Pinned Tweet
எதைக் கேட்டாலும்,
கஷ்டத்தையே
கொடுக்கிறாய்...
கஷ்டத்தைக் கேட்டால்,
எதைக் கொடுப்பாய்...
கடவுளே😔
Money_தன்🗿 retweeted
நீயற்ற நான்
எண்ணெய் தீர்ந்து போன அகலில்
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் திரி..
- யாத்திரி
Money_தன்🗿 retweeted
நாம் சந்திக்கும்போது
பேச ஒன்றுமே இருப்பதில்லை
ஆனால்
நாம் சந்தித்தைப் பற்றிப் பேச
எப்போதும் எவ்வளவோ இருக்கிறது..
- மனுஷ்யபுத்திரன்
Money_தன்🗿 retweeted
கடலுக்கு மட்டுமே
பழக்கப்பட்ட கப்பல்
அதன் அலைகளாலேயே
உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுகிறது
உரியவரிடத்தில் உடைபடுதல்
மனிதர்களுக்கு மட்டுமே
சொந்தமானது அல்ல
Money_தன்🗿 retweeted
ஸ்கூலில் கையெழுத்துப் போடக் கற்றுக்கொடுத்தாங்க...
ஸ்மார்போனில் எல்லாத்துக்கும் கைரேகை வைக்க வச்சுட்டாங்க!
Money_தன்🗿 retweeted
அடிக்கடி சந்திக்கும் நபரிடம் "நீங்க நலமா" எனும் கேள்விக்கு, ஏன் உனக்கு தெரியாதா என்பதை போன்றே இருக்கிறது அவரின் பதில்..
Money_தன்🗿 retweeted
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️
#கூலு
#tamilbook
Money_தன்🗿 retweeted
உண்மையான நன்மை என்பது
நமக்கு கிடைக்கும் செயலுக்கு அப்பாற்பட்டது.நம்மோடு உண்மையாக இருப்பவர்களிடமும் நாம் பிறருக்கு உண்மையாக இருப்பதிலும் உண்மையான நன்மை என்பது இருக்கிறது.
Money_தன்🗿 retweeted
நாளைக்கு என்று
தள்ளி வைப்பதை
இருமுறை ஆலோசிக்க வைப்பதும்
இன்றென்ன அவசரம் எனத்
தள்ளி வைக்கச் சொல்வதும்
அவரவர் காணும்
கால தரிசனத்தில்
இருக்கிறது
Money_தன்🗿 retweeted
மாலை
எல்லாவற்றையும்
அதன் இடத்துக்குத்
திருப்பி அனுப்புகிறது
கடைசி ஷிப்டில்
உதிக்கும் சூரியனைத்
தவிர
Money_தன்🗿 retweeted
திரும்பாத பறவைகளாய்ச்
சில கனவுகள்
திறந்தே இருக்கின்றன
ஜன்னல்கள்
எட்டிப் பார்த்தாலும் பார்க்கலாம்
அந்த வானம்
யார் கண்டது?
உதிர்வது,
இலைகளின் தவறல்ல...
விட்டு விடுவது,
கிளைகளின் இயல்பு...
#Money_தன்
Money_தன்🗿 retweeted
ஆழ்கடலின் அடியிலிருந்து
குளிரில் நடுக்கியபடி
எழுந்தது நிலவு,
ஓடிச்சென்று
போர்த்திக்கொண்டது மேகம்,
இருளில் மூழ்கியது முற்றம்!
Money_தன்🗿 retweeted
அறிவின் மிகப்பெரிய எதிரி
அறியாமை அல்ல.
நாம் எதை அறிவுஎன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதனுடைய போதாமை.
-ஸ்டீபன் ஹாக்கிங்
Money_தன்🗿 retweeted
உடனிருப்பேன் என்கிற
வாக்குகள் பொய்யாகும்போது,
ஒருபோதும் உன்னிடம்
திரும்ப வரமாட்டேன்
என்று சொல்லிச் சென்ற
வாக்குகள்
மட்டும் பலிக்கவா போகிறது?
வா..
காத்திருக்கிறேன் 💕
- யாத்திரி















