Replying to @i_thenali
@i_thenali இப்படித்தான் உடுமலை தியேட்டர் பிரிண்டுகள் அமராவதி நகர் வரும், பாதிப்பாதியாக
லக்கி அவர்கள் சொல்வது போல, 90களின் ஆரம்பத்தில் கூட நிறைய ஆங்கில படங்கள் தான் அங்கே வெளியாகிக் கொண்டே இருக்கும்.
ஆனாலும் பல முக்கிய தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரிய சாதனை புரிந்துள்ளன.
மூன்றாம் பிறை 300 நாட்களைக் கடந்து சுபம் திரையரங்கில் ஓடியது.
வால்டர் வெற்றிவேல் நல்ல ஓட்டம் கண்டது
இந்தியன் அங்கே மிகப் பெரிய சாதனை புரிந்தது
தெனாலி தசாவதாரம் போன்ற திரைப்படங்களும் அங்கே பெரிய வெற்றியை கண்டன.
இரண்டாயிரத்திற்கு பின்னர் அதிக தமிழ் திரைப்படங்கள் திரையிடலாயினர்.
மவுண்ட் ரோடு பகுதியில் ஒரு தியேட்டரில் மட்டுமே 2000 ஆரம்பங்கள் வரைபடம் வெளியிடும் சிஸ்டம் இருந்ததால்
ரஜினி திரைப்படங்களை பெரும் பாலும் ஆல்பர்ட் தியேட்டர் எடுத்துக் கொள்ளும். அதனால் சத்யம் தியேட்டரில் அரிதாகவே அப்போது ரஜினி படங்கள் வந்தன.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு மவுண்ட் ரோடு பகுதியில் இரண்டு தியேட்டர் அதற்கு பின்னர் சிவாஜி திரைப்படத்திற்கு மூன்று நான்கு தியேட்டர்கள் என்று ஒதுக்கப்பட்ட பின்னர் நிறைய ரஜினிகாந்த் படங்களும் சத்தியம் தியேட்டரில் வரலாயின.
26
City Elite Bs love DMK govt , you must be meaning soft target mass Bs
City B friends who voted for Vijay and brought evangelist Government 😂😂😂 @cvkrishnan They wanted DMK out
திமுக கொண்டு வந்த திட்டம்தான் என்னன்னு தேடிப்பார்க்கிறோம்🤣
அதிமுக கொடுத்த இட ஒதுக்கீடு , அதிமுக கொண்டு வந்த உயர்கல்வித்திட்டங்கள், அதிமுக கொடுத்த சத்துணவு முதல் சைக்கிள், காலணி, மடிக்கணினி அவரை, அதிமுக கொடுத்த 100 யூனிட் இலவச மின்சாரம் முதல் விவசாய மின்சார சலுகை வரை கண்கூடு
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து...
59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே...
அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது...
மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்...
உண்மையில்,
திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது...
1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்...
அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்...
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்..
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்...
எந்த காலத்திலும்
திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்..
எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்...
அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது...
ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்...
சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
சினிமாத்துறைக்கு ஸ்டாலின் செய்த கொடுமைக்கு பதிலடியாகத்தான் இன்று அரசியல் ஆட்சி அதிகாரங்களுக்கு விஜய் கொடுமை செய்கிறார்.
ஆனால் விஜய்க்காவது சினிமா வரும் , ஆனால் ஸ்டாலினுக்கு ஆட்சி,அரசியல் சினிமா எதுவும் வராது.
இந்த நடிப்புக்கு ஆஸ்கார் கொடுக்கல என்றால் எந்த நடிப்புக்கு கொடுப்பானுங்களாம்..
