சஞ்சீவன் retweeted
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது. இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
சஞ்சீவன் retweeted
தமிழ்நாட்டின் உட்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன்.
ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை 18 ஆம் தேதி முடித்துக் கொண்டார். உண்ணாவிரதப் போராடத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருமாவளவன் பேசுகையில்,
காங்கிரசுடன் இனி எந்தவிதமான உறவையும், எக்காலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வைத்துக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 மடங்கு பலமானது என்றார், காங்கிரசை ஒழிப்பேன் என்றும் ‘வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டார். ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே காங்கிரசோடு கூட்டணி வைத்து மேடையில் மைக் பிடித்து 'அன்னை சோனியா வாழ்க' என காங்கிரஸ் தொண்டரை விட விசுவாசமான அடியாளாய் மாறி கூவினார்.
ஒரு பக்கம் ஈழ ஆதரவு வேஷம் போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் ஈழ எதிர்ப்பாளர் ஹிந்து ராமுக்கும், கே.எஸ். அழகிரிக்கும் விருது கொடுப்பார். ஒரு பக்கம் அணு உலை எதிர்ப்பு பேசுவார் இன்னொரு பக்கம் அணு உலை திறக்க முழு வேலை செய்த காங்கிரஸ் அமைச்சர் நாராயணசாமியை தன் பிறந்தநாளுக்கு தலைமை தாங்க வைப்பார். பெரியார் திடலுக்கு போய் வீரமணியோடு உறவாடுவார் அப்படியே போய் ஈஷா சத்குருவோடு பேட்டியில் இருப்பார். அந்நிய முதலீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன் என்பார். மூவர் தூக்கு ரத்து செய்ய போராட்டத்தில் ஒரு பக்கம் கலந்துகொண்டு இன்னொரு பக்கம் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்வார். இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் என்பார் அப்படியே யூடர்ன் அடித்து தமிழ்தேசியம் என்று ஒன்று இல்லை என்பார். விஜயகாந்திற்கு அம்பேத்கார் பற்றி என்ன தெரியும் என்று பேசியவர் சில வருடம் கழித்து வாழும் அம்பேத்கராக விஜயகாந்த் தெரிகிறார் என்றார். இப்படி இன்னும் ஓராயிரம் இருக்கிறது அவரின் சந்தர்ப்பவாத அரசியல்..
இப்படியான திருமாவிற்கு திகவினரும் திமுகவினருக்கு விட்ட ஃபயரும் சிதறவிட்ட சில்லறைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு திருமாவை சந்தர்ப்பவாதி என பதிவிடுகிறார்கள். இதையே நாங்கள் சொல்லும் பொழுது சாதிவெறியன் என்று பட்டம் கட்டிய இந்த வெங்காயங்கள் இன்று அதே பட்டத்தை வாங்க லைனில் நிற்கிறார்கள்.
உபிஸ்... வாழ்க்கை ஒரு வட்டம் டே..
சஞ்சீவன் retweeted
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
சஞ்சீவன் retweeted
அசாத்தியத்தையும் சாத்தியப்படுத்தும் நாம்தமிழர் கட்சி !
ஒரு அரசாங்கம் மக்களுக்கு எதுவெல்லாம் இலவசமாக கிடைக்க வழிசெய்தால் மக்கள் பயனடைவார்கள்... என்ன என்ன பயன்.. இதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறது.. கல்வி, மருத்துவம், குடிநீர் இந்த மூன்றும் இலவசமாக கிடைக்கும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்ன... விவாதிக்கலாமா அன்பு சொந்தங்களே...
இந்த மூன்றும் மக்களுக்கு இலவசம் என "நாம் தமிழர் கட்சி" அறிவித்திருக்கிறது.. கல்வி இலவசமாவதால் மிகப்பெரிய பண நெருக்கடி மக்களிடம் குறையும்.. மக்களிடம் மன அழுத்தம் இருக்காது.. பார்க்கும் வேலையில் போதுமான சம்பளத்தில் வாழ பழகுவோம்... குறிப்பாக மக்களுக்கு படிப்புக்கு பணம் கட்ட வேண்டுமே என பார்க்கும் வேலையில் கையூட்டோ லஞ்சமோ களவானித்தனமோ இருக்காது.. குற்றமில்லா நிம்மதியான வாழ்க்கை ஒரு சாமானியனால் வாழ முடியும்... எனக்கு தெரிந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்... சகோதரர்கள் அவர்களின் கருத்துக்களை வைக்கலாம்.. அலசலாம்... ஆராயலாம்.. கட்சி சார்பின்றி மக்களுக்கான ப்ரச்னையாக பேசுங்கள்.. நம் வாக்கு எந்த மாதிரியான ஆட்சி மாற்றத்திற்கு என யோசிக்கவே இந்த விவாதம்...
