Hi @grok இந்த வீடியோவில் சொல்லுறத அப்படியே தமிழ் text மாற்றி கொடு
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி டிஜிபி-யிடம் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மனு அளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் விஜய்யை பார்த்து நீ என்ன ஒழுங்கான்னு கேட்டது உண்மைதான் போல
its confirmed 🔥🔥🔥🔥
@Udhaystalin 🙏🙏🙏
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இத்தனை மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் த.வெ.க அரசு மௌனம் காத்தது ஏன்?
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்து 117 நாட்கள் ஆகியும் ஏன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வை கைது செய்யவில்லை? எதிர்க்கட்சிகளின் வழக்குகளில் காட்டும் வேகத்தை, ஏன் தங்கள் கட்சி எம்.எல்.ஏ மீது காட்டவில்லை? அவரைக் கைது செய்து கட்சியை விட்டு நீக்கினால், எங்கே தன்னுடைய முதலமைச்சர் நாற்காலிக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என்று விஜய் மௌனமாக இருக்கிறாரா?
விஜய்யின் இந்த மௌனம், பெண்கள் பாதுகாப்பை விட முதலமைச்சர் பதவியே முக்கியம் என அவர் கருதுவது போலவே தெரிகிறது!
21




