Worstu
நடிப்பு மாசுரன் ஸ்டாலின் 🔥🔥🔥
21
இந்த மாதிரி ராஜ்யசபை உறுப்பினர் இருக்கனும், சட்ட மந்திரி ராஜ்யசபா உறுப்பினர்னு அத்தனையும் அனுபவிச்சுட்டு மிக்சர் தின்னுட்டு இன்னைக்கு திடீர்னு கனா கண்ட ரேஞ்சில் பேசும் சண்முகம் போன்றோருக்கு சரியான பாடம்
1. கள்ளக்குறிச்சி MLA எதிரான வழக்கு,
2. VS பாபு உடல்நிலை தொடர்பான வழக்கு,
3. தவெக குதிரைபேர வழக்கு,
4. இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு,
இந்த அத்தனை வழக்குகளின் பின்னால் இருப்பது AIADMK Legal Wing...you're doing an excellent job sir...🫡 @IInbadurai @AIADMKOfficial
Replying to @Balaji2023
1
31
சரி இதில் திமுக செய்த துரோகங்கள்னு சொல்லறீங்களே செய்தது பாபுவா கருணாநிதியா
ஒரு பேட்டி, ஒரு மேடை, ஒரு அசிங்கம்!
- வி.எஸ்.பாபுவும் நானும்!
ஒரு பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்!
ஜூனியர் விகடனில் அரசியல், புலனாய்வு செய்திகளை எழுதிக் கொண்டிருந்த போது அரசியல்வாதிகள் பலரின் தொடர்புகள் கிடைத்தது. அதில், ஒருவர்தான் வி.எஸ்.பாபு. அன்றைய காலகட்டத்தில் அவர் புரசை பாபு என்றுதான் அழைக்கப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு புரசைவாக்கம் என்ற தொகுதி இருந்தது. அந்த தொகுதியின் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்ததால், ’புரசை’ அடைமொழியானது. வட சென்னைக்காரன் என்பதால், பத்திரிகையாளன் ஆவதற்கு முன்பே வட சென்னை அரசியல்வாதிகளின் வரலாறுகளும் பராக்கிரமங்களும் அறிவேன். அதில் வி.எஸ்.பாபுவின் வரலாறும் அடங்கும்.
வி.எஸ்.பாபுவை பற்றி நிறைய செய்திகளை ஜூனியர் விகடனில் பதிவு செய்திருக்கிறேன். அதில் முக்கியமானது, விவரம் தெரியாமல் எதிர்க் கட்சியின் மேடையில் ஏறி அமர்ந்து அசிங்கப்பட்டதுதான். பிரத்தியேகமாக அந்த செய்தியை எழுதியதால் எனக்கு முக்கியமான அங்கீகாரம் கிடைத்தது. வி.எஸ்.பாபு மேடை மாறி ஏறிய அந்தக் கதையை இன்னொரு ஸ்டோரியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அந்த கட்டுரையை முதலில் பார்த்துவிடுவோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், பாமக-வின் முன்னாள் பொருளாளர், ஜிஹாத் கமிட்டித் தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் குணங்குடி அனீபா. ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகளாகச் சிறையில் விசாரணை கைதியாக இருந்தார். ’குணங்குடி அனீபாவை பேட்டி எடுக்கலாம்’ என எடிட்டோரியல் டீமில் இருந்து அசைன்மெண்ட் தரப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமான 1997 டிசம்பர் 6-ஆம் தேதி திருச்சி. ஈரோடு. திருச்சூர் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்த வழக்கில் குணங்குடி அனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட சில பிரிவுகளை நீதிமன்றம் நீக்கிவிட்டு, புதிதாக குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்து புதிதாகக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சேர்த்திருப்பது பிரச்னை ஆன நிலையில்தான், குணங்குடி அனீபாவிடம் பேட்டியை எடுத்தேன்.
பூந்தமல்லி கோர்ட்டிற்கு போலீஸ் புடைசூழ விசாரணைக்கு வந்த போது, கெடுபிடிகளை மீறி அவரை இரண்டு நாட்கள் சந்தித்து பேட்டி எடுத்தேன். 25.04.2010 தேதியிட்ட ஜூனியர் விகடனில், ’அரசு கொடுத்த பரிசு… குணங்குடி அனீபா குமுறல்’ என்ற தலைப்பில் பேட்டி வெளியானது.
அந்த கட்டுரை நீதித் துறை வட்டாரத்தில் பேசுபொருளானது. 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய பிரிவுகளைச் சேர்த்து விசாரணையா? என அரசியல் தலைவர்களால் கேள்வி எழுப்பப்பட்டன. நீதி கேட்டு உயர் நீதிமன்றம் நோக்கி பேரணி போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். ’உடனே தீர்ப்பு தேதியை அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு உயர் நீதிமன்ற பதிவாளரைச் சந்தித்தார்கள் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள். அதனை தொடர்ந்து பூந்தமல்லி நீதிமன்றம் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவித்தது. குணங்குடி அனீபா உள்ளிட்டோர் வழக்கில் இருந்து 2010 மே 21-ம் தேதி விடுவிக்கப்பட்டார்கள்.
