மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு,தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுவாழ்வில் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.குறிப்பாக, பெண் அதிகாரிகளின் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே,இந்தப் புகார் குறித்து எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி,சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அதிகாரிகளின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #mohamedshibli #indiathowheedjamaath #CMVijay‌ @CMOTamilnadu @TVKPartyHQ @Kalaignarnews @GunasekaranMu @dinathanthi @DinamaniDaily @polimernews @News18TamilNadu @dmk_youthwing @karthickselvaa @jayapluschannel @sunnewstamil @thatsTamil @ibctamilmedia
1
1
2
42
ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 11 கொலைகள் – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதையே இது காட்டுகிறது! தமிழகத்தில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் உள்பட திருச்சியில் 3 பேரும்,சிவகங்கையில் 2 பேரும்,சென்னை,திருவள்ளூர்,கடலூர்,தேனி,திண்டுக்கல்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் ஆட்சியில்,ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெறுவது காவல்துறையின் செயல்பாட்டையும் அரசின் நிர்வாகத் திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது. கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை,குற்றங்கள் நடந்த பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தாமல்,குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் முதன்மையான கடமை.அரசியல் விளம்பரங்களுக்கும் அறிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதைவிட,மக்களின் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து,பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #mohamedshibli #CMVijay #TNPolice @CMOTamilnadu @Kalaignarnews @Udhaystalin @jayapluschannel @sunnewstamil @mkstalin @GunasekaranMu @thirumaofficial @tncpim @INCTamilNadu @ThanthiTV @TamilTheHindu @DinakaranNews @DinamaniDaily @dinamalarweb @dinathanthi
1
2
42
பெறுநர்: மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகம், சென்னை. பொருள்: தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும்,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் சிறப்புச் சட்டம் இயற்றக் கோருதல் தொடர்பாக! மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! தமிழ்நாடு மதச்சார்பின்மையிலும்,மத நல்லிணக்கத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாகும்.இத்தகைய மாநிலத்தில் சமீப காலமாக வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது. வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தைக் கூறி,வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.அதேவேளையில்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் குறிப்பிட்ட வழிபாட்டுத் தலங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் சம்பவங்கள் நிகழ்வது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும்,அதன் மீது தாக்குதல் நடத்தினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது;கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் தண்டனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு ஏற்பட வேண்டும்.அதுவே மத நல்லிணக்கத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். எனவே,வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்,இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவான மற்றும் நியாயமான சட்ட நடவடிக்கை மூலம் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.மேலும்,தற்போதைய சட்டங்களின் போதாமையை ஆய்வு செய்து,தேவையானால் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கும்,அவற்றின் மீது தாக்குதல் நடத்துவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும் உரிய சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மதம்,இனம்,மொழி என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றி தங்களது வழிபாட்டு உரிமையைப் பின்பற்றும் சூழலை உருவாக்கி,தமிழ்நாட்டின் மதச்சார்பின்மையையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கத் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இப்படிக்கு முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் @CMOTamilnadu @tnpoliceoffl @Kalaignarnews @KanimozhiDMK @thirumaofficial @sunnewstamil #indiathowheedjamaath #CMJosephVijay‌ #mohamedshibli
1
2
3
187
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையும்,தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில்,தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இதுவரை கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனநாயகத்தையும்,நேர்மையான தேர்தல் நடைமுறைகளையும் பாதுகாப்பதில் தனது அரசின் உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். முக்கியமான ஜனநாயகப் பிரச்சினையில் மௌனம் காப்பது தீர்வாகாது;மக்களுக்குத் தெளிவான பதில் அளிப்பதே பொறுப்பான தலைமையின் கடமையாகும். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #mohamedshibli #CMVijay‌ #indiathowheedjamaath @Kalaignarnews @sunnewstamil @polimernews @bbctamil @jayapluschannel @news7tamil @thatsTamil @News18TamilNadu @TamilTheHindu
2
2
4
54
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் கைரேகை,கண்ரேகை பதிவு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைத் தொடர்ந்து,திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் சிறுபான்மை மக்களிடம் கைரேகை மற்றும் கண்ரேகைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மோசமான மனித உரிமை மீறலாகும். எந்தவொரு சட்டப்பூர்வமான காரணத்தையும் தெளிவுபடுத்தாமல்,உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறுபான்மை மக்களிடம் இத்தகைய அடையாளப் பதிவுகளை மேற்கொள்வது அவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு,அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.தமிழ்நாடு அரசின் இத்தகைய சிறுபான்மை விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே,முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பூர்வமான காரணமின்றி மேற்கொள்ளப்படும் கைரேகை மற்றும் கண்ரேகைப் பதிவு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன்,இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #CMJosephVijay‌ #mohamedshibli #indiathowheedjamaath #muthupettai @CMOTamilnadu @sunnewstamil @Kalaignarnews @News18TamilNadu @news7tamil @thatsTamil @PttvNewsX @jayapluschannel @polimernews @TamilTheHindu @DinakaranNews @dinathanthi @dinamalarweb @DinamaniDaily @MalaimurasuTv @GunasekaranMu