முதலில் கல்வி பற்றி மட்டும் பேசுவோம்... நாளை மருத்துவம், பிறகு குடிநீர்...
ஆரோக்கியமான விவாதம் மட்டுமே ..
சஞ்சீவன் retweeted
0% ஓட்டு இருக்கும் கட்சிக்கு எதுக்கு அழைப்பு?
நாம் தமிழர்கட்சி இதற்கு முன் பல முறை நிராகரிக்கப்பட்டுள்ளது!
யார் திமுகவுடன் உறவில் இருக்கு என்பது புரியுதா?
சஞ்சீவன் retweeted
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது.
#வெல்லப்போறான்_விவசாயி
சஞ்சீவன் retweeted
சீமான் அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத பொழுது அத்துமீறி நுழைந்து அதிகார திமிரை காட்டிய நீலாங்கரை ஆய்வாளரை யார் அந்த பிரவீன் ராஜேஷ் என்று பெருமை பீத்தி செய்தி போடும் நபர்கள்… அவர் ஒருவரை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கபட்ட காவல்துறையால் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்பதையும் போடுவார்களா??
ராஜிவ்காந்தி குண்டுவெடிப்பில் அவர் தந்தை இறந்ததற்கு பழி வாங்குகிறார் என்று அவரை ஏற்றிவிடுவார்கள் இதற்கும் பதில் சொல்வார்களா?
சஞ்சீவன் retweeted
நடிகர் ரஜினிகாந்த் உடனான அண்ணன் சீமான் அவர்களது அன்பின் நிமித்தமான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசி, 'காவி கட்டும் சீமான்' என அட்டைப்படத்தில் அபத்தமாகத் தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது ஜூனியர் விகடன்.
அதானி விவகாரத்தில் திமுக அரசு வசமாகச் சிக்கியிருக்கும் வேளையில், அதுதான் நியாயமாக அட்டைப்படமாக இருந்திருக்க வேண்டும். அதனைத் தவிர்த்துவிட்டு, நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்புவதற்கு வன்மத்தைத் தாண்டி, இன்னொரு காரணமும் இருக்கிறது. அது முழுக்க முழுக்க வர்த்தகப்பார்வை; கல்லா கட்டுவதை நோக்கமாகக் கொண்ட விகடனின் இலாப நட்டக் கணக்கு!
இந்த ஜூனியர் விகடனில் மட்டும் 30 பக்கங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் திமுகவினர். 30 பக்கங்கள் திமுகவினர் விளம்பரம் கொடுத்திருக்கும் நிலையில், அட்டைப்படத்தில் திமுகவைத் தாக்கி எழுதினால், திமுகவினருக்கு தர்ம சங்கடம் ஏற்படும். விளம்பரம் கொடுத்தவர்களே இதழை வாங்குவதில் பெரும் நெருடல் ஏற்படும். ஆகவே, அதானி விவகாரத்தில் திமுக அரசுக்கு இருக்கும் பங்கை அட்டைப்படத்தில் போடாது, நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்கு காவிச்சாயம் பூசி, கற்பனைக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அதனை அட்டைப்படத்தில் போட்டு இதழியல் அறத்தைப் (?) போற்றுகிறது ஜூனியர் விகடன்.
ஒருவேளை, தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்த நாள், மாவீரர் நாள் குறித்தான விளம்பரங்களை இதேபோல 30 பக்கங்களுக்கு நாம் தமிழர் கட்சி கொடுத்திருந்தால் இதுபோன்ற அபத்தமான அட்டைப்படம் ஜூனியர் விகடனில் வந்திருக்க வாய்ப்பே இல்லை.
காசும், பணமும்தான் முதன்மை நோக்கம்னா மஞ்சள் பத்திரிக்கையையே நடத்திரலாமே? அப்புறம் எதுக்கு புலனாய்வு இதழ் நடத்தணும்? இதழியல் அறம்ன்னு எல்லாம் ஏன் பேசணும்?
சஞ்சீவன் retweeted
கொள்கைத் தலைவன் சீமான் | தமிழர்களின் பிறந்தநாள் வாழ்த்து | சாட்டை |
youtu.be/yemJI4giGaU
#கொள்கைத்தலைவன்_சீமான்

