குணங்குடி அனீபா விடுதலை ஆன போது ஃபாலோ அப் செய்திக்காகச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தும் கட்டியணைத்துக் கொண்டார் குணங்குடி அனீபா. சிறையில் இருந்து அவரை ஊர்வலமாக தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து வந்த போது, ’’என் விடுதலைக்குக் காரணமான பேட்டியை எடுத்த தம்பி இவர்’’ என என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
குணங்குடி அனீபா விடுதலையை தமுமுக ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடினார்கள். ‘விடுதலை சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் 2010 ஜூன் 8-ஆம் தேதி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் பொதுக் கூட்டத்திற்கு தமுமுக ஏற்பாடு செய்திருந்தது. ’’கூட்டத்திற்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்’’ என குணங்குடி அனீபா என்னைக் கேட்டுக் கொண்டார். ’’வாய்ப்பிருந்தால் வருகிறேன்’’ என பொத்தாம் பொதுவாக சொன்னேன்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்கும் வேலை எல்லாம் கிடையாது என்பதால் தவிர்த்தேன். ஆனால், அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் போயிருந்தால் திமுக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு எதிர் முகாம் மேடையில் ஏறிய கூத்தைப் பதிவு செய்யாமல் போயிருப்பேன். தங்கசாலை பகுதியில் வசித்த உறவினர் ஒருவரை அன்றைக்குச் சந்திக்க வேண்டும் என்பதற்காக டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். வழியில்தான் ‘விடுதலை சிந்தனைகள்’ பொதுக் கூட்டம். போய் ஒரு அட்டனன்ஸ் போட்டுவிட்டுப் போய்விடுவோம் என நினைத்து, டூ வீலரை ஓரம் கட்டிவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் அரங்கேறியது.
‘‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’’ என்ற கவுண்டமணியின் டயலாக் பிரபலம். அணி தாவுவதும், எதிரிகளை பந்தாடுவதும், வேட்டிகள் கிழிவதும், உதார் விடுவதும் அரசியல்வாதிகளுக்குப் பாலபாடம் என்பதால் இந்த வசனம் அடிக்கடி உதிர்க்கப்படும். ஆனால், எதிரிக் கட்சி யார்? என்பதுகூடவா அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் போகும். அதற்கு உதாரணமாக இருந்தார் வி.எஸ்.பாபு.
காரில் வந்து இறங்கிய திமுக எம்.எல்.ஏ-வும் வடசென்னை மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு கூட்ட மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எனக்கோ பதற்றம். திமுக-வை எதிர்த்துக் கொண்டிருந்த தமுமுக கூட்டத்திற்கு எப்படி வி.எஸ்.பாபு வருகிறார்? உடனே தமுமுக போட்டோகிராபரை உஷார்படுத்தி வி.எஸ்.பாபு வருகையை உடனே படங்கள் எடுக்கச் சொன்னேன். காரணம் அசைமெண்ட் இல்லாததால் விகடன் போட்டோகிராபர் வரவில்லை.
காரைவிட்டு இறங்கி நடந்து கொண்டிருந்த வி.எஸ்.பாபு, ‘‘நான் சாதாரண கூட்டம்னு நினைச்சேன். அதிகம் பேரு கூடியிருக்காங்க’’ என்று தன்னுடன் வந்த சகாக்களிடம் சொல்லியபடியே நடந்தார். முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் இயல்பாக மேடையை நோக்கி நடந்த வி.எஸ்.பாபு, மேடையில் விறுவிறுவென ஏறினார். நடுநாயகமாக இருந்த இருக்கையில் பந்தாவாக அமர்ந்து கொண்டார்! வி.எஸ்.பாபுவுக்குப் பின்னால் ஆளுங்கட்சித் தொண்டர்கள் மேடையை மொய்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக. கூட்டணியை விட்டு வெளியேறித் தனித்து போட்டியிட்டது தமுமுக-வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி. அந்த கட்சி திமுக கூட்டணியில் இல்லாத நிலையில் திமுக. எம்.எல்.ஏ ஒருவரே தங்கள் மேடையில் அழையா விருந்தாளியாக வந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த கூட்டமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தது.
மேடையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பேசி முடித்த பிறகு இறுதியாக மைக் பிடித்தார் குணங்குடி அனீபா. ‘‘செய்யாத குற்றத்திற்காக என்னை 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தார்கள்’’ எனத் தனது சிறை அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் வி.எஸ்.பாபு மேடையில் ஏறி அமர்ந்திருந்தார்.
திமுகவை விமர்சிக்கும் மேடையில் திமுக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு என்ன வேலை? எனப் பலரும் புருவத்தை உயர்த்தினார்கள். கூட்டத்தில் திமுக மீது வைத்த விமர்சனங்களுக்குப் ‘பதிலடி’ கொடுக்கத்தான் வி.எஸ்.பாபுவே நேரடியாகக் களத்துக்கு வந்துவிட்டார் என்று உளவுத் துறை போலீஸார் உஷாராகக் குறிப்பெடுக்கத் தயாரானார்கள்.
மேடையில் இருந்த தலைவர்களும் அதிர்ச்சியோடு வி.எஸ்.பாபுவை வேறுவழியில்லாமல் வரவேற்று அவரை நடுநாயகமான இருக்கையில் அமர வைத்தார்கள். அப்போது தொடர்ந்து மைக்கில் முழங்கிக் கொண்டிருந்தார் குணங்குடி அனீபா. திமுகவை அவர் விமர்சித்துக் கொண்டிருந்த போதும்
எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மேடையில் அமர்ந்திருந்தார் வி.எஸ்.பாபு. வி.எஸ்.பாபுவுக்கு பின்னால் அமர்ந்திருந்த அவரின் உதவியாளரை ஒரு போலீஸ் அதிகாரி அழைத்து, ‘‘சம்பந்தமே இல்லாமல் எம்.எல்.ஏ. இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறாரே… இந்த கூட்டம்தானா? இல்லை வேறு கூட்டமா? நல்லா செக் பண்ணிக்கோங்க’’’ என்றார். ‘‘அவங்க அழைச்சதாலதான் எம்.எல்.ஏ வந்திருக்காரு’’ என்று சட்டென்று சொன்னார் உதவியாளர். போலீஸ் அதிகாரியிடம் பேசிய விஷயத்தை உதவியாளர், வி.எஸ்.பாபுவிடம் சொல்ல அப்போதுதான் அவருக்கு லேசாகப் பொறி தட்டியது.
உடனே பக்கத்தில் அமர்ந்திருந்த ஜவாஹிருல்லாவிடம் ‘‘ஜெயினுல் ஆபிதின் இல்லையா?’’ என்று கேட்டார் வி.எஸ்.பாபு. முஸ்லிம் லீக் சென்னை மாவட்டச் செயலாளர்தான் ஜெயினுல் ஆபிதின். உடனே ஜவாஹிருல்லா ‘விடுதலை சிந்தனைகள்’ பொதுக் கூட்ட நோட்டீஸை எடுத்து வி.எஸ்.பாபுவிடம் நீட்டினார். அதைப் படித்ததுமே வி.எஸ்.பாபுவின் முகம் மாறியது. ஆனால், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமலேயே சிரித்தபடியே மேடையில் இருந்தார். கொஞ்ச நேரத்திலேயே யாரிடமும் சொல்லாமல் மேடையைவிட்டு கீழே இறங்கிய வி.எஸ்.பாபு போலீஸ் அதிகாரிகளிடம் ‘‘முஸ்லிம் லீக் கட்சி கூட்டம் இங்கே நடப்பதாகச் சொன்னார்களே… இது வேறு கூட்டமாக இருக்கிறதே’’ என்று கேட்டார். ‘‘முஸ்லிம் லீக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது’’ என்று அவர் சொல்ல… கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவரைப் போல “அதானே பார்த்தேன். இதே ஏரியாவிலதான் முஸ்லிம் லீக் கூட்டமும் நடக்குதா? அதான் குழம்பிட்டேன். வர்றட்டா!” என்றபடி எதையுமே கண்டுகொள்ளாமல் மிடுக்கு நடை போட்டபடியே நடையைக் கட்டினார் வி.எஸ்.பாபு.