3
3
55
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமே சுதந்திரமானதும்,நியாயமானதுமான தேர்தல் முறையாகும்.அந்தத் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது எழுந்துள்ள கடுமையான கேள்விகள் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் கவலையடையச் செய்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இரு தேர்தல் ஆணையர்கள்,வாக்காளர் பட்டியல் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகள் தொடர்பாக பல முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறிப்பாக,சில நடவடிக்கைகள் “அங்கீகாரமற்றவை” மற்றும் “சட்டவிரோதமானவை” என அவர்கள் குறிப்பிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் விவாதமாக கடந்து செல்லக்கூடியவை அல்ல.கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையையும்,தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையையும் நேரடியாகத் தாக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே,தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக,அவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து அல்லது உரிய சட்ட நடைமுறையின் கீழ் பதவியில் இருந்து விலக்கி வைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும்,வாக்காளர் பட்டியல் தயாரிப்பு,பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் மற்றும் தேர்தல் தொடர்பான தொழில்நுட்ப நடைமுறைகளில் ஏதேனும் முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்பட்டாலும் அது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். எனவே,உண்மை என்ன என்பதை நாட்டின் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து,அவர் மீது எழுந்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க உடனடியாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #mohamedshibli #indiathowheedjamaath @Kalaignarnews @thatsTamil @GunasekaranMu @sunnewstamil @polimernews @News18TamilNadu @news7tamil @TamilTheHindu @jayapluschannel @MalaimurasuTv @dinathanthi @DinamaniDaily
2
3
58
தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu ‌ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டனில் இருக்கிறார். #shiblivoice #mohamedshibli #shiblivlogs #TVKVijay #Ajithkumar #tvkfakenewsfactory
1
2
33
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில்,எந்தவொரு சட்டப்பூர்வ அழைப்பாணை அல்லது முறையான காரணமும் இல்லாமல் சிறுபான்மை மக்களை காவல் நிலையத்திற்கு அழைத்து,அவர்களிடம் கண் ரேகை மற்றும் கைரேகைகளை பதிவு செய்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் மனித உரிமை மீறலாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயலாகும்.சட்டத்தின் பெயரில் எந்தவொரு சமூகத்தினரையும் அச்சுறுத்தும் அல்லது குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு,முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள்.எந்தவொரு சமூகத்தினருக்கும் அச்சம் ஏற்படும் சூழல் உருவாகாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் @CMOTamilnadu @tnpoliceoffl @Kalaignarnews @sunnewstamil @GunasekaranMu @dinathanthi @PttvNewsX @polimernews @News18TamilNadu @JuniorVikatan @jayapluschannel @thatsTamil @thirumaofficial #TVKVijay‌HQ #mohamedshibli #indiathowheedjamaath
1
2
37
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.தினந்தோறும் வெளியாகும் குற்றச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சத்துடனும்,பாதுகாப்பு குறித்த கேள்விகளுடனும் வாழும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இத்தகைய சூழலில்,இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட,நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரீல்ஸ் தயாரிப்பதற்காக சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை. தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றுவதற்கான புதிய திட்டங்கள்,வேலைவாய்ப்பு,தொழில் வளர்ச்சி,முதலீடு,கல்வி மற்றும் அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால்,முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட அரசியல் விளம்பரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது. சட்டம் ஒழுங்கு குறித்து எழும் மக்களின் கவலைகளுக்கு அரசு தெளிவான பதிலும்,உறுதியான நடவடிக்கையும் எப்போது எடுக்கும் என்ற கேள்வி இன்று பொதுமக்களிடையே பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.அரசியல் விவாதங்களைத் தாண்டி,மக்களின் பாதுகாப்பையும்,மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டியது அரசு சட்டமன்றத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது. முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் @Kalaignarnews @sunnewstamil @jayapluschannel @polimernews @News18TamilNadu @bbctamil @news7tamil @ThanthiTV @thatsTamil @GunasekaranMu @NewsTamilTV24x7 @DinakaranNews #vijay #dmk #mohamedshibli #indiathowheedjamaath
2
1
3
61
பொய் செய்திகளை மட்டுமே பரப்பும் விஜய் கட்சியினர்! #shiblivoice #mohamedshibli #shiblivlogs #tvkfakenewsfactory #TVKVijay‌
1
2
47
நம் தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவு கூர்வோம். சுதந்திரம் என்பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல;சமூக நீதி,சமத்துவம்,ஜனநாயகம் மற்றும் மனிதநேயத்தை நிலைநாட்டும் உயரிய பொறுப்பாகும். இந்த சுதந்திர தினத்தில் வளமான,வலிமையான,சமத்துவமான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். முஹம்மது ஷிப்லி பொதுச் செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #IndependenceDay #MohamedShibli #IndiaThowheedJamaath #IndependenceDay2026 @Kalaignarnews @pttv_tweets @sunnewstamil @jayapluschannel @thatsTamil @polimernews @News18TamilNadu @news7tamil
1
2
23