☭☭Engineer☭☭ retweeted
நேத்து ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் பேசிக்கொண்டிருந்ந போது திமுக ஊழல் பண்ணுச்சுன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.ஊழலே பண்ணாலும் ஒரு சிஸ்டமா அரசாங்கம் நல்லா நடந்துட்டு இருந்துச்சு.காசு கொடுத்தா கரெக்டா வேலை நடந்துச்சு.இப்ப ஊழல ஒழிக்கிறேன்னு ஆந்திரால இருந்து அரிசிய நிப்பாட்டி அரிசி விரை ஏறிப்போச்சு.ஆவின் பால் பாதி நாள் மூடி கிடக்கு.கரண்டுபில் அதிகமா வருது.இதுலாம் மத்த ஆட்சில இருந்துருக்காதுல்ல.இப்பயும்தான் லஞ்சம் வாங்கிறானுங்க.கூடவே வாங்குறானுங்க.ஆனாலும் அலுவலர டக்குனு போட்டு விட்டு தூக்கிர்றானுங்க.கொடுத்த காச வேற யார்ட்ட போய் கேக்குறதுன்னு தெரியல.மாற்றம்ன்னு மண்ணள்ளி போட்டாய்ங்கன்னார்.கேக்கும்போதே ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி❤️
🎯🎯🎯🎯🎯👌
Replying to @SUDHIRb9661
What about Pongal? Celebrated with gratitude towards nature, farmers, cattle and the Sun, without crackers, loudspeakers or polluting water bodies. Maybe the problem isn’t the festivals, but how some people choose to celebrate them.
17
கறி குழம்பு சாப்பிட்டு வீட்டுல இருந்து படம் பார்க்காம எல்லாரும் இங்க என்னடா பண்ணுறீங்க #மாமதுரை #தெப்பக்குளம்
21
☭☭Engineer☭☭ retweeted
உலகின் முதல் Pile Foundation ஊழல்.
கலக்கு சந்துரு.. கலக்கு. 👌👏👏
This quoted post is unavailable.
☭☭Engineer☭☭ retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது.
அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா?
திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா?
கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
☭☭Engineer☭☭ retweeted
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல்
🔹குழு அமைத்தது நவ 2025. (அந்த குழுவில் பெருமாள் மணி அவர்களும் ஒரு உறுப்பினர்)
🔹குழுவின் பரிந்துரை எப்போது வந்தது. (மூன்று மாதம் அவகாசம் இருந்ததால் எல்லா புத்தகங்களையும் ஆய்வு செய்து அநேகமா ஏப்ரல் மாதம் தான் குழுவின் பரிந்துரையே வந்திருக்கும்)
🔹அந்த பரிந்துரையில் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்டது எப்போது (ஏப்ரல் மாதம் தேர்தல் என்பதால் எந்த முடிவும் எடுத்து இருக்க முடியாது. தேர்தல் முடிந்து தானே முடிவு எடுத்து இருப்பார்கள்?)
🔹ஆர்டர் கொடுத்தது எப்போது? (எந்த அமைச்சகம் எந்த அதிகாரி ஒப்புதல் கொடுத்தது என்றெல்லாம் இந்த அரசு விசாரிக்கும் என நினைக்கிறேன்)
🔹புத்தகம் வாங்கியது 22 ஜூன் 2026 என தெளிவாக சீல் இருக்கிறது.
அதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் தெளிவாக @tn_factcheck Fact check செய்து விரிவான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்
புத்தக கொள்முதலில் சந்தேகம் இருந்தால் அந்த ஆர்டரை ரத்து செய்து இருக்கலாமே?
விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா?
இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.
பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என நினைக்கிறேன்
🙏🙏🙏
☭☭Engineer☭☭ retweeted
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!
-அழகிய பெரியவன்
☭☭Engineer☭☭ retweeted
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய்.
AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
☭☭Engineer☭☭ retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று மீண்டும் சிக்கிய தவெக
அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது.
ஒரே ஏரியா ஒரே ரோடு 😂
☭☭Engineer☭☭ retweeted
The Nation wants to know,
#WhoIsWriterTrishaVijay
Answer Tharkuris!
☭☭Engineer☭☭ retweeted
புத்தக ஆர்வலர்களும் நெடிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேரமையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee?
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது.
கேள்விகள்:
🔹 31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார்.
🔹 07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
🔹 22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி.
🔹 20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
🔹 22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே,
1️⃣ புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன?
2️⃣ தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே?
3️⃣ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா?
4️⃣ அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன?
5️⃣ புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன?
6️⃣ ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது?
திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை?
குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும்.
முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்!
கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
☭☭Engineer☭☭ retweeted
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது
22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல
அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு
கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல
அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு
Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
☭☭Engineer☭☭ retweeted
#WATCH | தீபாவளி திருநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகீம்!
#SunNews | #Deepavali | #Malaysia | #AnwarIbrahim
☭☭Engineer☭☭ retweeted
எதிரிகளே பரிதாபப்படும் ஒரு நிலைமைல கழகம் 😭😭😭
☭☭Engineer☭☭ retweeted
இப்படிக்கு எழுத்தாளர் த்ரிஷா விஜய் 😂😂😂 – at Mylapore Tiruvallike, India
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.



