அன்றைக்குத் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதே தினத்தில் மண்ணடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம் லீக்கை சேர்ந்த மத்திய அமைச்சர் அகமது, தமிழக அமைச்சர் மைதீன்கான், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வீரமணி, ரகுமான்கான் என்று நிறைய விஐபி-கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்திற்குப் போக வேண்டிய வி.எஸ்.பாபு தவறுதலாக எதிர் முகமான தமுமுக மேடையில் ஏறிவிட்டார். அந்த அளவுக்கு ‘தங்கள் கூட்டணிக் கட்சி எது? எதிர்க் கட்சி எது? என்பதுகூட தெரியாமல் இருந்தவர்தான் வி.எஸ்.பாபு.
‘விடுதலை சிந்தனைகள்’ கூட்டத்தை மண்ணடி தம்புசெட்டி தெருவில் நடத்தான் தமுமுக முதலில் ஏற்பாடு செய்தது. அந்த இடத்தை முஸ்லிம் லீக்கும் அதே தேதியில் கேட்டிருந்தது. அதனால், ’வேறு இடத்தில் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று போலீஸ் சொன்னதால் தங்கசாலைக்கு மாற்றியது தமுமுக. முஸ்லிம் லீக் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெயினுல் ஆபிதின்தான் அந்த கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அதனால்தான், ஜெயினுல் ஆபிதின் பெயரை தமுமுக மேடையில் இருந்த போது வி.எஸ்.பாபு கேட்டார். இந்த குழப்பத்தில்தான் வி.எஸ்.பாபு தவறுதலாக தமுமுக மேடையில் ஏறிவிட்டார்.
இந்த செய்திகளை எல்லாம் வைத்து ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை 16.6.10 தேதியிட்ட இதழில் ‘அந்த இன்னோண்ணுதாங்க இது..!’ என்ற தலைப்பில் வெளியானது.
அன்றைக்கு எம்.தமிழ்ச்செழியன் என்ற புனைப் பெயரிலும் கட்டுரைகள் எழுதி வந்ததால் அந்த பைலைனில் செய்தி வெளியாகியிருந்தது. ’’பத்திரிகையாளன் வேறு வேலையாக சென்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த எச்சரிக்கை உணர்வுதான் இந்த செய்தியை எடுக்க வைத்திருக்கிறது. புகைப்பட செய்தியாளர்கள் இல்லாத நேரத்திலும் சாதுரியமாக அங்கிருந்த நிகழ்ச்சி புகைப்படக்காரரைப் பயன்படுத்தி போட்டோக்களை எடுத்திருக்கிறார்’’ என எடிட்டோரியல் டீம் என்னைப் பாராட்டிய வார்த்தைகள் இப்போதும் செவிப்பறைகளில் கேட்கிறது.
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
25
கோவில் நிலத்தில் தீபம் ஏத்துறதில் என்ன பாய் பைல்ஸ்??
திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப் படத்திற்கே தொடை நடுங்கியவர்தான் முதல்வர் விஜய் என்பதை தெரிவித்து கொண்டு....
#tvk #TVKVijay #TVKParty #tvkexposed #TvkLies #tvkgovt #tvkministers #தூய_சக்தி
19
இந்த நபரை உள்ளேயே விடலை 2016ல் இருந்து, மீண்டும் சேர்த்து தவறு செய்தவர் எடப்பாடியார்
ரஜினி குடும்பத் திருவிழாவில் கலந்துகொண்டால் கட்சித்துரோகமாம், விஜய் வீட்டு வாசலில் நின்று ஆதரவை வாங்கிக்கங்கன்னு கெஞ்சிக் கொடுத்தால் கட்சி வளருமாம்
"திருமண நிகழ்விலும் கூட தி.மு.கவினரை கண்டால் ஓடி ஒளிந்து விடுவோம்.."
இ.பி.எஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே ஜெயலலிதா நீக்கியிருப்பார்.. அம்மா இருந்திருந்தால் இந்த தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு வருமா..? - எஸ்.பி.வேலுமணி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி
#NathamViswanathan | #EPS | #MKStalin | #SPVelumani | #PolimerNews
1
5
147
தள்ளாத வயதிலும் பதவி ஆசையில் பழம் நழுவி பாலில் விழவைக்க கெஞ்சியும் ,2011 தேர்தல் கொத்தடிமைக் கூட்டத்தின் ஆபாச பரப்புரையை கடைசி வரை மன்னிக்காமலே மறைந்த மாபெரும் மனிதர் கேப்டன்.
Replying to @Nandhan_Talkz
எல்லாரையும் நல்லா வாழ வெச்ச வெள்ளந்தியான மனுஷன்.. பரப்பன அக்ரஹார பாப்பாத்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தவர்.
மிக நேர்மையான சம காலத்து அரசியல்வாதி..
அரசியலில் நடிக்கத் தெரியாமல் தோல்வியுற்றவர்..
@iVijayakant
@PremallathaDmdk
அருமையான ஜோடிப் பொருத்தம்
23
பணம் மரியாதை இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும்
இரண்டும் வேணும்கிறாரு டகால்டி
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி”
என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.
இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!
“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.
திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.
“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!”
1
2
56
🤮🤮🤮🤮🤮🤮
Replying to @LLThecrusader
As an indian we don't own her because of these people our identity is ruined globally people see as somebody who aren't socially compatible anywhere look at how she speaks english at least you can learn how to speak the language of the country you're going to.
Compatibility comes with understanding that it's okay to blend where you're going carrying your home town identity with you to a different land only ruins the image because for the people around you you are somebody weird.
27
ரிஷிகள் வாழ்ந்ததால் ரஷ்யானு ஸ்ரீகாந்த் சொன்னது ஒரு பக்கம்
உடனே புரட்சிப் பொங்கல் வைக்கற ஒருத்தன் சொல்றான் அதுக்கு சோவியத் யூனியன்னுதான பெயர் இருந்துச்சு ரஷ்யா இப்ப வைச்ச பேருதானேன்னு
USSR என்பது பல தேசியங்களின் கூட்டமைப்பு அதில் ரஷ்யாவும் ஒண்ணு, மத்தபடி ரஷ்யாதான் பழைய பெயர்
14
நம் பேரறிஞர் ஸ்டாலின் லண்டன் போய்வாங்குனாரே Irish university doctor பட்டம் , அதை பத்தி பேசறது 😂😂😂
இந்த யுனிவர்சிடியிலே படிக்கவெல்லாம் முடியாது. எவன் காசு கொடுத்தாலும் ஹானரரி டாக்டரேட் கொடுத்துடுவானாம்.
வெப்சைட்டை போய் பாருங்க, செம காமெடியா இருக்கும் : anbu.university/
18
Just watched a Malayalam movie three murder or something like that and that movie has murappayaan muraponnu wedding in it
Q: There is an interview with #RadhikaApte, where you are talking about a girl marrying his Uncle, fans were upset about it❓
#KeerthySuresh: I didn't understood when she said romancing an uncle. Then i understood it's a culture followed in TN and Andra. But it's not in Kerala. I don't know about Karnataka. So i was trying to explain her. I'll never put down our culture in North India
96
Collector என்ற பெயர் மாற்றப்படவேண்டும் , ஆட்சியர் என்பதும் மாற்றப்படவேண்டும்
திடீரென வீதியில் இறங்கி அதிரடி காட்டிய ஆட்சியர்...
அரியலூர் - திடீரென வீதியில் நடந்து சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியர்.. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கியிருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்க உத்தரவு.!
#Newstamil24x7 #Ariyalur #DistrictCollector
10
ஸ்டாலினை உதயநிதியை தேர்ந்தெடுத்ததை விட விஜயை தேர்ந்தெடுப்பதால் மக்களுக்கு சிந்தனாசக்தி குறைந்துள்ளதாக நினைத்திருந்தால் இந்த பதிவின் original எழுதியவனின் சிந்தனாசக்திதான் பூஜ்யம்
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran





















